தினமணியின் ஆசிரியர் வைத்தியநாதனும், கார்ட்டூன் போடும் மதியும் ஊருக்குத் தரும நியாயம் பேசும்போது உத்தமர்களாகக் காட்டிக்கொள்கின்றனர்.
ஆனால், இவர்கள் செய்தி வெளியிடும்போதும், தவறைச் சுட்டும்போதும் மறைத்தும், திரித்தும் ஓரவஞ்சனை, பாரபட்சத்தோடும், தர்ம நியாயத்திற்கு எதிராகவும் செயல்படுகின்றனர்.
இதை எத்தனையோ முறை நாம் சுட்டிக்காட்டியுள்ளோம். அண்மையில் ஓர் எடுத்துக்காட்டு. லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு ஓரிரு நாள்களுக்கு முன் வந்தது. தொலைக்காட்சிகளில் விவாதம் நடைபெற்றது. பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. ஆனால், தினமணி அக்கருத்துக் கணிப்புப் பற்றி செய்தி வெளியிடவில்லை. காரணம், அக்கணிப்பு அ.தி.மு.க.வின் வீழ்ச்சியையும், தி.மு.க.வின் எழுச்சியையும் காட்டிற்று.
சில மாதங்களுக்கு முன் வந்த கருத்துக் கணிப்பு அ.தி.மு.க.விற்கு சாதகமாய் இருந்தபோது முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்ட தினமணி, இக்கருத்துக் கணிப்புப் பற்றி செய்தி வெளியிடாதது எவ்வகை தர்மம்? அது மட்டுமல்ல. அ.தி.மு.க.வின் கட்சி ஏடாகவே தினமணி வெளிவருகிறது. தமிழர்களே எச்சரிக்கை! ஏமாந்து விடாதீர்கள்!
எவ்வளவு தப்பு செய்தாலும், ஊழல் செய்தாலும் அவற்றை மறைத்து, பார்ப்பனர்கள் அ.தி.மு.க. அரசை மீண்டும் கொண்டுவந்துவிட வேண்டும் என்று மும்முரமாய் வரிந்துகட்டி வேலை செய்யும்போது, நாம் தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்துவதுதானே தமிழர் நலனுக்கு உகந்தது. மூன்று மாதத்திற்குள் மாற்று ஆட்சிக்கு வழியில்லை என்னும்போது, தி.மு.க.வை ஆதரிப்பதுதானே அறிவுக்குகந்த செயலாக இருக்க முடியும்?
தி.மு.க.வுடன் தே.மு.தி.க. சேர்ந்துவிடக் கூடாது என்பதில் அத்தனை பார்ப்பனர்களும் குறியாக இருந்து கலைத்துக் கொண்டே இருக்கிறார்களே அதன் சூட்சுமம் என்ன? அப்போதுதான் அ.தி.மு.க. வரமுடியும் என்பதுதானே?
அப்படியென்றால் தே.மு.தி.க.வை தி.மு.க.வுடன் சேர்த்து வைக்கத்தானே நாம் முயற்சிக்க வேண்டும்?
மீண்டும் சொல்கிறேன். தூய்மையான, திறமையான ஆட்சிக்கு 2016 முதல் 2020 வரையுள்ள 5 ஆண்டுகளில் முயற்சிப்பதே சரியான அணுகுமுறை. இப்போது தி-.மு.க.விற்கு எதிர்நிலை எடுத்தால் அது அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரவே உதவும். அ.தி.மு.க.வே மீண்டும் வந்தால் ஆணவமும், அராஜகமும் அதிகரிக்கவே செய்யும். தி.மு.க. மீண்டும் வந்தால் திருந்தி செயல்பட வாய்ப்புண்டு. இதில் எது வேண்டும்? தமிழர்கள் ஆழமாகச் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம் இது. சிந்தியுங்கள்!
காரணம் எவ்வளவு நல்லவர்களாக நேர்மையானவர்களாக இருந்தாலும் மக்கள் அவர்களைத் தேர்தலில் வெற்றி பெற செய்வதில்லை என்பது நடைமுறை. எடுத்துக்காட்டாக மிக உயர்ந்த மனிதரான திரு நல்லகண்ணு கோவை நாடாளுமன்ற தொகுதில் போட்டியிட்டபோது மதவாத பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் நல்லகண்ணு தோற்றுப்போனார் என்பதே வரலாறு என்வே இந்த எதார்த்தநிலை புரிந்து தமிழர்கள் செயல்பட வேண்டும்.
தமிழர்கள் பார்ப்பனர்களைவிட அறிவாளிகள் என்பதைத் தேர்தலில் காட்டுங்கள்!
இவ்வளவு பரிந்து பேசுவதால் நான் தி.மு.க.காரன் அல்ல. தமிழர் நலனுக்கு எது சரியோ அதைத் தொலைநோக்குடன் தயங்காது சொல்லும் கடமை உடையவன் அவ்வளவே!
- மஞ்சை வசந்தன்