மோடி பக்தர்கள் நாம் எவ்வளவு தான் சொன்னாலும் ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். சூடு கண்ட பூனை அடுப்பங்கரையில் சேராது என்பார்கள். ஆனால் இது எல்லாம் சுரணையுள்ள பூனைகளுக்குத்தான் பொருந்தும். மோடியின் பக்தர்கள் எல்லாம் இதற்குள் கண்டிப்பாக வரமாட்டார்கள்.

modi and arun jaitleyநாங்கள் வந்தால் அனைத்தையும் கிழித்துவிட்டுதான் வேறு வேலைபார்ப்போம் என்று கிளம்பிய மோடி கும்பலின் முதலாவது பட்ஜெட் நாக்கில் எச்சில் ஒழுக வாலை ஆட்டிக்கொண்டு முதலாளிகளை பார்த்துக்கொண்டு நிற்கின்றது. அட மானங்கெட்ட பயலுகளா! இதை பன்னறத்துக்கா உங்களுக்கு ஓட்டு போட்டோம் என்று மக்கள் மைண்ட் வாய்சில் பேசுவதாக நினைத்து வெளிப்படையாக பேசுகிறார்கள்.

மோடிக்காக பேஸ்புக், ட்விட்டர்-ல் இருந்து கழிப்பறை வரை நம்மை துரத்தி துரத்தி ஓட்டுக்கேட்ட மோடிஜியின் மிஸ்டு கால் அடிமைகள் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் மல்லாக்க படுத்து விட்டத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் தயாரிப்போம் என்று போகும் இடமெல்லாம் சொன்ன மோடி எதை தயாரிப்போம் என்பதை இப்போது கொஞ்சம் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார். மாணவர்களுக்கு கல்விக்கு ஒதுக்கப்படும் தொகை அனைத்து மட்டங்களிலும் குறைக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக அனைவருக்கும் கல்வி திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை சென்ற ஆண்டு ரூ.28.25கோடியாக இருந்தது இந்த ஆண்டு ரூ22 கோடியாக குறைக்கப்பட்டிருக்கின்றது. இந்தியாவில் படித்தவர்களின் விகிதம் 74.07 சதவீதமே உள்ள நிலையில் இந்த நிதிகுறைப்பானது மிகவும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தப்போகின்றது. மேலும் ஒட்டுமொத்தமாக படித்தவர்களில் 1% பேர்கூட ஆராய்ச்சிக்கல்விக்கு செல்லாத சூழ்நிலையில் அதற்காக ஒதுக்கப்பட்ட தொகையும் 25% குறைக்கப்பட்டிருக்கின்றது.இந்த லட்சனத்தில் இந்தியாவில் அறிவியல் துறையை வேறு வளர்க்கப் போகிறார்களாம். கல்விக்காக ஒதுக்கப்பட்ட தொகை ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 3.8% மட்டுமே!

ஆனால் இராணுவத்திற்கு ரூ.2,46,727 கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது சென்ற ஆண்டை விட 11% அதிகமாகும். மக்களை அடக்கி ஒடுக்கவும், பசுமைவேட்டையை தீவிரப்படுத்தவும், தேசிய இன போராட்டங்களை துப்பாக்கி முனையில் ஒடுக்கிவைக்கவும், நிலப்பறிப்புக்கு எதிராகாவும், சுரண்டலுக்கு எதிராவும், முதாலாளித்துவ பயங்கரவாததிற்கு எதிராவும் போராடும் மக்கள் மீது அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடவும் அருகில் இருக்கும் நாடுகளை மிரட்டி ஆதிக்கம் செலுத்தவும் இந்த நிதி பயன்படப்போகின்றது. மேலும் இந்துப்பெண்கள் நான்கு குழந்தைகளை பெற்றுக்கொண்டு அதில் ஒன்றை இராணுவத்திற்கு கண்டிப்பாக தரவேண்டும் என்று பிஜேபியின் அகில உலக அறிவுஜீவிகள் சொல்லுவதால் இந்தத்தொகை மேலும் அதிகமாக வாய்ப்புள்ளது.

வழக்கம் போலவே இந்தப் பட்ஜெட்டிலும் பெரும்முதலாளிகளுக்கு பெரும் வரிச்சலுகை அளிக்கப்பட்டிருக்கின்றது. ரூ.5,89,285 கோடிகள் வரிச்சலுகை தரப்பட்டிருக்கின்றது சென்ற ஆண்டு இது 5,49,984 கோடியாகும். இதன் மூலம் முதலாளிகளின் காலை நக்குவதில் காங்கிரசுக்கு தாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்று மோடி அரசாங்கம் நிரூபித்திருக்கின்றது. ஒவ்வோரு ஆண்டும் இப்படிக் கொடுக்கப்பட்ட வரிச்சலுகையால் உலக பணக்காரர்கள் வரிசையில் இந்தியர்களின் எண்ணிக்கை கூடியதே தவிர தொழிற்துறை வளர்ச்சியோ, வேலைவாய்ப்போ ஒரு சதவீதம் கூட வளரவில்லை. இந்தியா முழுவதிலும் கோடிக்கணக்கான பொறியியல் பட்டதாரிகளும், மேலாண்மை பட்டதாரிகளும், அறிவியல் பட்டதாரிகளும், பட்டயப்படிப்பு முடித்தவர்களும் வேலை கிடைக்காமல் வெறும் 3000ரூபாய் சம்பளத்திற்கும் 4000ரூபாய் சம்பளத்திற்கும் நாயைவிட கேவலமாக அலைகிறார்கள்.

5,89,285 கோடிகள் வரிச்சலுகை கொடுத்தது தங்களது முதலாளித்துவ அடிமைத்தனத்திற்கு பத்தாது என்று 30% மாக இருந்த பெரு நிறுவனங்கள் மீதான வரி 25% குறைக்கப்படும் என்று அறிவித்திருக்கின்றது.

உள்நாட்டு திருடர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது போல பன்னாட்டு திருடர்களையும் மகிழ்விக்க வேண்டும் அல்லவா, அதற்காகத்தான் பொது வரி தவிர்ப்பு விதிகள் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு தள்ளிவைக்கப் பட்டிருக்கின்றது. மேலும் அந்நிய நிறுவன முதலீட்டாளர்களுக்கு விதிக்கப்பட்டுக் கொண்டிருந்த குறைந்த பட்ச மாற்று வரியும் விலக்கிக்கொள்ளப் பட்டிருக்கின்றது.

அட இப்படி முதலாளிங்களுக்கே எல்லாத்தையும் வாரிவழங்கிட்ட நாங்க என்னபன்னறது என்று நீங்கள் கேட்பது புரிகின்றது அதற்கான பதில் ஆப்பு! அதுவும் சாதாரன ஆப்பு இல்லை!

1) உணவு, உரம், பெட்ரோலியப் பொருள்களுக்கான மானியம் 10% குறைக்கப்பட்டிக்கின்றது

2) ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட நிதி ரூ.16000 கோடியில் இருந்து ரூ. 8000கோடியாக குறைக்கப்பட்டிருக்கின்றது.

3) சுகாதாரம் குடும்ப நலனுக்கான நிதி ரூ35,163 கோடியில் இருந்து ரூ. 29,653 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

4) வீடமைப்பு, நகர்ப்புற ஏழ்மை ஒழிப்பு, பழங்குடியினரருக்கான திட்டங்கள், பட்டியல் இனத்தவருக்கான நிதி ஒதுக்கீடு என சமூக நலத்திட்டங்களுக்கான அனைத்து நிதி ஒதுக்கீடுகளும் பெரும் அளவில் குறைக்கப்பட்டிருக்கின்றது.

5) சாமானிய மக்கள் பயன்படுத்தும் பெட்ரோலுக்கான மானியம் ரூ.60 ஆயிரத்து 270 கோடியில் இருந்து 30,000 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டிருக்கின்றது.

6) பணக்காரர்களை பாதிக்கும் நேரடி வரிகள் ரூ.8050 கோடியாக குறைக்கப்பட்டிருக்கின்றது. அதற்கு பதில் சாமானிய மக்களிடம் இருந்து மறைமுக வரிகள் போட்டு ரூ23,383 கோடிகள் திருட திட்டமிடப்பட்டுள்ளது.

இத்தோடு இந்த பணக்கார சைக்கோ செடிஸ்டுகளின் கொலவெறி அடங்கிவிடுமா இல்லை அப்போதும் அடங்கவில்லை! சேவை வரியை வேறு 12.36% இருந்து 14% உயர்த்தியிருக்கிறார்கள்.

குறிப்பிட்ட தொகைக்குக் கீழே பணியாளர்களின் சம்பளம் இருந்தால் அவர்களுக்கு பி.எப் திட்டத்தில் பங்களிப்பு செய்வதில் இருந்து முதலாளிகளுக்கு விலக்குவேறு அளிக்கப்பட்டிருக்கின்றது.இப்படி யெல்லாம் கூட செய்வாங்களா பாவிங்க! என்று நீங்கள் நினைப்பது தெரிகின்றது.முதலாளித்துவ வர்க்கம் தன்னைக்காப்பாற்றிக் கொள்ள எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை நாம் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.

2015-2016 நிதி ஆண்டில் நிதிப்பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரூ.5 லட்சத்து 12ஆயிராத்து 628 கோடியாகும். முதலாளிகளுக்கு கொடுக்கப்பட்ட வரிச்சலுகை ரூ.5 லட்சத்து 89,285 கோடியாகும். இந்த மானங்கெட்ட பட்ஜெட்டை போடுவதற்கு நீ எதுக்குடா நாயே என்று கேட்கத் தோன்றுகின்றது. இதை சமாளிக்க ரூ.5.56 லட்சம் கோடிகள் கடன் வேறு வாங்கப் போகிறார்களாம். இந்திய ஏழை முதலாளிகளைக் காப்பாற்ற இதைவிட்டால் வேறு வழியே இல்லையாம்!

ஏழைகளுக்குக் கொடுத்தால் தண்டச்செலவு, வரிச்சுமை அதுவே பணக்காரர்களுக்குக் கொடுத்தால் தொழில்வளர்ச்சி, தேசமுன்னேற்றம்.

தோழர்களே நாம் என்ன செய்யப் போகின்றோம். ஒருபக்கம் உங்கள் நிலங்களை வலுக்கட்டாயமாக பிடுங்க சட்டம் போட்டுவிட்டு வீடுகட்டிக் கொடுக்கின்றேன் என்கிறார்கள். பன்னாட்டு முதலாளிகளின் கழிவறையாக இந்தியாவை மாற்றிவிட்டு உங்களுக்குக் கழிவறைக்கட்டிக்கொடுக்கின்றேன் என்கிறார்கள். உங்களது வேலை வாய்ப்பை பிடுங்கிக்கொண்டு உங்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கின்றேன் என்கிறார்கள். ஒருபக்கம் உங்களை கொலை செய்துவிட்டு உங்களது ஈமச்சடங்கிற்கு பணம் தருகிறேன் என்கிறார்கள். சொல்லுங்கள் தோழர்களே நாம் என்ன செய்யப்போகின்றோம்?

Pin It