நடந்து முடிந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி 67 இடங்களில் வென்று பிஜேபி-ஆர்எஸ்எஸ் கும்பலின் காக்கி டவுசரை கழற்றியது என்பதை விட நார்நாராகக் கிழித்து அம்மணமாக்கி அலைய விட்டிருக்கின்றது. இந்தத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று மோடி அமித்சா கும்பல் தற்கொலை செய்து கொள்ளும் என்று யாரும் எதிர்பார்க்க வேண்டாம். அது எல்லாம் மானமுள்ள மனிதர்கள் செய்வது.
ஆனால் பிஜேபின் தோல்வி நம்மை ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்த்துகிறது. பிஜேபி சார்பாக போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் நான்கு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் ஆண்மை உள்ளவர்களாக இருந்தும் - குறிப்பாக ராமனைக் கும்பிட்டு விபச்சார விடுதியில் தங்களின் குழந்தைகள் பிறவாமல் இருக்க வரம் வாங்கியவர்களாக இருந்தும் - இப்படி ஒரு நிலைமை ஏன் ஏற்பட்டது என்று தெரியவில்லை!.
5 மாநிலத் தேர்தல்களில் 3 மாநிலங்களில் வென்று தன்னை இனி யாருமே அசைக்கமுடியாது என்ற அகம்பாவத்தில் வாய்க்கு வந்ததை எல்லாம் வாந்தி எடுத்துக்கொண்டிருந்த அமைச்சர்களும், அடிப்பொடிகளும் கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கிறார்கள். நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக மதவெறியூட்டும் கருத்துக்களைப் பேசுவதும் அதையே ஊடகங்களில் தலைப்புச்செய்தியாக்கித் தங்களை பிரபலப்படுத்திக் கொள்வதும் தாங்கள் பேசுவதை ஒட்டு மொத்த இந்துமக்களும் மகிழ்ச்சியோடு அங்கீகரிப்பதாகவும் பிதற்றித் திரிந்த காவிக்கும்பலுக்கு சரியான செருப்படி கிடைத்திருக்கின்றது.
"தமிழ்நாட்டின் மானத்தை நான்தான் காப்பாத்துவேன்” என்ற கவுன்டமணி வசனத்தைப் போல இந்தியாவின் மானத்தை நான்தான் காப்பாத்துவேன் என்று கிளம்பிய மோடியின் இந்த 9 மாத கால ஆட்சியில் ஒட்டுமொத்த இந்தியப் பொருளாதாரமுமே திவாலாகி நடுத்தெருவுக்கு வரும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இதன் மூலம் மோடியின் பில்டிங், பேஸ்மட்டம் அனைத்துமே ரொம்ப வீக் என்ற விசயம் வெளியே கசிந்துகொண்டிருக்கின்றது. மோடியை கடவுளாகப் பார்த்த இந்திய நடுத்தெரு வர்க்கம் “இந்த பைத்தியக்காரனுக்கா ஓட்டுப்போட்டோம்” என்று புலம்பத் தொடங்கி இருக்கின்றது. இப்போதே ஆட்சியை கலைத்துவிட்டு மறுதேர்தலை சந்தித்தால் ஒட்டுமொத்தமாக காவிக்கூடாரமே காலியாகும் என்பது திண்ணம்.
2012 நவம்பர் 26-ல் ஆம் ஆத்மி கட்சியை உருவாக்கிய அரவிந்த் கேஜ்ரிவால் ஒர் என்ஜிஓ என்பது ஊரறிந்த ரகசியம். அவர் நடத்தும் பரிவர்த்தன், கபீர் போன்ற என்ஜிஓக்களுக்கு போர்டுபவுண்டேசனிடம் இருந்து நிதி பெறப்படுகின்றது. மூன்றாம் உலக நாடுகளை கொள்ளையடித்து கூறுபோடும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அரசியல், பொருளாதார மேலாதிக்கத்தை நிலைநாட்டவும், அதற்க்கேற்ற சித்தாந்தத்தை மூன்றாம் உலக நாடுகளில் உருவாக்கவும் போர்டு, ராக்பொல்லர் பவுண்டேசன்களை அமெரிக்கா ஸ்பான்சர் செய்கின்றது.
நீங்கள் ஒரு விசயத்தை கூர்ந்து கவனித்தால் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பிஜேபி மற்றும் ஆம்ஆத்மியின் முதலமைச்சர் வேட்பாளர்களான கேஜ்ரிவாலுக்கும், கிரண்பேடிக்கும் ஓர் ஒற்றுமையைக் காணலாம். இருவருமே தொண்டு நிறுவனங்கள் நடத்துபவர்கள். கேஜ்ரிவால் எப்படி பரிவர்த்தன், கபீர் போன்ற தொண்டு நிறுவனங்களை நடத்துகிறாரோ, அதே போல கிரண் பேடியும் தொண்டு நிறுவனங்களை நடத்துகிறார். இவர் நடத்தும் தொண்டு நிறுவனத்திற்கு கோகோ கோலாவும், லெஹ்மன் பிரதர்ஸ்-சும் நிதியுதவி செய்கிறார்கள்.
மேலும் ஒரு மிகப்பெரிய ஒற்றுமை என்னவென்றால் இருவருமே உலக வங்கியிடம் இருந்து மகசேசே விருது வாங்கி இருக்கிறார்கள். ஆம் ஆத்மியை என்ஜிஓ என்று ஊர் பூராவும் ஊளையிட்ட பிஜேபி, கிரண் பேடியை நிறுத்தி இருப்பதன் பின்னணி என்ன? பிஜேபியின் என்ஜிஓ எதிர்ப்பு சவடால்கள் எல்லாம் திசு பேப்பரைப் போன்றதா? அல்லது எதிர்வரும் காலங்களில் இந்திய அரசில் சூழல் கொந்தளிப்பும், குழப்பமும் நிறைந்த மக்கள் போராட்டங்களால் குலுங்கப் போகின்றது என்பதை முன்உணர்ந்து தலைநகர் டில்லியை தொண்டு நிறுவனங்களின் சோதனைச் சாலையாக மாற்றி ஒரு வெள்ளோட்டம் பார்க்க அமெரிக்காவும், உலக வங்கியும் அவர்களது அடிவருடிகளான இந்திய ஆளும் வர்க்கமும், ஆட்சியாளர்களும் செய்யும் சதியோ என்று யோசிக்க வைக்கின்றது.
களத்திலே மாற்று அரசியல் சித்தாந்தங்கள் அற்ற நிலையில் ஆம் ஆத்மியின் இந்த அபார வெற்றியானது இந்திய போலி ஜனநாயகத்தின் அடுத்த கட்ட நகர்வைக் காட்டுகின்றது. முதலாளித்துவ ஊடகங்கள் இந்த வெற்றியை ஆகா ஓகோ என்று கொண்டாடுவதன் நோக்கம் நொறுங்கி விழுந்து கொண்டிருக்கும் இந்திய போலி ஜனநாயக கட்டமைப்பை ஆம்ஆத்மி போன்ற கட்சிகள் முட்டுக்கொடுத்து நிறுத்தும் என்பதால்தான்.
இதிலே மிகவும் முக்கியமான விசயம் என்னவென்றால் இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளும்(CPM, CPI) ஆம் ஆத்மிக்கு வாழ்த்து சொல்லி இருப்பதும் அவர்களை வரவேற்பதும். ஆம் ஆத்மி ஒரு என்ஜிஓ கம்பெனி என்று தெரிந்தும் அவர்கள் இதை செய்வதும் தற்செயல் ஆனதல்ல. CPI –ன் அதிகாரப்பூர்வமான புத்தக வெளியீட்டகமான நியூ செஞ்சுரி, பிராங்பட் மார்க்சியம் புகழ் எஸ்.வி. ராஜதுரையின் புத்தகங்களை வெளியிடுவதும் வெளியீட்டு விழாவிற்கு நல்லகண்ணு போன்றவர்கள் கலந்து கொள்வதும் அதன் என்ஜிஒ விருப்ப அரசியலையே காட்டுகின்றது. மேலும் CPM-ம் அதிகாரப்பூர்வ புத்தக நிறுவனமான பாரதி, வ.கீதாவின் பின்நவீனத்துவ வாந்திகளை வெளியிடுகின்றது. இந்திய அளவில் இது எப்படி இருக்கின்றது என்று நமக்குத் தெரியவில்லை. ஆனால் இதை எல்லாம் ஒன்று சேர்த்துப் பார்க்கும் போது நமக்குக் கிடைக்கும் பிம்பம் இரண்டு போலி கம்யூனிஸ்டு கட்சிகளும் என்ஜிஓக்களால் உள்வாங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதுவே.
அனைத்து தேர்தல் கட்சிகளும் மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கிக்கொண்டிக்கின்றன. அதிகரித்துவரும் மக்கள் போராட்டங்கள் அவர்களை அச்சத்தில் ஆழ்த்துகின்றன. மக்களின் போராட்டங்களை ஒடுக்க அரசு இயந்திரம் வரைமுறையின்றி வலுவாக்கப்படுகின்றது. ஆனால் 120 கோடி மக்கள் தொகையைக் கொண்ட ஒரு நாட்டில் இது அவ்வளவு எளிதில் சாத்தியமல்ல என்பதை உணர்ந்தே இந்திய ஆளும் வர்க்கங்களால் என்ஜிஓ-க்கள் திட்டமிட்டு அரசியலில் இறக்கி விடப்படுகின்றன. இதை உணராத சாமானிய மக்கள் கேஜ்ரிவால் போன்றவர்களை ஊழல் ஒழிப்பு நாயகனாகவும் நல்லாட்சியைத் தரவந்த ரட்சகராகவும் பார்க்கின்றனர். முதலாளித்துவ ஊடகங்களும் இப்படிப்பட்ட கருத்தியலை உருவாக்குவதையே தங்களின் இருத்தலை காப்பாற்றிக் கொள்வதற்கான ஒரே வழியாகப் பார்க்கின்றன.
மூன்றாம் உலக நாடுகளுக்கு கடன் கொடுத்து, தங்களது கடன் வலையில் அவர்களை நிரந்தரமாக வீழ்த்தி, அந்நாடுகளின் தேசியப் பொருளாதாரத்தை அழித்து, வளங்களை சுரண்டி, அந்நாடுகளின் மக்களை பட்டினியால் சாகடிக்கும் உலக வங்கியிடம் இருந்து விருது வாங்கிய கேஜ்ரிவாலை நாம் நம்ப வேண்டும் என்று ஊடகங்களும் மெழுகுவர்த்தி புரட்சிக் குழுக்களும் நம்மை வேண்டுகின்றன. இவர்கள் என்ஜிஓ அரசியலை ஏற்றுக்கொண்டதால்தான் உலகமயமாக்கலில் இருந்து வெளியேற வேண்டும் என்பதையோ முதலாளித்துவத்தை ஒழிக்க வேண்டும் என்பதையோ பெயரளவுக்குக்கூட ஏற்றுக்கொள்வதில்லை.
இவர்கள் சொல்வதெல்லாம் இதே கட்டமைப்புக்குள் தீர்வு என்பதே. ஆனால் வரலாறும், நடப்பு நிலைகளும் இவர்களின் கொள்கைகளை பிழைப்புவாதிகளின் உளறல் என்றே மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கின்றது. உலகமயமாக்கலையும் முதலாளித்துவத்தையும் ஒழிக்காமல் ஊழலையோ நேர்மையான நிர்வாகத்தையோ ஒருபோதும் உருவாக்க முடியாது.
இந்தியாவில் உள்ள பாராளுமன்ற தேர்தல் ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளும் உலகமயமாக்கலையும், தாராளமயமாக்கலையும். தனியார்மயமாக்கலையும் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டவை. இந்த மூன்று கொள்கைகளுக்கும் கள்ளத்தனமாக பிறந்தவை. ஆனால் ஆம் ஆத்மி இந்த மூன்று கொள்கைகளின் நேரடி வாரிசு.
எனவே ஆம் ஆத்மியின் வெற்றி என்பது கொண்டாடப்பட வேண்டிய வெற்றியல்ல; நாம் எச்சரிக்கையடைய வேண்டிய வெற்றி. இல்லாமல் போனால் உலக கார்ப்ரேட் நிறுவனங்களின் வேட்டைக்காடாக இந்தியா மாற்றப்படும். அவர்கள் நடத்தும் என்ஜிஓ க்கள் மூலம் உங்களுக்கு குச்சிமிட்டாயும் குருவி ரொட்டியும் நிச்சயமாகக் கொடுக்கப்படும். ஆனால் இதை நீங்கள் அம்மணத்துடன் நின்றுதான் சாப்பிட முடியும், பரவாயில்லையா?
கட்டுரையின் தொடக்கமே பிரமாதம்.சரி,ஏற ்கனவே பிஜேபி தனி மெஜாரிட்டியில் வாரி சுரிட்டிய போது,தற்கொலை செய்து கொண்ட ‘மானமுள்ளவர்களி ன்’பட்டியல் ஏதாவது கைவசம் இருக்கிறதா?
அந்த வரிசையில் தான் இந்த கட்டுரையும் அமைந்துள்ளது. ஆம் ஆத்மியின் டெல்லி வெற்றி, ‘தலைநகர் டில்லியை தொண்டு நிறுவனங்களின் சோதனைச் சாலையாக மாற்றி ஒரு வெள்ளோட்டம் பார்க்க அமெரிக்காவும், உலக வங்கியும் அவர்களது அடிவருடிகளான இந்திய ஆளும் வர்க்கமும், ஆட்சியாளர்களும் செய்யும் சதியோ என்று யோசிக்க வைக்கின்றது.’ என்று கார்க்கி அவர்கள் குறிப்பிடுகின்றார்.
பல வருடங்களுக்கு முன், மேற்கு வங்கத்தில் கோர்காலாந்து போராட்டம் ஆரம்பித்த போதும், அதன் பின் இப்போது இருக்கும் இயக்கத்தையும் அமெரிக்க(சி ஐ ஏ) சதி என்ற வகையில் சி பி ஐ, சி பி எம் கட்சிகள் முத்திரை குத்தின.
நந்திகிராம் போராட்டத்திலும் அமெரிக்க கை உள்ளது என்றனர்.
வடகிழக்கில் நடக்கும் தேசிய இன இயக்கங்களில் எல்லாம் அன்னிய தலையீடு உள்ளது என்பர்.
காலிஸ்தான் இயக்கம், திராவிட இயக்கம் என்று- மார்க்சிஸ்டுகளா ல் அமெரிக்க முத்திரை குத்தப்பட்ட இயக்கங்கள்/நபர் கள் பெயர் பட்டியல் மிக நீண்டது.
எகாதிபத்திய சதிகளை முறியடித்து இயக்கங்கள் வெற்றிபெற செய்ய விழிப்புடன் செயல்படுவது மிகவும் அவசியம். ஆனால் ஏகாதிபத்திய எதிர்ப்பை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது.
இப்படிப் பட்ட ‘‘சிந்தனைகள்’ மதவெறிகூட்டத்தி ன் வாய்க்கு கிடைத்த அவலாகத் தான் பயன்படுமேயன்றி வேறல்ல.
2.ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி மதவாத சக்திகளுக்கு கிடைத்த ‘செருப்படி’ என்பதோடு மட்டுமல்லாமல், பி ஜெ பி மீது மக்கள் வெறுப்பு அதிகமாகும் போது, அதை பயன்படுத்திக் கொள்ள காத்திருந்த அத்தனை கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும ் கிடைத்த ஒரு அடியாகவே அமைந்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்பு வெற்றிக்கு அடிப்படை காரணம், முந்தைய 49 நாள் ஆட்சியின் போது, செய்ய அல்லது செய்ய முற்பட்ட நடவடிக்கைகளின் தாக்கம் தானே ஒழிய வேறல்ல.
3.“உலக மயமாக்கலையும் முதலாளித்துவத்த ையும் ஒழிக்காமல் ஊழலையோ நேர்மையான நிர்வாகத்தையோ ஒரு போதும் உருவாக்க முடியாது” என்று கார்க்கி அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றார்.
முதலாளித்துவத்தை ஒழித்துவிட்டால் மட்டும் ஊழல் ஒழிந்து விடும் என்பது பகற் கனவு.
நிலவில் இருந்த, இருக்கும் சோசலிச, கம்ம்யூனிச நாடுகளும் கூட, ஊழலில் ஊறி திளைத்தன, திளைக்கின்றன என்பது தான் உண்மை.
தேவை ஜனநாயக தடுப்புகள் (checks and balances). தேர்தல் அவற்றில் ஒன்று.
ஜனநாயக அமைப்புகளை மேலும், மேலும் பலப்படுத்துவது, விரிவு படுத்துவது, ஆழப்படுத்துவது தான் ஒரே வழி.
4.சீனாவும், வியட்னாமும் உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினராக, பல்வேறு நிபந்தனைகளை ஏற்று, தங்கள் நாடுகளில் பல சீர்திருத்தங்கள ையும் செய்தார்கள் என்பது வரலாறு.
இந்தியாவில் மட்டும் உலக மயமாக்கலை தொடர்ந்து எதிர்ப்பது எல்லாவகை மார்க்சிஸ்டுகளி ன் வழக்கம். இன்றைக்கு உலகில் அனேகமாக எல்லா நாடுகளிலும் முதலாளித்துவ அமைப்பு தான் செயல் படுகிறது(சீனா, வியட்நாம் உட்பட) உலக மயமாக்கலில் கலந்து கொள்ளாமல் இருக்க உபதேசிப்பது போகாத ஊருக்கு வழி தேடுவதாகும்.
5.உலக முழுவதும் இன்று பல்வேறு நாடுகளில் பெரு முதலாளித்துவத்த ிற்கெதிரான, அதன் பாதிப்புகளுக்கு எதிரான இயக்கங்கள் தொடர்ந்து நடைபெற்று தான் வருகின்றன. (உ-ம் வால் ஸ்ட்றீட் ஆக்கிரமிப்பு, க்ரீன் பீஸ்....) இவை எதுவும் முதலாளித்துவ அமைப்பை அழித்தொழிக்க நினைப்பவை அல்ல.ஆனாலும் அந்தந்த நாடுகளில் உள்ள பாரம்பரிய இடது சாரிகளூம் இந்த இயக்கங்களை ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற ்கு ஆளாகியுள்ளனர். ஆம் ஆத்மி கட்சியின் இயக்கமும் அந்த வகைப்பட்டதாகவே தெரிகிறது.
5)ஆம் ஆத்மி கட்சி முதலாளித்துவ கட்டுக்குள் பிரச்சினைகளுக்க ு தீர்வு காண முயற்சிக்கிற கட்சி தான். இதய சுத்தியோடு முதலாளித்துவத்த ிற்குள் தீர்வு காண ஒரு இயக்கம் இருப்பதே நல்லது தானே. வகுப்புவாதம், தேசிய இனப் பிரச்சினை போன்ற பிரச்சினைகளில் அவர்கள் நிலை எடுக்க வேண்டியது வரும்போது தான் அவர்கள் உண்மை நிலை தெரியும். இன்றைய சூழ்நிலையில், அது ஒரு இயக்கமாகவே அமைந்துள்ளது; அரசியல் ரீதியாக மதவெறிக் கும்பலுக்கு நேரெதிரான நிலையை எடுத்துள்ளனர். அத்தோடு, பெருமுதலாளித்துவத்த ையும் எதிர்க்க தயங்கவில்லை.அந் த அளவில் அந்த கட்சி ஆதரிக்கப் படவேண்டிய கட்சியே.
6) மக்கள், அரசியல் கல்ப்பில்லாமல் முடிவு எடுக்கும் முதிர்ச்சி அடந்து விட்டனர். நாளையே இந்த கெஜ்ரிவால் தங்களுக்கு தேவை இல்லை என்றால் தூக்கியெறிய தயங்க மாட்டார்கள். அதற்கு ஏகாபத்திய பூச்சாண்டி எதுவும் தேவையில்லை.
ஜெயெம்
RSS feed for comments to this post