சிதம்பரம் கோயிலை தமிழக அரசு ஏற்று நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக்கின்றது. இப்படியொரு தடை உத்தரவை வாங்கிக் கொடுத்ததில் சு.சாமிக்கு உள்ள பங்கை விட பார்ப்பன ஜெயா அரசுக்கு அதிகமாகவே பங்குள்ளது. வேண்டுமென்றே தகுதியில்லாத வழக்கறிஞ‌ரை நியமித்து தீட்சிதர்களுக்கு மறைமுகமாக உதவியிருக்கின்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகளும் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான கோவில்கள் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளபோது இந்த ஒரு கோவிலை மட்டும் அரசு ஏற்று நடத்துவதற்குத் தடை விதித்திருப்பது அதன் பார்ப்பன சார்புத்தன்மையையே காட்டுகின்றது. மேலும் பொது தீட்சிதர்களை நிர்வாகத்திலிருந்து நீக்கும் வகையில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்ததை செயல்படுத்தக்கூடாது என்றும் கோயிலை நிர்வகிப்பது தொடர்பாக பொது தீட்சிதர்களுக்கு உள்ள உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருக்கின்றது. சாமானிய மக்களின் வாழ்வாதரங்கள் பறிக்கப்படும்போது அரசின் கொள்கை முடிவில் நாங்கள் தலையிட முடியது என்று கூறும் இந்த நீதிமன்றங்கள் தீட்சிதர்களின் உரிமைகள் பதுகாக்கப்பட வேண்டும் என்று கூறுவது உச்சபட்ச பார்ப்பன அடிமைத்தனம்.

குஜராத் கலவர வழக்கில் இருந்து மோடியையும், சங்கரராமன் கொலைவழக்கில் இருந்து ஜெயேந்திரனையும், சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயாவையும் தற்போது அரசு கட்டுப்பாட்டில் இருந்து சிதம்பரம் கோவிலையும் காப்பாற்றியது, காப்பாற்ற நினைப்பது இந்திய நீதிமன்றங்களில் புரையோடிப் போயிருக்கும் அதன் பார்ப்பன உளவியலே.

தீர்ப்பு வெளியானவுடன் ஊடகங்களில் பேசிய இராம கோபாலன், அர்சுன் சம்பத் போன்ற இந்துமத வெறியர்கள் “மசூதி, சர்ச் போன்றவற்றின் சொத்துக்கள் கிறித்தவ, முசுலீம் மதத்தினர் வசமே உள்ளது. ஆனால் இந்துக்கோவில்களின் சொத்துகளை மட்டும் அரசே வைத்திருக்கிறது. இது எல்லாம் திராவிட இயக்கங்களின் சதி" என்று புலம்புகின்றனர். மேலும் இந்து அறநிலையத்துறையை கலைத்துவிட்டு கோயிலின் சொத்துக்களை திரும்ப கோயில் நிர்வாகத்திடமே ஒப்படைக்க வேண்டும் என்றும் ஆலோசனை கூறியுள்ளனர். இன்று நேற்றல்ல பல வருடங்களாக இந்துமத வெறியர்கள் இஸ்லாமிய மற்றும் கிறித்தவ மக்களுக்கு எதிராக இந்த கோரிக்கையை வைத்து வருகின்றனர்.

நிச்சயமாக சாமானிய மக்களின் வருமானத்தை அட்டைபோல உறிஞ்சி கோடிகளில் கொழிக்கும் அனைத்து மதக் கோயில்களையும் அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பதுவே நம்முடைய கோரிக்கையாகும். ஆனால் ராம கோபாலன், அர்ஜுன் சம்பத் வகையறாக்கள் சொல்லும் இந்துமதக் கோயில்கள் என்பது பார்ப்பன கடவுள்களை உடைய ஆகம முறைப்படி பார்ப்பனர்கள் மட்டுமே பூசை செய்யும் சுத்தசைவ வைணவ கோயில்களாகும்; நரபலி கொடுக்கப்படும் நாட்டார் தெய்வ கோயில்களையல்ல. ஏனெனில் அவை இந்துமதத்தின் அனைத்துப் புனிதங்களையும் காலில்போட்டு மிதிக்கக்கூடியவை.

இப்போது பிரச்சனையென்பது கோயில் சொத்துடன் முடிவடைந்து விடவில்லை. கோயில் கருவறையில் யார் பூசை செய்வது, கோயிலில் எந்த மொழியில் பாடுவது என்று வழிபாட்டு உரிமை மற்றும் மொழியுரிமையென அனைத்தையும் சேர்த்தே பார்க்க வேண்டியுள்ளது.

1971இல் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்களாகும் சட்டத்தைக் கொண்டுவந்தார். அதை எதிர்த்து வைணவ ஜீயர் ஒருவரும் காஞ்சி காமகோடி மடமும் பத்து அர்ச்சகர்களும் வழக்குத் தொடுத்தனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பிரமபுராணம் என்னும் நுலை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசின் சட்டம் செல்லாது என்று தீப்பளித்தனர். மேலும் தங்களது தீர்ப்புக்கு சாதகமாக பிரம புராணத்தில் இருந்து சில கருத்துக்களையும் மேற்கோள் காட்டியுள்ளனர். அதன்படி கோயில் கருவ‌றையில் உள்ள தெய்வத்தின் சிலையை பின்வரும் காரணங்களுக்காக அகற்றிவிட்டு புதிய சிலையை வைக்கவேண்டும்

1)தெய்வத்தின் திருவுருவம் உடைந்து போதல்

2)தீ விபத்திற்கு ஆளாதல்

3)பிற தெய்வத்திற்குரிய மந்திரத்தை சொல்லி வழிபடுதல்

4)பீடத்திலிருந்து அகற்றப்படுதல்

5)கழுதை, நாய், பன்றி முதலான விலங்குகளால் தீண்டப்படுதல்

6)பிற சாதியினரால் தீண்டப்படுதல்

எனவே பிரம்ம புராணத்தின் அடிப்படையில் ஒரு கோயிலுக்குள் நாய், கழுதை, பன்றி போவதும் பார்ப்பனர் அல்லாத நாம் போவது ஒன்றுதான். இதை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 25, 26 ஏற்றுக்கொள்கின்றது.

பன்னாட்டு முதலாளிகளுக்கு சாதகமாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை தங்கள் விருப்பம் போல மாற்றியமைக்கும் ஆளும் வர்க்கங்கள் ஆலய தீண்டமையை வெளிப்படையாக அங்கீகரிக்கும் குறிப்பிட்ட இந்த சட்டத்தை இதுவரை மாற்றாமல் தங்களது பார்ப்பன அடிவருடித்தனத்தை விசுவாசமாக பின்பற்றி வருகின்றனர்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என 23.05.2006 அன்று அரசாணை வெளிடப்பட்டது. அதைத்தொடர்ந்து அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளும் ஆரம்பிக்கப்பட்டு 206 மாணவர்கள் பயிற்சி முடிந்து முறையாக தீட்சையும் பெற்று இன்று வேலையில்லாமல் காத்துக் கிடக்கின்றனர். திமுக மற்றும் அதிமுக அரசுகள் இந்த 206 மாணவர்களில் ஒருவருக்குக்கூட இதுவரை வேலை தரவில்லை. பெரியாரின் பெயரைச் சொல்லி கட்சி ஆரம்பித்து ஆட்சிக்கு வந்த இந்த அயோக்கியர்கள் இன்று பெரியாரிய கொள்கைகளுக்கு சமாதி கட்ட துடித்துக் கொண்டிருக்கின்றனர்.

சிவனடியார் ஆறுமுகசாமியை தேவாரம் பாடவிடமால் கோயிலில் வைத்து தாக்கிய தீட்சித ரெளடிகள் தமிழை நீச மொழியென்று திமிருடன் பேசுகின்றனர். சிதம்பரத்தில் மட்டுமல்ல தமிழ் நாட்டிலுள்ள பெரும்பான்மையான பார்ப்பன கோயில்களில் தமிழை நீச மொழியென்று இந்த பார்ப்பன கும்பல் இழிவுபடுத்தி வைத்துள்ளது. நமக்குத் தெரிந்து மகஇக மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையம் போன்றவற்றைத் தவிர மற்ற அமைப்புகள் இதற்காக தீவிரமாகப் போராடியதாகத் தெரியவில்லை. சில பெரியாரிய அமைப்புகள் அடையாளப் போராட்டங்களை அவ்வவ்போது நடத்தியிருக்கின்றன.

தாங்கள் தான் உண்மையான அக்மார்க் தமிழர்களுக்குப் பிறந்தவர்கள்; தங்களுக்குத்தான் இந்த தமிழ்நாட்டை ஆள்வதற்குரிய தகுதி உள்ளது என்று பிதற்றித் திரியும் புண்ணாக்குகள் எல்லாம் தமிழர்கள் அவமானப்படுத்தப்படும் பொழுதும் தமிழ்மொழி கேவலப்படுத்தப்படும் பொழுதும் கழிப்பறையில் அம்ர்ந்துகொண்டு முதலமைச்சர் கனவு கண்டு கொண்டிருக்கின்றனர்.

கோயில்களில் உயிர்பலி கொடுக்க தடைவிதித்து நாட்டார் தெய்வ கோயில்களையெல்லாம் பார்ப்பனமயமாக்க முயன்ற பார்ப்பன ஜெயாவை, சேதுக்கால்வாய்த் திட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கும் பார்ப்பன ஜெயாவை, தற்போது தீட்சிதர்களுக்கு ஆதரவாக நடந்துகொண்டு வழக்கை ஒன்றுமில்லாமால் செய்த அதே ஜெயாவைத் தான் அடுத்த பிரதமராக வரவேண்டும் என்று இபொக வை சேர்ந்த ஒரு கம்யூனிச துரோகி எங்கு போனாலும் மைக் கிடைத்தால் போதுமென்று பேட்டி கொடுத்துக்கொண்டு இருக்கிறார்.

ஜெயா எட்டி உதைத்தாலும் காரி உமிழ்ந்தாலும் காலை உடும்புப்பிடியாக பிடித்துக் கொண்டிருக்கும் இபொக மற்றும் இபொக(மாக்சிஸ்ட்) தோழர்கள் ஒட்டுமொத்த தமிழினத்தையே கேவலப்படுத்தியிருக்கும் பார்ப்பன ஜெயாவுக்கு என்ன பாடம் புகட்டப்போகிறீர்கள்? ஜெயாவுக்கு நாடளுமன்றத் தேர்தலில் ஒட்டுக்கேட்கப் போகிறீர்களா?

தமிழ், தமிழன், தமிழ்நாடு என்று பேசிய எல்லா பிழைப்புவாதிகளும் இன்று பார்ப்பன பாஜகவின் பின்னால் அணிதிரண்டு பார்ப்பனனின் காலைப் பிடித்து அவனது அமைச்சரவையில் ஏதாவது பதவியை வாங்கி தமிழ்மக்களின் உரிமைகளையும் தன்மானத்தையும் மீட்டெடுக்கப் போராடிக் கொண்டிருக்கின்றனர்! நாசமாய்போக!

உலகத் தமிழினத்திற்கே தான்தான் தலைவன் என்று சொன்ன வெங்காயங்கள் எல்லாம் ஒரு சிறு கண்டனத்தைக் கூட சொல்லமல் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கின்றனர்.

தோழர்களே உழைக்கும் வர்க்கமாகிய நாம் இந்த ஓட்டுப்பொருக்கி அரசியல் கட்சிகளை நம்பினால் நம்முடைய கோவணத்தையும் கழட்டிக்கொண்டு தெருவிலே விட்டு விடுவார்கள். வாக்கு வங்கி அரசியலுக்காக எந்தவகையான கீழ்த்தரமான சமரசத்திற்கும் இவர்கள் தயாராகவே உள்ளனர்.

எனவே தோழர்களே நம்முடைய வழிபாட்டு உரிமையையும் மொழியுரிமையையும் மீட்டெடுக்க பார்ப்பன ஆதிக்கத்தை முறியடிக்க நாம் ஒரணியில் திரள்வோம்! புரட்சியின் பாதையில் போராடுவோம்!!

- செ.கார்கி

Pin It