வஹ்ஹாபியம் தோற்றமும் வளர்ச்சியும் - 1

வஹ்ஹாபியம் தோற்றமும் வளர்ச்சியும் - 2

பிரிட்டிஷ் உளவாளி ஹெம்பரின் வாக்குமூலத் தொடர்ச்சி...

ஹிஜிரி 1122ல் அதாவது கிபி 1710ல் பிரிட்டன் காலனிய அமைச்சகம் என்னை எகிப்து, ஈராக், ஹிஜாஸ் (மக்கா மற்றும் மதீனா) மற்றும் இஸ்தான்புல் நகருக்கு உளவாளியாக அனுப்பி வைத்தது. அங்கிருந்து முஸ்லிம்களை உடைப்பதற்கான போதிய, தேவையான தகவல்களை அனுப்புமாறு பணித்தது. மேலும் ஒன்பது பேர்களை அமைச்சகம் கூடுதலாக நியமித்தது. அவர்கள் தைரியமும், திறனும் கூடியவர்களாக இருந்தார்கள். பணத்தின் அடிப்படையில், தகவல்களும், நிலப்படங்களும் எங்களுக்குத் தேவையாக இருந்தன. இனக்குழு தலைவர்கள், கல்வியாளர்கள் மற்றும் அரச பிரதிநிதிகள் ஆகியோரின் பெயர்களும் அதில் இடம்பெற்றிருந்தன. என்னால் மறக்க முடியாது. நான் எங்கள் செயலாளரிடம் விடை பெறும்போது, அவர் சொன்னார். "நம் அரசின் வெற்றியே உங்களைச் சார்ந்து தான் இருக்கிறது. ஆகவே நீங்கள் உங்களின் முழுமையான ஆற்றலை இதற்குப் பயன்படுத்த வேண்டும்."

நான் இஸ்தான்புல்லுக்கு சென்றேன். அது இஸ்லாமிய அரசின் தலைமையகமாக இருந்தது. என் பிரதான வேலையே இங்குள்ள மக்களின் மொழியான துருக்கிய மொழியை கற்பதாக இருந்தது. ஏற்கனவே நான் லண்டனில் இருந்தபோது துருக்கி, அரபி மற்றும் பாரசீகம் ஆகியவற்றை ஓரளவு கற்றிருந்தேன். மேலும் மொழியைப் படிப்பது என்பது பேச்சுமொழியை விட வித்தியாசமாக இருந்தது. முந்தைய திறனானது சில வருடங்களில் வந்து விடும். ஆனால் பிந்தையவற்றிற்கு சில காலம் பிடிக்கும். நான் துருக்கி மொழியை அதன் சகல நுட்பங்களோடு மக்கள் என்னை சந்தேகிக்காதவாறு கற்க வேண்டும்.

துருக்கியர்கள் என்னை சந்தேகிப்பார்கள் என்று நான் கவலை கொள்ளவில்லை. முஸ்லிம்கள் சகிப்புதன்மை கொண்ட, திறந்த மனதை உடைய, தாராள மனம் படைத்தவர்கள். அவர்களின் தூதரிடமிருந்து இதனை கற்றிருக்கிறார்கள். எங்களைப் போன்று சந்தேக மனம் படைத்தவர்கள் அல்லர். எல்லாவற்றிற்கும் மேலாக துருக்கிய அரசானது உளவாளிகளை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்ய எந்த நிறுவனத்தையும் வைத்திருக்கவில்லை.

நீண்ட பயண களைப்பிற்கு பின் இஸ்தான்புல் நகருக்கு வந்து சேர்ந்தேன். என் பெயரை முஹம்மது என்பதாக அறிவித்துக்கொண்டேன். மசூதிக்கு செல்ல ஆரம்பித்தேன். முஸ்லிம்களைப் போன்றே தொழுகையில் நடந்து கொண்டேன். சில நேரங்களில் நான் சொல்லிக்கொண்டேன். ஏன் நாம் இந்த அப்பாவி மக்களுக்கு எதிராகப் போராடுகிறோம்? இதை நம் கடவுள் அறிவுறுத்தி இருக்கிறாரா? பின்னர் நான் என்னை நானே தேற்றிக்கொண்டேன். என் பணியை சிறந்த முறையில் செய்வதற்கு உறுதி எடுத்துக்கொண்டேன்.

இஸ்தான்புல் நகரில் முதுபெரும் கல்வியாளரான அஹ்மத் எபென்டியை சந்தித்தேன். அவரின் சிறந்த குணாம்சங்கள், திறந்த மனம், ஆன்மீக ஈடுபாடு மற்றும் தாராள குணம் ஆகியவற்றைப் பார்த்த போது எந்த கிறிஸ்தவ பாதிரியாரும் இவருக்கு சமமாக வரமாட்டார்கள் என்று கருத முடிந்தது. இவர் இறைத்தூதர் மாதிரி பகலில் உழைத்து இரவில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டார். அவரைப் பொருத்தவரை முழுமையான, சிறந்த மனிதர். அவர் இறைத்தூதரின் பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் அவரின் கண்கள் குளமாயின. நான் ஒரு சிறந்த அதிர்ஷ்டசாலி. அவர் என்னிடம் யார் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்கவில்லை. அவர் என்னை முஹம்மது எபன்டி என்று அழைத்தார். என் கேள்விகளுக்கு கண்ணியமாக, சாந்தமாக பதிலளித்தார். என்னை துருக்கிக்கு வந்த ஒரு விருந்தினராக கருதி சிறந்த முறையில் நடத்தினார். மேலும் கலிபாவின் நிழலாகப் பார்த்தார். இறைத்தூதரின் பிரதிநிதியாகக் கூட கருதினார். உண்மையில் இந்த பாசாங்கு என்னை துருக்கியில் சில காலம் தங்குவதற்கு உதவியாக இருந்தது.

ஒரு தடவை நான் அஹ்மத் எபன்டியின் இவ்வாறு சொன்னேன். "என் பெற்றோர் இறந்து விட்டனர். எனக்கு சகோதரர்களோ அல்லது சகோதரிகளோ அல்லது சொத்துக்களோ இல்லை. நான் இஸ்லாத்தின் மையத்திற்கு வந்தது திருக்குரான் மற்றும் சுன்னாவை கற்று அதன் படி வாழ்வதற்குத் தான். அது எனக்கு உலக மற்றும் மறு உலக நன்மையைத் தேடித் தரும்." இதனைக் கேட்ட அவர் மிக்க மகிழ்ச்சியடைந்து நீங்கள் மூன்று காரணங்களுக்காக மதிக்கப்படுவதற்கு தகுதியான நபராக மாறிவிட்டீர்கள் என்றார். அவற்றை குறித்து வைத்துக்கொண்டேன்.

1. நீங்கள் ஒரு முஸ்லிம். எல்லா முஸ்லிம்களும் சகோதரர்கள்.

2. நீங்கள் ஒரு விருந்தாளி. நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். விருந்தினரை உபசரியுங்கள்

3. நீங்கள் வேலை செய்ய வேண்டும். வேலை பார்ப்பவர் அல்லாஹ்வை நேசிக்கிறார்.

மேற்கண்ட வார்த்தைகள் என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கின. எனக்குள் நானே சொல்லிக்கொண்டேன். "இப்படியான பிரகாசமான உண்மைகள் கிறிஸ்தவத்தில் இருக்கிறதா?" வெட்கமாக இருக்கிறது. என்ன ஒரு உண்மையான மார்க்கமாக இருக்கிறது. ஆனால் ஏமாற்றுக்காரர்கள் கையில் சிக்கி இது தன்மதிப்பை இழக்கிறது. அம்மக்கள் தங்கள் வாழ்வு எப்படி சென்று கொண்டிருக்கிறது என்பது பற்றிய விழிப்பு இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.

நான் அஹ்மது எபன்டியிடம் குர் ஆனை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்தேன். அவர் எனக்கு மகிழ்ச்சியோடு அதைக் கற்பித்தார்.

குர் ஆனின் தொடக்க அத்தியாயத்தை பொருளோடு எனக்கு கற்பித்தார். சில வார்த்தைகளை உச்சரிப்பதற்கு எனக்கு கடினமாக இருந்தது. இன்னும் இரு ஆண்டுகளில் குர் ஆன் முழுவதையும் நான் கற்றுக்கொண்டாக வேண்டும். மேலும் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் என்னை சுத்தமாக்கிக் கொள்ள பணித்தார். அவரும் அவ்வாறே செய்தார். மேலும் கிப்லா (கிழக்கு பக்கம்) நோக்கி உட்கார்ந்து கொண்டு எனக்கு குர் ஆனை கற்பித்தார். ஒழு செய்தல் (சுத்தமாக்கல்) என்பதில் முஸ்லிம்கள் கீழ்கண்டவாறு செய்கிறார்கள்.

1. முகத்தை கழுவுதல்

2.வலது முழங்கையை விரலிலிருந்து தொடங்குதல்- மணிக்கட்டு வரை

3. இடது முழங்கையை விரலிலிருந்து தொடங்குதல் - மணிக்கட்டு வரை

4. தண்ணீர் தொட்டு தலை மற்றும் காதுகளில் பின்புறம் தடவுதல்

5. இரு பாதங்களையும் கழுவுதல்

மேலும் மிஸ்வாக் பயன்படுத்துவது எனக்கு அருவருப்பாக இருந்தது. மிஸ்வாக் என்பது முஸ்லிம்கள் பற்களையும், ஈறுகளையும் சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தும் குச்சி. இந்த குச்சியானது நம் பற்களுக்கும், ஈறுகளுக்கும் பெரும் தீங்கு விளைவிக்கும் என்று கருதினேன். சில சமயங்களில் இது என் வாயில் குத்தி இரத்தம் வந்திருக்கிறது. இன்னும் நான் அதனை பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன். அவர்களைப் பொருத்தவரை மிஸ்வாக் என்பது நபி வழி. இந்த மரம் மிகவும் பயனுள்ளது என்றார்கள். உண்மையில் ஈறிலிருந்து இரத்தம் வருவது நின்றது. மேலும் என் மூச்சு பிரிட்டன் மக்களுக்காக இருந்தது. பலர் போய்விட்டார்கள்.

இஸ்தான் புல் நகரில் நான் தங்கியிருந்த காலத்தில் பள்ளிவாசலில் பணிபுரிந்த ஒருவருக்கு சொந்தமான அறையை வாடகைக்கு எடுத்து அங்கு என் இரவுகளை கழித்தேன். அவரின் பெயரின் மர்வான் எபன்டி. மர்வான் என்பது நபித் தோழரின் பெயர். அவர் உணர்ச்சிகரமான மனிதராக இருந்தார். அவரின் பெயரைப் பற்றிய சுயதம்பட்டம் அதிகம் அவரிடம் இருந்தது. என்னிடத்தில் சொன்னார். " வருங்காலத்தில் எனக்கு ஒரு மகன் பிறந்தால் அவனுக்கு மர்வான் என்று பெயர் வைக்கவும். அது மிக உயர்ந்த பெயர். இஸ்லாமின் மிகப்பெரும் படைவீரர் அவர்.

மர்வான் எபன்டி எனக்காக இரவு உணவை தயார் செய்திருந்தார். வெள்ளிக்கிழமைகளில் நான் வேலைக்கு செல்வது கிடையாது. காரணம் அது முஸ்லிம்களின் விடுமுறை நாள். மற்ற நாட்களில் காலித் என்ற தச்சரிடம் நான் வாராந்திர ஊதியத்தின் அடிப்படையில் தச்சு வேலை செய்தேன். அது பகுதி நேரமாக இருந்தது. காலை முதல் மதியம் வரை. அதற்காக பகுதி கூலியை எனக்கு அவர் கொடுத்தார். மற்ற நேரங்களில் அவர் காலித் இப்னு வலீத் என்ற இஸ்லாமிய படைவீரரின் சரித்திரத்தை எனக்கு சொல்வார். அவர் நபித்தோழரில் ஒருவர். மிகப்பெரும் தியாகி. அவர் உமரின் அவையிலிருந்து நீக்கப்பட்டார்.

நான் பணிபுரிந்த காலித் என்ற தச்சரைப் பொருத்தவரை ஒழுக்கங்கெட்ட, உணர்ச்சிகரமான மனிதர். சில நேரங்களில் என்னை அதிகம் நம்பினார். ஏன் என்று தெரியவில்லை. ஒருவேளை நான் அவருக்கு கீழ்படிந்து நடந்த காரணமாக இருக்கலாம். அவரின் அந்தரங்க வாழ்வில் ஷரி ஆ என்ற விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை. ஆனால் நண்பர்களுடன் பழகும் போது அந்தப் பணிதலை வெளிப்படுத்தினார். வெள்ளிக்கிழமை வழிபாட்டில் கலந்து கொண்டார். ஆனால் மற்ற நேரங்களில் அவர் தொழுவதில்லை.

நான் காலை உணவை கடையில் எடுத்துக்கொள்வேன். வேலைக்குப் பிறகு மதிய நேர தொழுகையில் கலந்து கொள்வேன். பின்னர் அஹ்மத் எபன்டியின் இடத்திற்கு செல்வேன். அங்கு அவர் எனக்கு குர் ஆன், அரபி மற்றும் துருக்கி மொழியை கற்பித்தார். என் வாராந்திர வருவாயின் ஒரு பகுதியை அவரிடத்தில் கொடுப்பேன். காரணம் எனக்கு அவர் மேற்கண்டவற்றை சிறந்த முறையில் கற்பித்தார். உண்மையில் குர் ஆனை சிறந்த முறையில் கற்பித்தார். மேலும் இஸ்லாமிய மார்க்கத்திற்குத் தேவையான விஷயங்கள், அரபி மொழியின் நுணுக்கங்கள், துருக்கிய மொழி குறித்தும் விரிவாக கற்பித்தார்.

அஹ்மத் எபன்டி என்னை தனியான ஆள் என்று அறிந்த போது, அவரின் மகள்களில் ஒருவரை திருமணம் செய்ய வேண்டினார். அதை நான் நிராகரித்தேன். அவர் தொடர்ந்து அறிவுறுத்தினார். திருமணம் என்பது நபியின் வழி என்றார். மேலும் யார் என் வழியை விட்டு விலகுகிறார்களோ அவர்கள் என்னைச் சார்ந்தவர்களல்லர் என்ற நபிமொழியை எனக்கு எடுத்துக் கூறினார். இந்நிகழ்வு எங்களுக்குள்ளான உறவை முடிவுக்கு கொண்டுவந்து விடும் என்று பயந்தேன். அதற்காக அவரிடத்தில் பொய் சொன்னேன். "நான் ஆண்மையற்றவன்" என்றேன். இதன்மூலம் இருவருக்கிடையேயான நட்பைத் தொடர முடியும் என்று நினைத்தேன்.

இஸ்தான்புல் நகரில் இருவருடங்களை கழித்து விட்ட பிறகு ஒரு தடவை அஹ்மத் எபன்டியிடம் நான் சொன்னேன் "நான் என் வீட்டுக்கு திரும்ப வேண்டும்". இல்லை. நீங்கள் போகக்கூடாது என்றார். "எதற்காக செல்கிறீர்கள்?" என்ற கேட்டபோது, "உங்களுக்குத் தேவையானதை இந்த நகரில் நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும். இறைவன் இந்த உலகத்தையும், மார்க்கத்தையும் ஒரு சேர இந்நகரில் தந்திருக்கிறான். உங்களுக்கு தான் தாய் தந்தை மற்றும் சகோதர சகோதரிகள் கிடையாதே? ஏன் நீங்கள் இந்நகரில் நிரந்தரமாக தங்கி விடக்கூடாது?" இவ்வாறாக அஹ்மத் எபன்டி அவருக்கு துணையாக நான் இருக்கும் படி பணித்தார். இந்த காரணத்திற்காக அவருடன் இணைந்து பணிபுரிய இஸ்தான்புல் நகரில் தங்கி விடுமாறு என்னிடம் கூறினார். ஆனால் என் நாட்டிற்கு நான் செய்ய வேண்டிய பணிக்காக எனக்கு லண்டன் திரும்ப வேண்டியதிருந்தது. துருக்கிய அரசாங்கம் குறித்து விரிவான அறிக்கையை அமைச்சகத்திடம் சமர்பிக்கவும், மேற்கொண்ட உத்தரவுகளை அவர்கள் பிறப்பிக்கவும் ஏதுவாக நான் லண்டன் செல்ல வேண்டியதிருந்தது.

நான் இஸ்தான்புல் நகரில் தங்கியிருந்த காலகட்டங்களில் ஒவ்வொரு மாதமும் காலனிய அமைச்சகத்திற்கு என் அவதான அறிக்கைகளை அனுப்பிக்கொண்டு வந்தேன். என் ஒவ்வொரு அறிக்கையையும் நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. நான் என்ன செய்ய வேண்டும்? விலங்கோடு புணர வேண்டுமா? உன் லட்சியத்தை அடைய வேண்டுமென்றால் உன்னால் முடியும். மேலும் இந்த மொத்த உலகமே என் தலைமீது கவிழ்ந்திருப்பதை போன்று உணரத் தொடங்கினேன். இம்மாதிரியான தரங்கெட்ட செயல்பாடுகள் இங்கிலாந்தில் சாதாரணமாக இருந்தன. ஆனால் என் உயரதிகாரிகள் இதனை நிறைவேற்ற கட்டளை இடும் அளவிற்கு ஒன்றும் நடந்துவிடவில்லை. என்னால் என்ன செய்ய முடிந்தது? பழத்தை தின்று விட்டு கொட்டையைத் துப்புவது தவிர வேறுவழியில்லை. ஆக நான் அமைதியாக இருந்து என் வேலைகளை கவனித்து வந்தேன்.

அஹ்மத் எபன்டியிடம் நான் விடைபெறும் போது அவரின் கண்கள் குளமாயின. கண்ணீர் விட்டு அழுதார். என்னிடத்தில் சொன்னார். "மகனே இறைவன் உன்னோடு இருப்பான். நீ இஸ்தான்புல் நகருக்கு திரும்பி வரும் போது நான் மரணித்து இருப்பேன். என்னை நினைவு வைத்துக்கொள். என் ஆன்மாவிற்காக குர் ஆனின் முதல் அத்தியாயத்தை ஓது. நாம் அந்த நியாயத் தீர்ப்பு நாளில் நம் நபி முன்பாக சந்திப்போம்." இவ்வாறு அவர் சொன்ன போது எனக்கு மிகுந்த சோகமாக இருந்தது. எனக்கு கூட கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. ஆனாலும் என் பணி என்பது வலிமையாக இருந்தது.

(இன்னும் வரும்.....)

- எச்.பீர்முஹம்மது

வஹ்ஹாபியம் தோற்றமும் வளர்ச்சியும் - 4

Pin It