இந்தியா சுதந்திரம் அடைந்த போது 20 பல்கலைக்கழகங்களும் 500 கல்லு}ரிகளும் மட்டுமே இருந்தன. வெறும் 2.1 லட்சம் பேர் மட்டுமே கல்லு}ரிகளில் படித்தனர். ஆனால் இன்று இந்தியா முழுவதும் 523 பல்கலைக் கழகங்களும் 33,023 கல்லு}ரிகளும் உள்ளன. இதில் 2010 -2011 ஆம் அண்டு கணக்கின்படி 169.75 லட்சம் மாணவர்கள் கல்வி பெறுகின்றனர். 2009 -2010 ஆம் ஆண்டு 156.35 லட்சம் மாணவர்கள் கல்வி பயின்றனர். 2011-2012 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கலாம். ஒவ்வெரு வருடமும் கல்வியறிவு பெற்றவர்களின் சதவீதம் அதிகரித்தே வந்துள்ளது. ஆனால் இதில் எத்தனை சதவீதம் பேர் வேலைக்குச் சென்றார்கள்? அரசாங்கம் அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித்தந்ததா? என்பதே நம் முன்னால் உள்ள கேள்வி.

உலகமயமாக்கலுக்குப் பிறகு கல்வியை தரும் பொறுப்பில் இருந்து அரசாங்கம் மெல்ல மெல்ல விலகி இன்று பாராதூரமான இடைவெளியை உருவாக்கியுள்ளது. இன்று அந்த இடத்தில் ரியல் எஸ்டேட் மா்பியாக்களும், சாராய வியாபாரிகளும், அரசியல்வாதிகளும், பெரும்தொழில் நிறுவனங்களும் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ‘கல்வி வள்ளல்கள்’ என்ற பொது பெயர்களால் அழைக்கப்படுகின்றனர்.

வருடந்தோறும் இப்படி கோடிக்கணக்கான மாணவர்கள் இந்த கல்வி வள்ளல்கள் நடத்தும் கல்வித் தொழிற்சாலைகளில் உற்பத்திசெய்யப்படுகின்றனர். எந்தவித  வேலைவாய்ப்பு உத்திரவாதமும் இன்றி படிப்பை முடித்த கோடிக்கணக்கான மாணவர்கள் உழைப்புச் சந்தையில் குவிந்து கிடக்கின்றனர். இதனால் கூலி மிகவும் மலிவாக்கப்பட்டுள்ளது. படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் பல இளைஞர்கள் கிடைத்த nவைலக்குச் செல்ல முடிவெடுக்கிறார்கள். உணவுவிடுதிகள், துணிக்கடைகள், கட்டிட வேலை, லாரி ஓட்டுவது, ஆட்டோ ஓட்டுவது, கம்யூட்டர் சென்டர்கள், செல்போன் கடைகள், பேக்கரிகள், திருமணங்களில் உணவு பரிமாறும் வேலைகள் என இந்தப்பட்டியல் மிக நீளமானது.

கல்விவள்ளல்களிடம் கொட்டுவதற்காக கடன் வாங்கி போண்டியான தனது குடும்ப பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், தன்னுடைய அக்காவுக்கோ, தங்கைக்கோ, திருமணம் நடத்திவைக்கவும் படித்த இளைஞர்களில் பலர் இதுபோன்ற வேலைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கின்றனர்.

கல்லு}ரிகள் தங்கள் கல்லு}ரிகளில் படித்தால் வேலைவாய்ப்பு உறுதி என்ற வாக்குறுதியுடன் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. கேம்பஸ் இன்டர்யூ என்ற பெயரில் ஒரு சில மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுத்துவிட்டு பெரும்பாண்மையான மாணவர்களை தகுதியும் திறமையும் அற்றவர்கள் என்று புறக்கணிப்பதும் நடக்கின்றது. மாணவர்கள் கடுமையாக போராடி ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலைக்குச்; சேர்ந்தாலும் எந்த தொழில் பாதுகாப்பும் அற்ற Nழ்நிலையே நிலவுகிறது. அவர்கள் பெரும்பாலும் ஒப்பந்த தொழிலாளர்களாகவே உள்ளனர். வேலைக்குச் சேரும் இடங்களில் டிரெய்னிங், அப்ரண்டீஸ் போன்ற பெயர்களில் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். 2007 -2008ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஓர் ஆய்வின் படி 50% இளைஞர்கள் சுயதொழில் புரிவோராகவே உள்ளனர்.

1993-1994 ஆண்டுகளில் இந்தியாவில் வேலைவாய்ப்பு அற்றவர்களின் சதவீதம் 6.5 மில்லியனாக இருந்தது அதுவே 2004 -2005 ஆண்டுகளில் 9.5 மில்லியனாக உயர்ந்துள்ளது. இதில் 49% இளைஞர்கள் ஆவர்கள். தொடர்ச்சியாக வேலைவாய்ப்புகள் இன்றி சற்றோக்குறைய 203.6 மில்லியன் இளைஞர்கள் இந்தியாவில் உள்ளனர்.

நிறுவனங்களில் பணிபுரியும் 15 வயதில் இருந்து 24 வயது வரை இளைஞர்களின் சம்பளம் 2007 – ஆம் ஆண்டு கணக்குப்படி ரூ.88 ஆகும். இது நகர்புறத்தில் 123.3 ரூபாயாகவும், கிராமபுறத்தில் 71.8 ரூபாயாகவும் உள்ளது. இதில் அமைப்பு சாரா தொழிலாளர்களான இளைஞர்கள் பெறும் சம்பளம் மிகக் குறைவு. பொதுவாக 70.2 ரூபாயும் நகர்புறத்தில் 85.3 ரூபாயும், கிராமபுறத்தில் 67.7 ரூபாயகவும் உள்ளது. இந்த குறைவான சம்பளத்தை வைத்துக் கொண்டு கல்விக்காக வாங்கிய கடனை கட்டுவது என்பதோ, குடும்பத்தாரின் நலன்களை காப்பது என்பதோ நிச்சயம் இயலாத ஒன்று

இந்தய பெருமுதலாளிகளின் கூட்டமைப்பான அசோசெம் 2,04,2013 அன்று வெளியிட்ட ஆய்வறிக்கையில் வேலையவாய்ப்பு 2012 அக்டோபர் முதல் 2013 – மார்ச் வரையிலான காலத்தில் 14% சரிவடைந்துள்ளதாக கூறியுள்ளது. அண்மையில் நிறைவடைந்த நிதி ஆண்டில் மொத்தம் 5.38 லட்சம் வேலை வாய்ப்புகளே உருவாக்கப்பட்டுள்ளன. மொத்தம் கல்வி கற்றவர்கள் சற்றோக்குறைய இரண்டு கோடியாக இருக்க வேலைவாய்ப்பு என்பது 0.5% அளவிலேயே உள்ளது. அதிலும் கூட தகவல் தொழில்நுட்ப துறையே அக்டோபர் - மார்ச் மாதத்தில் 1.20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது.

இந்திய அரசாங்கம் தங்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் என்று இனியும் நீங்கள் நம்பினால் உங்களது முடிவு சோகத்திற்கே இட்டுச் செல்லும். ஏனெனில் எந்த முதலாளிவர்கத்திற்கு இவர்கள் லட்சக்கணக்கான கோடிகளை மானியமாக கொடுத்து வளர்த்து விட்டார்களோ அவர்களது தொழிற்துறை இன்று மரணப்படுக்கையில் படுத்து கிடக்கின்றது. இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை 6.7 சதவீதமாக உள்ளது. ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகரித்துள்ளது. உள்நாட்டு சந்தையும் தேங்கிக்கிடக்கின்றது.

உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் பெரும்பாலான நாடுகள் இறக்குமதியை குறைத்துள்ளன. ரிசர்வ் வங்கி எவ்வளவுதான் வட்டியை குறைத்தலும் எழுந்து நடக்க முடியாத அளவிற்கு தொழில்துறை முடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் தற்போது தேக்கநிலை பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி குறைந்து வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து பணவீக்கமும் அதிகமாக இருந்தால் இதுபோன்று தேக்கநிலை பணவீக்கம் ஏற்படும்.

அதுமட்டும் அல்லாமல் கடந்த 2012 -2013 ஆம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 4.5 சதவீதமாக குறைந்துள்ளது. எனவே வேலைவாய்ப்பு என்பது மிக மிக அருகிவருகின்றது.

நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி மக்களுக்கு அளிக்கும் மானியங்களை வெட்டும் அரசு பெருமுதலாளிகளுக்கு 5.28163 லட்சம் கோடிகளை மானியமாக வழங்கியுள்ளது. கல்விக்காக ஒதுக்கப்பட்ட தொகை வெறும் 65 ஆயிரத்து 867 கோடி ரூபாய் மட்டுமேஸ. கோடிக்கணக்கான இளைஞர்களைப் பற்றியோ மக்களைப்பற்றியோ சிறிதும் கவலைப்படாமல் பெருமுதலாளிகளின் நலன்களைப் காப்பது மட்டுமே தங்களின் கடமையாக இந்தியாவில் உள்ள அனைத்து கட்சி அரசியல்வாதிகளும் உறுதியாக இருக்கிறார்கள்.

எனவே படித்த அனைவருக்கும் வேலைவாய்ப்பு வேண்டும், நிரந்தரமான வேலை வேண்டும். உழைப்புச் சுரண்டலை ஒழிக்க வேண்டும். ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்விவரை இலவசமாக அரசே தரவேண்டும். போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இளைஞர்கள் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும். அதுவே நமக்கான விடியலை கொண்டு வரும்

“ இழப்பதற்கு நம்மிடம் எதுவும் இல்லை

அடைவதற்கு உலகமே இருக்கின்றது.”

 

Pin It