நிகழ்ந்து கொண்டிருக்கிற பொருளாதார நெருக்கடியால் சாமான்ய மக்கள் படுகிற பொருளாதார துன்பத்தின் சுமையைக் குறைக்க வழிகளைக் கண்டுபிடிப்பது இருக்கட்டும், அய்முகூ அரசாங்கத்தின் 2013 - 2014 பொது நிதிநிலை அறிக்கை, அந்தத் துன்பத்தை அங்கீகரிக்கக் கூட மறுத்துள்ளது.

அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வில் இருந்து சாமான்ய மக்களைப் பாதுகாக்க நிதிநிலை அறிக்கையில் எந்த காத்திரமான முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

முன்வைக்கப்பட்டுள்ள உணவுப் பாதுகாப்புச் சட்டத்துக்கு வெறும் ரூ.10,000 கோடி ஒதுக்கியிருப்பது, 2009 மக்களவை தேர்தல்களில் அய்முகூ அரசாங்கம் முன்வைத்த இந்த மிகப்பெரிய வாக்குறுதி பற்றிய அரசாங்கத்தின் அக்கறையற்ற அணுகுமுறையைக் காட்டுகிறது. நேரெதிராக, கணிசமான ஊழலுக்கும் சேர்த்து, ராணுவ தளவாடங்கள் இறக்குமதி மற்றும் வாங்குதலுக்கான நிதி ஊதிப்பெரிதாக்கப்படுகிறது என்று சமீபத்திய ஹெலிகாப்டர் ஊழல் உட்பட, பல முறை அம்பலப்படுத்தப்பட்டபோதும், ராணுவத்துக்காக ரூ.2 லட்சம் கோடிக்கும் மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பெருநிறுவனங்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ள ரூ.68,007.60 கோடி வரி விலக்குடன் ஒப்பிடும்போது, வரி செலுத்துகிற அதிபணக்காரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 10% கூடுதல் வரி வெறும் அடையாளவாதமே.

விட்டுத்தரப்படுகிற மொத்த வருமானம் ரூ.5.73 ட்ரில்லியன் (1 ட்ரில்லியன் = 1 லட்சம் கோடி). உள்துறை அமைச்சராக இந்தியப் பெண்களுக்கு இந்தியாவை பாதுகாப்பானதாக மாற்ற சிதம்பரம் தவறிவிட்டார். உண்மையில் அவருடைய செல்லத் திட்டமான பசுமை வேட்டை பெண்களை இலக்காக்குவதற்கு பெயர் பெற்றது. இப்போது நிதியமைச்சரான பிறகு, டில்லி வீரப்பெண்ணின் பெயரால், அடையாளமாக ரூ.1000 கோடிக்கு ஒரு நிதியை அறிவித்துள்ளார்.

மாறாக, என்ன தேவை என்றால், பெண் தொழிலாளர்களுக்கு, தனியாக வாழும் பெண்களுக்கு பாதுகாப்பான இருப்பிடங்கள் அமைக்க ஒரு மிகப் பெரிய திட்டமே.

அதேபோல், பெண்களுக்கு மலிவான, எளிதான கடனை உறுதி செய்வதற்கு பதில், பெண்களுக்கு தனி வங்கி என நிதியமைச்சர் தந்திரமாக அறிவித்துள்ளார்.

சுருங்கச் சொன்னால், நிதிநிலை அறிக்கை 2013 - 2014 பொருளாதார தப்பித்தல்வாதம், அரசியல் ஈர்ப்பு உத்தி மற்றும் புள்ளிவிவர வித்தைக் காட்சி நடவடிக்கை.

- திபங்கர் பட்டாச்சார்யா, (பொதுச் செயலாளர்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் ) விடுதலை

Pin It