பதினெட்டாம் நு}ற்றாண்டின் அறுபதுகளிலும் எழுபதிகளிலும் விவசாயிகளின் போராட்ங்களினாl இந்தியா குலுங்கிக் கொண்டிருந்தது வஹபி கிளர்ச்சி, ஆந்திரவிலும் மலபாரிலும் நடைபெற்ற ரம்பா, மாப்பிளா எழுச்சிகள் போன்றவை முக்கியமானவை வெள்ளைக்கார சீமான்களின் தூக்கத்தை கலைத்தது இந்த  எழுச்சிகள்.சுதாரித்துக்கொண்ட ஆங்கிலேய அரசாங்கம் இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் கைக்கூலிகளைக் கொண்டு 1885-இல் ஒரு பாதுகாப்பு திறப்பை ஆலன்; அக்டேவியஸ் ஹ்யூம் என்ற ஆங்கிலேயர் மூலம் உருவாக்கியது. ஆந்த பாதுகாப்பு திறப்பின் பெயர்தான் காங்கிரஸ்.
ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரவுத்துவ எதிர்ப்பு தேசிய விடுதலைப் போராட்டங்களைப் பயனற்றதாக்கவும், முன் உணர்ந்து தடுக்கவுமே இந்த இந்திய தேசியக் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது.1982 ஆம் ஆண்டு பிப்ரவாp 15-ஆம் தேதியிட்ட ஒரு மடலில் ஹ்யூம் காங்கிரஸ் கட்சியின் ஒவ்வோர் உறுப்பினரையும் பின்வருமாறு எச்சரிக்கிறார்.“உங்களுக்கு-அதிலும்குறிப்பாகப் பணக்காரர்களுக்கும் வசதியானவர்களுக்கும் -ஒன்று விளங்கவில்லை. தற்போது நிலவும் நிர்வாக அமைப்பு முறை நாட்டின் தேவைகளுக்குத் தக்க அமைக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, மக்களை அது ஓட்டாண்டி ஆக்கிக் கொண்டிருக்கிறது என்பது மட்டுமல்ல … உலக வரலாற்றிலேயே மிகவும் பயங்கரமான அரசியல் பிரளயங்களில் ஒன்றுக்கான வழியைத் தவிர்க்க முடியாதபடி ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறது. என்பதாகும் அது………. உங்களையோ தன்னையோ காத்துவிட அரசாங்கத்தால் முடியும் எனக் கற்பனை செய்துகொள்ள வேண்டாம். இது போன்ற ஒரு நாட்டில் எழும் நாடு தழுவிய விவசாயப் புரட்சியைத் தடுத்து நிறுத்த உலகில் உள்ள எந்தச் சத்தியாலும் முடியாது.”
இப்படியொரு கொந்தளிப்பான சூழ்நிலையில் தான் இந்தியப் பெருமுதலாளிகளும் அரசின் உதவிச் செயலாளர் ராபர்ட்ஸ்சும் அழைத்ததன் பேரில் 1915-ஆம் ஆண்டு ஜனவரி 9-ஆம் நாள் தென் ஆப்பிரிக்காவில் இருந்து இங்கிலாந்து வழியாக காந்தி இந்தியா திரும்பினார். காந்தி லண்டனை வந்தடைந்த நேரம் முதல் உலகப்போர் தொடங்கியிருந்தது- சும்மா இருப்பரா காந்தி? அந்த மாபெரும் பேரரசின் உறுப்பினர் என்ற முறையில் பிரிட்டனின் ஏகாதிபத்தியப் போருக்கு தன் விசுவாசத்தை காட்ட இந்தியாpன் ஆம்புலன்ஸ் தொண்டர் படை ஒன்றை திரட்டினார். வழக்கம் போல இதற்கான நிதியும் இந்தியப் முதலாளிகளே வழங்கினர்.
தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் போது காந்தி உதிர்த்த தத்துவ முத்துக்கள்.“பிரிட்டிஷ் முடியாட்சியின் கீழ் இருப்பதில் பெருமை அடைகிறார்கள் இந்தியர்கள்”
“பிரிட்டிஷ் ஆட்சிக்கு முடிவு கட்டுவதன் மூலம் நாம் நட்டத்தையே அடைவோம்.
“ஆங்கிலேயரையும், இந்தியரையும் ஆண்டவனே ஒன்று சேர்த்து வைத்திருக்கிறான். முன்னவரின் கைகளில் பின்னவரின் தலைவதியை ஒப்புவித்திருக்கிறான்”.“இறைவன் மேல் நம்பிக்கை உள்ளவர்கள் அவனது சித்தமில்லாமல் இந்தியாவை பிரிட்டிஷhர் ஆளமுடியாது என்பதை ஒப்புக் கொள்கிறார்கள்”. காந்தியின் எண்ணம், சொல், செயல், என்று எல்லாவற்றிலும் ஏகாதிபத்திய அடிவருடித்தனம் நிரம்பி இருந்தது.
1915ம் ஆண்டு ஏப்ரலில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பிய பிறகு சென்னையில் நடைபெற்ற விருந்தில் பிரிட்டிஷ் இந்தியாவுக்கு வாழ்த்துக் கூறிய காந்தி
…………..”பிரிட்டிஷ் பேரரசுக்குக் குறிப்பிட்ட குறிக்கோள்கள் இருப்பதை நாள் கண்டுகொண்டேன். அவற்றின் மேல் காதலாகிவிட்டேன் …. பிரிட்டிஷ் பேரரசின் ஒவ்வொரு குடிமகனும் ஆற்றல்களைப் பெற்றுக் கொள்ளவும் அருட்செயல்கள் ஆற்றுவதற்கும் சாத்தியமான அளவு சுதந்திரமான வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறார் என்பது அக்குறிக்கோள்களில் ஒன்றாகும்.
1925-ஆம் ஆண்டு, ஜுலையில் கல்கத்தாவில் கிராண்டு உணவகத்தில் நடந்த ஐரோப்பியச் சங்கத்துடனான தன் சந்திப்பின் போது அவர்.“ஒத்துழைக்க வேண்டும் என்பதில் எனக்குத் தனியாத தாகம் உண்டு ………. இங்கிலாந்தின் தலைவிதியும் இந்தியாவின் தலைவிதியும் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. அதுவும் மனிதகுலச் சேவை என்ற நல்ல நோக்கத்துக்காகவே அவ்வாறு ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது.மகாத்மா போன்ற சூடு சொரணை உள்ள ஒரு இநதியனுக்கு இவ்வாறு தோன்றியதில் வியப்பேதுமில்லை.
1931-ஆம் ஆண்டு, மார்ச் 22 நவஜPவன் (குஜராத்தி) ஏட்டில் “அரசர்களும் ஆண்டிகளும்’ என்ற தலைப்பிட்ட ஒரு கட்டுரையில் காந்தி இப்படி எழுதினார்.…..”செல்வந்தர்கள் மேல் வன்மம் வைக்காமல் இருப்பதுதான் ஏழைகளின் தர்மமாகும். தம் வறுமைக்குப் பெரிதும் காரணம் தம் சொந்தக் குற்றமே, தம் சொந்தத் தவறுகளே என்பதை ஏழைகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.” இந்திய பெரு முதலாளிகளுக்கு இவரை விட ஒரு சிறந்த அடியாள் வேறு யாரும் இருக்க முடியாது.
அகிம்சை வழி, ஒத்துழையாமை அல்லது சட்ட மறுப்பு என்ற காந்தியின் செயலுத்தியானது இந்திய வரலாற்றின் நெருக்கடியான சில கணங்களின் சூழ்நிலைகளால் அவர்மேல் திணிக்கப்பட்டது என்பதே உண்மை. அத்தகைய ஒவ்வோர் இயக்கத்தைத் தொடுப்பதற்கும் முன் அவர் வாக்கியத்தைப் போல் நாய் வாலை ஆட்டவில்லை வால் தான் நாயை ஆட்டியது. அகிம்சை, ஒத்துழையாமை, சட்டமறுப்பு என எந்தப் போராட்ட முறையாக இருந்தாலும், ஏகாதிபத்தியத்தின் திட்டத்தைக் குலைத்து விடாதபடி மக்களின் கோபத்தை வெளியே அனுமதிக்கும் ஒரு கருவியாகவே – பாதுகாப்பு வால்வாகவே அப்போராட்டங்களைக் காந்தி வடிவமைத்தார். ஏராளமான கட்டுப்பாடுகளைப் போராட்டத்தின் போது அவர் விதித்ததும் இதற்காகத்தான்.அந்நிய ஆட்சியாளர்களை இக்கட்டுக்கு உள்ளாக்குவது அல்ல. “தன்னையே வதைத்துக் கொள்வதன்” வாயிலாக ஆட்சியாளர்களின் நெசத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதே தமது நோக்கம் என்று திரும்ப திரும்பச் சுட்டிக் காட்டினார். காங்கிரஸ் தலைமை வகுத்த வரம்புகளை எப்போதெல்லாம் இயக்கங்கள் மீறி ஆட்சியாளர்களுக்கு உண்மையான பதற்றத்தை விளைவித்தனவே அப்போதெல்லாம் அவை சட்டென்று திரும்ப பெறப்பட்டன அதன் விளைவாக மிகப்பெரிய அளவிற்கு சீரழிவும் சகோதரப் படுகொலைகளும் உருவாயின.
காந்தியின் செயலரான மகாதேவ தேசாய் அவர்கள் பிர்லாவுக்கு பின்வருமாறு எழுதுகிறார். சட்டமறுப்பு இயக்கமானது ஒடுக்கப்பட்ட மக்கள் “தங்கள் எதிர்ப்பை வெளியிடக் கிடைத்த வடிகால்” ஆகும். காலனி ஆட்சியாளர்களுக்கும் அவர்கள் கூட்டாளிகளுக்கும் நன்மை செய்யும் நோக்கம் கொண்ட ஒரு வகை பாதுகாப்பு வால்வாகும்.காந்தியை அன்று சரியான முறையில் தோலுரித்தவர்களில் அம்பேத்காரும் ஒருவர். அவர் பின்வருமாறு மதிப்பிடுகின்றார்.
1.    “ஒத்துழையாமை 2) பகிஷ்காரம்  3) சட்டமறுப்பு   4) உண்ணாவிரதம்
இவைதான் இந்தியாவின் விடுதலைக் கோரிக்கைக்கு ஆதரவாக நிர்பந்தங்கள் தருவதற்கு காங்கிரஸ் தனது உலைக்களத்தில் உருவாக்கி வைத்திருக்கும் நான்கு ஆயுதங்களாகும்.
இந்த ஆயுதங்களை உருவாக்கிய பிறகு அவற்றைப் பயன்படுத்துவதில் காங்கிரஸ் முனைந்து ஈடுபட்டது. 1920க்கும் 1942க்கும் இடையே காங்கிரஸ்காரர்கள் இந்த ஆயுதங்களை ஏதேனும் ஒரு வகையில் பயன்படுத்துவதை நாடு கண்டது. இதில் காது செவிடுபடும்படி அவர்கள் எழுப்பிய கூச்சலும் குழப்பமும் பேரொலியும் மக்களை ஈர்த்தன . இந்த நடவடிக்கைகள் யாவும் “சுதந்தரப் போராட்டம்” என ஆடம்பர ஆர்ப்பாட்டமாக வருணிக்கப்பட்டன. இத்தகைய நிர்பந்தங்கள் என்ன பலனை விளைவித்தன என்பது தீவிர ஆராய்ச்சிக்குறிய விஷயமாகும். ஆனால் இத்தகைய ஆராய்ச்சிக்கு இது இடமல்ல ஒன்றை மட்டும் இங்கு கூறமுடியும். அதாவது பழைய காங்கிரஸ் இதைவிட மோசமாக எதையும் செய்திருக்க முடியாது.”
மேலும் காந்தியின் காங்கிரசானது தீண்டப்பாடதவர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகள் அதானல்தான் அவர்கள் ‘சுதந்திப் போராட்டதில்’ பங்கெடுப்பதில்லை என்று கூறிவந்தது. இதற்கு விளக்கமளித்த அம்பேத்கார்.“சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொள்ளாதற்கு அவர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் எடுபிடியாக இருப்பது காரணமல்ல, மாறாக இந்தியா சுதந்திரம் பெறுவது இந்துக்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டும், அது அவர்களுக்கு சுவிட்ச வாழ்வும், விடுதலையும், ஒளிமயமான எதிர்காலமும் என்றென்றும், கிட்டாதபடிச் செய்து, அவர்களை வெறும் விறகு வெட்டிகளாகவும் தண்ணீர் சுமப்பவர்களாகவும் ஆக்கிவிடும் என்ற பயமே தீண்டப்படாதவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொள்ளாதிருக்கக் காரணமாகும்.”
மேலும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்கு தனி வாக்காளர் தொகுதிகள் வழங்கக் கூடாது என்று சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். இது பற்றி அம்பேத்தகார் கூறுகையில் “முகமதியர்களுக்கும் சீக்கியர்களுக்கும் தனிவாக்காளர் தொகுதிகள் அளிப்பதால் தேசம் பிளவுபடப் போவதில்லை எனும் போது தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்குத் தனி வாக்காளர் தொகுதிகள் வழங்குவதால் இந்து சமுதாயம் பிளவுபட்டு விடும் என்று கூறமுடியாது. தாழ்த்தப்பட்டவர்களைத் தவிர ஏனைய வகுப்பினர்களுக்கும் சமூகங்களுக்கும் தனிவாக்காளர் தொகுதிகள் அளிக்கும் ஏற்பாடுகளினால் தேசம் பிளவுபடுமானால் அது அவரது மனச்சான்றை உறுத்தாது.
தீண்டப்படாதோருக்கு சேவை செய்வதற்காக காந்தியால் உருவாக்கப்பட்ட ஹரிஜன சேவாசங்கத்தைப் பற்றி பின்வறுமாறு அம்பேத்கார் கூறிகிறார்.“ஹரிஜன சேவாசங்கம் என்பது பெயரளவில்தான் ஓர் அறச்சிந்தனை அமைப்பே தவிர, மற்றபடி தீண்டப்படாதவர்களை இந்துக்களுக்கும் காங்கிரசுக்கும் பாதசேவை செய்பவர்களாக ஆக்குவதும், இந்துக்களது சமூக, சமய பொருளாதார, அரசியல் ஆதிக்கத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளும் நோக்கத்தோடு அவர்கள் தொடங்கும் எந்த இயக்கத்தையும் முளையிலேயே கிள்ளியெறிவதுதான் சங்கத்தின் உண்மையான குறிக்கோளாகும். ஏனவே ஹரிஜன சேவா சங்கத்தை கருணையின் மூலம் தங்களை கொல்லும் மிகுந்த அருவருப்பு கொண்ட ஓர் இழிவான அமைப்பாக தீண்டப்படாதோர் கருதுவதில் எந்த வியப்பும் இருக்க முடியாது.”
காந்தியின் சத்தியாகிரகம் பற்றியும் அதில் அவர் கொண்டிருந்த அறிவுபூர்வமான பார்வை பற்றியும் நாம் அறிந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.1938-ஆம் ஆண்டு, நவம்பரில் ஜெர்மானிய யூதர்களிடம் சத்தியாகிரகத்தை ஏற்றுக்கொள்ளுமாறு சொன்ன காந்தி ஹிட்லாpடம் யூதர்கள் சரணடைந்து தங்களது அகிம்சை மெய்பிக்க வேண்டும் என்றும் விரும்பினார்.அதே ஆண்டு டிசம்பரில் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் மதப் பரப்புநர்களின் ஒரு குழுவின் முன் காந்தி பின்வருமாறு வருத்தம் தெரிவித்தார்.
”தன் அகிம்சையை சோதிப்பதற்கான தருணம் வந்தபோது அந்தச் சோதனையில் சீன தோற்றது…… அதன் நிலைப்பாட்டை அகிம்சையின் அடிப்படையில் ஆராயும் போது நானூறு மில்லியன் மக்களைக் கொண்ட ஒரு நாடு - ஜப்பானுக்கு இணையான பண்பாட்டைக் கொண்ட நாடு- ஜப்பானின் ஆக்கிரமிப்பை முறியடிக்க ஜப்பானின் முறைகளையே நாடுவது பொருத்தமில்லை என்பதை நான் சொல்லியாக வேண்டும். “அவரது தீர்வு என்ன?சீனர்கள் “ஜப்பானிடம் ‘உங்கள் (அழிப்பு[) மந்திரத்தைக் கொண்டு வாருங்கள் எம் மக்களில் பாதிப்பேரை அதற்குப் பலி தருகிறேhம் ஆனால் மீதமிருக்கும் இருநு}று மில்லியன் பேர்கள் உங்களுக்கு மண்டியிடமாட்டார்கள் என்று சொல்லிருக்க வேண்டும். சீனர்கள் அப்படிச் செய்திருந்தால் ஜப்பான் சீனர்களுக்கு அடிமையாகி இருக்கும். இது போன்ற பல அறிய யோசனைகளை சொல்லி பலரையும் அசத்தியுள்ளார் நாம் காந்திஜிஅவர்கள்.
காந்தி எப்போதும் புரட்சிக்கும் புரட்சியாளர்களுக்கும் எதிரானவராகவே இருந்தார்.பகத்சிங்கின் தோழரான சுகதேவ் தூக்கிலிடப்படுவதற்கு முன்பு தனது தனிச்சிறையிலிருந்து காந்திக்கு ஒரு மடல் எழுதினார். புரட்சியாளர்கள் தமது போராட்த்தைக் கைவிட வேண்டும் என்று காந்தி பகிரங்கமாகக் கேட்டுக் கொள்வது அவர்களை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி வேட்டையாடுவதற்கு காலனியவாதிகளுக்கு உதவுவதாக இருக்கிறது என்று அதில் சுட்டிக்காட்டினார். காந்தியின் “வேண்டுகோள்கள் தங்கள் மத்தியில் நம்பிக்கை மோசடி,கைவிட்டுவிட்டு ஓடுவது போன்ற துரோகத்தை போதிப்பனவாய் இருக்கின்றன என்று சுட்டிக்காட்டிய சுகதேவ், காந்தி உண்மையிலேயே அந்நிய ஆட்சியாளர்களுடன் கரம்கோர்த்து கொள்ள விரும்பவில்லையென்றால் இந்தப் பிரச்சனையை ‘சில புரட்சியாளர் தலைவர்களிடம் - அத்தகையோர் பலர் சிறைகளில் இருக்கின்றனர் - விவாதித்து அவர்களுடன் ஓர் உடன்பாடு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அல்லது “இத்தகைய வேண்டுகோள்களை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தார். சுகதேவ் தூக்கிலிடப்பட்ட பிறகு அவருக்கு எழுதிய பகிரங்க கடிதத்தில் சுகதேவை “அரசியல் கொலைகாரர் என்று அகிம்சாமூர்த்தி கண்டனம் செய்தார். பிரிட்டிஷாரின் கைகளில் இருந்த துப்பாக்கியை ரசித்த காந்தியால் பகத்சிங் மற்றும் அவரது தோழர்களின் கைகளில் இருந்த துப்பாக்கியை ரசிக்கமுடியவில்லை.
1930-இல் பெஷாவாரில் நிராயுதபாணியான ஏகாதிபத்திய எதிர்ப்புக் கிளர்ச்சியார்களைக் கொல்லும்படி ஆணையிட்ட பிரிட்டிஷ் அதிகாரிகளின் கட்டளையை ஏற்க மறுத்த கார்வாலிவீரர்களின் செயல் அகிம்சை நடவடிக்கையாக காந்தியின் கண்களுக்கு தொpயவில்லை. மாறாக அதனை அவர் கண்டித்தார். இவரின் அனைத்துக் கருத்துப் பிரச்சாரங்களும் அரசியல் நடவடிக்கைகளும் ஏகாதிபத்திய – எதிர்ப்புப் போராட்டங்களின் முனையை மழுங்கடித்ததோடு அப்போராட்டங்களின் விளைவுகளையும் திசை திருப்பியது.அரசியல் ரீதியில் இந்திய பெருமுதலாளி வர்க்கம் பிரிட்டிஷ் பேரரசின் மரபுக் கூட்டாளியாகவே இருந்தது. இந்த வர்க்கத்தின் தலைவர்கள் சுதேசி இயக்கங்களுக்கும் கூட எதிர்ப்புத் தொpவித்தனர். ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான போட்டியை பயன்படுத்தி ஆதாயம் அடைவதற்கும், ஏகாதிபத்திய நாடுகளை அடிப்படையில் சார்ந்திருப்பது என்ற எல்லைக்குள் நல்ல பொருளாதார நலன்களையும், அதிக அரசியல் அதிகாரத்தையும் பெற்றுக் கொள்வதற்குமான சுதந்திரத்தையே இந்த முதலாளிவர்க்கம் விரும்பியது. தரகரர்களின் நலன்களை நன்கு பிரதிநீதித்துவப்படுத்திய காங்கிரஸ் தலைமையின் ஆதிக்கப் பிரிவு (காந்தி, பட்டேல், மற்றைய காந்திய சீடர்கள்) பிரிட்டிஷ் பேரரசோடு ஒத்துழைக்கக் துடியாய்த் துடித்தது.
ஒத்துழையாமை என்பது இவர்களுக்கு ஒத்துழைப்பை நோக்கிய ஓர் அடி ஆகும். ஏகாதிபத்தியத்துடன் உறவை முறித்தும் கொள்ளக் கூடாது என்பதில் இந்த வர்க்கம் அக்கறையாய் இருந்தது. இன்றும் இருந்து கொண்டிருக்கிறது.இந்திய சுதந்திரத்தின் சிற்பி என்று அழைக்கப்படும் காந்தி தனது படுகொலைக்குச் சில வாரங்களுக்கு முன்பு இப்படிக்கூறினார்.“எண்ணத்திலும் சொல்லிலும் செயலிலும் பிரிட்டிஷ் பேரரசிடம் நான் கொண்டிருந்த உள்ளார்ந்த விசுவாசத்திலிருந்து நான் பெருமளவு வலிமை பெற்றிருக்கிறேன் என்று உங்களிடம் சொல்ல விரும்புகிறேன்.
எப்படியோ ஒருவழியாக மவுண்ட்பேட்டனால் 1947, ஆகஸ்ட் 15ஆம் தேதி அதிகார மாற்றத்திற்கான நாளாக குறிக்கப்பட்டது. ஆனால் ஜோதிடர்கள் அந்த நாள் அமங்கலமான நாள் என்றும் ஆகஸ்ட் 14 மங்கலமான நாள் என்றும் சொன்னார்கள் ஆகஸ்ட் 14க்கும் 15க்கும் இடைப்பட்ட நள்ளிரவைத் தேர்வு செய்ததன் மூலம் அந்தச் சிக்கல் தீர்க்கப்பட்டது. இந்து தேதிப்படி நாளின் தொடக்கம் அதிகாலைதான், நள்ளிரவல்ல. ஆகஸ்ட் 15 அன்று ‘கடவுள் மன்னரைக் காப்பாராக’ என்ற பாடலைத் தொடர்ந்து “ஜனகன மண” பாடல் இசைக்கப்பட்டு இந்தியாவின் சுதந்திரம் வரவேற்கப்பட்டது. நேரு பிரிட்டிஷ் மன்னரின் நலத்திற்கும் மவுண்ட்பேட்டன் டொமினியன் அரசாங்கத்தின் நலத்திற்கும் பாராட்டுதல் தெரிவித்தனர். யூனியன் கொடி பெருமிதத்துடன் பறந்து கொண்டிருந்தது இந்தியத் தேசியக் கொடியோ பறக்க விடப்படவில்லை “அந்நிகழ்ச்சியின் திட்டப்படி யூனியன் கொடி கொண்டாட்டத்துடன் இறக்கப்படவிருந்தது’ ஆனால் அத்திட்டம் மாற்றப்பட்டது. யூனியன் ஜhக் இறக்கப்படவில்லை ஏனெனில் அது “பிரிட்டிஷாரின் மென்மையான உணர்வுகளை பாதிக்கக் கூடும் என்று கைவிடப்பட்டது.
எனவே மக்கள் விரோதக் காங்கிரஸ் கட்சியை புறக்கணிப்பதும் அதன் துரோகங்களை அம்பலப்படுத்துவதும் அதன் வழியே புரட்சிக்கான போராட்டத்தை கட்டியமைப்பதும் நம் ஒவ்வொருவாரின் கடமையாகும்.
உதவிய நூல்கள்
1.    இந்தியாவும் பிரிட்டிஷ் ஆட்சியும் –  சுனிதிகுமார் கோஷ்
2.    இந்தியப் பெரு முதலாளிகள் வர்க்கம் - சுனிதிகுமார் கோஷ்
3.    ஆதிகார மாற்றம் உண்மையா …….. சடங்கா? -.”
4.    காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு
5.    அம்பேத்கர் நு}ல் தொகுப்பு தொகுதி 16
6.    இந்திய தேசியக் காங்கிரசின் வரலாறு – பட்டாபி சீதாராமையா.

பதினெட்டாம் நூற்றாண்டின் அறுபதுகளிலும் எழுபதிகளிலும் விவசாயிகளின் போராட்ங்களினாl இந்தியா குலுங்கிக் கொண்டிருந்தது வஹபி கிளர்ச்சி, ஆந்திரவிலும் மலபாரிலும் நடைபெற்ற ரம்பா, மாப்பிளா எழுச்சிகள் போன்றவை முக்கியமானவை வெள்ளைக்கார சீமான்களின் தூக்கத்தை கலைத்தது இந்த  எழுச்சிகள்.சுதாரித்துக்கொண்ட ஆங்கிலேய அரசாங்கம் இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் கைக்கூலிகளைக் கொண்டு 1885-இல் ஒரு பாதுகாப்பு திறப்பை ஆலன் அக்டேவியஸ் ஹ்யூம் என்ற ஆங்கிலேயர் மூலம் உருவாக்கியது. ஆந்த பாதுகாப்பு திறப்பின் பெயர்தான் காங்கிரஸ்.

ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரவுத்துவ எதிர்ப்பு தேசிய விடுதலைப் போராட்டங்களைப் பயனற்றதாக்கவும், முன் உணர்ந்து தடுக்கவுமே இந்த இந்திய தேசியக் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது.1982 ஆம் ஆண்டு பிப்ரவாp 15-ஆம் தேதியிட்ட ஒரு மடலில் ஹ்யூம் காங்கிரஸ் கட்சியின் ஒவ்வோர் உறுப்பினரையும் பின்வருமாறு எச்சரிக்கிறார்.“உங்களுக்கு-அதிலும்குறிப்பாகப் பணக்காரர்களுக்கும் வசதியானவர்களுக்கும் -ஒன்று விளங்கவில்லை. தற்போது நிலவும் நிர்வாக அமைப்பு முறை நாட்டின் தேவைகளுக்குத் தக்க அமைக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, மக்களை அது ஓட்டாண்டி ஆக்கிக் கொண்டிருக்கிறது என்பது மட்டுமல்ல … உலக வரலாற்றிலேயே மிகவும் பயங்கரமான அரசியல் பிரளயங்களில் ஒன்றுக்கான வழியைத் தவிர்க்க முடியாதபடி ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறது. என்பதாகும் அது………. உங்களையோ தன்னையோ காத்துவிட அரசாங்கத்தால் முடியும் எனக் கற்பனை செய்துகொள்ள வேண்டாம். இது போன்ற ஒரு நாட்டில் எழும் நாடு தழுவிய விவசாயப் புரட்சியைத் தடுத்து நிறுத்த உலகில் உள்ள எந்தச் சத்தியாலும் முடியாது.”

இப்படியொரு கொந்தளிப்பான சூழ்நிலையில் தான் இந்தியப் பெருமுதலாளிகளும் அரசின் உதவிச் செயலாளர் ராபர்ட்ஸ்சும் அழைத்ததன் பேரில் 1915-ஆம் ஆண்டு ஜனவரி 9-ஆம் நாள் தென் ஆப்பிரிக்காவில் இருந்து இங்கிலாந்து வழியாக காந்தி இந்தியா திரும்பினார். காந்தி லண்டனை வந்தடைந்த நேரம் முதல் உலகப்போர் தொடங்கியிருந்தது- சும்மா இருப்பரா காந்தி? அந்த மாபெரும் பேரரசின் உறுப்பினர் என்ற முறையில் பிரிட்டனின் ஏகாதிபத்தியப் போருக்கு தன் விசுவாசத்தை காட்ட இந்தியாpன் ஆம்புலன்ஸ் தொண்டர் படை ஒன்றை திரட்டினார். வழக்கம் போல இதற்கான நிதியும் இந்தியப் முதலாளிகளே வழங்கினர்.
தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் போது காந்தி உதிர்த்த தத்துவ முத்துக்கள்.“பிரிட்டிஷ் முடியாட்சியின் கீழ் இருப்பதில் பெருமை அடைகிறார்கள் இந்தியர்கள்”“பிரிட்டிஷ் ஆட்சிக்கு முடிவு கட்டுவதன் மூலம் நாம் நட்டத்தையே அடைவோம்.“ஆங்கிலேயரையும், இந்தியரையும் ஆண்டவனே ஒன்று சேர்த்து வைத்திருக்கிறான். முன்னவரின் கைகளில் பின்னவரின் தலைவதியை ஒப்புவித்திருக்கிறான்”.“இறைவன் மேல் நம்பிக்கை உள்ளவர்கள் அவனது சித்தமில்லாமல் இந்தியாவை பிரிட்டிஷhர் ஆளமுடியாது என்பதை ஒப்புக் கொள்கிறார்கள்”. காந்தியின் எண்ணம், சொல், செயல், என்று எல்லாவற்றிலும் ஏகாதிபத்திய அடிவருடித்தனம் நிரம்பி இருந்தது.
1915ம் ஆண்டு ஏப்ரலில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பிய பிறகு சென்னையில் நடைபெற்ற விருந்தில் பிரிட்டிஷ் இந்தியாவுக்கு வாழ்த்துக் கூறிய காந்தி…………..”பிரிட்டிஷ் பேரரசுக்குக் குறிப்பிட்ட குறிக்கோள்கள் இருப்பதை நாள் கண்டுகொண்டேன். அவற்றின் மேல் காதலாகிவிட்டேன் …. பிரிட்டிஷ் பேரரசின் ஒவ்வொரு குடிமகனும் ஆற்றல்களைப் பெற்றுக் கொள்ளவும் அருட்செயல்கள் ஆற்றுவதற்கும் சாத்தியமான அளவு சுதந்திரமான வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறார் என்பது அக்குறிக்கோள்களில் ஒன்றாகும்.
1925-ஆம் ஆண்டு, ஜுலையில் கல்கத்தாவில் கிராண்டு உணவகத்தில் நடந்த ஐரோப்பியச் சங்கத்துடனான தன் சந்திப்பின் போது அவர்.“ஒத்துழைக்க வேண்டும் என்பதில் எனக்குத் தனியாத தாகம் உண்டு ………. இங்கிலாந்தின் தலைவிதியும் இந்தியாவின் தலைவிதியும் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. அதுவும் மனிதகுலச் சேவை என்ற நல்ல நோக்கத்துக்காகவே அவ்வாறு ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது.மகாத்மா போன்ற சூடு சொரணை உள்ள ஒரு இநதியனுக்கு இவ்வாறு தோன்றியதில் வியப்பேதுமில்லை.
1931-ஆம் ஆண்டு, மார்ச் 22 நவஜPவன் (குஜராத்தி) ஏட்டில் “அரசர்களும் ஆண்டிகளும்’ என்ற தலைப்பிட்ட ஒரு கட்டுரையில் காந்தி இப்படி எழுதினார்.…..”செல்வந்தர்கள் மேல் வன்மம் வைக்காமல் இருப்பதுதான் ஏழைகளின் தர்மமாகும். தம் வறுமைக்குப் பெரிதும் காரணம் தம் சொந்தக் குற்றமே, தம் சொந்தத் தவறுகளே என்பதை ஏழைகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.” இந்திய பெரு முதலாளிகளுக்கு இவரை விட ஒரு சிறந்த அடியாள் வேறு யாரும் இருக்க முடியாது.
அகிம்சை வழி, ஒத்துழையாமை அல்லது சட்ட மறுப்பு என்ற காந்தியின் செயலுத்தியானது இந்திய வரலாற்றின் நெருக்கடியான சில கணங்களின் சூழ்நிலைகளால் அவர்மேல் திணிக்கப்பட்டது என்பதே உண்மை. அத்தகைய ஒவ்வோர் இயக்கத்தைத் தொடுப்பதற்கும் முன் அவர் வாக்கியத்தைப் போல் நாய் வாலை ஆட்டவில்லை வால் தான் நாயை ஆட்டியது. அகிம்சை, ஒத்துழையாமை, சட்டமறுப்பு என எந்தப் போராட்ட முறையாக இருந்தாலும், ஏகாதிபத்தியத்தின் திட்டத்தைக் குலைத்து விடாதபடி மக்களின் கோபத்தை வெளியே அனுமதிக்கும் ஒரு கருவியாகவே – பாதுகாப்பு வால்வாகவே அப்போராட்டங்களைக் காந்தி வடிவமைத்தார். ஏராளமான கட்டுப்பாடுகளைப் போராட்டத்தின் போது அவர் விதித்ததும் இதற்காகத்தான்.அந்நிய ஆட்சியாளர்களை இக்கட்டுக்கு உள்ளாக்குவது அல்ல. “தன்னையே வதைத்துக் கொள்வதன்” வாயிலாக ஆட்சியாளர்களின் நெசத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதே தமது நோக்கம் என்று திரும்ப திரும்பச் சுட்டிக் காட்டினார். காங்கிரஸ் தலைமை வகுத்த வரம்புகளை எப்போதெல்லாம் இயக்கங்கள் மீறி ஆட்சியாளர்களுக்கு உண்மையான பதற்றத்தை விளைவித்தனவே அப்போதெல்லாம் அவை சட்டென்று திரும்ப பெறப்பட்டன அதன் விளைவாக மிகப்பெரிய அளவிற்கு சீரழிவும் சகோதரப் படுகொலைகளும் உருவாயின.
காந்தியின் செயலரான மகாதேவ தேசாய் அவர்கள் பிர்லாவுக்கு பின்வருமாறு எழுதுகிறார். சட்டமறுப்பு இயக்கமானது ஒடுக்கப்பட்ட மக்கள் “தங்கள் எதிர்ப்பை வெளியிடக் கிடைத்த வடிகால்” ஆகும். காலனி ஆட்சியாளர்களுக்கும் அவர்கள் கூட்டாளிகளுக்கும் நன்மை செய்யும் நோக்கம் கொண்ட ஒரு வகை பாதுகாப்பு வால்வாகும்.காந்தியை அன்று சரியான முறையில் தோலுரித்தவர்களில் அம்பேத்காரும் ஒருவர். அவர் பின்வருமாறு மதிப்பிடுகின்றார்.
1.    “ஒத்துழையாமை 2) பகிஷ்காரம்  3) சட்டமறுப்பு   4) உண்ணாவிரதம்இவைதான் இந்தியாவின் விடுதலைக் கோரிக்கைக்கு ஆதரவாக நிர்பந்தங்கள் தருவதற்கு காங்கிரஸ் தனது உலைக்களத்தில் உருவாக்கி வைத்திருக்கும் நான்கு ஆயுதங்களாகும்.இந்த ஆயுதங்களை உருவாக்கிய பிறகு அவற்றைப் பயன்படுத்துவதில் காங்கிரஸ் முனைந்து ஈடுபட்டது. 1920க்கும் 1942க்கும் இடையே காங்கிரஸ்காரர்கள் இந்த ஆயுதங்களை ஏதேனும் ஒரு வகையில் பயன்படுத்துவதை நாடு கண்டது. இதில் காது செவிடுபடும்படி அவர்கள் எழுப்பிய கூச்சலும் குழப்பமும் பேரொலியும் மக்களை ஈர்த்தன . இந்த நடவடிக்கைகள் யாவும் “சுதந்தரப் போராட்டம்” என ஆடம்பர ஆர்ப்பாட்டமாக வருணிக்கப்பட்டன. இத்தகைய நிர்பந்தங்கள் என்ன பலனை விளைவித்தன என்பது தீவிர ஆராய்ச்சிக்குறிய விஷயமாகும். ஆனால் இத்தகைய ஆராய்ச்சிக்கு இது இடமல்ல ஒன்றை மட்டும் இங்கு கூறமுடியும். அதாவது பழைய காங்கிரஸ் இதைவிட மோசமாக எதையும் செய்திருக்க முடியாது.”மேலும் காந்தியின் காங்கிரசானது தீண்டப்பாடதவர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகள் அதானல்தான் அவர்கள் ‘சுதந்திப் போராட்டதில்’ பங்கெடுப்பதில்லை என்று கூறிவந்தது. இதற்கு விளக்கமளித்த அம்பேத்கார்.“சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொள்ளாதற்கு அவர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் எடுபிடியாக இருப்பது காரணமல்ல, மாறாக இந்தியா சுதந்திரம் பெறுவது இந்துக்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டும், அது அவர்களுக்கு சுவிட்ச வாழ்வும், விடுதலையும், ஒளிமயமான எதிர்காலமும் என்றென்றும், கிட்டாதபடிச் செய்து, அவர்களை வெறும் விறகு வெட்டிகளாகவும் தண்ணீர் சுமப்பவர்களாகவும் ஆக்கிவிடும் என்ற பயமே தீண்டப்படாதவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொள்ளாதிருக்கக் காரணமாகும்.”
மேலும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்கு தனி வாக்காளர் தொகுதிகள் வழங்கக் கூடாது என்று சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். இது பற்றி அம்பேத்தகார் கூறுகையில் “முகமதியர்களுக்கும் சீக்கியர்களுக்கும் தனிவாக்காளர் தொகுதிகள் அளிப்பதால் தேசம் பிளவுபடப் போவதில்லை எனும் போது தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்குத் தனி வாக்காளர் தொகுதிகள் வழங்குவதால் இந்து சமுதாயம் பிளவுபட்டு விடும் என்று கூறமுடியாது. தாழ்த்தப்பட்டவர்களைத் தவிர ஏனைய வகுப்பினர்களுக்கும் சமூகங்களுக்கும் தனிவாக்காளர் தொகுதிகள் அளிக்கும் ஏற்பாடுகளினால் தேசம் பிளவுபடுமானால் அது அவரது மனச்சான்றை உறுத்தாது.
தீண்டப்படாதோருக்கு சேவை செய்வதற்காக காந்தியால் உருவாக்கப்பட்ட ஹரிஜன சேவாசங்கத்தைப் பற்றி பின்வறுமாறு அம்பேத்கார் கூறிகிறார்.“ஹரிஜன சேவாசங்கம் என்பது பெயரளவில்தான் ஓர் அறச்சிந்தனை அமைப்பே தவிர, மற்றபடி தீண்டப்படாதவர்களை இந்துக்களுக்கும் காங்கிரசுக்கும் பாதசேவை செய்பவர்களாக ஆக்குவதும், இந்துக்களது சமூக, சமய பொருளாதார, அரசியல் ஆதிக்கத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளும் நோக்கத்தோடு அவர்கள் தொடங்கும் எந்த இயக்கத்தையும் முளையிலேயே கிள்ளியெறிவதுதான் சங்கத்தின் உண்மையான குறிக்கோளாகும். ஏனவே ஹரிஜன சேவா சங்கத்தை கருணையின் மூலம் தங்களை கொல்லும் மிகுந்த அருவருப்பு கொண்ட ஓர் இழிவான அமைப்பாக தீண்டப்படாதோர் கருதுவதில் எந்த வியப்பும் இருக்க முடியாது.”காந்தியின் சத்தியாகிரகம் பற்றியும் அதில் அவர் கொண்டிருந்த அறிவுபூர்வமான பார்வை பற்றியும் நாம் அறிந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.1938-ஆம் ஆண்டு, நவம்பரில் ஜெர்மானிய யூதர்களிடம் சத்தியாகிரகத்தை ஏற்றுக்கொள்ளுமாறு சொன்ன காந்தி ஹிட்லாpடம் யூதர்கள் சரணடைந்து தங்களது அகிம்சை மெய்பிக்க வேண்டும் என்றும் விரும்பினார்.அதே ஆண்டு டிசம்பரில் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் மதப் பரப்புநர்களின் ஒரு குழுவின் முன் காந்தி பின்வருமாறு வருத்தம் தெரிவித்தார்.”தன் அகிம்சையை சோதிப்பதற்கான தருணம் வந்தபோது அந்தச் சோதனையில் சீன தோற்றது…… அதன் நிலைப்பாட்டை அகிம்சையின் அடிப்படையில் ஆராயும் போது நானூறு மில்லியன் மக்களைக் கொண்ட ஒரு நாடு - ஜப்பானுக்கு இணையான பண்பாட்டைக் கொண்ட நாடு- ஜப்பானின் ஆக்கிரமிப்பை முறியடிக்க ஜப்பானின் முறைகளையே நாடுவது பொருத்தமில்லை என்பதை நான் சொல்லியாக வேண்டும். “அவரது தீர்வு என்ன?சீனர்கள் “ஜப்பானிடம் ‘உங்கள் (அழிப்பு[) மந்திரத்தைக் கொண்டு வாருங்கள் எம் மக்களில் பாதிப்பேரை அதற்குப் பலி தருகிறேhம் ஆனால் மீதமிருக்கும் இருநூறு மில்லியன் பேர்கள் உங்களுக்கு மண்டியிடமாட்டார்கள் என்று சொல்லிருக்க வேண்டும். சீனர்கள் அப்படிச் செய்திருந்தால் ஜப்பான் சீனர்களுக்கு அடிமையாகி இருக்கும். இது போன்ற பல அறிய யோசனைகளை சொல்லி பலரையும் அசத்தியுள்ளார் நாம் காந்திஜிஅவர்கள்.
காந்தி எப்போதும் புரட்சிக்கும் புரட்சியாளர்களுக்கும் எதிரானவராகவே இருந்தார்.பகத்சிங்கின் தோழரான சுகதேவ் தூக்கிலிடப்படுவதற்கு முன்பு தனது தனிச்சிறையிலிருந்து காந்திக்கு ஒரு மடல் எழுதினார். புரட்சியாளர்கள் தமது போராட்த்தைக் கைவிட வேண்டும் என்று காந்தி பகிரங்கமாகக் கேட்டுக் கொள்வது அவர்களை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி வேட்டையாடுவதற்கு காலனியவாதிகளுக்கு உதவுவதாக இருக்கிறது என்று அதில் சுட்டிக்காட்டினார். காந்தியின் “வேண்டுகோள்கள் தங்கள் மத்தியில் நம்பிக்கை மோசடி,கைவிட்டுவிட்டு ஓடுவது போன்ற துரோகத்தை போதிப்பனவாய் இருக்கின்றன என்று சுட்டிக்காட்டிய சுகதேவ், காந்தி உண்மையிலேயே அந்நிய ஆட்சியாளர்களுடன் கரம்கோர்த்து கொள்ள விரும்பவில்லையென்றால் இந்தப் பிரச்சனையை ‘சில புரட்சியாளர் தலைவர்களிடம் - அத்தகையோர் பலர் சிறைகளில் இருக்கின்றனர் - விவாதித்து அவர்களுடன் ஓர் உடன்பாடு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அல்லது “இத்தகைய வேண்டுகோள்களை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தார். சுகதேவ் தூக்கிலிடப்பட்ட பிறகு அவருக்கு எழுதிய பகிரங்க கடிதத்தில் சுகதேவை “அரசியல் கொலைகாரர் என்று அகிம்சாமூர்த்தி கண்டனம் செய்தார். பிரிட்டிஷாரின் கைகளில் இருந்த துப்பாக்கியை ரசித்த காந்தியால் பகத்சிங் மற்றும் அவரது தோழர்களின் கைகளில் இருந்த துப்பாக்கியை ரசிக்கமுடியவில்லை.
1930-இல் பெஷாவாரில் நிராயுதபாணியான ஏகாதிபத்திய எதிர்ப்புக் கிளர்ச்சியார்களைக் கொல்லும்படி ஆணையிட்ட பிரிட்டிஷ் அதிகாரிகளின் கட்டளையை ஏற்க மறுத்த கார்வாலிவீரர்களின் செயல் அகிம்சை நடவடிக்கையாக காந்தியின் கண்களுக்கு தொpயவில்லை. மாறாக அதனை அவர் கண்டித்தார். இவரின் அனைத்துக் கருத்துப் பிரச்சாரங்களும் அரசியல் நடவடிக்கைகளும் ஏகாதிபத்திய – எதிர்ப்புப் போராட்டங்களின் முனையை மழுங்கடித்ததோடு அப்போராட்டங்களின் விளைவுகளையும் திசை திருப்பியது.அரசியல் ரீதியில் இந்திய பெருமுதலாளி வர்க்கம் பிரிட்டிஷ் பேரரசின் மரபுக் கூட்டாளியாகவே இருந்தது. இந்த வர்க்கத்தின் தலைவர்கள் சுதேசி இயக்கங்களுக்கும் கூட எதிர்ப்புத் தொpவித்தனர். ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான போட்டியை பயன்படுத்தி ஆதாயம் அடைவதற்கும், ஏகாதிபத்திய நாடுகளை அடிப்படையில் சார்ந்திருப்பது என்ற எல்லைக்குள் நல்ல பொருளாதார நலன்களையும், அதிக அரசியல் அதிகாரத்தையும் பெற்றுக் கொள்வதற்குமான சுதந்திரத்தையே இந்த முதலாளிவர்க்கம் விரும்பியது. தரகரர்களின் நலன்களை நன்கு பிரதிநீதித்துவப்படுத்திய காங்கிரஸ் தலைமையின் ஆதிக்கப் பிரிவு (காந்தி, பட்டேல், மற்றைய காந்திய சீடர்கள்) பிரிட்டிஷ் பேரரசோடு ஒத்துழைக்கக் துடியாய்த் துடித்தது.ஒத்துழையாமை என்பது இவர்களுக்கு ஒத்துழைப்பை நோக்கிய ஓர் அடி ஆகும். ஏகாதிபத்தியத்துடன் உறவை முறித்தும் கொள்ளக் கூடாது என்பதில் இந்த வர்க்கம் அக்கறையாய் இருந்தது. இன்றும் இருந்து கொண்டிருக்கிறது.இந்திய சுதந்திரத்தின் சிற்பி என்று அழைக்கப்படும் காந்தி தனது படுகொலைக்குச் சில வாரங்களுக்கு முன்பு இப்படிக்கூறினார்.“எண்ணத்திலும் சொல்லிலும் செயலிலும் பிரிட்டிஷ் பேரரசிடம் நான் கொண்டிருந்த உள்ளார்ந்த விசுவாசத்திலிருந்து நான் பெருமளவு வலிமை பெற்றிருக்கிறேன் என்று உங்களிடம் சொல்ல விரும்புகிறேன்.
எப்படியோ ஒருவழியாக மவுண்ட்பேட்டனால் 1947, ஆகஸ்ட் 15ஆம் தேதி அதிகார மாற்றத்திற்கான நாளாக குறிக்கப்பட்டது. ஆனால் ஜோதிடர்கள் அந்த நாள் அமங்கலமான நாள் என்றும் ஆகஸ்ட் 14 மங்கலமான நாள் என்றும் சொன்னார்கள் ஆகஸ்ட் 14க்கும் 15க்கும் இடைப்பட்ட நள்ளிரவைத் தேர்வு செய்ததன் மூலம் அந்தச் சிக்கல் தீர்க்கப்பட்டது. இந்து தேதிப்படி நாளின் தொடக்கம் அதிகாலைதான், நள்ளிரவல்ல. ஆகஸ்ட் 15 அன்று ‘கடவுள் மன்னரைக் காப்பாராக’ என்ற பாடலைத் தொடர்ந்து “ஜனகன மண” பாடல் இசைக்கப்பட்டு இந்தியாவின் சுதந்திரம் வரவேற்கப்பட்டது. நேரு பிரிட்டிஷ் மன்னரின் நலத்திற்கும் மவுண்ட்பேட்டன் டொமினியன் அரசாங்கத்தின் நலத்திற்கும் பாராட்டுதல் தெரிவித்தனர். யூனியன் கொடி பெருமிதத்துடன் பறந்து கொண்டிருந்தது இந்தியத் தேசியக் கொடியோ பறக்க விடப்படவில்லை “அந்நிகழ்ச்சியின் திட்டப்படி யூனியன் கொடி கொண்டாட்டத்துடன் இறக்கப்படவிருந்தது’ ஆனால் அத்திட்டம் மாற்றப்பட்டது. யூனியன்  இறக்கப்படவில்லை ஏனெனில் அது “பிரிட்டிஷாரின் மென்மையான உணர்வுகளை பாதிக்கக் கூடும் என்று கைவிடப்பட்டது.
எனவே மக்கள் விரோதக் காங்கிரஸ் கட்சியை புறக்கணிப்பதும் அதன் துரோகங்களை அம்பலப்படுத்துவதும் அதன் வழியே புரட்சிக்கான போராட்டத்தை கட்டியமைப்பதும் நம் ஒவ்வொருவாரின் கடமையாகும்.
உதவிய நூல்கள்
1.    இந்தியாவும் பிரிட்டிஷ் ஆட்சியும் –  சுனிதிகுமார் கோஷ்
2.    இந்தியப் பெரு முதலாளிகள் வர்க்கம் - சுனிதிகுமார் கோஷ்
3.    ஆதிகார மாற்றம் உண்மையா …….. சடங்கா? -.”
4.    காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு
5.    அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 16
6.    இந்திய தேசியக் காங்கிரசின் வரலாறு – பட்டாபி சீதாராமையா.
Pin It