தெலுங்கானா உருவாகி விடும் என்பதற்கான அறிகுறிகள் தென்படும் இந்த நேரத்தில் இது குறித்த சில உணர்வுகளினை பலரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளது. திராவிடமா? தமிழரா? திராவிடம் நமக்கு என்ன செய்து விட்டது என சிலர் தொடர்ந்து திராவிட இயக்கங்களை வசை பாடி வருவதனாலும் இந்தச் செய்தியினைப் பலரிடம் கொண்டு செல்ல வேண்டியுள்ளது.

தெலுங்கானாவிற்கான எதிர்ப்பு ஏன்? ஆந்திராவில் அப்பகுதி மக்களின் ஒட்டு மொத்த உணர்வும் அதற்கு ஆதரவாக இருக்கும் பொழுதில் இந்த தேசியக் கட்சிகளாகட்டும், மாநிலக் கட்சிகளாகட்டும் ஏன் அதனை எதிர்க்கின்றன? இதற்கான பதிலை மிகச் சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக "டைம்ஸ் ஆப் இந்தியா" எனும் ஆங்கில நாளேடு இதுகுறித்து எழுதிய கட்டுரையானது தெளிவாக்குகின்றது.

அந்தக் கட்டுரையின் தலைப்பு "Like Tamil Nadu, Telangana will be backward-heavy".

அந்தக் கட்டுரையின் சாரமும் ஊடகங்களின் முதற் கவலையும் என்னவென்றால், தனித் தெலுங்கானாவானது "பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கோட்டையாக" தமிழகத்தினைப் பிரதிபலிக்கக் கூடியதாக அதாவது அதன் மக்கட்தொகையில் எண்பத்தி ஒன்பது சதவிகிதம் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினரை உள்ளடக்கியதாக உயர் வகுப்பினரின் செல்வாக்கிற்குச் சவால் விடுவதாகயிருக்கும்.

"A separate state of Telangana will mirror Tamil Nadu as a 'backward class fortress', with OBCs, SCs, STs and minorities forming 89% of the population and will pose a strong challenge to the hegemony enjoyed by upper castes and feudals in the power structure of Andhra Pradesh."

அடுத்த ஊடகக் கவலை இன்னும் தெளிவாக தமிழகம் குறைவான எண்ணிக்கையிலான மேல்சாதினரை அரசியல் அமைப்பில் தேவையற்றதாக்கிய ஒரே மாநிலம் என்பதாகவுள்ளது. காரணம் பற்றி நாம்தான் சிந்திக்க வேண்டும். அல்லது திராவிட இயக்கங்களை உரசும் நபர்கள் சிந்திக்க வேண்டும்.

"It is a tempting possibility as Reddys, Kammas and Vellammas form the powerelite of AP, riding on socio-economic muscle disproportionate to their numbers. The only state which has managed to make upper castes redundant in the political structure is Tamil Nadu where the SC/ST/OBC/minority bloc is said to form around 90% of the population"

அடுத்ததாக அந்தச் செய்தி பிரச்சாரம் செய்ய முன்வரும் செய்தியினைப் பாருங்கள். அது பிற்படுத்தப்பட்டவர்களைப் பிறரின் எதிரியாக்க எத்தனிக்கும் அந்தச் செய்தியினைப் பாருங்கள்,

"But hopes of political empowerment of weaker groups in Telangana seems far fetched. For, the Srikrishna committee, which explored the prospect of OBCs ending the upper caste hegemony in Telangana, found growing inequity between the rich and the poor, with income growth being true only for the rich.

So much so, the commission said that SCs, STs and minorities in the T-region had suffered a decline in income whereas their Coastal brethern had "gained substantially". The disconnect between the numerical muscle of BCs and their economic growth is seen to put a question mark on their optimism about political empowerment in Telangana."

தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பழங்குடியினருக்கும் மற்றும் சிறுபான்மையினருக்குமான அரசியல் அதிகாரம் கேள்விக்குறியே என்று போகிற போக்கில் கொளுத்திப் போடுவதாயுள்ளது. அதனையும் கிருஷ்ணா குழு அறிக்கையினக் காரணம் காட்டியுள்ளது. செய்தியின் அடுத்த பகுதியானது மேல்சாதி மக்களுக்கான அரசியல் அதிகாரம் பறிபோவதன் புலம்பலாயுள்ளது. ஒரு புறம் தெலுங்கானா பிரிந்தால் அதில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கு அரசியல் அதிகாரம் கிடைக்காது என்பதும் மறுபுறம் மேல்சாதி மக்களின் அரசியல் அதிகாரம் பறி போவது என்பதுமான புலம்பல்களில் 50 சத விகிதத்திற்கும் அதிகமான பிற்படுத்தப்பட்டவர்கள் அரசியல் அதிகாரத்திற்கு வரக்கூடாது என்பதுதான் ஊடக உலகின் கருத்து என்பது புரியும். இன்று வரை அந்த 50 சதவிகித மக்கள் அரசியல் அதிகாரங்களில் பங்கு பெறாமலிருப்பதனை எழுதாது கூடப் பரவாயில்லை, இன்னும் அவர்களுக்கு அது கிடைத்து விடக் கூடாது என்பதில்தான் இந்த ஊடகங்கள் எவ்வளவு முனைப்பாக உள்ளன.

"But the prospect itself is tantalising, as Srikrishna report seems to hint. The strength of dalits, tribals, backwards and minorities in Telangana would go up by 13% vis-a-vis united AP. OBCs number around 50.7% in Telangana. The underprivileged social bloc has not been able to supplant the Reddys and Kammas in so many years because a united AP, with Coastal and Rayalaseema, gives respectability to upper castes numbers. Combined with their financial and social clout, it makes them indispensable for political parties.

Srikrishna panel probed this question and attributed the continued hegemony of upper castes on "politics of accommodation". It said, quoting Ram Reddy, "They have retained their hegemony by negotiating with and giving space to other rising castes while retaining power in their own hands."

அதாவது மேல்சாதியானது ஏதோ போனால் போகிறதென்று நீரா ராடியா போல் தரகு வேலை செய்து, பிற வளர்ந்து வரும் சமுதாயங்களுக்கு கொஞ்சம் இடங்கொடுத்து அதிகாரத்தைத் தங்கள் கைகளிலேயே வைத்துக் கொள்வது இங்கு யாருக்கும் இதுவரையில் தவறாகப் படவில்லை.

"However, once AP is divided, the upper caste share in population will drop to near irrelevance in Telangana. This, however, analysts feel, would translate into reality if heterogeneous groups can be mobilised under one banner, like the Dravidian outfits in TN.

But Srikrishna committee marks a serious indictment of the very groups which are leading the statehood movement. Studying the economic growth in Telangana, the panel found it was nowhere near the abysmal levels in social and physical indicators but said the pink figures were largely valid for the rich. The SCs, STs have suffered a decline in income."

பலரும் ஆழ்ந்து படிக்காமல் இருக்கக் கூடும் என்பதனால் அதன் சுட்டியினையும் இங்கு வழங்க விரும்புகின்றேன்.

http://articles.timesofindia.indiatimes.com/2011-01-08/india/28362356_1_upper-castes-srikrishna-panel-telangana

மொத்தத்தில் இந்த நாட்டில் அறுபது சதவிகிதத்திற்கும் அதிகமான மக்களான பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எதிராகச் செயல்படும் ஊடக உலகினைத் தொடர்ந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய தேவையுள்ளது. வசைபாடி, என் தந்தை பெரியாரைக் கூச்சமின்றி விமர்சிக்கும் நபர்கள், திராவிடம் என்ன செய்தது என்று ஏகடியம் செய்யும் நபர்கள் இதற்கெல்லாம் என்ன செய்யப் போகிறார்கள்? தெலுங்கானா வரலாம் அல்லது வடிவேலுவின் நகைச்சுவையாய்ப் போகலாம். எது எப்படியானாலும் அரசியல் அதிகாரம் பெரும்பான்மை மக்களுக்கு வரக் கூடாது என அங்கலாய்க்கும் ஊடக உலகுக்கு யார் மணி கட்டப் போகிறார்கள்? இதனை ஒருமுறைக்கு இருமுறை படித்துப் பாருங்கள். இன்று தமிழகத்தில் திராவிட இயக்கங்களைத் தனிமைப்படுத்த முயலும் நபர்களையும், புரியாமல் அவர்களுடன் இணைந்து இந்துத்துவ கோசங்களால் கட்டப்பட்டு தங்கள் வாழ்வுக்கான இயக்கங்களினை எதிர்த்து அறியாமலேயே ஆரிய அடிவருடிகளாய் மாறி வரும் திராவிட நபர்களையும் எண்ணிப் பாருங்கள். திராவிட இயக்கங்கள் மக்களுக்கு எண்ண செய்தன என்பதும், அதனால் இன்று விளைந்துள்ள வளர்ச்சியும் தெரிய வரும்.

Pin It