தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள், அரசியல் மேடைகளில் பேசும்போது நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை என்று இரட்டை அர்த்தங்களில் பேசுவதை கேட்டிருப்பீர்கள்.

சாதிகளற்ற படித்த கல்வியாளர்கள் நிறைந்த குமரி மண்ணில் சுமார் 50 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட மக்கள், அரசியல் அனாதைகளாகவும், புதிய தீண்டாமைக் கொடுமைகளை அனுபவித்து வருவதை தாய் தமிழகம் கண்டு கொள்ளாத கொடுமை தொடர்கிறது.

முன்னொருநாள் சங்கரப் பார்ப்பான் தாழ்த்தப்பட்ட மக்கள் எவ்வளவு உயர்ந்தரக வாசனை சோப்பை தேய்த்துக் குளித்தாலும் அவர்கள் மீதான தீட்டு போய்விடாது என்று ஆதிக்க திமிரோடு கூறினான். ஆனால் அதை நடைமுறையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமிழக அரசியல் கட்சிகளும் ஆதிக்கச் சாதியினரும் நடைமுறைப்படுத்தி வருவதுதான் கொடுமை.

வாக்குச் சீட்டு வாள் எடுப்பவராக இருந்தாலும் இரண்டரை லக்கம் ஈழத் தமிழர்களின் படுகொலைக் குத் துணைபோன கருணாவுடன் சேர்ந்தால் வால் பிடிப்பவர்களாகவே நம் தலைவர்கள் மாறிவிடு கிறார்கள்.

கடைசி மனிதனின் சனநாயக உரிமை பேசிய மாபெரும் தலைவர்களெல்லாம் முதல் மனிதனின் சனாநாயக உரிமை பறிக்கப்பட்டிருப்பது கண்டும் ஏன் நாடகமாட வேண்டும்.

1952ல் குமரி மாவட்டம் திருவாங்கூர் சமஸ்தானத் துடன் இணைக்கப்பட்டிருந்தது. அங்கு தமிழர்களுக்கு உரிமை மறுக்கப்பட்டபோது மார்சல் நேசமணி, குன்சன் நாடார், ஈ.கி.பே.சு.மணி. குளச்சல் சட்ட மன்ற உறுப்பினர் அய்யப் பாரவிளை, நெய்யாறு கிழக்கன் கரை, அப்பாவு மகன் செல்லையா, கற்காடு சுசீந்திரம் ஆபிரகாம் ராஜ் மகன் தோவாளை அகதீசுவரம், சட்டமன்ற உறுப்பினர் சாம்ராஜ் போன்றவர்களும் குமரி தமிழகத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்று போராடினார்கள்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்தில் தனித் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர்கள். இதனால் இவர்களது பதவியும் தொகுதியும் பறிக்கப்பட்டது.

1956 நவம்பர் 1ல் கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்தபோது, இவர்களது போராட்ட வரலாறு மறைக்கப்பட்டது.

தாழ்த்தப்பட்டவர்கள் என்பதனால் இன்று வரையில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சாம்ராஜ், செல்லையா வரலாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டு வருகிறது.

இது ஒரு 1/2 நூற்றண்டுகளாக கன்னியாகுமரி மாவட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் மீது திணிக்கப்படும் புதிய தீண்டாமை கொடுமை ஆகும்.

இன்று வரையில் குமரி மாவட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனித் தொகுதி ஒதுக்கப்படவில்லை.

தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும் ஒட்டுமொத்த தமிழர்களுக்காகவும், வாழ்வை அர்ப்பணித்து வருவதாக கூறிக் கொள்ளும் தலைவர்களிடமெல்லாம் இம்மாவட்ட மக்களும் கட்சியினரும் மனு கொடுத்தும் இன்றுவரை சட்டமன்றத்திலோ, நாடாளு மன்றத்திலோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

அதிகார வர்க்கத்தினர் வோட்டுப் பெறுவதற்கு பிச்சை அல்ல இது மக்களின் சனநாயக உரிமை. அதைப் போராடிப் பெற வேண்டும்.

அப்போராட்டம் இந்தியாவை நொறுக்கும் அப்போது தமிழகத்தில் குமரிக்கு உரிமை கிடைக்கும்.

Pin It