தில்லியின் ஐக்கிய தொழிலாளர் அமைப்புகளால் தில்லி மவ்லான்கர் அரங்கத்தில் 30 சனவரி, 2013 அன்று செயல்வீரர்கள் கலந்து கொண்ட பேரவை கூட்டம் நடத்தப்பட்டது. 20-21 பிப்ரவரி அனைத்து இந்திய வேலை நிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் என்று மத்திய தொழிற்சங்கங்கள் விடுத்த அழைப்பின் பின்னணியில் இந்தப் பேரவை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட செயல்வீரர்கள் இந்தப் பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

2013_Feb_Strike_Convetion_640

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காகவே அனைத்து இந்திய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

பல்வேறு நிதி மற்றும் சேவைத் துறைகளில் ஈடுபட்டுள்ள சங்கங்களும் கூட்டமைப்புகளும் தனிப்பட்ட தொழிற்சங்கங்களும் இதில் பங்கேற்றன. அரசாங்க மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களோடு இணைந்து வங்கி, காப்பீடு, தண்ணீர் பணிகள், மாநகராட்சி, சுகாதாரம், எண்ணெய், அஞ்சல் மற்றும் தந்தி துறை, மாநில போக்குவரத்து மற்றும் ரிக்ஷாக்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள், ஆங்கன்வாடியின் தொழிலாளர்களும் தெருக்கடை வியாபாரிகளும் இதில் பங்கேற்றனர்.

பேரவை கூட்டத்தின் தொடக்கத்திலேயே, தில்லியில் நடந்த கூட்டு கற்பழிப்பில் பலியானவரின் நினைவாகவும் சிஐடியு-வின் தோழர் சோகன் லாலின் நினைவாகவும் துக்கம் அனுசரிக்கப்பட்டது.

நாம் பொருளாதார கோரிக்கைகளை மட்டுமே கோரிக் கொண்டு இருக்க முடியாது என்றும் நாம் அரசியலில் மையத்தில் இருக்க வேண்டும் என்றும் பேச்சாளர்கள் எடுத்துரைத்தனர். இந்த வேலை நிறுத்தம் வரலாறு படைக்கும். வேலை நிறுத்தத்திற்கான தயாரிப்புகள் தில்லியில் நடந்து வருகின்றன. தில்லியின் அனைத்து வட்டங்களிலும் கூட்டு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. சேவைத்துறை மற்றும் நிதித்துறை தொழிற் சங்கங்களிடையே கூட்டங்கள் ஏற்கனவே நடைபெற்றுள்ளன.

தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் சார்பில் தோழர் சந்தோஷ் குமாரும், பி.எம்.எஸ் சார்பில் பி.என்.ராயும், ஐ.என்.டி.யூ.சி சார்பில் ரிஷி பாலும், ஏஐடியுசி சார்பில் குருதாஸ் தஸ் குப்தாவும், இந்த் மஸ்தூர் சபாவிலிருந்து ஆர்.ஏ.மித்தலும், ஏஐசிசிடியு வின் சார்பில் சந்தோஷ் ராயும், டியுசிசி சார்பில் பி.என்.திவேதியும், ஏஐயூடியுசி சார்பில் சத்யாவானும், சிஐடியு சார்பில் வாசுதேவனும், யுடியுசி சார்பில் அபானி ராயும் உரையாற்றினர்.

Pin It