இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சியின் அறிக்கை, பிப்ரவரி 26, 2015.

உலகம் முழுவதும் உள்ள இலட்சக்கணக்கான பெண்கள் மார்ச்8 ஐ பெண்கள் விடுதலைக்கான போராட்ட நாளாகக் கொண்டாடுகின்றனர். இன்று நிலவும் போர், அழிவு மற்றும் சிறு பான்மையான பணக்காரர்களுக்கும் வாழ்வதற்காக போராடி வரும் பெரும்பான்மையான மக்களுக்கும் இடையே அகண்ட இடைவெளி நிலவும் சூழலில், பல நாட்டுப் பெண்களும் ஆண்களும் தங்களது போராட்டத்தைத் தொடர்வதற்கு உறுதி எடுத்துக் கொள்வர்.

பெண்கள் விடுதலைக்கான போராட்டம் என்பது ஒருவர் கண்ணியத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ்வதற்கான உரிமைப் போராட்டமாகும். வாழ்க்கை, வாழ்வாதாரம், தாய்மையை நிறைவேற்றும் உரிமையோடு 21-ஆம் நூற்றாண்டில் ஒருவருக்குத் தேவையான முழு அரசியல்,பொருளாதார உரிமைகளைக் கொண்ட சமுதாயத்தை நிறுவும், பழையனவற்றை அழித்துப் புதுப்பிக்கும் போராட்டத்தோடு நெருக்கமாக இது பிணைந்துள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக இந்தப் போராட்டத்தில் பெண்கள் முன்னணியில் இருந்து வந்துள்ளனர். அந்த புதிய சமுதாயம் பிறக்கும் வரை இந்தப் போராட்டத்தை அவர்கள் தொடர்ந்து கொண்டு செல்வார்கள். இதைத் தான் வரலாறு நிரூபித்துள்ளது. முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராகபெண்கள் தீவிரமாகப் போராடியதில் மார்ச் 8 உருவானது.அதனுடைய தோற்றம் சோசலிசத்திற்கான இயக்கத்துடன் பிரிக்க முடியாத படி இணைக்கப்பட்டுள்ளது.

இந்த நாளின் உண்மையை மறைத்து, திசை திருப்புவதற்காக முதலாளி வர்க்கம் அனைத்து முயற்சிகளை மேற்கொண்ட போதிலும்,அப்பொழுதிலிருந்து இன்றுவரை அது பெண்களின் உரிமைகளுக்கும் விடுதலைக்குமான போராட்ட நாளாக இருந்து வருகிறது.

பெண்கள் இயக்கத்தின் இந்தப் போராட்டம் ஆண்களுடனான வெறும் சமத்துவப் போராட்டமாக மட்டுமே இருக்கவில்லை.இந்தசுரண்டல் முதலாளித்துவ அமைப்பில் ஆண்களுடன் வெறும் சமத்துவம் என்பது வறுமை, வேலையின்மை மற்றும்பாது காப்பின்மை ஆகிய சுமைகளை ஆண்களுக்கு சமமாக ஏற்றுக் கொள்வதாகும். இதைத்தான் பெண்கள் ஏற்கனவே சுமந்து வருகிறார்களே !

இந்தியாவில் நிலவும் சுரண்டல் முதலாளித்துவ அமைப்பு, தனியார் முதலாளித்துவ இலாபத்தை அதிகபட்சமாக ஆக்கும் அடிப்படையில் அமைந்த ஒரு சமூக விரோத அமைப்பாகும்.

இன்று,மிகச் சிறுபான்மையாக உள்ள நிதி கூட்டுக் குழுவின் ஆட்சி, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக அனைத்து சக்திகளையும் தன்வசம் கொண்டுள்ளது. ஆலைகளிலும் வயல்களிலும் உழைப்பவர்களுக்கு வறுமையையும் துன்பங்களையும் தவிர வேறு எதையும் இந்த அமைப்பு கொடுப்பதில்லை. எல்லா தடைகளையும் எதிர் கொண்டு, தங்கள் குழந்தைகளை உலகத்திற்கு கொண்டு வந்து வளர்ப்பதற்கு தங்கள் வீடுகளுக்கு உள்ளேயும் வெளியேயும் உழைக்கும் பெண்களுக்கு பசியையும் மரணத்தையும் தவிர வேறு எதையும் இந்த அமைப்பு உறுதி செய்யவில்லை.

கல்வி, மருத்துவ வசதிகள், சுத்தமான குடிநீர், நகர்ப்புற குடிசைப் பகுதிகளில் வாழ்ந்து வரும் இலட்சக்கணக்கான வேலை செய்யும் பெண்களுக்கு கழிப்பிடங்கள், சுகாதார வசதிகள், குழந்தை பராமரிப்பு வசதிகள் போன்ற அடிப்படை குடிமை வசதிகள் இல்லாமலும், மனித வளர்ச்சிக்குத் தேவையான மிக அடிப்படையான நிலைமைகள் இல்லாமலும்- பெண்கள் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளுக்கு, அதிகாரத்திலுள்ள அரசும் அரசாங்கமும் இந்திய மற்றும் வெளிநாட்டு மிகப்பெரிய ஏக போக முதலாளிகளின் நலன்களுக்கு சேவை செய்து, பொருளாதாரத்தை முதலாளித்துவ அடிப்படையில் வைத்து இருப்பதனால் உள்ள வெளிப்பாடு ஆகும்.

ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் போது மரண மடைகிறார்கள் என்பதையும், இலட்சக்கணக்கான குழந்தைகள் இரண்டு வயதாவதற்கு முன்னதாகவே இறந்து விடுகிறார்கள் என்பதையும், ஆயிரக்கணக்கான பெண்குழந்தைகள்கொலை செய்யப்படுகிறார்கள் என்பதையும் அதிகார பூர்வ புள்ளி விபரங்களால் கூட மறுக்க முடியவில்லை.

1000 ஆண்களுக்கு வெறும் 943 பெண்களே உள்ளதாக சமீபத்தில் வெளியிடப் பட்ட ஆண்-பெண் விகிதம் இந்த உண்மைகளின் ஒரு அப்பட்டமான பிரதிபலிப்பாகும்.

பெரும்பான்மை மக்களின் நிலைமைகளும் அதற்கு நேரெதிர் மாறாக உள்ள ஒரு சிறுபான்மையினரின் நிலைமைகளும்,கடந்த அறுபத்து ஐந்து ஆண்டு காலமாக மத்தியிலும் மாநிலங்களிலும் எந்த அரசியல் கட்சி அல்லது கூட்டணி அதிகாரத்தில் இருந்தது என்பது சிறிதளவு கூட பொருட்டே இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன.

அவர்கள் முதலாளித்துவ கட்சிகள். அவர்கள் தொழிலாளர் விரோத, உழவர் விரோத, மக்கள் விரோத முதலாளிவர்க்கத் திட்டத்தைச் செயல்படுத்தி வந்துள்ளனர்.

மே 2014-இல் நடந்த பொதுத் தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, நாட்டையும் அதன் தொழிலாளர்கள், உழவர்கள், பெண்கள், இளைஞர்களையும் அதேபாதையில் வலுக்கட்டாயமாக நடத்தி வருகிறது.

முதலாளிவர்க்கத்தினுடைய ஏகபோகத் தேவைகளையும், பெருவாரியான தொழிலாளிகள் - உழவர்களைச் சுரண்டும் அமைப்பையும் இது பாதுகாக்கிறது. அது நம் நாட்டை தீய நோக்கம் கொண்ட அமெரிக்காவின் பிடிக்குக் கொண்டு செல்கிறது. இது நம் நாட்டை போர் மற்றும் அழிவிற்கு கொண்டு செல்லும் ஒரு தெளிவானபாதையாகும். மக்களுடைய மிகவும் அடிப்படையான சேவைகளுக்குச் செல விடுவதை விட இராணுவ செலவினத்திற்கும், மிக அதி நவீன ஆயுதங்களை வாங்குவதற்கும் அதிகமான பணம் ஒதுக்கப்படுகிறது.

இந்திய மற்றும் வெளிநாட்டு, முதலாளிகளின் நலன்களுக்கு சேவை செய்வதை நோக்க மாகக் கொண்டு பொருளாதாரம் அமைக்கப்பட்டுள்ளது,

மக்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அல்ல. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அதிக பட்ச கொள்ளை அடிக்கும் இந்த பொருளாதார அமைப்பை, அரசு இயந்திரம் பாதுகாக்கிறது.

கடந்த ஒன்பது மாதங்களாக, தான் பிரதமராக ஆனதிலிருந்து மோடி,"எல்லோருடனும் சேர்ந்து, எல்லோருடைய வளர்ச்சிக்காகவும்" என்ற முழக்கத்தை மீண்டும் மீண்டும் கூறிவருகிறார். பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும், உற்பத்தி சாதனங்களைத் தங்கள் உடைமையாக வைத்திருப்பவர்களுக்கும், தங்கள் உழைப்பை விற்று வாழ்ந்து வருபவர்களுக்கும் என இருதரப்பினருடைய நலனுக்காகவும் இவருடைய அரசாங்கம் வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளு மென கூறப்படுகிறது.

இதற்கு முன்னரும் ஒவ்வொரு பிரதமரும் இந்த உறுதி மொழியை மக்களுக்கு பல்வேறு முழக்கங்கள் மூலம் கொடுத்துள்ளனர்.

அணி திரட்டுவதற்கும், நல்ல பணி நிலைமைகளையும் ஊதியத்தையும் கோருவதற்கும் இருக்கும் தொழிலாளர்களுடைய உரிமைகள் மீதுமுழு அளவிலான தாக்குதலை இந்த நேரத்தில் மத்திய மாநில அரசாங்கங்கள் தொடுத்துள்ளன.

தொழிலாளர் சட்டங்கள் தாராள மயமாக்கப்பட்டு, உழைக்கும் ஆண்களும் பெண்களும் பல போராட்டங்கள் மூலம் வெற்றி பெற்ற உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. வேகமான முதலாளித்துவ வளர்ச்சியையும் இந்திய மற்றும் வெளிநாட்டு தனியார் முதலாளித்துவ ஏகபோகங்கள் மேலும் அதிக முதலீடு செய்வதையும் ஊக்கு விப்பதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது. நம்மக்களின் உழைப்பு மற்றும் செல்வத்தின் மூலம் உருவாக்கப்பட்ட பொதுவளங்களை பெரிய அளவில் தனியார்களுக்கு விற்க திட்ட மிடப்பட்டு வருகிறது.

நம் இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை உருவாக்குவதற்காக என்று கூறிக் கொண்டு, "இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்" என்ற முழக்கத்தின் கீழ், வெளிநாட்டு மற்றும் இந்திய தனியார் முதலீட்டாளர்கள் பெரும் தொகைகள் முதலீடு செய்வதை ஊக்குவிக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வரும் இந்த வேளையில், வங்கி, காப்பீடு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளிலும் பெரும் எண்ணிக்கையிலான பெண், ஆண் தொழிலாளர்கள் வேலையிலிருந்து தூக்கி எறியப்படுகின்றனர்.

முதலாளித்துவம் அதன்தற் போதைய ஏகாதிபத்திய நிலையில், மிகவும் கொடிய சுரண்டல் அமைப்பாகும். எப்படி அது பெரு வாரியான உழைக்கும் மக்களுக்கு நல்ல நிலைமைகளைக் கொண்டு வர முடியவில்லையோ, அதைப் போலவே அது, பெண்களுக்கும் நல்ல எதிர்காலத்தைக் கொண்டு வர முடியாது.

ஆளும் வர்க்கம், பொய்களாலும் சூழ்ச்சி செய்து ஏமாற்றியும் இதை மூடிமறைக்க முயற்சிக்கிறது. இந்தக்கட்சியிலிருந்தோ அல்லது அந்தக் கட்சியிலிருந்தோ அரசாங்கத்தை அமைக்க முதலாளி வர்க்கம் கொண்டு வரும் அதனுடைய அரசியல் பிரதிநிதிகள், மக்கள் என்ன கேட்க விரும்புகிறார்களோ அதைக் கூறுவதிலும் ஆனால் ஆளும் முதலாளிவர்க்க நலன்களை மட்டுமே கண்டிப்பாகச் செயல் படுவதிலும் கைதேர்ந்தவர்கள்.

பெண் குழந்தை பிரச்சினையை எடுத்துப்பாருங்கள்– இந்திய அரசும், அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களும் உதட்டளவில் பெண் குழந்தைக்களுக்காகவும் பெண்களுக்காகவும் பேசிக் கொண்டு, பரவலாக பெண்சிசுக் கொலைகளை அனுமதித்தனர்.

"பெண் குழந்தையைக் காப்பாற்றுங்கள், பெண் குழந்தையைப்படிக்க வையுங்கள்" என்ற சமீபத்திய முழக்க மும்மக்கள் மீது விளையாடப்படும் இந்த கொடூரமான பாசாங்குத் தனத்திற்கும் மோசடிக்கும் மற்றொரு எடுத்துக்காட்டாகும்.

பெண்சிசுக் கொலைகளும், கர்ப்பிணிகள் இறப்புகளும், குழந்தை இறப்புகளும்,பெண்கள் கற்பழிக்கப்படுவதும், மக்களைப் "பாதுகாக்க" வேண்டிய ஆயுதபடைகளே பெண்களுக்கு எதிராக இழைக்கும் எண்ணற்ற அட்டூழியங்களும் நடப்பது ஏன்?

நாடு முழுவதும் உள்ள பெருவாரியான உழைக்கும் பெண்களும் ஆண்களும் தீவிரமாக சுரண்டப்பட்டு மனிதாபிமான மற்ற நிலையில் வாழும் நிலைமைகள் ஒரு முனையிலும், அதே நேரத்தில் சிறுபான்மையினரான மிகப்பெரும் செல்வந்தர்கள் சொகுசாகவாழ்வது மறு முனையிலும் இருப்பது ஏன்?

மதம், சாதி அடிப்படையில் அவ்வப்போது திட்ட மிட்டு நடத்தப்படும் படுகொலைகளில் உழைக்கும் மக்களும் பெண்களும் தொடர்ந்து தாக்குதலுக்கு பலியாகி வருவது ஏன்? இதற்கான பதில் முதலாளித்துவ அமைப்பிலும், முதலாளிவர்க்கசர் வாதிகாரத்திலும் இருக்கிறது.

இதேபோல், முதலாளித்துவ ஊடகங்கள் மூலம் பிரதமரும் அரசாங்கமும் பல்வேறு அரசியல் கட்சிகளும் பெண்கள் பாதுகாப்பு பற்றிய கவலையை வெளிப்படுத்தி வருகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டின் தலை நகரில் பேர் போன கற்பழிப்பு நிகழ்வைத் தொடர்ந்து, அப்பொழுது இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம், கண்காணிப்பு மேலும் பலப்படுத்தப்படும் என்றும், பாதுகாப்பு செலவினங்கள் அதிகப்படுத்தப் படும் என்றும் வாக்குறுதிகளைக் கொடுத்தது.

மோடி அரசாங்கமும் இதே போன்ற வாக்குறுதிகளை அளித்தது .என்ன தான் அரசாங்கம் வாக்குறுதிகளைக் கொடுத்து வந்தாலும், அதிகரித்து வரும் குழப்பமும் வன்முறைகளும், சமுதாயத்தின் அனைத்துத் துறைகளும் குற்றமயமாக்கப்பட்டு வருவதும், வளர்ந்து வரும் அரசு திட்டமிட்டு நடத்தும் குழுவாத வன்முறையும் அரசு பயங்கரவாதமும், நம் சமுதாயத்தை பெண்களுக்கு எந்த விதத்திலும் பாதுகாப்பானதாக ஆக்காது.

சத்தீஸ்கரில் பல கிராமங்களில், உள்ள பழங்குடி மக்களின் மீது பாலியல் வன்முறை உட்பட்ட அப்பட்டமான குற்றங்களை வழக்கமாகவே பாதுகாப்புப்படையினர் செய்து வருகின்றனர் என்று ஒரு சமீபத்திய பியூடிஆர் (PUDR) அறிக்கை பதிவு செய்துள்ளது.

காஷ்மீரிலும் வடகிழக்கு பகுதிகளிலும் நாட்டின் பல பகுதிகளிலும் இந்திய அரசின் இராணுவ மற்றும் உள்நாட்டு பாதுகாப்புபடைகளின் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள இடங்களில் இதே தான் நடந்துவருகிறது.

தற்போதைய அரசாங்கம் முன் இருந்த அரசாங்கங்களைப் போல், இராணுவப்படைகளும் பாதுகாப்புப் படைகளும் பெண்களுக்கு எதிரான மிக மோசமான குற்றங்களைச் செய்ய தடையற்ற உரிமை உள்ள இராணுவப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் போன்ற கறுப்புச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதை எதிர்க்கிறது.

மிக மோசமான வகுப்பு வாத வன்முறைகளையும் அரசு பயங்கர வாதத்தையும் கட்ட விழ்த்து விட்டதற்கு மூளையாக விளங்கிய பிறகும், தற்போதைய அரசாங்கத்தின் அரசியல் தலைவர்கள், எப்படி அதிகார பதவிகளில் வந்துள்ளனர் என்று நாம் காணும் போது குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையே இல்லை.இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியுமா?

கடந்த பல்லாண்டுகளாக கிடைத்த எல்லா அனுபவங்களின் அடிப்படையில் இந்தியபெண்கள், தங்கள் மீதான அடக்கு முறையையும் சுரண்டலையும் இந்த அமைப்பிற்குள்ளேயே நீக்கிவிட முடியும் என்று நம்ப முடியாது. நமது நாட்டில் தற்போது இருப்பதுதான் சனநாயகமென,முதலாளிவர்க்கம் சாதிக்கிறது. ஆனால் அரசு இயந்திரத்தை முதலாளி வர்க்கம் தன்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், அது தேர்ந்தெடுத்த அரசியல் கட்சியால் அரசு நிர்வகிக்கப்பட்டும் வரும் இந்த அரசியல் அமைப்பு, முதலாளி வர்க்க சர்வாதிகாரம் அன்றி வேறில்லை.

குறிப்பிட்டகால இடை வெளியில் தேர்தல் என்ற போலிநாடகம் நடத்தப்பட்டாலும், பொருளாதாரத்தின் போக்கு, கொள்கைகள் மற்றும் எல்லா சட்டங்களும் இந்த வர்க்கத்தின் நலனுக்கானவையே ஆகும். தொழிலாளர்கள், உழவர்கள் மற்றும் அனைத்து உழைக்கும் மக்கள் என பெரும்பான்மையான மக்கள், அரசியல் அதிகாரத்திலிருந்தும் முடிவுகளையும் எடுப்பதிலிருந்தும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்.

இப்படித்தான் இருக்க வேண்டுமென இந்த பாராளுமன்ற சனநாயகம் அமைக்கப்பட்டுள்ளது. "எல்லோருக்கு மான வளர்ச்சி" என்ற மாயை எப்படித் தொடர்ந்து கட்டிக்காத்து வரப்படுகிறதோ, அதைப் போலவே "சனநாயகம்" மற்றும் "குடியரசு" அதாவது மக்களுடைய ஆட்சி என்ற மாயையையும் காக்கப்படுகிறது.

ஒரு சிறுபான்மையினரின் நலன்களை எல்லாவற்றிற்கும் மேலே வைக்கும் இந்த அமைப்பில் பெண்கள் மீதான சுரண்டலும் ஒடுக்கு முறையும் தவிர்க்க முடியாததாகும். இதைத் தான் பெண்களின் வரலாற்று அனுபவமும் கூட நமக்கு சொல்கிறது. எல்லா விதமான ஒடுக்கு முறைகளிலிருந்தும் முதலாளித்துவ சுரண்டலிலிருந்தும் சமுதாயத்தை விடுவிக்காமல் பெண்கள் விடுதலை பெற முடியாது.

இதைச் செய்வதற்கு, திட்டமிடுதல் மற்றும் பொருளாதாரம், சமுதாயத்தின் போக்கை நிர்ணயிக்கும் அரசியல் அதிகாரம் உழைக்கும் மக்களிடம் இருக்க வேண்டும். இந்த முதலாளித்துவ அரசை மாற்றி, தொழிலாளர்கள் உழவர்களின் ஆட்சியை அமைக்க வேண்டும். அப்படிப்பட்ட அரசே, சோசலிசத்தையும் கம்யூனிசத்தையும் நிறுவும் ஒரு கருவியாக இருக்கும்.

பொருளாதாரத்தின் போக்கை பெரும்பான்மையினரின் நலன்களுக்காக மாற்றியமைப்பதற்கும். சமுதாயத்தின் விவகாரங்களில் அனைத்து பெண்களும் ஆண்களும் பங்குபெறும் ஒரு புதிய அரசியல் வழி முறைகளின் மூலம் முழுநோக்கத்தை அடைவதற்கும் இது ஒரு கருவியாக இருக்கும்.

இந்த இலக்கை அடைவதற்காக உழைக்கும் ஆண்களுடன் தோளோடு தோள் சேர்ந்து ஒன்றுபட்டுப் போராட வேண்டும் என்று எல்லா உழைக்கும் பெண்களையும் கம்யூனிஸ்டு கெதர்கட்சி அழைக்கிறது.

ஏனெனில் அப்படிப்பட்ட சமுதாயம் மட்டுமே பெண்களின் விடுதலைக்கான அடித்தளத்தைக் கொடுக்கும்.

இதை நோக்கி, இன்றுள்ள அமைப்பையும் அதன் ஆட்சியாளர்களையும் எதிர்த்துச வால் விடுவதற்காக,  நாம் நமது வேலை செய்யும் இடங்களிலும், வசிக்கும் இடங்களிலும், குடியிருப்புகளிலும் நம்மை அமைப்பாக ஒருங்கிணைத்துக் கொள்ள வேண்டும். உண்மையான போராட்டத்தை நாம் கையில் எடுக்காமல் இருப்பதற்காக, நாள்தோறும் முதலாளி வர்க்கம் காட்டும்ஏமாற்று வித்தைகளை நாம் நம்பிவிடக் கூடாது.

நம்மை  ஒரு ஏகாதிபத்திய போருக்கு கொண்டு செல்லும் எல்லா நகர்வுகளையும் நாம் எதிர்க்க வேண்டும். இந்தியப் பொருளாதாரத்தின் எந்தத் துறையும் தனியார் மயமாக்குவதையும் தாராளமயமாக்குவதையும் நாம் எதிர்க்க வேண்டும். கல்வி, மருத்துவம் போன்ற சமூக சேவைகளை தனியார் இலாபத்திற்கான ஆதாரமாக மாற்றும் எல்லா நகர்வுகளையும் நாம் எதிர்க்க வேண்டும்.

தொழிலாளிவர்க்கத்தின் பல போராட்டங்களின் மூலம்பெற்றுள்ள தொழிலாளர் உரிமைகளைத் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க வேண்டும். பொது வளங்களை ஏகபோகங்களுக்கு வாரிக் கொடுப்பதை கடுமையாக எதிர்த்துப் போராட வேண்டும். நம்முடைய நிலங்கள், கனிமங்கள் மற்றும் நீர் வளங்கள்காக்கப்பட்டு, உழைக்கும் பெரும் பான்மை மக்களின் நலன்களுக்குப் பயன்படுத்தப் படவேண்டும்.

மக்களுடைய அத்தியாவசிய சேவைகளுக்குத் தேவையான செலவுகளைக் குறைப்பதையும் இராணுவச் செலவுகளை அதிகரிப்பதையும் நாம் எதிர்க்க வேண்டும். இராணுவப்படைகள் சிறப்பு அதிகாரச்சட்டம் (AFSPA) மற்றும் யுஏபிஏ (UAPA) போன்ற கொடூரமான சட்டங்களை ஒழிக்க நாம் போராட வேண்டும்.

இனவாதப் படுகொலைகளையும் குழப்பத்தையும் வன்முறையையும் திட்டமிட்டு நடத்திய குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டுமெனவும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் புரிபவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டுமெனவும் கோரி, நாம் போராட வேண்டும். ஒன்றுபட்டு,பெண்கள் விடுதலைப் போராட்டத்திற்காக அணிதிரள்வோம்!

Pin It