சாதி மறுப்பு காதல் திருமணத்தை மைய மாக வைத்து சாதி வெறியர்கள் தங்களது வெறி யாட்டத்தை தர்மபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய், நத்தம் காலனி, அண்ணா நகர் மற்றம் கொண்டம்பட்டி ஆகிய பகுதிகளில் நடத்தியது மனிதாபிமானமுள்ள அனைவரை யும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. சாதி ஒழிப்பிற்காக இயக்கம் கண்டு சமூக இழிவுகளை அழித்து சமத்துவத்தை நோக்கி தமிழ்நாட்டை வழி நடத்திய தந்தை பெரியார் பிறந்த மண்ணில் நடந்த இக்கொடூரம் வேதனையளிப்பதோடு, சாதி ஒழிக்கப்பட வேண்டியதன் தேவையை, அவசியத்தை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

சாதியை மறுத்து இருவர் காதல் மணம் செய்து கொண்டதால் எழுந்த கோபம் என்றால் சம்பந்தப்பட்ட இருவர் வீடுகள் மட்டுமே பாதிப்புக்குள்ளாகும். அதிகபட்சமாக அவர் களின் உறவுகள், நண்பர்கள் வேண்டுமானால் பாதிக்கப்படலாம். இதுதான் வழக்கத்தில் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. 

ஆனால், தர்மபுரி மாவட்டத்தில் நத்தம் காலனி, நாயக்கன் கொட்டாய், அண்ணா நகர், கொண்டம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளும் கொளுத்தப்பட்டு, இடிக்கப்பட்டுள்ளனவே, இதற்குக் காரணமாக சாதி மறுப்பு காதல் திருமணம் இருக்க முடி யாது என்பது ஓரளவுக்கு சமூகத்தைப் பற்றித் தெரிந்தவர்களுக்குக்கூட புரியக்கூடிய உண்மை.

காதல்மணம் புரிந்தவர்களின் ஊர்களில் உள்ள நிலைமைகளை கவனித்தும் கவனியாது இருந்த காவல்துறையின் முதல் கோணல் இதில் முற்றிலும் கோணலாக மாறிவிட்டது. உளவுத் துறை மூலம் எதை எதையோ கண்டுபிடித்துத் தடுக்கும் ஆற்றல் உடையது தமிழ்நாடு காவல் துறை என்று புகழ்கிறார்களே, அந்தத் துறை என்ன செய்தது? காவல்துறையிலும் சாதி உணர்வோடுதான் இப்பிரச்சனையைக் கையாண்டு உள்ளனர் சில கருப்பு ஆடுகள் என்று இப்போது செய்தி வருகிறது. ஆக, காவல்துறையின் ஒத்துழைப்போடுதான் இக்கலவரம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

உணர்ச்சி வேகத்தில், ஆத்திரத்தில், கொந் தளித்த மக்களின் வெளிப்பாடாக இருந்தால் இவ்வளவு வெறித்தனம் இருந்திருக்காது, சேதம் ஏற்பட்டிருக்காது. பல காலமாக தாழ்த்தப் பட்ட மக்களின் கல்வியும், பொருளாதார முன்னேற்றமும், அது தந்த விடுதலை உணர்ச்சி யும் ஆதிக்கச் சக்திகளை உறுத்திக்கொண்டே இருந்திருக்கிறது. காலங்காலமாக நமக்கு அடிமை வேலை செய்த கூட்டம் அரசு வேலையும், தொழிலும் செய்து வசதியாக வீடுகள் கட்டி தங்களை விடவும் வளமாக வாழ்கிறார்களே என்கிற எரிச்சல் ஆதிக்கச் சாதிகளைத் தூங்க விடாமல் அரித்தெடுத்திருக்கிறது.

காத்திருந்த சாதிவெறியர்கள் காலம் கனிந்துவிட்டதாகக் கருதி தாழ்த்தப்பட்டவர் களைக் கருவறுக்கத் துணிந்திருக்கிறாரக்ள். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று ஏனோதானோ என்று தாக்கக் கூடாது. அடிக்கிற அடியில் இரண்டு மூன்று தலைமுறைக்குத் தாழ்த்தப் பட்டவர்கள் பொருளாதாரரீதியில் பின்தங்கிப் போக வேண்டும். மேல் சாதியான தம் மீது பயம் இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்று மிகக் கச்சிதமாகத் திட்டமிட்டு இந்தக் கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

வீடுகளைக் கொளுத்தத் தேவையான மண் ணெண்ணெய், பெட்ரோல் முதலியவற்றையும் வீடுகளை இடிக்கத் தேவையான ஆயுதங்களை யும் தயார் செய்துகொண்டே இத்தாக்குதலைத் தொடங்கியுள்ளனர். அத்தோடு, தாழ்த்தப்பட்ட மக்கள் வியர்வை சிந்தி உழைத்துச் சேமித்த பணத்தையும், தங்க நகைகளையும், வீட்டு உபயோகப் பொருட்களையும் குறிவைத்தே கொள்ளையடித்து இருக்கிறார்கள்.

சாதி மறுப்புத் திருமணங்களால் சாதிக் கட்டுமானங்கள் உடைக்கப்படுவதைக் கண்டு பொறுக்க முடியாத - சாதி கட்டுப்பாட்டில் பொறுக்கித் தின்னும் சுயநலவாத அரசியல் வாதிகளும் அடிமை வேலை செய்பவன் அடிமையாக இருக்க வேண்டுமே தவிர அரசு அதிகாரியாக, முதலாளியாக வாழக்கூடாது என்று ஆதிக்கச் சாதி வெறியர்களும் கூட்டாகச் சேர்ந்து ஆயிரக் கணக்கில் திரண்டு அப்பாவி மக்களின் வாழ்க்கையைச் சூறையாடியிருக் கிறார்கள்.

நாகரிகத்திலும் பண்பாட்டிலும் உயர்ந் துள்ளோம் என்று மார்தட்டிக்கொள்ளும் அனைவரும் வெட்கப்பட வேண்டிய இக்கொடூரக் கொலைவெறியாட்டத்தைக் கண்டித்தும், இதற்குக் காரணமான சாதி வெறியர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி வழக்குகள் பதிந்து தண்டனை வழங்கக் கோரியும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் 16-11-2012 அன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கழகத்தின் தலைவர் ஆனூர் ஜெகதீசன், கழகப் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், கழகப் பிரச்சாரச் செயலாளர் சிற்பி இராசன் உள் ளிட்ட கழக முன்னணியினர் கலந்துகொண்டு தர்மபுரி வெறியாட்டத்தைக் கண்டித்தும் சாதி வெறியர்களை உடனே தமிழக அரசு கைது செய்து அவர்களை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி தண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

சென்னை

16-11-2012 வெள்ளியன்று மாலை 4 மணிக்கு சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் இல்லம் எதிரில் கழகத் தலைவர் ஆனூர் ஜெகதீசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர் சு.குமாரதேவன், வழக்கறிஞர் வை.இளங்கோவன், வடக்கு மண்டல அமைப்பாளர் கரு.அண்ணாமலை, ஒருங் கிணைந்த சென்னை மாவட்ட அமைப்பாளர் எ.கேசவன், வழக்கறிஞர் ப.அமர்நாத், தென் சென்னை மாவட்டச் செயலாளர் ச.குமரன், மாவட்டத் தலைவர் செ.குமரன், வடசென்னை மாவட்டத் தலைவர் சொ.அன்பு, மாவட்டச் செயலாளர் வி.ஜனார்த்தனன், காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் ர.பரந்தாமன், அசுவத் தாமன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சாதி வெறியர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி முழக்கமிட்டு வலியுறுத்தினர்.

புதுச்சேரி

புதுச்சேரி மாநில கழகத்தின் சார்பில் பெரியார் சிலை அருகில் புதுச்சேரி மாநிலத் தலைவர் வீர.மோகன் த¬மையில் 16-11-2012 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழகப் பிரச்சாரச் செயலாளர் சிற்பி இராசன், மாநிலத் துணைத் தலைவர் ம.இளங்கோ, மாநிலச் செயலாளர் சுரேசு, பொருளாளர் பால முருகன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றி னர். இளைஞரணித் தலைவர் தீனா, பொறுப் பாளர்கள் பெருமாள், சிவமுருகன், இரவி, பாஸ்கரன், கிருட்டிணன், தேஜா, இராஜசேகர், பன்னீர்செல்வம், சிவஞானம் உள்ளிட்ட தோழர்களுடன் சாதிவெறியர்களுக்கு எதிரான மக்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.

கோவை

கோவை காந்திபுரம் தமிழ்நாடு உணவகம் முன்பு 16-11-2012 அன்று மாலை 5 மணிக்கு கழகப் பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டி ணன் தலைமையில் நூற்றுக் கணக்கான தோழர்கள் கலந்துகொண்ட கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. கழகச் செயற்குழு உறுப்பினர் வெ.ஆறுச்சாமி, மாநகரச் செய லாளர் இ.மு.சாஜித், மாநகரப் பொருளாளர் இரா.ரஞ்சித் பிரபு, அலுவலகப் பொறுப்பாளர் சா.கதிரவன், தெற்கு மாவட்டத் தலைவர் கலங்கல் மு.வேலுச்சாமி, பொருளாளர் அகில் குமரவேல், வடக்கு மாவட்ட அமைப்பாளர் ம.சண்முகசுந்தரம், மேட்டுப்பாளையம் சந்திரசேகர், பெரியநாயக்கன் பாளையம் சீனிவாசன், அன்னூர் கழகப் பொறுப்பாளர்கள் ஜோதிராம், ஈசுவரன், சதீசு, அர.இராசன், தி.க. சம்பத், சிங்கை மனோகரன், ஜீவா, தம்பு, ஆனைமலை முருகானந்தம், அரிதாசு, செல்வம், செபாஸ்டியன், தங்கதுரை, கண்ணன், சசிகுமார், உதயகுமார், திருப்பூர் தியாகு, சித்தாபுதூர் ஆறுமுகம், ஆச்சிபட்டி பாலு, நவநீதன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கக் தோழர்கள் தமிழி, பாண்டியரசன் மற்றும் கழகத் தோழர்கள் பலர் கலந்துகொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் முருகேசன், வடக்கு மாவட்டத் தலைவர் து.இராமசாமி, கோப்மா கருப்புசாமி, பெரியார் மாணவர் கழகப் பொறுப்பாளர் சீனிவாசன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

பெரம்பலூர்

15-11-2012 அன்று காலை 11 மணிக்கு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் முன்பு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் இலட்சுமணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஜெயவர்த்தனா, பாலமுருகன், ஊமைத்துரை ஆகிய தோழர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள். ஆர்ப்பாட் டத்தில் க.செல்வம், பாலசுப்பிரமணியன், பி.குமார், பி.மாரிமுத்து, பிரபு, பார்த்திபன், தினேஷ்குமார், முத்துவேல் உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.

Pin It