சிரிப்பின் உருவமாய்
எல்லோரும் தெரிகிறார்கள்.

பூமியின் மீது
ஒழுக்கமில்லாமல் வளர்கிறார்கள்.

சுற்றிச்சுற்றி இதே வட்டத்தில்
ரத்தக் கறைபடிந்த பனிகளில்  வளர்கிறார்கள்.

என் காலடி எங்கும் நடுக்கங்கள்
என்னைச் சூழ்ந்துகொள்ளும்
அதிபயங்கர வஞ்சகங்கள்
எங்களின் பிஞ்சுமுகம் அவர்களைப் பார்த்தும்
காய்ந்துவிடுகிறது.
எங்களின் உயிருக்கு இங்கே மதிப்பில்லை.

வீட்டைவிட்டு பொது வெளியில்
குழந்தையின் உரிமை அபகரிப்பு.

பொய் பித்தலாட்டத்திற்குள்
குழந்தைகள் கொடூரமாக தள்ளப்படுகிறார்கள்.

ஆட்டுத் தோல் போர்த்திய
ஓநாய்களை இவர்கள் ஒருபோதும்
அறிவதில்லை.

இவர்கள்
அவர்களின் ஏளனத்திற்குப் பின்னால்
மிகவும் அப்பாவிகளாக
தெரிகிறார்கள்.
இங்கே பாதுகார்பான
இடங்களைப் பார்க்க முடியாது

கோவில் சுவர்களில் கூட
மந்திரங்கள் பொறிக்கப்படவில்லை

நீ பிறந்து வளர்ந்த நகரெங்கும்
சுதந்திரமாய் விளையாட முடியாது

உன்னுடைய குடும்பமும்
இந்த அவமானத்திலிருந்து
தப்பிக்க முடியாது

உங்களின் குழந்தைகள்
சிரமமான வேலைக்கு தள்ளப்படுகிறார்கள்

உங்களின் குழந்தைகள்
தூரத்து உறவுக்காரனால்
கற்பழிக்கப்படுகிறாள்
பெற்றோரின் மனதும் வயிறும் பற்றி எரிகிறது

பெண் குழந்தைகளின்
மணக்கோலக் கண்ணீர்
பட்டிலும் முத்திலும் உடைகிறது.

நகரத்தில் எந்த நேரத்திலும்
ஒருவர் பாதிப்புக்குள்ளாகிறார்

உலகப் பயங்கரவாதத்திற்கு
ஆள்கடத்தலே
அடித்தளமாகின்றது

ஆனால் இங்கே
இந்தக் கொடூரக் குற்றங்களுக்கிடையிலும்
வாழ்வதற்கான நம்பிக்கை
கற்றுக்கொடுக்கப்படுகிறது

பாதித்தவர்களுக்கு நாம் உதவுவோம்
இந்தச்செய்தி திசையெங்கும் பரவட்டும்.

- ஷாருதி ரமேஷ்

Pin It