புற்று நோய் மருத்துவத்தில் ‘கதிர் சிகிச்சை’(Radio Therapy) முக்கியப் பங்கினை வகிக்கிறது. திசுக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கதிர் ஏற்பளவினை(dose) அடிப்படை யாகக் கொண்டது, கதிர் மருத்துவம். ஏற்பளவு ‘ரேட்’(rad) அலகில் அளவிடப்படுவதாகக் கொள்வோம். ஒரு ‘ரேட்’ எக்ஸ்(X) அல்லது காமாக் கதிர்கள்  தோற்றுவிக்கும் உயிரியல் விளைவும் (Biological Effect), அதே ஒரு ‘ரேட்’ ஏற்பளவு கொண்ட புரோட்டான், நியூட்ரான் அல்லது பின் உந்தக் கருவால் தோற்றுவிக்கப்படும் உயிரியல் விளைவும் ஒன்று போல் இருப்ப தில்லை. அதாவது வெவ்வேறு அயனியாக்கும் கதிர்களின் ஏற்பளவு ஒரே மாதிரியாக இருந் தாலும், அவைகளினால் தோன்றும் உயிரியல் விளைவு வெவ்வேறாக உள்ளன. இதற்கு முக்கியக் காரணம் அக்கதிர்களின் ஆற்றல், ஏற்கப்பட்ட விதம், அதனால் தோற்றுவிக்கப் பட்ட அயனி இணைகள்(ion pairs) பலவாறாக  அனைத்துத் திசைகளிலும் செல்வதனால் ஏற்படுகிறது. மேலும் கதிர் வீச்சின் நிலையினையும் பொறுத்து அமைகிறது. இப்படிப்பட்ட பல கதிர் வீச்சின் விளைவுகளை ஒரே அளவில் அளவிட வேண்டிய கதிரியல் பாதுகாப்பு மிகவும் தேவைப்படுகிறது. இதுவே, ‘சம கதிர் ஏற்பளவு’ H என்று குறிக்கப்படுகிறது.

H-DQN என்று இது குறிக்கப்படுகிறது.  இங்கு

H - சம கதிர் ஏற்பளவு அல்லது சமானக் கதிர் ஏற்பளவு

D - ஏற்பளவு ‘ரேட்’

Q- பண்புக் காரணி (கதிர்களின்) Quality Factor

N - H ஐ மாற்றும் மற்றொரு பெருக் கற் காரணி

இதன் மதிப்பு இப்போது 1 ஆகும்.

Q என்கிற பண்புக் காரணி நேர் கோட்டில் ஆற்றல் பரிமாற்றம் சார்ந்த ஒரு காரணியாகும். கதிரியல் பாதுகாப்பு பற்றிய ஆய்வில் னு இந்தக் காரணியால் பெருக்கி சம ஏற்பளவு பெறப்படுகிறது.

LET – keV/m(மைக்ரான்)      Q மதிப்பு

3.5 KeV வரை                             1

3.5 முதல் 7.0 வரை                 2

7 முதல் 23 வரை                     2 - 5

23 முதல் 53 வரை                   5 - 10

53 முதல் 175 வரை                10 - 20

பொதுவாக எக்ஸ், காமா கதிர்களுக்கு Q மதிப்பு 1 என்றும், வேக நியூட்ரான், காமா கதிர்களுக்கு 10 என்றும், கனமான மின் உந்தக் கருவிற்கு 20 என்றும் எடுத்துக் கொள்ளப்படுகிறது.  H - ரெம் அலகில் குறிக்கப்படுகிறது.

பன்னாட்டு அலகு முறையில் ஏற்பளவு கிரேயிலும், சம கதிர் ஏற்பளவு சீவர்ட்டிலும் அளவிடப் படுகின்றன.

1 Gy - 100 rad    -  1 joule/kg

1 Si – 100 rem

Pin It