புத்திர சோகம்
இது கத்திபடாத காயம்
ரத்தம் வராத சோகம்

எத்தனை சூரியன்கள் உதித்தாலும்
இருட்டாய் தெரிகிற கோலம்.
புத்திரசோகம்.

இது
இறந்தது போலவே இருப்பது
இருப்பதே வீணென்று நினைப்பது.

பிள்ளக்காக சுவாசித்தது போக
பேருக்காக சுவாசிப்பது.

உயிர் வாழ உண்டது போக
உடல் வாழவே ஏதோ உண்பது.

பயிர்களெல்லாம்
விளைந்தப்பின் தானே
அறுவடையாகும்.

இதோ வளரும் போதே
பறிகொடுத்த பரிதாபம்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.