elam_620

இரண்டரை ஆண்டுகளுக்கு முன் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இலங்கை அரசின் இன அழிப்புப் போர் கொடுமைகளையும் இன்று அங்கு நிலவும் அவலங்களையும் ஒரு வலிமையான துயரம் ததும்பும் நிழற்படங்களைத் தொகுத்து, அதோடு எளிய வாக்கியங்களைப் பயன்படுத்தி இந்த அறிய நூலை வெளியிட்டுள்ளார். நூலின் ஆசிரியர் ஜெ. பிரபாகரன் அவர்கள்.

இந்நூலை வாசிக்கும் ஒவ்வொருவரும் ரத்த வெறிபிடித்த இட்லரை நினைவுக் கூறுவர். பல லட்சம் யூதர்களை கொன்று குவித்ததைப் போல் கொலை வெறிபிடித்த ராஜபட்சே ஈழத் தமிழர்களை கொத்துக் கொத்தாய் கொன்று குவித்தார். இட்லருக்கு ஏற்பட்ட அதே நிலை ராஜபட்சேவுக்கும் ஏற்படவேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைக்கும்படியாக இந்நூல் அமைந்துள்ளது. ஒவ்வொரு தமிழரும் படிக்க வேண்டிய அரிய நூல்.

அ. சரவணகுமார்,

பென்னிகுயிக் பதிப்பகம்,

4/411, செந்தில்நாதன் தெரு

தாசில்தார் நகர், மதுரை – 625 020

பேசி : 99944 97418

Pin It