தமிழுக்கு அமுதென்று பேர்! அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்றுபேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! – இன்பத்
தமிழ் எங்கள் வலமிக்க உளமுற்ற தீ!

****

இன்பத் தமிழ் (கவிதை – ஆங்கிலம்)

பேரா.கணபதி

Sweet Tamil
Tamil too is as nectar known!
That Tamil, Sweet Tamil,
Is akin to our dear life!
Tamil is as the moon described!
That Tamil, Sweet Tamil,
Is the sap of our society's weal!
Tamil is as fragrance considered!
That Tamil, sweet Tamil,
Is our life's tryst established!
Tamil as delightful mead is deemed!
That Tamil, Sweet Tamil,
Is the root of our enduring rights!

Pin It