வறுமை இருக்கட்டும் பரவாயில்லை ஆனால் வட்டி வேண்டாம்; எம் மக்கள் பசியால், பட்டினியால் வாடட்டும் பரவாயில்லை; ஆனால் மது வேண்டாம்; அதனை விற்பதும் வேண்டாம் என்று வாழுகின்ற இஸ்லாமியரின் நிலை - நல்லதை சொன்னதற்காகவும், சொன்னதை செய்த தற்காகவும் இன்றைக்கு யாருடைய உழைப்பையும் உறிஞ்சாத ஒரு உன்னதமான சமுதாயம் ஒதுக்கப்பட் டிருக்கிறது.

இப்படி சொல்லும்போது ஒரு சம்பவம் நினைவிற்கு வருகிறது. பலமுறை இதை நினைவு கூறும் போதெல்லாம் வருத்தமும் வேத னையும் ஏற்படுவதுண்டு.

ஒருநாள் மாலை நேரம் வேலையை முடித்து திரும்பிக் கொண்டிருந்தேன். போன் அழை ப்பு வந்தது நம் ஜமாத்தாரிடமிரு ந்து! நேராக காவல் நிலையம் வந்து விடச் சொல்லி! பெரிய யோசனை ஒன்றும் தேவைப்படவில்லை. பஞ்சாயத்துதான்! ஆனால் அது இத்தனை காலங்கள் நெஞ்சில் நிற்கும் என்று அன்று நான் நினைக் கவில்லை.

அதாவது "பிற சமயத்தவருடன் ஓடிய முஸ்லிம் பெண்' இது ஒன் றும் புது விஷயம் அல்ல என்று நீங்கள் நினைப்பது எனக்கும் புரிகி றது. இதில் விஷயம் என்னவென் றால் ஓடியது 14 வயது முஸ்லிம் பெண்.

பிரச்சினையை போலீஸ் நிலை யம்வரை கொண்டு செல்ல அந்த பெண்ணின் (சாரி : அந்த சிறுமி யின்) தாயார் கையொப்பம் தேவை ப்பட்டது வாங்க சென்றோம் ஆனால் அந்த அம்மாவால் கையெழுத்திட முடியாத அளவிற்கு கை உதறல்.

காரணம் முதலில் கலக்கம், அடுத்தது கல்வி கற்காமல் எப்போ தாவது இதுபோன்ற சமயங்க ளுக்காக கற்றுக் கொண்ட கையெ ழுத்து, இதைக் காணும்போதே கண்கள் கலங்கின. காரணம் இத் தனை கஷ்டத்திலும் அந்த பெண் மணி தன் மகளை ஓராளவிற்கு படிக்க வைத்தும் பணக் கஷ்டம் குடும்பத்தைச் சூழ சிறிய அளவில் துணிமணிகள் வியாபாரம் செய்து, வீடுகளுக்கு சென்று வசூல் செய்து வர வயசு பெண்ணை அனுப்பியதுதான் விபரீதத்திற்கு காரணமாக இருந் தது.

அந்தப் பெற்றோர் மீது கோபம் வருவதை விட கவலையும் கண் ணீருமே வந்தது. கடின கஷ்டத் தால் கல்வியில்லை. கஷ்டம் போக்க கல்வியை விட்டாலும் வேறு விதத்தில் மீண்டும் கஷ்டம்.

"போனா வராது; பொழுது போனா கிடைக்காது" என்பார்கள். அதில் அதி முக்கியமானது இளமை. அந்த இளமையையே அயல்நாட்டு பூமியில் இழந்து விடு கிறான் முஸ்லிம் சமுதாயத்து இளைஞன்.

திருமணம் ஆனவுடன் சில நாட் களில் மனைவியை விட்டுச் சென் றவனால், மனைவி கர்ப்பம் தரித்த போது வர முடியவில்லை. அவள் குழந்தை பெற்றெடுத்தபோதும் வர முடியவில்லை.

இறுதியில் போதுமான அள விற்கு உழைத்து தீர்த்து விட்டு இதற்கு மேல் முடியாது எனும் போது சொந்த நாட்டுக்கும், வீட் டுக்கும் திரும்பி வந்து கதவை தட் டினால் வாசலில் யார் என்று பார்க்க வந்த விவரம் அறியா குழந்தை; பெற்ற தகப்பனை பார்த்து தாயிடம் "அம்மா! யாரோ அங்கிள் வந்திருக் காங்க" என்று சொன்னால் வரும் மன வேதனையை வாயால் சொல்லி வரையறுக்க முடியாது.

விழிப்புணர்வை பெற கல்வி யும், வறுமையை விரட்ட வேலை வாய்ப்பும் வேண்டும்.

கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் எந்த சட்ட சிக்கலும் இல்லாத தனி இட ஒதுக்கீடு கோரி போராடுவேம். புறப்படு இளைய சமுதாயமே...

யார் பெற்றதானாலும் குழந்தையை கொஞ்சு வது அன்பு மற்றும் கரு ணையின் அடையாளம் என்றார்கள் நபிகள் நாய கம். தான் பெற்ற குழந் தையையே தொட்டு முத்தம் கொஞ்ச முடிய வில்லையே பல்லாண்டுகளாக சிறைப்பட்டிருக்கும் முஸ்லிம் சிறை வாசிகளுக்கு!

தான் கட்டிய மனைவியிடம் தனிமையில் பேச 15 ஆண்டுக ளாக முடியாத சோகம் இன்னும் தொடர்கிறதே!

* 34 வயதில் சிறைக்குச் சென்ற அன்சாரிக்கு வயது 50ஐத் தாண்டிச் செல்கிறது. கூடவே சிறைவாசமும்.

* 17 வயதில் உள்ளே சென்ற அபூதாஹிருக்கு வயது 33, இவர் எஸ்.எல்.இ. என்ற நோயால் பாதிக் கப்பட்டு அது இவருடைய சிறுநீர கத்தை முழுவதுமாக பாதித்து டையாலிஸிஸ் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது அது அவருடைய இதயத்தை பாதித்தி ருக்கிறது. மருத்துவர்கள் அவர் தன் மரணத்தை நெருங்கிவிட்டார் என் கின்றனர். அவரின் சோகக் கதை யும் சிறையில் தொடர்கின்றது.

* 17 வயதில் உள்ளே சென்ற தடா புஹாரிக்கு வயது 34 ஐ தாண் டிவிட்டது இவரது பெற்றோர் இவர் சிறை பிடிக்கப்பட்டதிலி ருந்தே உடல் நலக்குறைவு மற்றும் வறுமை நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போயினர். இவர் சிறை பட்டதிலிருந்து தன் தாய் தந்தையை பார்க்காதவர். இனி மேல் நினைத் தாலும் மறுமையில் மட்டுமே காண முடியும்.

இதில் தஸ்தகீர், சபூர் ரகுமான் போன்றவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டனர். இன்னும் இருப் பவர்களும் சரியான பராமரிப்பு இல்லாமல் பல்வேறு உறுப்பு நோய்களுக்கு ஆளாகின்றனர்.

கேடிகள், ரௌடிகள், காமக் கொடூரர்கள், கொலைகாரர்களுக் கெல்லாம் பொது மன்னிப்பு.. அப் பாவி முஸ்லிம்களுக்கு? விடியல் எப்போது? விடுதலை எப்போது?

முஸ்லிம் சமுதாயமே, இளை ஞர் பட்டாளமே! நீ வீதியில் இறங் கிப் போராடினால்தான் ஒரு விடி யலை நோக்கி, விடுதலையை நோக்கி பயணிக்க முடியும்.

7 ஆண்டுகளுக்கு மேல் சிறை யில் வாடும் கைதிகளை விடு விக்க கோரி விடுதலை முழக்க மிட புறப்படு...

முஸ்லிம்களின் சொத்தாகிய வக்ஃபு நிலங்கள் அநாதையாக பரா மரிப்பின்றி திடீர் கோவில்களுக் கும், பெரும் பண முதலைகளுக்கும் இரையாகிக் கொண்டிருக்கின்றன. இதில் முஸ்லிம்களுக்கும் பங் குண்டு என்பதுதான் வேதனை!

பொதுச் சொத்தில் ஒரு சாதாரண போர்வையை மோசடி செய்ததற்காக போர்க்களத் தில் உயிர் நீத்த உயிர் தியாகியை நரகவாதி என்றார்கள் நபிகள் நாயகம்.

1 லட்சம் ஏக்கர் வக்ஃபு நிலம் தமிழ் நாட்டில் மோச டியும், 2 லட்சம் கோடி கர்நாடகாவிலும், எல்லா வற்றையும் மீறி ஆந்திரா அரசாங்கமோ ஹைதரா பாத் பேகம்பேட்டில் உள்ள வக்ஃபு நிலத்தில் விமான நிலையத்தையே கட்டி விட்ட தென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

தன் நாட்டுக்குள் அந்நியர் நுழைந்த போது விழிக்கவி ல்லை, அவன் நிலம் வாங்கியபோதும் வருந்தவில்லை; எல்லாவற்றையும் தாண்டி தன்னையே தன் நாட்டை விட்டு துரத்தியபோதுதான் நாட்டை இழந்ததையே பாலஸ்தீன முஸ்லிம்கள் உணர்ந்தார்கள், இதே நிலை நமக்கு வேண்டுமா?

நமது நிலம் நமக்கு பயன்பட போராடுவோம் ஊழல் பெருச்சாளி கள் தண்டிக்கப்பட களமிறங்குவோம்.

ஆக்கிரமிக்கப்பட்ட வக்ஃபு நிலங்களை முஸ்லிம்களிடம் ஒப்படைக்கக்கோரி உரிமைக்குரல் எழுப்ப வா...

நாடு பார்க்க, பாதுகாப்பு படை பார்க்க, இடிக்கப்பட்டது இந்நாட்டின் ஒரு இணையில்லா சின்னம் அது இடிக்கப்பட்டவுடன் அதுவே ஆனது இந்தியாவின் அவமானச் சின்னம்.

நம் இல்லம் தகர்க்கப்பட்டால் கத்துவோம்; கதருவோம்; கூக்குரலிடுவோம், அதுவே இறைவனின் இல்லம் என்றால் இறுதியில் உயிரை கொடுத்தாவது இறைவனின் இல்லத்தை மீட்க வேண்டியது நம் கடமை அல்லவா, கடமையை முடிக்க அலை கடலென திரண்டு வா..

பாபரி மஸ்ஜிதை முஸ்லிம்களிடம் ஒப்படைக்கக்கோருவோம், இழந்த இறை இல்லம் மீட்க இணைந்து குரல் கொடுப்போம், பாபரி நிலம் மீட்போம்...

வெள்ளையனுக்கு விசுவாசமாய் இருந்து,

நாட்டு மக்களுக்கு நம்பிக்கை துரோகமிழைத்து,

ஒதுங்கிவாழ்ந்த ஓநாய்களும், பதுங்கி வாழ்ந்த பச்சோந்திகளும்,

பட்டங்களிலும் பதவி பல்லக்குகளிலும் பவிசாய் அமர்ந்து பல்லிளிக்க,

அடிமைத்தளை அகற்ற அயராமல் உழைத்தவனும்,

விடுதலை போரில் வீர மரணம் அடைந்தவனும்,

இருட்டு அறையில் குருட்டுப் பூனை

இல்லாத ஒன்றை தேடுவதைப்போல

இரவின் வாயிலில் விடியலை எதிர்ப் பார்த்து,

ஓலை குடிசையில் ஒட்டிய வயிற்றுடன் இருக்கும்

மண்ணின் மைந்தர்களே!

இவ்விழி நிலை நீங்க, இழந்த நம் உரிமைகளை மீட்டெடுக்க வா..

பல கோரிக்கைகளை பல வகையில் முவைத்திருக்கிறோம், ஆனால் இப்போது பல கோரிக்கைகள் தமிழகத்தின் பல இடங்களில் வைப்போம்.

4 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து

* 7 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடுபவர்களை விடுவிக்கக் கோரி,

* ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்ஃபு நிலங்களை முஸ்லிம்களிடம் ஒப்படைக்கக் கோரி,

* பாபரி மஸ்ஜிதை முஸ்லிம்களிடம் ஒப்படைக்கக் கோரி,

* கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் மத்தியிலும் மாநிலத்திலும் சட்ட சிக்கலில்லாத தனி இடஒதுக்கீடு கோரி...

"நீதிகேட்டு நெடும் பயணம்' இது திண்ணமாக ஒரு சமுதாய கடமை,

தவற விடாதீர்கள்

- ஆலீம் ஆல் புஹாரி

Pin It