இந்தியா மீது எப்போதும் சீனாவுக்கு ஒரு கண் இருப்பது உலகளவில் தெரிந்த விஷயம். இந்தியாவின் சில பகுதிகளை சீனா ஆக்கிர மித்து கொண்டு தர மறுக்கிறது. அத்துடன் பாகிஸ்தா னுக்கு முழு ஆதரவு அளித்து இந்தியாவுக்கு எதிராக செயல்படுகிறது. போலி எலக்ட்ரானிக் பொருட்கள், விளையாட்டு பொருட்கள், குழந்தைகளுக்கான உணவு பொருட்களை கப்பல் கப்பலாக இந்தியாவுக்கு அனுப்பி இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் முயற்சிகளும் நடந்தன.

இந்நிலையில், இந்தியாவை பற்றி சீன மக்கள் என்ன நினைக்கின்றனர் என்று சமீபத்தில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில், சராசரியாக 4 பேரில் ஒருவர்தான் இந்தியாவை விரும்புகின்றனர் என்று தெரிய வந்துள்ளது. இது சீன மொத்த மக்கள் தொகையில் 25 சதவீதத்துக்கும் குறைவு.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனை சேர்ந்த பீயு ஆராய்ச்சி நிறுவனம், சமீபத்தில் சீனர்களிடம் கருத்து கணிப்பு நடத்தி உள்ளது. அதில், இந்தியாவைவிட பாகிஸ்தான் மீது தான் சீன மக்களுக்கு விருப்பம் அதிகம் உள்ளது.

4 சீனர்களில் ஒருவர்தான் இந்தியாவை விரும்புகிறார். இரு நாட்டு மக்களிடையே உள்ள உறவை மேம்படுத்த இந்திய அரசு போதிய முயற்சி மேற்கொள்ளாததே இதற்கு காரணம். இதேபோல் சீனா மீது இந்தியர்களுக்கும் விருப்பம் குறைவாகவே உள்ளது.  இருநாட்டு உறவை மேம்படுத்த சீனாவில் பல் வேறு கலாசார நிகழ்ச்சிகளை இந்திய அரசு நடத்துகிறது. ஆனால், குறைந்த எண்ணிக்கையிலேயே அந்த நிகழ்ச்சிகளில் சீனர்கள் பங்கேற்கின்றனர்.

இந்திய நிகழ்ச்சிகள் பற்றிய பிரச் சாரத்தில் குறைகள், டிக்கெட் வினி யோகத்தில் பாரபட்சம், இலவச பாஸ் வழங்குவதில் கெடுபிடி போன்ற காரணங்களால், இந்திய கலாசார நிகழ்ச்சிகளுக்கு சீனாவில் வரவேற்பு இல்லை.

இதேபோல் இந்திய தொழில் துறையினர் சீனாவில் நடத்தும் கண் காட்சிகள், மாநாடுகளிலும் சீனாவை சேர்ந்த சிறிய நிறுவன பிரதிநிதிகளே பங்கேற்கின்றனர். பெரிய பெரிய நிறுவனங்களை சேர்ந்த அதிபர்கள் பங்கேற்பதில்லை.

சீனாவின் பொருளாதார வளர்ச்சி இந்தியாவுக்கு பாதகமான விஷயம் என்று நகர்ப்புறங்களில் வசிக்கும் 53 சதவீத இந்தியர்கள் நம்புகின்றனர். நல்லது என்று 23 சதவீத இந்தி யர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், 31 சதவீத சீனர்கள், பாகிஸ் தானை விரும்புகின்றனர்.

அதேபோல், தீவிரவாத ஒழிப்பில் பாகிஸ்தான் எடுக்கும் நடவடிக்கைகளை சீன அரசு மீடியாக்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றன. இவ்வாறு கருத்து கணிப்பு ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது.

Pin It