சமீபத்தில் ஆந்திர மாநிலத்திலுள்ள சிறு பான்மை நிதிக் கழகத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருந்தது வெளிச்சத்திற்கு வந்த தும் அனைத்து சிறுபான்மை நிறுவனங்களும் சிறு பான்மை நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், ஆந்திர மாநில வக்ஃபு வாரியத் தின் விசாரணை அதிகாரி லஞ்சம் வாங்கி கைதாகி யுள்ளார். அவரை ஆந்திர லஞ்ச ஒழிப்புத்துறை கையும் களவுமாக பிடித்திருக்கிறது.

ஆந்திராவின் மஹபூப் நகர் மாவட்டத்திற்கு உட்பட்ட மனுப ஹாத் மண்டலத்தில் அமைந் துள்ள ஜலாபூரில் இருக்கும் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜமா மஸ்ஜித்திற்கு சொந்தமாக 137 ஏக்கர் நிலம் இருந்தது. இதில் தற்போது வெறும் 40 ஏக்கர்தான் உள்ளது. 99 ஏக்கர்கள் ஆக்கிரமிப் புக்குள்ளாகி மோசடி செய்யப்பட் டுள்ளதோடு, தற்போது மீதமிருக் கும் 40 ஏக்கரும் அப்பகுதி இந்து மற்றும் முஸ்லிம் சமூகத்தினரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள் ளது.

இந்த ஜமா மஸ்ஜித்தின் முத்த வல்லியான சையத் லால் என்பவ ரிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற வக்ஃபு வாரிய விசாரணை அதிகாரியான ஷுஜாவுத்தீனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்ததும், தான் லஞ்சம் வாங்கி யதை அவர் ஒப்புக் கொண்டுள் ளார்.

ஹைதராபாத் நம்பள்ளியி லுள்ள கிராண்ட் பிளாசா ஹோட்டலில் இருந்த ஷுஜாவுத் தீனை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கைது செய்ததும் அவர்களிடம், சையது லால் ஜமா மஸ்ஜிதின் முத்தவல்லியாக தொடர்ந்து செயல்பட அவருக்கு சாதகமான ரிப்போர்ட்டை வக்ஃபு வாரியத் திற்கு கொடுக்கவும், ஜமா மஸ் ஜித் சொத்துகளில் ஒரு பகுதியை அவருக்கு தாரை வார்க்கவும் தான் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு வாங்கியதாகவும் ஒப்புக் கொண்டுள்ளார் ஷுஜாவுத்தீன்.

ஷுஜாவுத்தீன் அணிந்திருந்த குர்தாவின் இடதுபுற பாக்கெட் டிலிருந்து 10 ஆயிரம் ரூபாயை எடுத்த அதிகாரிகள் அவரது விர ல்களை கெமிக்கல் டெஸ்டுக்கு உட்படுத்தி உறுதிபடுத்தியுள்ள னர்.

2010 பிப்ரவரி 16ம் தேதி முத்த வல்லியாக நியமனம் செய்யப்பட் டிருக்கிறார் சையத் லால். இவர் முத்தவல்லியாக நியமிக்கப்பட்ட பின் அந்த மஸ்ஜிதின் சொத்து களை பாதுகாக்கும் முயற்சிகளை எடுத்ததோடு, அந்த சொத்துகள் எவரது பெயருக்கும் மாற்றம் செய்ய படக் கூடாது என்பதிலும் குறியாக இருந்திருக்கிறார்.

ஜமா மஸ்ஜிதின் முத்தவல்லி பதவிக்கு போட்டியிட்ட சையத் பாபு என்பவர் வக்ஃபு வாரியத்தில் ஜமா மஸ்ஜித் சொத்துக்கள் தொடர்பாக புகார் அளிக்க... இந் தப் பிரச்சினையை விசாரிப்பதாக ஷுஜாவுத்தீனை விசாரணை அதி காரியாக நியமித்தது வக்ஃபு வாரியம்.

இந்நிலையில் சையது பாபு தரப்பிலிருந்து 25 ஆயிரம் ரூபாயை விசாரணைத் துவக்கிய அன்றைய தினமே லஞ்சமாக பெற்றுக் கொண்டு இதற்காக மஸ்ஜிதின் சொத்தில் 58 ஏக்கரை சையத் பாபு தரப்பினர் பெய ருக்கு மாற்றம் செய்திருக்கிறார் ஷுஜாவுத்தீன்.

பிறகு, சில தினங்கள் கழித்து சையத் லாலுக்கு போன் செய்து, “சையத் பாபு தரப்பிற்கு 58 ஏக்கர் நிலம் மாற்றம் செய்து கொடுக்கப் பட்டுள்ளது. உங்கள் பெயருக்கும் நிலத்தில் குறிப்பிட்ட அளவு மாற்றம் செய்து தருகிறேன். இதற்காக உங்கள் வீட்டிற்கே வந்து பிறகு சந்திக்கிறேன்...'' என்று பேசியுள்ளார் ஷுஜாவுத் தீன்.

இந்த விஷயத்தை வக்ஃபு வாரி யத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற சையது லால், வக்ஃபு போர்டின் திட்டப்படி - தான் முத்தவல்லியாக தொடர வேண் டும் என்றும், நிலத்தில் ஒரு பகு தியை தன் பெயருக்கு மாற்றித் தர வேண்டும் என்றும் ஷுஜாவுத்தீ னிடம் நைச்சியமாக பேசியுள் ளார் சையது லால்.

அப்போதுதான், நம்பள்ளியி லுள்ள வக்ஃபு வாரியத்திற்கு அரு கில் உள்ள கிராண்ட் பிளாசா ஹோட்டலுக்கு சையது லாலை வரச் சொல்லியிருக்கிறார் ஷுஜா வுத்தீன். அங்கு அவர் லஞ்சம் பெற்ற சில நிமிடங்களில் உள்ளே சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை ஷுஜாவுத்தீனை அப்படியே அலாக்காகத் தூக்கியது.

முஸ்லிம் சமுதாயத்திற்கு சொந்தமான வக்ஃபு சொத்துகளை அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும் ஆக்கிரமித்துள்ளனர் என்று முஸ்லிம் சமுதாயம் கொந்தளிக்கிறது. ஆனால் அவர்கள் ஆக்கிரமிப்பு செய்ய ஷுஜாவுத்தீன் போன்ற வக்ஃபு அதிகாரிகள்தான் உறு துணை என்பது மன்னிக்க முடியாதது.

- அபு

Pin It