அண்மையில் சென்னை விமான நிலையத்தில் துபாய் செல்வதற்காக காத்திருந்த அமிர் தாஹா என்ற முஸ்லிம் பயணி கைது செய்யப்பட்டு காவல்துறையினரால் சிறை வைக் கப்பட்டுள்ளார்.

டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த மத்திய அமைச்சர் சிதம்பரத்தை செல்போனில் படம் பிடித்ததற்காக தாஹாவை கைது செய்த தாக காவல்துறையினர் தெரிவித் துள்ளனர்.

செல்போனில் படம் பிடிப்பது குற்றச் செயலா? பொது வாழ்வில் இருக்கும் பிரமுகர்களை புகைப் படம் எடுப்பது அனைவரின் வழக்கம்தானே? விமான நிலையத்திற்கு வெளியே படம் பிடிப்பது அன்றாட நிகழ்வுதானே?

சில வாரங்களுக்கு முன் விஜயகாந்த் மதுரை செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த போது நிருபர்கள் அவரை விரட்டி விரட்டி படம் பிடித்தார்களே அப்போது ஏன் காவல்துறை அவர்களை கைது செய்யவில்லை?

ஏனென்றால் அமீர் ஒரு முஸ்லிம். அதனால் ஒரு புகைப்படம் எடுத்ததற்காக தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்டு விட்டார். தமிழக காவல்துறையினர் இதில் சாமர்த்தியசாலிகள்.

சில வாரங்களுக்கு முன் அதிராம்பட்டிணத்தைச் சேர்ந்த தமீன் அன்சாரியை கியூ பிரிவு போலீஸ் கைது செய்தது. ஊடகங்கள் பரபரப்பாக செய்திகளை வெளியிட்டன. வெலிங்டன் பார்க்கை படம் பிடித்து பாகிஸ்தானுக்கு அனுப்பியதாக கியூ பிரிவு குற்றம் சாட்டியது. ஆனால் அந்தப் படங்கள் எல்லாமே கூகுள் இணைய தளத்தில் இருப்பதாக விசாரணைக்கு சென்ற உண்மை அறியும் குழு வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டது.

ஊடகங்கள் தங்கள் கற்பனைகளின் மூலம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கின்ற னர். காவல்துறை பொய் வழக்குகளின் மூலம் முஸ்லிம்களை சொல்லொண்ணா துயரத்திற்கு உள்ளாக்குகின்றது. திரைப்படங்களோ முஸ்லிம்களை வில்லன்களாகவே மாற்றி விட்டன.

திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தின் பெயர்கள் முஸ்லிம்களின் பெயர்களாக இருக் கும். கூடுதலாக தாடி, தொப்பி போன்ற அடையா ளங்கள் காட்டப்படும். இவைகளை காட்ட முடியா விட்டால் வில்லன் வேடத்தில் நடிப்பவர்கள் முஸ்லிம் பெயர்களை தாங்கி இருப்பார்கள்.

முஸ்லிம்களை தேச விரோதிகளாக காட்டி தங்களை தேச பக்தர்களாக காட்டிக் கொள்ளும் போக்கு திரைப்படங்களில் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது.

கமலஹாசன், அர்ஜுன், விஜயகாந்த் ஆகி யோர் வரிசையில் சமீபத்திய வரவு விஜய். சில நாட்களுக்கு முன் ரிலீஸான விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டும் காட்சிகள் வசூலுக்காக புகுத்தப்பட்டன.

"இம்' என்றால் சிறைவாசம். "ஏன்' என்றால் வனவாசம் என்று சொல்வார்கள். அதைப்போல முஸ்லிம்கள் படம் பிடித்தால் தீவிரவாதி. படம் வைத்திருந்தால் பயங்கரவாதி. திரைப்படம் எடுக் கப்பட்டால் அதில் முஸ்லிம்கள் தேச விரோதிகள்.

இந்த அவல நிலையை பொறுக்க முடியாத சமுதாயம் துப்பாக்கி திரைப்படக் குழுவினருக்கு எதிராக களமிறங்கியது. முஸ்லிம்களின் ஆவேசத்தைக் கண்டு கலங்கிய துப்பாக்கி திரைப் படக் குழு ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க ஒப்புக் கொண்டது.

இது முஸ்லிம்களுக்கு கிடைத்த பெரும் வெற்றி யாகும். துப்பாக்கி படக் குழுவினருக்கு ஏற்பட்ட நிலை கண்டு விஸ்வரூபம் படத்தை எடுத்து வரும் கமலஹாசன் மிரண்டு போயுள்ளார். இது முஸ் லிம்களின் ஒற்றுமையினால் ஏற்படும் பலனை வெளிக்காட்டியுள்ளது.

முஸ்லிம்கள் மீது அவதூறுகள் சுமத்தினால் என்ன நிலை ஏற்படும் என்பதை திரைப்பட உலகம் புரிந்து கொண்டு விட்டது. இனி அரசுகளுக்கு புரிய வைப்பதுதான் நமது வேலை!

Pin It