இஸ்லாமிய நாடுகளுக்கு இஸ்லாமிய அமைப்பு கடிதம்!

மியான்மரில் ரொஹிங்கியா முஸ்லிம்கள் மீது நடைபெற்று வரும் பேரினவாத தாக் குதல்கள், அரசாங்க அடக்குமுறைகள் குறித்து உலக நாடுகள் அமைதியான பார்வையாளர் களாகவும், ஐக்கிய நாடுகள் ஒப்புக்கு அறிக்கைகளை விட்டுக் கொண்டும் இருக்கும் நிலையில், சர்வதேச சமு தாயத்தால் கைவிடப்பட்டவர்களாக... உலகிலேயே உத விகள் நீட்டப்படாத பாவப்பட்ட மக்களாக, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அது எந்நேரமும் போய் விடும் என்கிற பீதியில் வாழ்நாளை நகர்த்திக் கொண் டிருக்கின்றனர் ரொஹிங்கியா முஸ்லிம்கள்.

இந்தக் கொடுமைகளையெல் லாம் தாண்டிய பெருங்கொடுமை யாகவே உணர முடிகிறது அரபு உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் இந்த விவகாரத்தில் காட்டும் அசாத்திய மவுனம்!

இஸ்லாமிய நாடுகளாவது ரொஹிங்கியா முஸ்லிம்களின் பிரச்சினையைத் தீர்க்க சர்வதேச அரங்கில் உரிய அழுத்தங்களைக் கொடுக்க வரலாமே என்கிற எண் ணத்தில் இந்த நாடுகளுக்கு கடிதங் களை அனுப்பியிருக்கிறது பிரபல இஸ்லாமிய அமைப்பான ஜமி யத்தே உலமாயே ஹிந்த்.

இந்தியாவிலுள்ள அந்தந்த நாடு களில் தூதரங்கள் வழியாக அனுப் பப்பட்டிருக்கும் இக்கடிதத்தில், ரொஹிங்கியா முஸ்லிம்கள் மீதான மியான்மர் அரசின் தாக்கு தல்களை முடிவுக்கு கொண்டு வர வும், ரொஹிங்கியா முஸ்லிம்க ளின் சொத்துகள், உரிமைகள், உயிர் கள் பாதுகாக்கப்படவும் உரிய அழுத்தங்களை கொடுக்க வேண் டும் என்று குறிப்பிடப்பட்டுள் ளது.

இது குறித்து பேசும் ஜம்மியத் உலமாயே ஹிந்த் அமைப்பின் பொதுச் செயலாளரும், மாநிலங்க ளவை முன்னாள் உறுப்பினரு மான மவ்லானா மஹ்மூத் மதனி, “ரொஹிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதல் குறித்து சர்வ தேச விசாரணை வேண்டும்; மியான்மரில் மனிதாபிமான உதவி குழுவினரும் சர்வதேச மீடி யாக்களும் சுதந்திரமாக இயங்க அனுமதிக்க வேண்டும்...'' என்றும் கோரிக்கை வைத்துள்ளோம்...'' என்கிறார்.

ஜமியத் சார்பாக முஸ்லிம் நாடு களுக்கு எழுதப்பட்டுள்ள கடிதத் தில், மியான்மர் குடியுரிமைச் சட்டம் 1982ன்படி ரொஹிங்கியா முஸ்லிம்களுக்கு மறுக்கப்பட்ட குடியுரிமையை மீண்டும் வழங்க வேண்டும். குடியுரிமை மறுப்பது ஐக்கிய நாடுகள் பிரகடனத்திற் கும், ஐக்கிய நாடுகள் சபையால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் சர்வ தேச மனித உரிமை நிலைப்பாட் டிற்கும் முற்றிலும் எதிரானதா கும்...'' என்று குறிப்பிடப்பட்டுள் ளது.

இது குறித்து, “கடந்த அக்டோ பர் மாதத்தில் மட்டுமே மேற்கு மியான்மரிலிருந்து சுமார் 22 ஆயி ரம் முஸ்லிம்கள் வன்முறை கார ணமாக இடம் பெயர்ந்துள்ளனர் என்றும், முன்னதாக ஜூன் மாதத்தில் நிகழ்ந்த வன்முறையின் போது, 75 ஆயிரம் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளி யேறியுள்ளதாகவும் ஐக்கிய நாடு கள் சபையின் அறிக்கையே கூறுகி றது...'' என்று சுட்டிக் காட் டும் மஹ்மூது மசூத்,

“இந்த அசாதாரண நிகழ்வுகள் மெல்ல நடைபெறும் இனப் படு கொலை. இதன் குறிக்கோள் இன அழிப்பு அல்லது ரொஹிங்கியா முஸ்லிம்களை வங்க தேசத்திற் குள் விரட்டியடிப்பதுதான். ஐக் கிய நாடுகள் சபையே அது வெளி யிட்டுள்ள அறிக்கையில், "இந்தப் பூமிப் பந்தில் நாடற்ற நிலையில் (போக்கற்ற வகையில்) துன்பத் திற்கு அதிகம் ஆளாகியுள்ள சிறு பான்மையினராக ரொஹிங்கியா சமூகத்தவர்கள் இருக்கிறார்கள்' என்று சுட்டிக் காட்டியுள்ளது...'' என்றும் கூறுகிறார்.

மியான்மரின் இரும்புப் பெண் மணி என்றும், ஜனநாயகத்தின் முகவரி என்றும் அடையாளப்ப டுத்தப்படுபவரும் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றவருமான ஆங் சாங் சூகி, இந்த விவகாரத்தில் ஒரு நிலைப்பாட்டை எடுக்காமல் மவுனம் காத்து வந்தார்! இதுவரை கடந்த வாரம் தனது மவுனத்தை கலைத்த அவர், “சிறுபான்மை ரொஹிங்கியா சமூகம் எதிர் கொண்டு வரும் இன்னல்கள் குறித்து என்னால் எந்த நிலைப் பாட்டையும் எடுக்க முடியாது.

இந்தப் பிரச்சினைக்கு மூல கார ணம் என்ன என்று ஆராய்வதற்கு முன் ரொஹிங்கியாக்களுக்கு ஆத ரவாக நான் கருத்து கூறினால் எனக்கு இருக்கிற தார்மீக தலை மைத்துவத்தை தான் துஷ்பிரயோ கம் செய்ததாக ஆகி விடும். ரொஹிங்கியாக்களும், பௌத்தர் களும் இந்த வன்முறையில் பாதி க்கப்பட்டிருக்கின்றனர். அத னால் ஒரு சாராரின் பக்கம் பேசுவது சரி யாக இருக்காது...'' என்று பி.பி.சி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித் துள்ளார்.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஒரு பெண்மணியின் வாயி லிருந்து இப்படிப்பட்ட வார்த்தை கள் வருவது வியப்பாக உள்ளது. சூகியின் இந்த கருத்து பௌத்த இனவெறியர்களுக்கு மகிழ்ச்சிய ளிக்கும் செய்தியாகத்தான் இருக் கிறது. ஐக்கிய நாடுகள் சபையே ரொஹிங்கியாக்கள் அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டு கொடு மைக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்ற னர் என்று அறிக்கை வெளியிட்ட பின்பும், இந்தப் பிரச்சினைக்கு மூல காரணம் எது என்று இன் னும் ஆராயவில்லை என்று கூறு வது சூகிக்கு பொருத்தமானதல்ல.

மியான்மரில் குடியுரிமை மறுக் கப்படிருப்பதன் காரணமாக வங்க தேசம், இந்தியா போன்ற அண்டை நாடுகளுக்கு சென்று அகதிகள் என்ற அந்தஸ்தில் வாழ்வதன் மூலம் மனிதாபிமான உதவிகளா வது பெற முடியும். இந்த கொடூர மான இனவாதத் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம் என்று மேற்கண்ட நாடுகளுக்கு ஆயிரக்க ணக்கில் இடம் பெயர்ந்த ரொஹி ங்கியா முஸ்லிம்களுக்கு மனிதாபி மான உதவிகள் கூட மறுக்கப் பட்டு, சிறைச்சாலைகளில் அடை க்கப்பட்டுள்ளனர்.

இந்தியா மற்றும் வங்கதேசத் தில் மட்டுமல்ல... இந்தோனே ஷியா, தாய்லாந்து, இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளுக்கு இடம் பெயர்ந்தவர்களும் சிறைச் சாலைகளில் அடைக்கப்படுகிறார் கள்.

இச்சூழலில், உலக முஸ்லிம் நாடுகள் ரொஹிங்கியாக்கள் விஷயத்தில் உரிய அழுத்தம் தர வேண்டும் என்று ஜமியத்தே உல மாயே ஹிந்த் கடிதம் எழுதியிருப் பது வரவேற்கத்தக்கது என்றா லும்... முஸ்லிம் நாடுகள் இதற்கு எப்படி ரீஆக்ட் செய்யப் போகி றது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

“ரொஹிங்கியாக்கள் இடம் பெயர்ந்து குடியேறியுள்ள நாடு களில் அம்மக்களை மியான்மர் குடிமக்களாகவே ஒப்புக் கொண்டு ஐக்கிய நாடுகள் சபை மூலம் பாதுகாப்பு வழங்கப்பட வேண் டும். அதோடு, மியான்மர் அரசு தனது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள ஐ.நா. காலக்கெடுவை விதிக்க வேண்டும். இதற்கு மியான் மர் கீழ்படிய மறுத்தால் மியான் மர் மீது இராணுவ நடவடிக்கை யும், பொருளாதாரத் தடையும் விதிக்க வேண்டி வரும் என ஐ.நா. எச்சரிக்க வேண்டும். இதற்காக ஐ.நா.விற்கு முஸ்லிம் நாடுகள் அழு த்தம் தர வேண்டும்...'' என்கிறார் மஹ்மூத் மசூத்.

என்ன செய்யப் போகின்றன முஸ்லிம் நாடுகள்?

- அபு

Pin It