மறைந்த சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரே தனது கட்சியை வன்முறைப் பாதையிலேயே நடத்தி வந்தார். அவர் மரணமடைந் தபோது, உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியும், இந்திய பிரஸ் கவுன்சிலின் தலைவருமான மார்க்கண்டேய கட்சு சிவசேனா தலைவர் பால் தாக்கரே குறித்து சொன்ன கருத்து ஆழமாக சிந்திக்கத்தக் கது.

“இறந்தவர்களைப் பற்றி நல்லவிதமாக மட்டுமே பேச வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் பால் தாக்கரே விஷயத்தில் அப்படிச் சொல்ல என் னால் முடியவில்லை. அவருக்கு என்னால் அஞ்சலி செலுத்த முடியாது. எனக்கு நாட்டு நலனே முக் கியம்...'' என்று கருத்து தெரிவித்திருந்தார் மார்க் கண்டேய கட்சு.

பால் தாக்கரேவின் மரணத்தையொட்டி அரசியல் பிரபலங்களும் சினிமா நட்சத்திரங்களும், கிரிக்கெட் வீரர்களும் இன்னும் தொழிலதிபர்கள் உள்பட பலர் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த நிலையில் நீதிபதி கட்சுவின் கருத்து அரசியல் தலைவர்களையே ஒரு கணம் அதிர்ச்சிக்குள்ளாக் கியது.

கட்சுவின் கருத்து இந்தியாவின் மனசாட்சி என்றுகூட சொல்லலாம்.

ஒருவர் மரணித்த பின்பும் அவரைப் பற்றி நல்ல தாக ஒரு வார்த்தைகள் கூட பேச முடியாது என் றால் மரணித்தவர் வாழ்ந்த நாளில் அவரது நடவ டிக்கைகள் மக்கள் விரோதமயமாக இருந்தது என் பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

ஆம்! வன்முறையாளராக மக்கள் விரோத அரசி யல்வாதியாகத்தான் வலம் வந்தார் பால் தாக்கரே. ஹிட்லரை நேசித்தவர் பால் தாக்கரே. பிறகு அவர் எப்படி இருப்பார்?

தேச விரோத மற்றும் அரசியல் அமைப்பு சட்ட விரோத கோட்பாடுகளை தாக்கரே கொண்டிருந் தார். இதன் அடிப்படையில்தான் அவரது வன் முறை அரசியல் சுழன்றது.

பால் தாக்கரேயின் மறைவுக்குப் பின் அக்கட்சிக் குத் தலைமையேற்ற அவரது மகன் உத்தவ் தாக் கரே தந்தை செய்த தவறுகளிலிருந்து விடுபட்டு சிவசேனா கட்சியை மற்ற அரசியல் கட்சிகளைப் போல் நடத்த வேண்டும் என்ற சிந்தனையற்றவராக அதே வன்முறைப் பாதையில் பயணித்து வருகி றார்.

அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராகவே அவரது நடவடிக்கைகளும் இருக்கின்றன. வன் முறை அரசியலுக்கு இன்னும் உரம் சேர்த்தபடி யேதான் இருக்கிறார் உத்தவ் தாக்கரே.

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி என்ற அமைப்பின் தலைவரான யாசின் மாலிக் சமீபத் தில் பாகிஸ்தானுக்குச் சென்று சில தினங்களுக்கு முன் இந்தியாவிற்குத் திரும்பினார். இந்தியா திரும் பிய யாசின் மாலிக்கை விமான நிலையத்தில் தாக்க முயற்சித்துள்ளனர் சிவசேனா கட்சியினர்.

பாகிஸ்தானுக்குச் சென்றிருந்த யாசின் மாலிக் அங்கு அப்சல் குருவின் தூக்குத் தண்டனையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தார். மாலிக் கின் இந்த ஆர்ப்பாட்டம் இந்திய அரசுக்கே ஆட் சேபனை இல்லை என்கிறபோது, இது குறித்து மத்திய அரசு எந்த வித விமர்சனமும் செய்யாத போது சிவசேனாவினர் தாக்குதல் நடத்த முயற்சித் தது வகுப்புவாத வன்முறையாகும்.

இதேபோல, கடந்த டிசம்பர் மாதம் சிவசேனா வின் முன்னாள் தலைவர் பால் தாக்கரேவுக்காக சிவாஜி பூங்காவில் மணிமண்டபம் கட்ட அனுமதி தர முடியாது என்று மறுப்பு தெரிவித்ததற்காக தெற்கு மும்பையிலுள்ள வர்லியில் அமைந்துள்ள மாநகராட்சி வார்டு அலுவலகத்தை சிவசேனாவி னர் தாக்கி துவம்சம் செய்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம், பாகிஸ்தானிய கிரிக் கெட் வீரர்கள் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட் போட்டியில் பங்கெடுக்க ஆதரவு வழங் கிய தற்காக இந்தி திரைப்பட நடிகர் ஷாருக்கான் மீது தாக்குதல் நடத்தியது சேனா படை.

“ஷாருக்கான் பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரர்கள் மீது ஆர்வம் காட்டுவாரென்றால் அவர் லாகூர் சென்று அங்கு கிரிக்கெட் விளையாடட்டும். இந்தி யாவில் விளையாடக் கூடாது...'' என்று சிவசேனா கட்சியின் ராஜ்ஜிய சபா எம்.பி.யான சஞ்சய் ரவுத் பாராளுமன்றத்தில் பகிரங்கமாக பேசியிருக்கிறார்.

சேனா தொண்டர்கள் செயல்களில் காட்டும் வன்முறையை பாராளுமன்றத்தில் வார்த்தைகளில் காட்டியுள்ளார் சஞ்சய் ராவத்.

இந்தியாவில் ஷாருக்கான் கிரிக்கெட் விளையா டக் கூடாது என்று சொல்வதற்கு உரிமை இல்லாத சஞ்சய் ராவத்தின் பேச்சு அரசியல் அமைப்பு சட் டத்திற்கு எதிரானது என்று பாராளுமன்றம் அவரை கண்டிக்கவும் இல்லை.

அவ்வளவு ஏன்? பால் தாக்கரே மும்பை மோட்டோ ஸ்ரீ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தபோது அவரைப் பார்த்து நலம் விசா ரிக்க அனைவருக்கும் முன்னதாக முண்டியடித்துக் கொண்டு ஓடிய அமிதாப்பச்சனையே தாக்கியவர் கள்தான் சிவசேனா குண்டர்கள்.

இதற்கு காரணம், தாக்கரேயின் உடல்நிலை மோசமடைந்த தகவல் பரவியதுதான். தங்கள் தலைவரின் உடல் நலம் மோசமடைந்தால் கூட எதிர்ப்படும் நபர்கள் மீதெல்லாம் தாக்குதல் நடத் தும் அளவிற்கு காட்டுமிராண்டிகளாக தொண்டர் கள் உருவாக்கப்பட்டதற்கு சிவசேனா தலைவர்க ளின் வன்முறை நாட்டம்தான் காரணம்.

ஆகவேதான் எதற்கெடுத்தாலும் வன்முறையில் ஈடுபட்டு மக்கள் விரோதக் காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர் சிவசேனா தொண்டர்கள்.

சட்டத்தின் ஆட்சிக்கு கட்டுப்படாத சிவசேனா கட்சியினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகள் முன் வர வேண்டும் அல் லது அந்த கட்சியையே தடை செய்ய வேண்டும் அல்லது அரசியல் சட்டத்திற்கு கட்டுப்படாத சிவ சேனாவை குறைந்தபட்சம் தேர்தலில் போட்டியி டாதவாறு சில காலத்திற்காவது தடை செய்ய வேண்டும்.

இதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்றால் சிவசேனாவை இந்திய அரசியல் சட்டம் கட்டுப்படுத்தாது என்பதையாவது மத்திய அரசு அறிவித்து விட்டுப் போகட்டும்.

Pin It