எதிர்ப்பில் பத்திரிகையாளர்கள்!

அண்மையில் டெல்லியி லுள்ள இஸ்ரேல் தூதரகத் தின் அருகில் நடந்த கார் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து டெல்லி காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நேரத்தில் இஸ்ரேலிய தூதரக குண்டு வெடிப்பில் இரானுக்குத் தொடர்பு இருக்கிறது என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரி கள் சந்தேகத்தை வெளியிட்டனர்.

ஆனால் இந்த குண்டு வெடிப்புச் சம்ப வத்திற்கு இரானிய தொடர்பு இல்லை என்று ஆரம்பத்தில் சொல்லி வந்த இந்தியா, இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் சையத் முஹ்மது காசிமி என்பவரை காவல்துறை கைது செய்தபின் தன் நிலையை மாற்றிக் கொண் டிருக்கிறது.

காசிமி பிரபலமான உருது பத்திரிகையா ளர். இவர் தூர்தர்ஷன் உள்ளிட்ட பல்வேறு செய்தி நிறுவனங்களில் பணியாற்றியவர். வெளிநாட்டு செய்தி நிறுவனங்களுக்கு செய்திகளை தொகுத்து வழங்கி வந்தவர். இந்த வகையில் இரானின் பிரபல செய்தி நிறுவனமான ஐதசஅவுக்கும் செய்திகளை வழங்கி வந்திருக்கிறார்.

இஸ்ரேலிய அராஜகங்கள் குறித்து தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார் காசிமி. இதனால் இவரை குறி வைத்த இஸ்ரேலிய உளவு நிறுவனங்கள் சமயம் பார்த்து இந்த வழக்கில் சிக்க வைத்துள்ளனர் என்கிறார் கள் டெல்லியின் பத்திரிகையாளர்கள்.

இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகில் இஸ் ரேலியத் தூதர் சென்றகார் மீது வெடி குண்டு தாக்குதல் நடத்தியவர்களுடன் காசிமிக்குத் தொடர்பு இருக்கிறது. குண்டு வெடிப்புக்கு காசிமி உதவியிருக்கிறார் என்பதுதான் டெல்லி போலீஸ் கூறும் குற்றச்சாட்டு.

கடந்த மார்ச் 6ம் தேதி சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட காசி மியை டெல்லி பெருநகர முதன்மை நீதிமன் றத்தில் ஆஜர்படுத்திய டெல்லி ஸ்பெஷல் செல் போலீஸ் மார்ச் 20ம் தேதிவரை காசி மியை கஸ்டடியில் எடுத்திருக்கிறது. ஆனால் இதுவரை காசிமியின் கைது குறித்து போதுமான ஆதாரங்களை அது சமர்ப்பிக்கவில்லை என்பது கவனத்திற்கு ரியது.

இஸ்ரேலிய உளவு அமைப்புகள் ஏனைய நாடுகளின் உளவு அமைப்புகளைப் போன் றது அல்ல. சியோனிசத்திற்கு எதிராக உல கில் எந்த மூலையில் கருத்துகள் எழுதப்பட் டாலும் அதனைத் தீவிரமாகக் கண்காணிக் கக் கூடியதுதான் இஸ்ரேலின் மொசாத் உள்ளிட்ட உளவு அமைப்புகள். இதற்கு உதாரணமாக பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந் தியா குறித்த ஒரு செய்தியை எடுத்துக் கொள்ளலாம்.

அண்மையில் இஸ்ரேலுக்கு எதிராக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருந்தது பாப்புலர் பிரண்ட். இந்த தீர்மானத்தைய டுத்து, டெல்லி இஸ்ரேல் தூதரக குண்டு வெடிப்பில் பாப்புலர் பிரண்ட் அமைப்புக் கும் இதில் தொடர்பு இருக்கலாம் என டெல்லியின் சில பத்திரிகைகள் எழுதின.

இந்திய பத்திரிகையாளர்கள் மத்தியில், ஊடகங்களில் இஸ்ரேல் செலுத்தும் ஆதிக் கம் அல்லது இந்திய ஊடகங்களில் சில இஸ்ரேலின் உளவு அமைப்புக்கு விலை போயிருப்பது இதன் மூலம் அம்பலமாகி றது.

பத்திரிகையாளர் காசிமி இரானிய செய்தி நிறுவனத்திற்கு செய்தி அளித்து வந்ததும், இஸ்ரேலுக்கு எதிராக எழுதி வந்ததும்தான் அவரது சந்தேகத்திற்குரிய கைதுக்கு காரணம் என்பதை, டெல்லி போலீஸ் காசிமியின் கைது தொடர்பாக எவ்வித ஆதாரங்களையும் சமர்பிக்கவில்லை என்பதிலிருந்தே விளங்க முடிகிறது.

கடந்த 12ம் தேதி இந்தியா கேட்டில் குழுமியிருந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்தி அடிப்படை உரிமைகளை மீறி ஜோடிக்கப் பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட காசிமியை விடுதலை செய்ய வேண்டும் என கோஷமிட்டதோடு, டெல்லி ஸ்பெஷல் செல் போலீûஸயும் கண்டித்தனர்.

இதில் டெல்லியின் பிரபல பத்திரிகையாளர்கள் பெருமளவில் பங்கு கொண்டு தங்களின் கண்டனங்களை பதிவு செய்துள் ளனர்.

முஸ்லிம்களை குறி வைத்து பொய்யான வழக்குகளில் கைது செய்யும் போக்கை டெல்லி ஸ்பெஷல் செல் போலீஸôர் தொடர்ந்து வழக்கமாக்கிக் கொண்டிருப் பதை அவர்கள் கைவிடவில்லை என்றால் மும்பை போலீûஸப் போலவே நீதிமன்றத் தின் தொடர் கண்டனங்களுக்கு அது ஆளா கும்.

இது டெல்லி போலீஸ் குறித்து நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அவப் பெயரை உருவாக்கும். இதை நோக்கித்தான் டெல்லி போலீஸ் செயல்பாடுகள் இருக்கின்றன.

- அபு

Pin It