ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் குற்றம்சாட்டப்பட்டிருந்த இந்துத்துவாவாதியான பாரத் மோகன் லால் ரத் தேஸ்வருக்கு கடந்த ஜூன் 1ம் தேதி பிணை வழங்கி உத்தரவிட்டிருக்கிறது நீதிமன்றம்.

மே 18, 2007ம் ஆண்டு மக்கா மஸ்ஜிதில் நடை பெற்ற குண்டு வெடிப்பில் சம்பவ இடத்திலேயே 15 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். குண்டு வெடிப்பை தொடர்ந்து முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையின்போது போலீஸôர் நடத்திய துப்பாக் கிச் சூட்டிலும் 5 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

இந்த வன்முறையில் 5க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கொல்லப்பட்டதாகவும் அரசாங் கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த குண்டு வெடிப்பிற்கு காரணம் இந்துத்துவாதான் என காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது. சுவாமி அசீமா னந்தா உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். காரர்கள் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.

அபினவ் பாரத் என்கிற இந் துத்துவா அமைப்புதான் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்புக்குக் காரணம் என்று மத்திய அரசு சொன்னது.

இந்த குண்டு வெடிப்பு சம்ப வத்தைத்தான் முக்கிய குற்றவாளி யான பாரத் மோகன்லால் ரத் தேஸ்வரை தேசிய புலனாய்வு நிறுவனமான ஐ.என்.ஏ. கைது செய்து விசாரணை நடத்தி வந் தது.

பாரத் மோகன் லாலை ரிமாண்டில் எடுத்து விசாரித்த (?!) தேசிய புலனாய்வு நிறுவனம், ரிமாண்ட் காலமான 180 நாட்கள் கடந்த பின்பும் பாரத் மீது குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யத் தவறி விட்டது என்று கூறி மோகன் லாலுக்கு பிணை வழங்கி உத்தர விட்டிருக்கிறது நீதிமன்றம்.

பத்தாயிரம் ரூபாய்க்கான இரண்டு ஷ்யூரிட்டி மற்றும் விசா ரணைக்கு அழைத்தால் எந்நேர மும் வருவதற்கான ஒப்புதலை பெற்று சொந்த ஜாமீனில் விடு வித்துள்ளது நீதிமன்றம்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஜெய்ப்பூரிலிருந்து ஹைத ராபாத்துக்கு கொண்டு வரப் பட்ட பாரத் மோகன் லால் சச்சன்குடா சிறையில் நீதிமன்றக் காவலின் கீழ் வைக்கப்பட்டார். மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப் புக்கு சதித் திட்டம் தீட்டினார் பாரத் மோகன் என்று குற்றம் சாட்டிய தேசிய புலனாய்வு நிறுவனம், நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகையையோ, வேறு ஏதே னும் அறிக்கையையோ பாரத் மோகன் லாலுக்கு எதிராக நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை.

முன்னதாக, மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு தொடர்பாக 7 பேர் மீது குற்றம் சாட்டியிருந்தது தேசிய புலனாய்வு நிறுவனம். இதில் ஆறு பேர் மீது குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்த புலனாய்வு நிறுவனம், ஏழாவது நபரான பாரத் மோகன் லால் மீது மட்டும் குற்றப் பத்திரி கையை தாக்கல் செய்யாமல் விட்டிருக்கிறது.

அஜ்மீர் தர்கா குண்டு வெடிப் புச் சம்பவத்திலும் சம்பந்தப்பட் டிருக்கும் பாரத் மோகன் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் பிணை கேட்டு மனு செய்திருக் கிறார். இது ஜூலை மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இங்கும் அவருக்கு ஜாமீன் கிடைக்கலாம்!

இந்நிலையில், பெங்களூரு தொடர் குண்டு வெடிப்பு சம்ப வத்தில் பொய்க் குற்றம் சாட்டப் பட்டு நீதிமன்றக் காவலில் சிறை யிலடைக்கப்பட்டிருக்கும் மதா னியின் வழக்கை பாரத் மோகன் லால் வழக்கோடு ஒப்பு நோக்க வேண்டியிருக்கிறது.

மதானிக்கு எதிராக பெங்க ளூரு காவல்துறை சொல்லும் குற்றச்சாட்டிற்கு இதுவரை அது எவ்வித ஆதாரமும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வில்லை. இருந்தும் மாற்றுத் திறனாளி யாகவும், நோயுற்ற நிலையிலும் உள்ள மதானிக்கு தொடர்ந்து ஜாமீன் மறுக்கப் பட்டு வருகிறது.

மதானி ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை நாடும் போதெல்லாம் காவல்துறை சார் பில் ஏதாவது காரணம் கூறி பிணை மறுக் கப்பட்டு வருகிறது. அதிகார வர்க்கம் அவரை சிறையிலேயே வைத்திருக்க நினைக்கிறது. மதானி நீதிமன்றக் காவ லில் விசாரணைக் கைதியாகத்தான் வைக்கப்பட்டிருக்கிறார். அதனால் பிணை மறுப்பதற்கு எவ்வித நியாயமும் இல்லை.

மதானி சிகிச்சைப் பெறுவதற்காகவா வது ஜாமீன் வழங்க - மனிதாபிமான அடிப் படையிலும் நீதிமன்றங்கள் தயாராக இல்லை.

பெங்களூரு நீதிமன்றத்தில் தொடர் ந்து ஜாமீன் மறுக்கப்பட்டதால் சிகிச்சை பெறுவதற்காக இடைக்கால ஜாமீன் கேட்டு கடந்த ஜனவரி மாதம் உச்ச நீதிமன் றத்தில் மனு செய்திருந் தார் மதானி.

ஜாமீன் தரக் கூடாது என்று கர்நாடக அரசின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆஜ ரான சீனியர் வழக்கறிஞர்களான எம்.என். கிருஷ்ண மணி, அனிதா ஷெனாய் ஆகிய இருவரும், “மதானி பல்வேறு வழக்குக ளில் சம்பந்தப்பட்டிருக்கிறார்; அவரை ஜாமீனில் விடுவது பாதுகாப்புக்கு அச்சு றுத்தல்...” என்று கூறி பிணைக்கு எதி ராக கடுமையாக வாதாடி பிணை கிடைக்க விடாமல் செய்து விட்டனர்.

மதானியின் வழக்கறிஞரான குமார், “ஒரு கால் ஊனமான நிலையில் உள்ள மதானி கடுமையான முதுகுத் தண்டு பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார். அவர் சட்டத்திற்கு அச்சுறுத்தலாக இருந்த தில்லை. கோவை குண்டு வெடிப்பு வழக் கில் ஒன்பதரை ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்து நிரபராதி என நீதிமன்றத் தால் விடுவிக்கப்பட்டவர்...” என்றெல் லாம் வாதங்களை வைத்தும், நீதிபதி மனி தாபிமான அடிப்படையில் அல்ல... சட்ட நெறிமுறைகளின் அடிப்படையிலும் மதா னியின் வழக்கை அணுகத் தவறியிருக்கி றார்.

ஆனால் மதானியைப் போலவே நீதி மன்றக் காவலின் கீழ் இருந்த பாரத் மோகன் லாலுக்கு மட்டும் நீதிமன்ங்களில் பிணை கிடைக்கிறது. அரசுத் தரப்பு வழக் கறிஞர் மௌனம் காத்திருக்கிறார். விசா ரணை அமைப்புகளும் கூட பாரத் மோகன் லால் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு மட்டுமல்லாமல் அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பிலும் இன்னும் பல வழக் குகளிலும் தொடர்புடையவர் என்றோ, அவரால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றோ சொல்லவில்லை.

பாரத் மோகன் லால் அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டவர் என்று தெரிந்த நிலையிலும், அவருக்கு கொடுக்கப்பட்ட ரிமாண்ட் கால அவகாச மான 180 நாட்களுக்குள் குற்றப் பத்திரி கையை விசாரணை அமைப்பு தாக்கல் செய்யவில்லை என்று காரணம் கூறி பிணை வழங்கப்படும்போது, வருடக்க ணக்கில் விசாரணையை நீட்டித்துக் கொண்டிருக்கும் நிலையிலும், இதுவரை மதானிக்கு எதிராக ஒரு ஆதாரத்தையும் சமர்ப்பிக்காமல் இருக்கும் பெங்களூரு காவல்துறையை நோக்கி மதானிக்கு ஏன் பிணை வழங்கக் கூடாது என்று கேள்வி கேட்க நீதிமன்றம் முன் வரவில்லை.

அவர்கள் வாய் மொழியாக, யூகத்தின் அடிப்படையில் இந்த ஊன முற்றவரால் தேசத்திற்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத் தல் என்று கூறுவதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறதே. இது எப்படி?

2008ல் நடந்த பெங்களூர் தொடர் குண்டு வெடிப்பில் சம்பந்தப்படுத்தப் பட்ட மதானிக்கு எதிராக 4 வருடங்களாக துருவித் துருவி விசாரணை மேற்கொண்ட பெங்களூரு காவல்துறை, இதுவரை அந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் மதானி தீட்டிய சதித் திட்டம்தான் என்ன என்பதற்கான ஒரு ஆதாரத்தைக் கூட நீதி மன்றத்தில் சமர்ப்பிக்க முடியாத நிலை யில் மதானியை ஏன் சிறையில் வைத்தி ருக்க வேண்டும்? அவருக்கு பிணையை தொடர்ந்து ஏன் மறுக்க வேண்டும்?

இந்த மனிதர் இன்னும் ஏன் சிறையிலி ருக்கிறார்? என்ற தலைப்பிட்டு டிசம்பர் 4, 2010 தேதியிட்ட தெஹல்கா இதழ் விரி வான செய்தி வெளியிட்டிருந்தது.

அதில், கர்நாடக சிறப்பு புலனாய்வு குழுவினரால் மதானி மீது ஜோடிக் கப்பட்ட வழக்கு இது என்பதற்கான ஆதா ரங்களுடன் அது செய்தி வெளியிட்டிருந் தது.

கர்நாடக சிறப்புப் புலனாய்வுக் குழு மதானிக்கு எதிரான குற்றப் பத்திரிகை யில், மதானியின் கொச்சி வீட்டின் உரி மையாளர் ஜோஸ் வர்கீசும், மதானியின் சகோதரர் ஜமால் முஹம்மதுவும் மதா னிக்கு எதிராக சாட்சியம் அளித்ததாக கூறியிருந்தது.

இதில் ஜோஸ் வர்கீஸ், கர்நாடக சிறப் புப் புலனாய்வு குழுவினரிடத்தில்தான் எவ்விதச் சாட்சியமும் அளிக்கவில்லை; புலனாய்வுக் குழு பொய் சொல்கிறது என்று எர்ணாகுளம் முதன்னை செஷன்ஸ் நீதி மன்றத்தில் தனி புகார் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இதே போல, மதானியின் சகோதர ரான ஜமால் முஹம்மது, “பெங்களூரு குண்டு வெடிப்பில் காவல் துறையின ரால் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் அய்யூப் மற்றும் சிலைன் ரஹீம் இருவரையும் (குண்டு வெடிப்புக்குப் பின்னால்) தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்யு மாறு மதானி தனக்கு அறிவுறுத்தினார் என்று சாட்சியம் அளித்ததாக புலனாய் வுக் குழு குற்றப்பத்திரிகையில் சொல்லி யிருக்கிறது.

ஆனால், புலனாய்வுக் குழுவினரி டத்தில் நான் எந்தச் சாட்சியமும் அளிக் கவில்லை...” என்று கொல்லம் மாவட்ட ஜூடிஷியல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் புகார் மனு அளித்திருந்தார்.

இந்தத் தகவல்களையெல்லாம் சம்பந் தப்பட்டவர்களிடமே நேரில் விசாரித்து செய்தி வெளியிட்டிருந்தது தெஹல்கா பத்திரிகை.

இந்தச் செய்திக் கட்டுரையை எழுதிய தெஹல்காவின் பெங்களூரு செய்தியா ளர் கே.கே. ஷாயினாவை மிரட்டிய பெங் களூரு காவல்துறை அவரை தீவிரவாதி என்று கூறி அவர் மீதும் வழக்குத் தொடர்ந்திருந்தது.

ஆக, மதானியை சிறையில் வைத் திருக்க வேண்டும் என்ற இந்துத்துவா சிந்தனை கொண்ட அதிகார வர்க்கத்தின் வாய்மொழி உத்தரவை நிறைவேற்ற கர் நாடக காவல்துறையும், சிறப்பு புலனாய் வுக் குழுவும் மெனக்கெடுகின்றன என்று தான் புரிந்து கொள்ள முடிகிறது.

பெங்களூரு குண்டு வெடிப்பு நடந்த வுடன் சூட்டோடு சூடாக மேற்கொள்ளப் பட்ட முதல் கட்ட விசாரணையின் அறிக் கையில், ஜெய்ப்பூர் மற்றும் ஹைதராபாத் (மக்கா மஸ்ஜித் உள்பட) குண்டு வெடிப் புச் சம்பவங்களில் பயன்படுத்தப்பட்ட வெடி பொருட்களே பெங்களூரு குண்டு வெடிப்புச் சம்பவத்திலும் பயன்படுத்தப் பட்டுள்ளன என்று காவல்துறை உறுதி கூறியிருந்தது.

இதன் பின்னர் இந்த வழக்கு விசா ரணை வேறு கோணத்தில் பயணித்து மதானியை இரையாக்கியிருக்கிறது.

ஜெய்ப்பூர், ஹைதராபாத் குண்டு வெடிப்புகளில் இந்துத்துவாவினர் ஈடுபட் டனர் என்பதும் அப்போது ராஜஸ்தானில் பாஜக ஆட்சி நடந்து கொண்டிருந்தது என்பதும் விசாரணை அமைப்புகளுக்குத் தெரியும்.

பெங்களூரு குண்டு வெடிப்புச் சம்ப வங்களின்போதும் கர்நாடகாவில் பாஜக ஆட்சிதான் இருந்தது. கர்நாடகாவில் இந் துத்துவாவிற்கு இருக்கும் செல்வாக்கு நாட றிந்த விஷயம்.

இந்த முகாந்திரங்களின் அடிப்படை யில் விசாரணையை மேற் கொள்ள விடா மல் தடுத்த அதிகாரச் சக்திகள் மதானியை சிக்க வைத்ததன் மூலம் உண்மையான குற்றவாளிகளை தப்ப விட்டுள்ளன.

தற்போது மீண்டும் பிணை கேட்டு உச்ச நீதின்றம் செல்ல விருப்பதாக அறி வித்திருக்கிறார் மதானி.

இந்த நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமம் என்றால்... பாரத் மோகன் லாலுக் கும், அப்துல் நாசர் மதானிக்கும் ஒரே சட்டம்தான் என்றால்... உச்ச நீதிமன்றம் மதானிக்கு பிணை வழங்கி சட்டத்தின் தத்துவத்தை உறுதிப்ப டுத்த வேண்டும்.

- ஃபைஸ்

Pin It