மனித சமூகத்தில் மலிந்து கிடக்கும் சமூக தீமைகளில் பிரதான இடத்தை பிடித்து இருக்கும் புகையிலை பொருட்களான மசாலா, குட்கா போன்ற போதை வஸ்துக்களை கேரளா வின் உம்மன் சாண்டி அரசு தடை செய்துள் ளது .

கேரளா அரசின் இந்த தடையை அனைவ ரும் நிச்சயம் நாம் வரவேற்றாக வேண்டும். கார ணம், இது மக்கள் ஆட்சி, மக்களுக்கு நன்மை செய்யும் ஆட்சி என்றெல்லாம் கூறி மக்களிடம் ஓட்டு வாங்கி மக்களை அழிவுக்கு கொண்டு போகும் வகையில் இன்றைய ஆட்சியாளர்கள் இருப்பதை காணக் கூடியதாக உள்ளது. இந்த லட்சணத்தில் ஓராண்டு சாதனையைப் பாரீர் என்ற தம்பட்டம் வேறு!

தெருத் தெருவாக கூட்டம் போட்டு கொண் டிருக்கும் தமிழக அரசு கேரளா அரசின் அறி விப்பை சிந்தித்து பார்க்க வேண்டும்.

தமிழக அரசின் சாதனை என்ன?

தெருத் தெருவாக டாஸ்மாக் கடைகளை திறந்து படிக்கும் மாணவர் முதல் வயதான கிழ வன்வரை முழு போதையில் நடமாட விட்டது தான் தமிழக அரசின் சாதனை!

மனிதனின் ஒழுக்கம், உயிர் இவைகளை பற்றி எந்த அரசு கவலைபடுகிறதோ அது தான் சரியான மக்கள் விரும்பும் ஆட்சியாக இருக்க முடியும். மக்கள் நலப் பணிகளை செய்து விட்டு சாதனை என்று சொன்னால் அதில் அர்த்தமி ருக்கும். இதை உணர்ந்த கேரளா முதல்வர் உம் மன் சாண்டி கடந்த மாதம் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதத்தில் இந்தியா முழுவதும் புகையிலையை தடை செய்யுமாறு குறிப்பிட்டி ருந்தார்.

அதற்கு பதில் அனுப்பிய மத்திய அரசு உணவு பாதுகாப்பு சட்டதின்படி பான் மற்றும் மசாலா பொருட்களுக்கு மாநிலங்களே தடை விதித்துக் கொள்ளலாம் என்று அனுமதி அளித்தது. உடனே கடந்த 22ம் தேதி கேரளா முழுக்க புகையிலை பொருட்களை உற்பத்தி செய்வதற்கும்,விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கபடுவதாக அறிவித்தார் உம்மன் சாண்டி.

இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. இதே நடைமுறையை தமிழகத்தி லும் பின்பற்றப்படுமானால் மக்கள் இந்த ஆட்சி யை வாழ்த்துவார்கள் என்று மருத்துவர் ராமதாஸ் உட்பட பல தலைவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து உள்ளனர்.

சென்ற அதிமுக ஆட்சியில் இப்போது இருக் கும் முதல்வரை பற்றி பத்திரிக்கைகள் கந்து வட்டி, கட்டபஞ்சாயத்து, லாட்டரி போன்ற சமூக கொடு மைகளை ஒழித்த அசத்தலான முதல்வர் ஜெயல லிதா என்றெல்லாம் பாராட்டின.

எனவே மீண்டும் அதே அசத்தலை முதல்வர் தொடர்ந்தால் மக்களின் நன்மதிப்பை பெறுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Pin It