கர்நாடக முதல்வர் எடியூரப்பா மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி, எடியூரப்பாவின் ஊழல் தொடர்பான முக்கிய ஆவணங்களை வெளியிடப் போவதாக அறிவித்தார். இந்த நிலையில் சமரச பேச்சுவார்த்தை நடத்த எடியூரப்பா தனக்கு தூது விட்டதாக குமாரசாமி பரபரப்பான குற்றச்சாட்டை கூறி இருந்தார்.

ஆனால் இதை மறுத்த எடியூரப்பா, நான் சமரசப் பேச்சுவார்த் தைக்கு குமாரசாமியை அழைத்ததற்கான ஆதாரத்தை காட்ட அவர் தயாரா என்று அறிவுப் பூர்வமாக கேட்பதற்கு பதிலாக, "நான் சமரச பேச்சுவார்த்தைக்கு அழைத்ததாக தர்மஸ்தலா கோவிலில் மஞ்சுநாத சுவாமி முன் சத்தியம் செய்ய தயாரா'' என்று குமாரசாமிக்கு எடியூரப்பா சவால் விடுத்தார். எடியோட இந்த சவாலை ஏற்ற குமாரசாமி, "எடியூரப்பாவின் குடும்பத்தினருக்கு சொந்தமான பிரேரனா அறக்கட்டளை செய்த ஊழலை நான் வெளியிட்டதால் என்னை அமைதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட எடியூரப்பா, பா.ஜனதா எம்.எல்.சி. லேகர்சிங் மூலம் தூது விட்டார். என்னை சமரசப்படுத்த எடியூ ரப்பா முயன்றார் என்பதை நான் தர்மஸ்தலா கோவிலுக்கு வந்து சத்தியம் செய்ய தயாராக உள் ளேன். அதற்கு எடியூரப்பா தயா ராக வர வேண்டும், லேகர்சிங் எம். எல்.சி.யையும் உடன் அழைத்து வந்து சத்தியம் செய்ய சொல்ல வேண்டும் என்று குமாரசாமி அதிரடியாக சொல்ல அரண்டு போன எடியூரப்பா அதை மறை த்து, இந்த முறை தனது மந்திரியை பேச வைத்தார். கர்நாடக போலீஸ் மந்திரி அசோக், சத்தியம் செய்ய தயார் என்று குமாரசாமி கூறி இருப்பதை, எடியூரப்பா உடனடியாக ஏற்றுக் கொண்டு உள்ளார். கடந்த 27ம் தேதி தர்மஸ்தலா கோவிலில் தனது மகன்களுடன் வந்து சத்தியம் செய்ய தயார் என்று சம்மதம் தெரிவித்தார். இதற்கு குமாரசாமியும் தயாராக வேண்டும்' என்றார்.

இதன்படி குமாரசாமி, எடியூ ரப்பா கூறியபடி அதே நாளில் தானும் சத்தியத்திற்கு தயார் என்ற தோடு, இதற்காக முதல் நாள் இரவே அங்கு சென்று விடுவேன். தர்மஸ்தலா கோவிலில் உள்ள மஞ் சுநாத சுவாமியே தீர்ப்பு வழங்கட் டும்' என்றார். குமாரசாமியின் உறுதியைக் கண்ட எடியூரப்பா, இப்போது தடா லடியாக பல்டியடித்து, சத்தியம் செய்யும் முடிவை மறு பரிசீலனை செய்யும்படி மடாதிபதிகள் என்னி டம் வலியுறுத்தி வருகின்றனர். இது பற்றி எனது முடிவை 26-ம் தேதி அறிவிப்பேன் என்று கூறினார்.

இதற்கிடையில் கடந்த வாரம் மடாதிபதிகள் இரு அரசியல் தலைவர்களும் கோயிலில் சத்தி யம் செய்யும் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், இதற்காக மடாதிபதிகளிடம் கேட்க வேண்டும் என்றும், தப்பு ஒப்புவிப்பு' செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இது பற்றி இரு அரசியல் தலைவர்களும் தங் களின் கருத்தை வெளியிட வில்லை. கடைசியாக தர்மஸ்தாலா கோவிலுக்கு இருவரும் வருவ தாக வெளியான செய்தியால் கர் நாடக அரசியலில் பரபரப்பு ஏற் பட்டது.

கர்நாடக முன்னாள்- இந்நாள் முதல்வர்களின் சத்திய விளை யாட்டு நகைப்பிற்குரியது. எடியூரப்பா ஊழல் செய்திருந் தால் அதை வைத்து அரசியல் செய்து கொண் டிராமல், ஊழல் தொடர்பான ஆதா ரங்களை மக்கள் முன்னிலையில் சமர்ப்பிக்க குமாரசாமி முன்வர வேண்டும். தன் மீதான குமாரசாமியின் ஊழல் புகார்களை சட்டரீதியாக சந் திக்க எடியூரப்பா முன் வர வேண் டும். அதை விடுத்து, சத்தியம் என்று சரடு விடுவது, "ஏய்! என் சிலேட்டுக் குச்சியை நீதான் எடுத்த; இல்லன்னு உங்கம்மா மேல சத்தியம் பண்ணு'' என்று பள்ளி பாலகர்கள் அறியாமல் பேசிக்கொள்வது போல உள்ளது. கர்நாடக அரசியல் சரியான சின் னப்புள்ளத்தனமா இருக்கே!

- சூரியகுமாரன்

Pin It