இலங்கை பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணைச் செயலாளருமான சுரேஷ் பிரேமச் சந்திரன் கடந்த வாரம் தமிழகத்திற்கு வருகை தந்திருந்தார். வந்த இடத்தில், தமிழக இஸ்லாமிய அமைப்புகளைச் சந்தித்து மனம் திறந்து கலந்துரையாடல் நடத்த வேண்டும் என்ற தனது விருப்பத்தை சமூக ஆர்வலரும், அரசியல் விமர்சகரு மான டி.எஸ்.எஸ். மணியிடம் தெரிவிக்க.... இந்திய தவ் ஹீத் ஜமாஅத் மூலம் அதற்கான ஏற்பாட்டை டி.எஸ். எஸ். மணி செய்திருந்தார்.

கடந்த 4ம் தேதி சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருக்கும் அபு பேலஸ்ஸில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட் டமைப்பில் அங்கம் வகிக்கும் இயக் கங்களின், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதி கள் இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியைத் துவக்கி வைத்துப் பேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அப்பல்லோ ஹனீஃபா, “இலங்கைத் தமிழர்கள் - முஸ்லிம்களுக்கிடையே தற்போது நிலவி வருகின்ற உறவு கள், அரசியல், சமூக இணக்கம் குறித்தும், சிங்கள அரசின் தமிழ் - முஸ்லிம் விரோதப் போக்கு, இலங்கையின் தற்போதைய நில வரம் குறித்தும் சகோ. பிரேமச் சந்திரன் பேசுவார்...” என்றதோடு,

இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை பிரேமச் சந்திரனுக்கு அறிமுகம் செய்து வைத்து அவரை பேசுமாறு அழைத்தார்.

தனது பேச்சைத் துவக்கிய பிரேமச் சந்திரன், “தற்போதைய இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கின் நிலவரத்தைப் பொறுத் தவரை அப்பகுதிகள் இராணுவ மயப்படுத்தப்பட்டு வருகின்றன. வடக்கில் இராணுவத்தின் 15 டிவி ஷன்களும், கிழக்கில் 2 டிவிஷன்களும் நிலை நிறுத்தப்பட்டிருக் கின்றன.

வட கிழக்கில் இராணுவம் நிலை நிறுத்தப்பட்டிருப்பதற்கு காரணமாக, புலிகள் (இயக்கம்) மீண்டும் உயிர் பெற்று வரலாம். அதனால்தான் இராணுவ பாதுகாப்பு என்று சொல்கிறது சிங்கள அரசு.

வன்னியில் 44 ஆயிரம் இளம் விதவைப் பெண்கள் இருக்கிறார் கள். இவர்களுக்கு வாழ்வாதாரம் இல்லை; வீடுகள் இல்லை. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர் களின் வீடுகள் இப்பகுதிகளில் அழிக்கப்பட்டிருக்கின்றன.உணவு, உறைவிடம் இல்லாத அவர்களை அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் இராணுவம் எவ்வாறு நடத்தும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

வட கிழக்கில் நடக்கின்ற சாதாரண நிகழ்ச்சிகளானாலும் அதில் இராணுவத்தின் தலையீடு இருக்கிறது. பள்ளிக்கூட ஆண்டு விழாவில் கூட இராணுவ அதிகாரிகள் கட்டாயமாக சிறப்பு அழை ப்பாளர்களாக அழைக்கப்பட வேண்டும்.

வட கிழக்கில் 95 சதவீத தமிழ் - முஸ்லிம் மக்கள் இருக்கிறார் கள். யுத்தத்திற்கு பிறகு இவர்களின் சதவீதம் அதிகளவில் குறைந்துள்ளது. மணலாறு என் கிற தமிழ் கிராமம் வெளிஓயா என்ற சிங்களப் பெயருடன் மாற்றப்பட்டிருக்கிறது.

இங்கே 9 ஆயிரம் சிங்கள மக் கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். முல்லைத் தீவு முதல் திருகோண மலைவரை உள்ள பகுதிகளில் சுமார் 15 ஆயிரம் சிங்கள மீனவர் கள் குடியேறியுள்ளனர். கொக்கச் சாலை கிராமத்தில் ஆயிரம் சிங் கள மக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். இதுவெல்லாம் கடந்த இரண்டு வருடத்தில் நடந்தேறியிருக்கிறது.

தமிழ் மக்கள் விரட்டியடிக்கப் பட்ட பகுதிகளில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இப் போது சிங்கள மக்களே குடியே றியுள்ளனர். தமிழர்களுக்காக இந்திய அரசால் கட்டிக் கொடுக் கப்பட்ட வீடுகளில் ஒரு பகுதி சிங் கள மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை வவுனியா மாவட்ட இராணுவத் தளபதியே ஒப்புக் கொண்டிருக்கிறார்.

வடக்கில் தமிழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பௌத்த விகாரைகள் கட்டப்பட்டுள்ளன. இதனை இராணுவமே கட்டுகிறது. அங்கே சிங்கள மக்கள் இருந்தால் கட்டலாம் அதில் தவறில்லை. ஆனா லும் கட்டுகிறார்கள். இதற்காக தமிழ் வியாபாரிகளிடம் வலுக்கட்டாயமாக வசூல் செய்கிறது இராணுவம். இவை பௌத்த கலாச்சாரத்திற்கு தமிழர்களை மாற்றும் முயற்சியாகவே நாங்கள் கருதுகிறோம்.

4 வருட கால யுத்தம் முடிந்த பிறகு, 1 வருடத்திற்குள் மக்கள் மீள் குடியேற்றப்படுவார்கள் என்று ராஜபக்சே ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கீ மூனிடம் உறுதியளித்தார். இதுவரை மீள் குடியேற்றம் நடக்கவில்லை. ஏறக் குறைய 10 ஆயிரம் ஏக்கர் நிலங் களை இராணுவம் தன் கட்டுப் பாட்டில் வைத்திருக்கிறது.

இந்த இடங்களை நாங்கள் விட மாட்டோம். இது பாதுகாப்பிற்கு தேவை என்கிறது இராணுவம். இவை விவசாய நிலங்கள் ஆகும். இங்கு காய்கறிகளை ஒரு செலவும் இல்லாமல் இராணுவமே உற்பத்தி செய்யும். உற்பத்தி  பொருட்களை  தமிழர்கள்  பெரும்  விலை  கொடுத்து    வாங்க வேண்டிய சூழல் உருவாகும்.

மேலும், இங்குள்ள கடைகளையும் பெரும்பாலும் இராணுவமே நடத்துகிறது. இவையெல்லாம் தமிழர்களின் பொருளாதாரத்தை சுரண்டுகின்ற முயற்சியாகும். இதன் மூலம் கலாச்சார மாற்றங்களும் உருவாக்கப்பட்டு, வட கிழக்கில் சிங்கள் ஆதிக்கம் ஏற்படுத்தப்படும்.

1 லட்சத்து 40 ஆயிரம் மக்கள் யுத்தத்தால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். முறைப்படுத்தப்பட்ட இனப்படுகொலை இது. தொடர்ச்சியான கைதுகள் நடைபெற்று வருகின்றன. 10 வருடங்களுக்கு முன் போராளியாக இருந்த 45 பேர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களின் குடும்பம் நிர்கதியாய் தவிக்கிறது.

யுத்தத்தின் மூலம் கொலை செய்யப்பட்ட மக்கள் போக, மீத முள்ள தமிழர்களை எப்படி நாட்டை விட்டு விரட்டுவது என்று யோசித்து அதற்கான நிர்ப்பந்தங்களை உருவாக்கி வருகின்றது சிங்கள அரசு. யுத்தத் திற்கு பின் தேர்தல், ஜனநாயகம் என்றெல்லாம் போலியாக உலக நாடுகளை நம்பச் செய்கிறது சிங்கள அரசு.

இராணுவம் மற்றும் புலனாய் வுப் பிரிவினர் தமிழர்களுக்கு கடுமையான நிபந்தனைகளை விதிக்கின்றது. எல்லா மட்டத்திலும் இவர்களின் தலையீடு இருக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் 5 வருடத்தில் தமிழர்களின் அடையாளங்கள் அழிக்கப் பட்டு விடும்.

10 லட்சம் மக்களுக்கு ஒரு லட் சத்து 50 ஆயிரம் இராணுவம் நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த 10 லட்சம் மக்களில் படித்த 5 லட்சம் பேர்  (இராணுவத்தின் தொல்லை தாங்காமல்)  வெளியேறி விட்டால் மீதம் இருப்பவர்கள் பாமர மக்களே. இவர்கள் வழிகாட்டுதல் இல்லாமல் விடப்படும் சூழலில் சிங்கள மக்களுடன் கலாச்சார ரீதியாக இணைந்து கலந்து விடு வார்கள். தமிழர்கள் இருந்த அடையாளமே இல்லாமல் போகும். இது பட்டவர்த்தனமாக நடந்து வருகிறது.

 நடந்த, நடந்து கொண்டிருக்கின்ற இனப்படுகொலைகள் தடுத்து நிறுத்தப்படாவிட்டால் ஒரு இனம் இருந்த சுவடே இல்லாமல் போகும்.

இது இனப்படுகொலை என்பதை ஏற்றுக் கொண்டால்தான் தீர்வை நோக்கிச் செல்ல முடியும்.

இலங்கையில் நடப்பது குடும்ப ஆட்சி.  இராணுவம் அவர்கள் கட்டுப்பாட்டில் (ராஜபக்சேவின் சகோதரர்  கோத்தபய  கையில் ! ) 3 ல் 2 பெரும்பான்மை  கொண்ட   அரசு.   இதில்   சிறுபான் மையினரான முஸ்லிம் கட்சிகளும், மலையக த மிழ் க ட்சிகளும்  அரசுக்கு  ஆதரவு  அளித்து வருகின்றன. அதனால் இந்த கட்சி கள் அரசின் செயல்பாடுகளை எதிர்ப்பதில்லை.

இலங்கை அரசுக்கு ஐரோப்பிய நாடுகளின் உதவிகள் இல் லையென்றாலும், இந்தியா, சீனா, பாகிஸ்தான், இரான் போன்ற நாடுகளின் உதவியால் அது ஆட்சி செய்ய முடியும்.

சிங்கள இனவாதத்தைதக்க வைக்க ஏனைய சமூகத்தினரின் பிரச்சினைகளை அரசாங்கமே தூண்டி வருகிறது. உதாரணத்திற்கு ஹலால் பிரச்சினை! பொதுபல சேனா என்கிற அமைப்பு, ஹலால் சான்றிதழ் தேவையில்லை; இந்த சான்றிதழ் வழங்க ஹலால் அமைப்பு பணம் பெறுகிறது. இந்தப் பணம் இஸ்லாமிய வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. அதற்காக நாம் ஏன் பணம் தர வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறது. இந்த பொது பல சேனாவை உருவாக்கியிருப்பவர் கோத்தபய ராஜபக்சேதான் பொது பல சேனா அரசாங்கத்துடன் பேசி வெளிநாட்டுக்கு அனு ப்பப்படும் பொருட்களுக்கு மட்டும் ஹலால் சான்றிதழ் வழங்க வேண்டும். உள்நாட்டு பொருட்களுக்கு இந்த சான்றிதழ் தேவை யில்லை என்று முடிவு செய்கிறது.

இவற்றையெல்லாம் இரண்டு முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்களான ரவூஃப் ஹக்கீமோ, அத்தா வுல்லாவோ அமைச்சர் ரிசாட் பதியுத்தீனோ கண்டிக்கவில்லை.

கடந்த வாரம் முதல் முறையாக, ரஃவூப் ஹக்கீம் ஹலால் பிரச்சினையில்  வாய் திறந்திருக்கிறார். ஹலால் பிரச்சினைக்கு பின் னணியில் இருப்பது கோத்தபய தான் என்று அவர் சாடியிருக்கிறார்.சில மாதங்களுக்கு முன் வட கிழக்கில் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலின்போது, தமிழ் தேசியக் கூட்டணியும், இலங்கையில் முக்கிய காட்சியாக இருக்கின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து கிழக்கு மாகாண சபை உருவாக்குவோம்; 5 அமைச்சர்கள் மற்றும் முதல்வர் பதவி கூட நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்றோம்.

இறுதியில் அதை மறுத்து விட்டு அரசாங்கத்துடன் இணை ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ். ஆனால் அப்போதும், தற் போதும் தமிழ் முஸ்லிம் இணை ந்த அரசுதான் அங்குள்ள முஸ்லிம் மக்களின் எண்ணமாக இருந் தது; இருக்கிறது. ஆனால் இன்று நிலைமாறி, சிங்கள அரசு முஸ்லிம்களுக்கு எதிராக மாறியவ டன் தமிழர் - முஸ்லிம் இணைய வேண்டும் என (முஸ்லிம் கட்சி கள்) கூறுகின்றன.

அங்குள்ள முஸ்லிம்கள் தங்களை தமிழர்களாக உணர்வதில்லை. நாங்கள் தனி தேசிய இனம். தமிழர்கள் அல்ல என்று தான் தம்மை அவர்கள் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இந்த கோஷத்தை முன் வைத்து தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடங்கினார் அஷ்ரஃப். மலையகத் தமிழ் மக்களும் தனி இனமாகவே தம்மை பாவிக்கிறார்கள். ஆனால், இங்கே தமிழகத்தில் அப்படி இல்லை. முஸ்லிம்கள் தமிழர்களாகவே தம்மை அடையாளப்படுத்துகின்றனர்.

இலங்கையில் மலையகத் தமிழர் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் சிங்கள அரசின் ஆதரவாளர்களாக உள்ளனர். எதிர் ப்பு காட்டாதவர்களாக உள்ள னர். ஆனால், முஸ்லிம் சமுதாய மக்கள் சிங்கள அரசுக்கு காட்டி வரும் எதிர்ப்பு ஆறுதலாக உள் ளது...” என்று விரிவாக இலங்கையின் வட கிழக்கின் நிலைமையை விளக்கினார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

பிரேமச்சந்திரன் பேசி முடித்த தும், “(புலிகளால் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட) காத்தான்குடி சம்பவத்திற்கு பின் இப்போது தமிழர்களும் முஸ்லிம்களும் ஒத் துப் போயிருக்கிறார்கள். எங்களின் அமைப்பு இலங்கையில் செயல்படுகிறது. இதன் மூலம் இரு தரப்பு மக்களுக்கு மத்தியில் சிறு சிறு ஒற்றுமை ஏற்படுத்தப் பட்டுள்ளது.

எங்கள் அமைப்பின் பிரதிநிதி யும், கொழும்பு மாநகராட்சியின் கவுன்சிலருமான ஷராஃபுத்தீன் அங்கே எத்தனை தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை பட்டியல் போட்டு சமீபத்தில் பேசியிருக்கிறார்.

ஹிஜாப் சிஸ்டத்திற்கு எதிராக ராஜபக்சே பேசியது; ஹலால் விஷயத்தில் ரணில் விக்கிரம சிங்கே ஆதரவாகப் பேசியது என பல சம்பவங்களை சுட்டிக் காட்டி ஷராஃப்தீன் விரிவாகப் பேசியிருப்பது இணைய தளங்களில் வெளியாகியுள்ளது...” என்றார் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தின் தலைவர் எஸ்.எம். பாக்கர் தொடர்ந்து, இலங்கை முஸ்லிம் - தமிழர் பிரச்சினை குறித்து இஸ்லாமியக் கூட்டமைப்பின் தலைவர்கள் பிரேமச் சந்திரனு டன் விவாதித்தனர்.

இதில் பல்வேறு விளக்கங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இலங்கையின் வட கிழக்கில் தமிழர் முஸ்லிம் உறவுகள் சமூக மற்றும் அரசியல் ரீதியாக கட்டியெழுப்ப வேண்டிய தேவை இருக்கிறது; அதற்குண்டான முயற்சி களை எடுப்பதில் தமிழ் முஸ்லிம் சமுதாயம் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஒற்றைச் சிந்தனை வெளிப்படும் வகையில் அமைந்திருந்தது இந்த சந்திப்பு.

இந்தியாவின் சம்மதமில்லாமல் இலங்கைப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது!

சுரேஷ் பிரேமச் சந்திரனிடம், “காத்தான்குடி சம்பவம் முஸ்லிம்களிடம் வலியாக இருக்கும் நிலையிலும், அவர்கள் தமிழ் முஸ்லிம் உறவுகள் மலர வேண்டும் என்று நினைப்பதாக நீங்கள் சொல்வது உண்மைதான். நமக்கும் அதுபோன்ற தகவல்கள்தான் அங்கிருந்து வருகின்றன.

ஆயினும் இலங்கை மற்றும் தமிழக முஸ்லிம்களைப் பொறுத்தவரை தமிழ் கட்சிகளிடமிருந்து ஒரு உத்திரவாதத்தை எதிர்பார்க்கிறார்கள்.

புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் பல சுற்று பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்ட போது எங்களையும் தனித் தரப்பாக பேச்சுவார்த்தையில் பங்கு கேற்க அனுமதிக்க வேண்டும்; பேச்சுவார்த்தை முத்தரப்பாக அமைய வேண்டும் என்ற முஸ்லிம் தரப்பு வாதம் புலிகளால் ஏற்கப்படவில்லை.

இந்நிலையில், தமிழ் தேசியக் கட்சிகளான உங்களிடமிருந்தும் அது குறித்த அழுத்தமான உத்தி ரவாதம் இல்லை. ஒருவேளை தனி ஈழம் மலர்ந்தாலோ, சுயாட்சி அதிகாரம் கொண்ட அரசு அமைந்தாலோ முஸ்லிம்களுக்கான தனித்துவம், அரசியல் அதிகாரம், அவர்களுக்கான உரிமைகள் வரையறுக்கப்படும் என்ற உறுதியான உத்திரவாதம் தமிழ் தேசியக் கூட்ட அமைப்பிலிருந்து உரிய வகையில் வெளிப்படாமல் இருக்கிறதே...

முஸ்லிம்களின் இந்த தயக்கத்தை போக்க என்ன முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது தமிழ் தேசிய கூட்டணி?” என்ற கேள்வியை அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாம் முன் வைத்தோம்.

“புலிகள், அரசாங்கம் நடத்திய பேச்சுவார்த்தையின்போது முஸ்லிம்கள் தனித்தரப்பாக வர வேண்டுமா? அரசுத் தரப்பாக வர வேண்டுமா? என்கிற கேள்வி இருந்தது. அரசுடன் இருந்து கொண்டே தனித்தரப்பாக கலந்து கொள்ள ரவூஃப் ஹக்கீம் கேட்டார். அந்த  பேச்சு வார்த்தைகளில் நானும் கலந்து கொண்டவன். ரவூஃப்பிடம், நீங்கள் அமைச்சராக இருக்கிறீர்கள். அதனால் ஜனாதிபதியை தினமும் சந்திக்கிறீர்கள். ஜனாதிபதியிடம் தெரிவித்து விட்டு நீங்கள் தனித்தரப்பாக வாருங்கள் என்று நான் சொன்னேன். அவர்,  நாங்கள்  தனித்தரப்பாக பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளப் போகிறோம் என ஜனாதிபதியிடம் கேட்கவில்லை. ஒரு காலை அரசாங்கத்திலும் ஒரு காலை அதற்கு வெளியேயும் வைத்துக் கொண்டு பேசினால் எப்படி சரிவரும்?

1957 மாநாட்டில் முஸ்லிம்கள் தனி இனம். அவர்கள் தனித்து முடிவெடுக்க அதிகாரம் தரப்பட வேண்டும்; வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும். அதிகபட்ச அதிகாரத்தை எடுக்க தமிழர்கள் - முஸ்லிம்கள் இணைந்து வர வேண்டும் என்றெல்லாம் செல்வநாயகம் பிரகடனப்படுத் தினார்.

முஸ்லிம்களின் தனித்துவத்தை ஏற்றுக் கொண்டு அவர்களின் மத, இன, கலாச்சார பாது காப்புக்கு ஏற்ற விஷயங்களை உள்ளடக்கிய ஒரு இன்ஸ்டிடியூ ஷன் ஏற்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் உத்திரவாதம் பெறப்பட வேண்டும் என்பதுதான் நமது நிலை...” என்றார்.

நம்மைத் தொடர்ந்து, வைகறை வெளிச்சம் பத்திரிகை ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளருமான குலாம் முஹம்மது,

“புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பிரதேசங்களில் இந்துத் துவா சிந்தனை சார்ந்த 10 பள்ளிகள் இயங்கி வந்ததாகவும் இதன் மூலம் விஷ்வ ஹிந்து பரிஷத் அங்கே இயங்கி வந்ததென்றும், புலிகளுக்கும் விஷ்வ ஹிந்து பரி ஷத்திற்கும் தொடர்பு இருந்ததாக வும் பிரபல பத்திரிகையாளரும், மனித உரிமை ஆர்வலருமான ஜான் தயாள் "எமஒஅதஅப 2002 - மய்ற்ர்ப்க் ஹய்க் தங்ற்ர்ப்க் நற்ர்ழ்ண்ங்ள் ர்ச் பட்ங் ஏண்ய்க்ன்ற்ன்ஸ்ஹ கஹக்ஷ' என்ற நூலில் எழு தியிருக்கிறார். இதன் உண்மை நிலை என்ன...” எனக் கேட்டார்.

இதற்கு பதிலளித்த பிரேமச்சந் திரன், “எனது 40 வருட அரசிய லில் வி.எச்.பி. அங்கு பாட சாலை நடத்தியதாக நான் கேள்விப்பட் டதில்லை. பிரபாகரனின் மகனே அரசுப் பள்ளிக் கூடத்தில்தான் படித்தான். அதே சமயம், வி.எச்.பி.க்கும் புலிகளுக்கும் தொடர்பு இருந்த தில்லை என்றும் நான் சொல்ல மாட்டேன்.

வி.எச்.பி.யுடனான புலிகளின் தொடர்புக்கு அரசியல் ரீதியாக பல காரணங்கள் இருந்திருக்கலாம். அதே சமயம், புலிகள் முஸ் லிம்களுக்கு எதிராக செயல்பட லாம் என்கிற எண்ணத்தில் வி.எச். பி.யினர் புலிகளை அணுகியிருக்க லாம். இல்லை என்று சொல்ல மாட்டேன். ஆனால் அது எந்த வகையில் என்பது எனக்குத் தெரியாது.

பால் தாக்கரே மற்றும் இந்துத் துவாவோடு புலிகளுக்கு தொடர்பு இருந்திருக்கக் கூடும். அது, புலிகளுக்கு எல்லோருடைய ஆதரவு வேண்டும் என்ற நிலையில்கூட இருக்கலாம். ஆனால், இந்தியாவில் செயல்பட்டு வரும் இந்துத் துவா சிந்தனைகளை, செயல்பாடுகளை நாம் (தமிழ் தேசிய கூட்டமைப்பு) ஒருபோதும் ஏற்றுக் கொண்டவர்களில்லை...” என்றவர் தொடர்ந்து, இலங்கைப் பிரச்சினை குறித்த தமது பார்வையை விளக்கினார்.

“இலங்கை நாடு இந்து மகா சமுத்திரத்தில் ஒரு முக்கியமான களம். சீனாவும், அமெரிக்காவும் இங்கே வல்லாதிக்கத்தை நிறுவ முயற்சிக்கின்றன. இலங்கையின் ராஜபக்சே அரசு மட்டுமல்ல... எந்த அரசு வந்தாலும், இலங் கைப் பிரச்சினையை யாராலும் தீர்க்க முடியாது. வட கிழக்கில் தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து 40 லட்சம் மக்கள் உள்ளனர். இன்று இலங்கைப் பிரச்சினை சர்வதேச பிரச்சினையாக மாறியிருக்கிறது.

இலங்கையிலிருந்து வெறும் 33 கி.மீ. தொலைவில் இருக்கின்ற இந்தியாவின் சம்மதம் இல்லாமல் இலங்கை பிரச்சினைக்கு தீர்வு என்பதை எட்ட முடியாது. வட கிழக்கு மக்களின் நலனும் இந்தியாவின் நலனும் இணைந்த ஒரு தீர்வுதான் இலங்கைப் பிரச்சினையைத் தீர்க்கும்.

வட கிழக்கு நிர்வாகத்தின் சம்மதத்துடன்தான் இலங்கை அரசு, எந்த விஷயத்தையும் செயல்படுத்த முடியும் என்ற நிலை உருவாக வேண்டும். இதில் தான் இந்தியாவின் நலனும் அடங்கியிருக்கிறது. அந்த சமயத் தில்தான் மலையக மக்களின் பிரச் சினையும் பேசப்படும்...” என்றார்.

உண்மைதான்! இந்தியாவின் உதவியில்லாமல் இலங்கைப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைப்பது சிக்கலான விஷயம் தான். ஆனால் இந்தியாதான் அந்தத் தீர்வை நோக்கி நகராமல் இருக்கிறது.

Pin It