2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்திற்கும் தொடர்பு இருக்கிறது. அதனால் அவரையும் விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் சுப்பிரமணிய சுவாமி. அவ்வப்போது இப்படி முக்கியத் தலைவர்கள் மீது பரபரப்பை கிளப்பி மீடி யாக்களில் தலை காட்டுவதும், நீதிமன்றத்தில் வழக் குத் தொடர்ந்து நீதிமன்றத் தின் நேரத்தை வீணடிப்பதும் சுவாமிக்கு ஒரு ஹாபியா கவே இருக்கிறது.

பாட்டியாலா நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்திற்கு எதிராக சுவாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இதனை விடப் போவதில்லை. உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வேன்...'' என சூளுரைத்திருக்கும் சுவாமி,

தான் எதிர்பார்த்தபடி ப.சி. மீது ஊழல் குற்றத்தை சுமத்தி அவரை டேமேஜ் பண்ண முடி யாமல் போன விரக்தியில் சோனியா அம்மையார் மீது பாய்ந்திருக்கிறார்.

பல நாட்களாக ப.சி. மீது குற்றம் சுமத்தி மீடியாக்களில் பரபரப்பூட்டிக் கொண்டிருந்த நிலையில், அவரது மனுவை நீதி மன்றம் தள்ளுபடி செய்த செய்தி ஃப்ளாஷ் ஆனால் அது தனக்கு கேவலம் என நினைத்த சுவாமி பகீர் செய்தியாக - சோனியா என்னை கொலை செய்ய முயன்றார் என்று புதுக் குண்டைத் தூக்கிப் போட்டு தனக்கு ஏற்பட்ட கேவலத்தை மறைக்கப் பார்க்கிறார்.

2006ம் வருடம் ரேபரேலியிலும், லக்னோவிலும் இந்த கொலை முயற்சி நடந்தது எனக் கூறியுள்ளார் சுவாமி. 2006ல் நடந்த கொலை முயற்சி தொடர் பான முதல் தகவல் அறிக்கை களே தன்னிடம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ப.சி.க்கு சம்பந்தமில்லாத 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அவரைச் சிக்க வைக்க பிரயத்த னம் மேற்கொண்ட சுவாமி - சோனியா அவரை கொல்ல முயற்சித்த சம்பவத்திற்கு முதல் தகவல் அறிக்கையை வைத்துக் கொண்டிருக்கும் நிலையிலும் அமைதி காப்பாரா? இதுவே சுப்பிரமணிய சுவாமி புளுகுகி றார் என்பதற்கு சான்றாகத்தான் இருக்கிறது!

தவிர, முதல் தகவல் அறிக்கை கள் எல்லாம் குற்றம் செய்ததற் கான ஆதாரம் ஆகாது என்ப தும் சு. சுவாமிக்கு தெரியாத தல்ல... இருந்தும், சோனியா மீது கொலைக் குற்றச்சாட்டு சொல்லி அவரின் இமேஜை டேமேஜ் செய்ய முயற்சிக்கிறார்.

ஆனால் உள்ளபடியே பார்க்கப் போனால் சுப்பிரமணிய சுவாமியைப் போல அநாகரிகம் கொண்டவரல்ல சோனியா காந்தி. அரசியல் தளத்திலும் நாகரீகத்தை கடைபிடிப்பவர். இவரைப்போல கீழ்த்தரமான அரசியல் செய்பவரல்ல... அதோடு, சோனியாவை சு. சுவாமி கொல்ல முயன்றார் என்ற குற்றச் சாட்டு எழுந்திருந்தால் அதில் முகாந்திரம் இருக்கும் என்ப தற்கு சுப்பிரமணிய சாமியின் நடவடிக்கைகளை வைத்து தீர் மானிக்கலாம்.

காந்தியைக் கொன்ற ஆர். எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத் துவா அமைப்புகளுடன் நெருங் கிய தொடர்பில் இருப்பவர் சுவாமி. மதச்சார்பற்ற தன்மைக்கு எதிரானவர். இந்தியாவை ஹிந்துஸ்தானாக மாற்ற வேண் டும் என்ற கொள்கை உடையவர். இதற்காக எந்த வித கீழ்த்தர மான செயல்களிலும் இறங்கத் தயங்காதவர்.

இவையெல்லாவற்றிற்கும் மேலாக பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு வைத்திருப்பவர். அமெரிக்காவில் ஐ.எஸ்.ஐ. ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்.

இம்மாதிரியான நடவடிக்கை களுக்கு சொந்தக்காரரான சாமி, சோனியா தன்னைக் கொல்லப் பார்த்தார் என்றால் அதை யாரும் நம்ப மாட்டார்கள். சோனியாவைக் கொல்ல சு. சுவாமி முயற்சித்தார் என்று சொன்னால் நாட்டு மக்கள் அதில் சந்தேகப்படமாட்டார்கள் என்பதை சுவாமிக்கு யார் புரிய வைப்பது?

Pin It