ஆற்றில் போட்டாலும்
அளந்து போடு..
சொல்லிக் கொடுக்கப்பட்ட
பழமொழி
சரியாகச் சேரவில்லை
சாயப்பட்டறைக்காரர்களுக்கு..
கடல் வரை
நீட்ட உத்தேசித்து
கையறு நிலையாய்
கிடத்தியதுதான் மிச்சம்..
வயலும் இல்லாமல்
வாழ்வும் இல்லாமல்
வெளிநாட்டின்
மானம் காக்கும் உடைகளில்
காயடித்துக் கிடக்கிறது
கிழிக்கப்பட்ட தோலுடன்
சாயம் பூசி நொய்யல்.
Pin It