அன்னா ஹசாரே வின் போராட்டம் இரண்டு வாரங்க ளாக ஊடகங்களை ஆக்கிர மித்து வருகிறது. இவரை இரண்டாம் காந்தி என்றும், இரண்டாம் சுதந்திரப் போராட்டத்தை முன்னெ டுத்துள்ளார் என்றும் ஒரு சாரார் புகழ, இல்லை இவ ருக்குப் பின் காவியும் - பாவியும் (அமெரிக்காவும்) இருக்கிறது என்று ஒரு சாரார் கூறுகின்றனர்.

மற்றொருபுறமோ திரையில் அநீதியை அடித்து நொறுக்கும் கற்பனை நாயகனையே கண் கண்ட கடவுளாக நம்பும் மக்கள், நிஜத்தில் ஒருவர் ஒரு தீமையை எதிர்ப்பதாக காட்டிக் கொண்டால் விடுவார்களா? மக்கள் இவருக்கு பரவலாக தமது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். ஊழலை ஒழிக்க புறப்பட்ட தாக கூறப்படும் இந்த புலி, நாட் டின் மிக முக்கியமான மக்களின் உயிர் சம்மந்தப்பட்ட தீவிரவாதப் பிரச்சினையில் கண்மூடிக் கொண்டதே!

குஜராத்தில் முஸ்லிம்கள் கரிக் கட்டையாக்காப்பட்டபோது இந்த சமூக ஆர்வலர் ஹசாரே எங்கே போனார்? அதே மோடியை திறமையானவர் என்று ஹசாரே பாராட்டவும் தயங்கியதில் லையே? இதெல்லாம் தீவிரவாத விஷ யத்தில் இவருக்கு எந்த அக்கறை யுமில்லை என்று காட்டவில் லையா? ஊழல் ஏதோ இன்று நேற்று வந்துவிடவில்லை. பல நூறு ஆண்டுகளாக இந்த நாட்டில் வேரூன்றிப் போன ஒன்று. அதை இந்த மாதிரி திடீர் போராட்டங்க ளால் ஒழிக்க முடியாது. லஞ்சம் தரக்கூடாது என்ற உணர்வை முதலில் மக்களிடம் உண்டாக்க ஹசாரே போன்றவர் கள் முயற்சிக்க வேண்டும்.

அப்துல் கலாம் அழகாக சொன்னார்... லஞ்ச ஒழிப்பை உங் கள் வீட்டிலிருந்து தொடங்குங் கள் என்று! தமிழில் கூட சொல் வார்கள் எரிவதை பிடுங்கி விட் டால் கொதிப்பது தானாக அடங்கி விடும்' என்று! அதைப்போல் லஞ்சம் கொடுக்கும் மனநிலையில் உள்ள மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட ஹசாரே முயற்சித்தால் பாராட்ட லாம். அதைவிடுத்து, அரசையும் பாராளுமன்றத்தையும் ஒரு சேர மிரட்டும் வகையில் இவரது போராட்ட வியூகம் உள்ளது.

உண்ணாவிரத போராட்டம் மட்டு மன்றி பிரதமர் மற்றும் எம்.பி.க்கள் வீடுகளுக்கு முன்பாகவும் இவரது ஆதரவாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இதை தடுக்கும் நோக்கில் போலீசார் சில நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கு சீர்கெட் டால் நாடு என்னாகும் என்று இந்த ஹசாரே சிந்திக்க வேண் டாமா? லஞ்சத்தையும்- ஊழலை யும் ஒழிக்க ஏற்கனவே இருக்கும் சட்டங்கள் முறையாக கடைபிடிக் கப்பட்டாலே லஞ்சமும் - ஊழ லும் காணமல் போகும். இந்த சட்டங்கள் முழுமையாக மரணித்து விடவில்லை என்ப தால்தான் பலம் வாய்ந்த சில முன்னாள்கள் கூட சிறைக்கம்பி எண்ணுகிறார்கள்.

எனவே மக்களுக்கு புரியாத ஏதோ ஒரு சட்டத்தை கொண்டுவர, பாரதூர மான படம் காட்டும் ஹசாரே தனது முடிவை மாற்றவேண்டும்.. மேலும் இவர் காந்தியவாதி என்றால், உண்ணாவிரதம் மட்டும் காந்தியம் அல்ல; மாறாக சாத்வீக அணுகுமுறையும் காந்திய வழியே என்பதை உணர வேண் டும். இந்த விசயத்தில் ஹசா ரேவை மட்டும் குற்றம் சொல்லிட முடியாது. ஹசாரே- ராம்தேவ் போன்றவர்கள் மிரட்டுவதும் அதற்கு பணிவதும் மத்திய அரசின் வாடிக்கையாக உள் ளது. இவர்கள் போராட்டத்திற் காக அரசே அனுமதித்து, தளம் அமைத்து பாதுகாப்பும் அளித்து வருகிறது.

உண்மையான நோயாளிகளுக்கு நாட்டில் உள்ள மருத்து வமனைகளில் வைத்தியம் பார்க்க மருத்துவரில்லை. ஆனால் பிடிவா தத்திற்கு பட்டினி கிடக்கும் இவ ரைக் கவனிக்க பல மருத்துவர் கள் இருபத்தி நான்கு மணிநேர மும் ஏற்பாடு செய்வது என மத் திய அரசு ஒரு கோழைத்தனமான செயல்பாட்டுடன் நடந்து கொள் கிறது. நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய எந்த சட்டமாக இருந் தாலும் அதை பெறும் உரிமை ஜனநாயக முறையில் பாரளுமன்றம் - சட்டமன்றத்திற்கே உள்ள நிலையில், தனி மனிதர்களின் பிடிவாதங்களுக்காக சட்டமியற் றும் நிலை நாட்டில் உருவாவது அரசியல் சாசனங்களுக்கு அழ கல்ல என்பதை அரசும், ஹசாரே ஆதரவாளர்களும் புரிந்து கொண்டு மக்களின் சுபிட்ச வாழ்க்கைக்கு வழிகான வேண் டும் என்பதே அமைதியை விரும் பும் மக்களின் அவா.

Pin It