வந்தே மாதரம், பாரத் மாதா கீ ஜெய் என்கிற முழக்க த்தை முன் வைத்து போராட் டம் நடத்தி வரும் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவ ளிக்க வேண்டாம். அவரை விட்டு முஸ்லிம்கள் விலகி இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் டெல்லி ஜமா மசூதியின் ஷாஹி இமாம் சையத் அஹ்மத் புஹாரி.

கடந்த 22ம் தேதியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்திருக் கும் இமாம் புஹாரி, “தேசத் தையோ, நிலத்தையோ வணங்கு வதை இஸ்லாம் தடை செய் கிறது. அவற்றை வணங்கினால் இஸ்லாம் ஒருபோதும் மன்னிப்ப ளிப்பதில்லை.

ஏன், தன் குழந்தையை கருவ றையில் வைத்து போற்றி வளர்க் கும் தாயைக் கூட வணங்கினால் இஸ்லாம் மன்னிக்காது. இந்நி லையில் இஸ்லாத்தின் அடிப்ப டைத் தத்துவதத்திற்கு வேட்டு வைக்கும் வகையிலான முழக்கங் களை முன் வைத்து கிளர்ச்சியில் ஈடுபடும் அன்னா ஹசாரேவோடு முஸ்லிம்கள் எப்படி கை கோர்க்க முடியும்? அதனால் அன்னா மூவ்மெண்ட்டை விட்டு விலகியிருக்குமாறு முஸ்லிம்க ளுக்கு அறிவுறுத்துகிறேன்...'' என்று தெரிவித்திருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர்களிடம் நெருக்கமோ, உறவோ பாராட் டாத இமாம் புஹாரி, “அன்னா ஹசாரேவின் போராட்டம் முஸ்லிம்களை தனிமைப்படுத்தக் கூடியது என்று ஆஃப் த ரிக்கார் டாக சில காங்கிரஸ் தலைவர்கள் என்னிடம் விளக்கமளித்தார்கள். ஆயினும் அவர்கள் இதை வெளிப் படையாக பேச முடியாது...'' என்று தெரிவித்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது.

மேலும், “நூற்றாண்டு கால மாக முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்து வரும் வந்தே மாதரம் குறித்த விவாதத்தை அன்னாவின் போராட்ட அழைப்பு நீர்த்துப் போகச் செய்து விடும்...'' என்று எச்சரிக்கும் புஹாரி, “ஊழலை விட மதவாதம், வகுப்பு வாதமே இந்த நாட்டை நாசப்படுத்தக் கூடியது. அதனால் அன்னா ஹசாரே தனது போராட்ட திட் டத்தில் மதவாதத்தையும் சேர்த் துக் கொண்டு போராட்ட அழைப்பு விடுத்தால் அன்னா வின் போராட்ட நோக்கத்தில் இருக்கும் நியாயத்தை ஏற்றுக் கொள்வேன்...'' என்றும் தெரிவித் திருக்கும் புஹாரியிடம்,

“இதுபோன்ற மாபெரும் பேரணிகளை நடத்த அன்னா ஹசாரே எங்கிருந்து நிதியாதா ரம் பெறுகிறார்...?'' என டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் நிரு பர் கேட்க, “ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவின் கட்டளைப்படியே அன்னா அரசியல் களமாடுகி றார்...'' என "பட்'டென பதிலைத் தந்திருக்கிறார் புஹாரி.

அன்னா ஹசாரே இதற்கு முன் தொடங்கிய லோக்பால் போரா ட்டத்தின்போது - மோடியை புகழ்ந்து பேசியதை - அன்னா வோடு அப்போது களம் கண்ட சமூக சேவகர் மேத்தா பட்கர், “அன்னா அரசியல்வாதிகளைப் போல பேசக் கூடாது. மதவாதத் திற்கு துணை போகக் கூடாது. மோடியைப் பற்றி அன்னா கருத்து சொன்னது தேவையற் றது...'' என்று கண்டனம் தெரிவித் திருந்தார்.

ஆனால், தற்போதைய போராட்டத்தின்போது மிக கவ னமாக ஆர்.எஸ்.எஸ்., பாஜக உள் ளிட்ட சங்பரிவாரங்களைக் குறித்து எவ்வித கருத்தையும் ஹசாரே தெரிவிப்பதில்லை.

அன்னாவின் இந்த கவனமிக்க உஷார்தனமே அவரை சங்பரிவா ரங்கள்தான் இயக்குகின்றன என்பதை நமக்கு சொல்லாமல் சொல்கின்றது.

- ஃபைஸ்

Pin It