மத்தியப் பிரதேசம் குவாலியரில் 1924ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 25இல் பிறந்த அடல் பிகாரி வாஜ்பாய் 93 ஆண்டுகள் 7 மாதங்கள் 23 நாள்கள் வாழ்ந்து, 16.8.2018 மாலை 5.05 மணிக்கு தம் 93ஆம் அகவையில் மறைவுற்றார்.

அவர் 1957 முதல் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

1977இல் சனதா கூட்டணி வெற்றி பெற்ற போது, மொரார்ஜி தேசாய் தலைமையில் கூட்டணி அமைச் சரவை அமைந்தது. அந்த அமைச்சரவையில் வாஜ்பாய் அயல்நாடுகள் விவகார அமைச்சராகப் பணியாற்றி னார்.

1980ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் காங்கிரசு வெற்றி பெற்றது.

vajbhai 3501984 இந்திராகாந்தியும், 1991இல் மே இல் இராஜீவ் காந்தியும் கொலையுண்ட பிறகு, பி.வி. நரசிம்மராவ் 5 ஆண்டுகள் இந்தியாவின் பிரதமராக இருந்தார். 1996இல் நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும் பாரதிய சனதா கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.

1996 மே 16 அன்று, வாஜ்பாய் பிரதமராகப் பதவி ஏற்றார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.

1998 மார்ச்சு 18இல் பிரதமராகப் பதவி ஏற்றார். இது இரண்டாவது தடவை. 17.4.1999இல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், ஒரு வாக்கில் தோற்றார்.

1999 ஆண்டே நடைபெற்ற தேர்தலில் பெரும் பான்மை பெற்று, மூன்றாந்தடவை பிரதமர் ஆனார்.

தம் ஆட்சிக்காலத்தில் 1998 மே மாதம் 11 மற்றும் 13ஆம் நாள்களில் இராஜஸ்தான் மாநிலம் பாலை வனத்தில் பொக்ரான் என்ற இடத்தில் துணிச்சலாக அணுகுண்டை வெடிக்கச் செய்து, சோதனை செய்தார். இதனால் பாகித்தானும் சில அணுகுண்டுகளை வெடிக்கச் செய்து, இந்தியாவை அச்சுறுத்தியது. அமெரிக்கா பொரு ளாதாரத் தடையை விதித்தது.

இந்தியா மீது பாக்கித்தான் கார்கிலில் தொடுத்த  போரில், முதலில் பின்வாங்கும்படி அன்பாகக் கேட்டார்; பாகித்தான் பிடிவாதமாகப் போரிட்டது. இந்தியப் படைகள் பாக்கித்தான் படைகளை ஓட, ஓட விரட்டின.

இவ்வளவுக்கும் இடையே பாக்கித்தானுக்குப் பேருந்துப் பயணத்தில் பிரதமர் வாஜ்பாயியே பங்கேற் றார்.

இந்தியாவில் பி.வி. நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது 6.12.1992 அயோத்தியில், எல்.கே. அத்வானி குழுவினர் பாபர் மசூதியை இடித்தனர். அதை இந்துத்வா, ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பலர் ஆதரித்தனர். ஆனால் வாஜ்பாய் அதற்குத் தம் எதிர்ப்பைத் தெரிவித்தார். அவர் இந்து மதவெறியர் அல்லர்.

அயோத்தி மசூதி இடிப்பை ஒட்டி, கோத்ரா இரயில் நிலைய கலவரச் சம்பவம் நடந்தது.

அதை முன்வைத்து குசராத்தில் முதலமைச்சர் நநேரந்திர மோடி அரசால் முசுலிம்கள் பலர் கொல்லப்பட்டனர். இக்கொலையைக் கண்டித்து, “குசராத்தில் ராஜதர்மம் இல்லை” என வெளிப்படையாகக் கண்டித் தார், வாஜ்பாய். அவர் அத்தகைய நேர்மையாளர்.

வாஜ்பாய் தம் பதவிக்காலத்தில் தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தை எல்லா மாநிலங்களிலும் அறிமுகப்படுத்தினார். இது ஒரு பயனுள்ள பணி.

2009 முதல் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட வாஜ்பாய், அதிலிருந்து மீளவே இல்லை. கடந்த 9 வார காலம் தில்லியில் எய்ம்ஸ்(AIMS) மருத்துவமனை யில், மருத்துவம் பெற்ற பிறகு, 16.8.2018 வியாழன் மாலை 5.05 மணிக்கு உயிர்நீத்தார், வாஜ்பாய்.

வாழ்க நேர்மையாளர் வாஜ்பாய் புகழ்!

Pin It