இரா. குசேலர், பேரா. பொற்கோ, எசு.வி. இராசதுரை, கு.இராமகிருட்டிணன், பல்லடம் மாணிக்கம், ஞானி பங்கேற்ற கோவை - சூலூர் விழா!

தோழர் வே.ஆனைமுத்து 1947 ஆம் ஆண்டு முதல் எழுதிய படைப்புகள் 16 தொகுதிகளும் அவர் பதிப்பித்த 5 நூல்களும் அடங்கிய 21 தொகுதி பெருந் தொகுப்பு வெளியீட்டு விழா கோவை-சூலூரில் 13.10.2012 காரி (சனி)க்கிழமை பெருஞ்சிறப்புடன் நிகழ்ந்தது.

சூலூர் அரிமா அரங்கில் மதியம் 2 மணிக்குத் தொடங்கிய விழா தமிழகம் முழுவதுமிருந்து வெள்ள மெனத் திரண்ட கொள்கைக் குடும்பங்களின் அறிவுத் திருவிழாவாக இரவு 9 மணி வரை தொடர்ந்தது. சூலூர் பாவேந்தர் பேரவைத் தோழர்கள் விழா ஏற்பாடுகளை விரிவாகச் செய்திருந்தனர்.

புதுவை சீனு. அரிமாப் பாண்டியன் வரவேற்க, புலவர் செந்தலை ந.கவுதமன் தலைமையுரையுடன் விழா தொடங்கியது.

தாம்பரம் மா.சுப்பிரமணி, சூலூர் க.தேவராசு, மு.க. புதூர், சி. பொன்னுசாமி முன்னிலை வகித்தனர்.

தொழிற்சங்கத்தலைவர் இரா.குசேலர், பேராசிரியர் பொற்கோ, எசு.வி.இராசதுரை, கு.இராமகிருட்டிணன், கோவை ஞானி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் தூத்துக்குடி ந.தனசேகரன், பேரா. கனல் மைந்தன், பாவலர் இரணியன், துரை.மடங்கன், இரா.பச்சமலை, கலசம், முகிலன், பாவலர் தமிழேந்தி, பேரா. சேமா.இராசேந்திரன், சீனு, தமிழ் மணி, காஞ்சி சி. நடராசன், ஆ.முத்தமிழ்ச் செல்வன் முதலி யோர் 21 நூல் தொகுதிகளையும் வெளிட்டுச் சிறப்பித்தனர்.

திருமுதுகுன்றம் தமிழ் நூலக நிறுவநர் பல்லடம் மாணிக்கம் வெளியீட்டுரையாற்றியதோடு, நூல் வெளியீட்டுப் பணிக்குப் பத்தாயிரம் உரூபா நன்கொடை வழங்கினார்; நூலாசிரியர் வே.ஆனைமுத்து, தொகுப்பு ஒருங்கிணைப் பாளர் செந்தலை ந.கவுதமன் இருவருக்கும் ஆடை போர்த்திச் சிறப்பு செய்தார். பாவலர் வையவன் இரண்டாயிரம் உரூபா நன்கொடை வழங்கினார்.

வழக்கறிஞர்கள் சூலூர் சு. தமிழரசன் கலையரசன் இருவரும் நூல் வெளியீட்டு முயற்சிக்கு மூன்று இலக்கம் உரூபா வட்டியில்லாக் கடனாக வழங்கினர்.

நூலாசிரியருக்கு உறையுள் வழங்கிப் பேணிய சூலூர் ப.பத்மநாபன்-கிரிசா இணையரும் உணவு வழங்கிப் புரந்த சீ.இளவரசன், அவர் தாயார் பூங்கொடி கிருட்டிணசாமி ஆகியோரும் பொன்னாடை போர்த்திச் சிறப்பிக்கப்பட்டனர்.

தோழர் வே.ஆனைமுத்து 25.02.2010 ஆம் நாள் உடல் நலம் குன்றிச் சாவின் விளிம்பில் நின்ற போது, உடனடியாய் மருத்துவமனையில் சேர்த்து அவர் உயிரை மீட்ட சூலூர் பாவேந்தர் பேரவைத் தோழர்கள் க.தேவராசு, ஆ.ம.சரவணகுமார் இருவரும் அவையோரின் மகிழ்ச்சி ஆராவாரத்தோடு பொன்னாடை போர்த்திச் சிறப்பிக்கப் பெற்றனர்.

‘கருத்துக்கருவூலம்’ பதிப்புப் பணிக்கு முதுகெலும் பாய் நின்ற ஆ.முத்தமிழ்ச்செல்வன், எழுத்துக்கோப்புச் செய்த கோவை ‘அய்ரிசு வரைகலை’ அரங்க. இராசாராமன், மெய்ப்பாக்கம் பார்த்த வே.மு.பொதிய வெற்பன், அச்சாக்கத் துணைபுரிந்த புதுவை சீனு. தமிழ்மணி ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கி சிறப்புச் செய்யப்பட்டனர்.

கோ.கோதண்டராமன், சி.பெரியசாமி, இரா.திருநாவுக்கரசு, வரகூர் மா.நாராயணசாமி, அரங்க. சானகிராமன், வாலாசா வல்லவன், புலவர் இரா.கலியமூர்த்தி, தி.துரைசித்தார்த்தன், மோ.சி.சங்கர், சூ.செ.குமரவேல், ஆ.கு.ஆறுமுகம், பொ.சுப்பிர மணி, வ.பா.மோகன், இரா.கலியபெருமாள், முத்து.அன்பழகன், இரா.இரவி முதலியோர் 21 நூல் தொகுதிகளின் முதற்படி களை விழா மேடையில் பெற்றுக் கொண்டனர்.

புலவர் கி.த.பச்சையப்பன், ம.தி.மு.க. வெளியீட்டுச் செயலாளர் ஆ,வந்தியத்தேவன், கருத்துரை வழங்கினர். கி.மா.கனகராசன் விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங் கினார். கோவை மாவட்டச் சார்பில் ‘கருத்துக்ரு வூலம்’ நூறு தொகுப்புகளுக்கான முன்பதிவுத் தொகைக் காசோலையைச் சூ.செ.குமரவேல், சூ.இல.சுந்தர பாண்டியன் முதலியோர் வழங்கினர்.

நூலாசிரியரின் பொதுவாழ்வுப் பணிச் சிறப்பைப் போற்றும் வகையில் சூலூரில் ‘தோழர் வே.ஆனைமுத்து அவைக்கூடம்’ நிறுவியுள்ள ஆசிரியர் மு.நடராசன் விழாவில் பாராட்டிச் சிறப்பிக்கப் பெற்றார்.

தோழர் வே.ஆனைமுத்து அவர்களின் அறிவுப் பேருழைப்பைப் பாராட்டிச் சூலூர் பாவேந்தர் பேரவை சார்பில் ‘பெரியார் மற்றும் ஆனைமுத்து’ ஆள் உயர ஒளிப்படங்கள் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டன. பேரவைப் பொறுப்பா ளர்கள் வெ.க.சண்முகவேல், சூ.நா.வரதராச, ச.அங்கமுத்து ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கியபோது அவை மகிழ்ச்சி யால் நிரம்பியது.

விழா நிறைவாக, நூலாசிரியர் தோழர் வே.ஆனைமுத்து ஏற்புரை வழங்கினார்.

பெரியார் நூல் வெளியீட்டகம் சார்பில் ஆனை. பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

அறுபதாண்டுகளுக்கு மேலாக எழுதிவரும் ஆனைமுத்து அவர்களின் எழுத்துக்கள் அனைத்தும் ‘கருத்துக் கருவூல’ மாகக் கைக்குக் கிடைத்துவிட்ட பெரும்மகிழ்ச்சி, விழாவி லிருந்து விடைபெற்ற ஒவ்வொருவர் முகத்திலும் தெரிந்தது.

- சூ.நா.வரதராசு, செயலர், சூலுர்-பாவேந்தர் பேரவை, கோவை

Pin It