மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு, வணக்கம்.

அறிஞர் சங்கமித்ரா அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு ஆறாத் துயருற்றோம். தமிழினம் தன் ஒப்பற்ற வழிகாட்டிகளை இழந்து கொண்டுள்ளதே என்று எண்ணும்போது துயரிருள் ஒன்று மனத்தை அழுத்துகிறது.

சங்கமித்ரா அவர்கள் கூர்மையான சிந்தனையாளர்; பகையைப் பகையாகவே பார்க்கின்ற நெஞ்சுரம் வாய்க்கப்பெற்றவர்; எந்த நிலையிலும் இனப்பகை யுடன் இணக்கம் கொள்ளவோ, விட்டுக்கொடுக்கவோ முன்வராதவர்; கண்ணின்று கண்ணறப் பேசும் கூர்மையான நாவினர்.

அவருடைய அறிவு உலகளாவியது. இந்தியாவின் பல்வேறு தேசிய மொழியினரோடு வாழ்ந்து பழகி, அவர்களின் மொழிகளையும், பண்பாடுகளையும் கற்று உணர்ந்து, அவர்களிடமிருந்து நாம் கற்றுணர வேண்டியவற்றை அரிய நூல்களாகவும் கட்டுரை களாகவும் வடித்து அளித்திருக்கிறார். இந்தியிலும் ஆங்கிலத்திலும் நல்ல திறமை கொண்டவர். வடமாநி லங்களிலும் உழைக்கும் மக்களிடம் ஓர் அறிவெழுச் சியை ஏற்படுத்திய ஆற்றலாளர் அவர். தமிழருக்கு மட்டுமன்றி, அனைத்து மாநிலங்களிலுமுள்ள உழைக்கும் மக்களுக்கும், பெண்களுக்கும் பிராமணியம் புரிந் துள்ள கேடுகளைப் பிராமணர்களே நடுங்கும்படியாக விளக்கிச் சொன்னவர் அவர்தாம். தம் வாழ்நாள் முழுவதும் பிராமணியத்திற்கு எதிராக அவர் விடாமல் போராடிக் கொண்டிருந்தார். பிராமண நச்சு அரவங் களால் அவர் பலமுறை கடிக்கப்பட்டிருக்கிறார். இந்தக் கடிகளால் அவர் அடித்த அடிகள் இளைத்துவிட வில்லை. பகைமையைத் தாக்கும் போது, நயத்தக்க நாகரிகச் சொற்களை ஒதுக்கிவைத்துவிட்டு, மூர்க்க மான சொற்களால் அலறத்தாக்கிப் பகையை நடு நடுங்கச் செய்து வந்தார்.

விடுதலையிலும், உண்மையிலும், சிந்தனை யாளனிலும், தாமே சொந்தமாக அவர் நடத்திய இதழ்களிலும் அவர் எழுதி வந்த கட்டுரைகளைப் படிப்பதற்கு, படித்துச் சுவைப்பதற்கு, சுவைத்துச் சிந்திப் பதற்கு ஒரு பெரும் பட்டாளமே இருந்தது. பெரி யாருக்கு நிகரான மனத்துணிவுடன் உண்மைகளைப் பேசியவர்; உண்மைகளைப் போட்டு உடைத்தவர் அவர்.

அவருடைய இலக்கியப் படைப்புத்திறன் வியக்கத் தக்கது. படைப்பிலக்கியப் புலத்தில் அவர் அதிகம் நாட்டம் செலுத்தியிருப்பாரானால், உலகம் வியக்கும் கதைகளையும் புதினங்களையும் அவர் படைத்தளித் திருக்க முடியும். நிகழ்ச்சிகளை அவர் எடுத்து விளக் கும் பாங்கு நெஞ்சை அள்ளக்கூடியது. பா. இராம மூர்த்தி என்னும் தம் சொந்தப் பெயரில் அவர் வெளி யிட்டிருக்கும் நூல்கள் இந்த உண்மைக்குச் சான்று பகர்வன.

சங்கமித்ரா மிகச்சிறந்த சமூக வரலாற்றறிஞர். இந்தியாவின் பல்வேறு குலங்கள், குக்குலங்கள் இவற் றின் மரபுகளை ஆராய்ந்தவர். பல சிற்றரசுகள் பேரரசு கள் பற்றிய எண்ணற்ற அரிய செய்திகளை அறிந்து வைத்திருந்தவர். சமூக இயங்குமுறையின் நுட்பங் களை அறிந்தவர். இந்தியாவிலும் தமிழகத்திலும் அரசியலைத் தொழிலாகக் கொண்டு, போலிகள் பலர் நடத்திவரும் கொள்கைகளை, அழிம்புகளை அம்பலப் படுத்தி வந்தவர். போலித் தமிழ்த் தலைவர்களால் தமிழினத்திற்கு நேர்ந்த கேடுகளை அம்பலப்படுத்தி உரத்துப் பேசியவர்.

உண்மையான தமிழறிஞர்களை, மக்களுக்காகச் சிந்திக்கும் அறிவியல் மேதைகளை, மக்களுக்கான தலைவர்களை, தமிழின நலம் விளைக்கும் உண்மைத் தலைவர்களை அடையாளம் கண்டு போற்றியவர் அவர். நமது மண்ணும், நீர்நிலைகளும், இயற்கை யும் காக்கப்பட வேண்டியதன் தேவையை விளக்கிப் பேசிவந்தவர் அவர். மாசுபடாத இயற்கையும் நஞ்சு கலவாத உணவும் மண்ணுக்கும் மக்களுக்கும் உயிர்க்குலத்திற்கும் தேவை என்று போராடி வந்தவர் அவர்.

கொஞ்ச நாட்களே பழகினாலும், ஒத்த கருத்துள்ள வர்களுடன், மக்கள் நலத்திற்காகச் சிந்திப்பவர்களு டன், மனிதநேயம் கொண்டோருடன், உண்மைத் தமிழுணர்வாளர்களுடன் அவர் ஏற்படுத்திக் கொள் ளும் நெருக்கமும் உறவும் நெஞ்சை நெகிழ்விக்கக் கூடியன.

அந்த மாமகனின் மறைவால் பல்லாயிரம் தமிழ் நெஞ்சங்களில் பெரும் துன்ப இருள் படிந்துவிட்டது; விளக்க முடியாத வேதனை நெஞ்சை அடைக்கிறது. பெருக்கெடுக்கும் எம் கண்களின் நீர்த் திவலைகளைச் சிந்தனையாளன் இதழ்மூலம் அந்த மாமகன் திருவடிகளுக்குப் படையலாக்குகிறோம்.

தங்கள் அன்புக்குரிய

இரணியன் மற்றும்

அனைத்துத் தமிழிய, பெரியாரியக்கத் தோழர்கள்

கோவை

Pin It