I.அமெரிக்காவில் குடியேறிய பிரிட்டானியர்கள், பிரிட்டானியக் குடியேற்ற ஆதிக்கத்தை எதிர்த்து, 13 குடியேற்றங்கள் ஒன்றிணைந்து விடுதலைப் போராட் டத்தில் ஈடுபட்டன; வென்றன. 1777இல் 13 நாடுகள் ஒன்றுகூடி அமெரிக்கக் கூட்டாட்சி அமைப்பை உருவாக்கின. 1789இல் இறுதியான அமெரிக்கக் கூட்டாட்சி வடிவம் பெற்றது.

II.அமெரிக்கக் கூட்டாட்சி ஸ்விஸ் மக்களைக் கவர்ந்தது. 1848இல் சுவிட்சர்லாந்தில் கூட்டாட்சி அரச மைப்பு எழுதப்பட்டது. பிறகு பல்லின அலகுகளைக் கொண்ட அரசமைப்பு 1874இல் வரையப்பட்டது. 2014இலும் அது நீடிக்கிறது.

III . இரஷ்யாவில், இலெனின் 1905இல் தொடங் கிய சனநாயகப் புரட்சி 1907இல் தோற்றது.

கூட்டாட்சி உருவாகத் தடையாக

1. பிராந்திய மொழிச் சிக்கல் இருப்பதை 1912 இல் லெனின் அடையாளம் கண்டார். இரஷ்ய மொழி ஆதிக்கம் செலுத்தாது என்று பல மொழி மக்களுக்கும் உறுதி கூறினார். “ஒடுக்கப்பட்ட தேசிய இனமக்களே, ஒன்றுசேருங்கள்!” - “All Oppressed Nations, Unite!” எனக் குரல் கொடுத்தார்.

2. சிறு விவசாயிகளும், சிறுவணிகர்களும் குட்டி பூர்ஷுவாக்கள் அல்ல - என 1914இல் இலெனின் உணர்ந் தார். எனவே, “தொழிலாளர்களே, சிறு விவசாயி களே, ஒன்றுசேருங்கள்”- “Workers and Peasants Unite!” என லெனின் முழங்கினார். இதன் விளைவாகத்தான் 1917 நவம்பரில் இரஷ்யப் புரட்சி வெற்றி பெற்றது. 1917இல் இரஷ்ய சோவியத் சோஷலிசக் குடிஅரசு (Russian Soviet Federal Socialist Republic-RSFSR) அமைக்கப்பட்டது. அதுவே 1923இல், “சோவியத் சோஷலிட் குடிஅரசு ஒன்றியம்” (Union of Soviet Socialist Republic - USSR) என இறுதி வடிவம் பெற்றது. 1924இல் இலெனின் மறைவுற்றார். அதன் பின்னர் படிப்படியாகத் தளர்வடைந்து 1991இல் இரஷ்யக் கூட்டாட்சி மறைந்தது.

IV. சோவியத்து நாட்டுச் சமதர்மக் கொள்கைக்கு ஆட்படாமல் தப்பித்துக் கொள்வதற்காகத்தான்(to escape from Red Danger), ஏற்கெனவே தனிச் சுதந்தர நாடுகளாக இருந்து சில சமயங்களில் தங்களிடையே போரிட்டுக் கொண்ட 28 சிறு சிறு அய்ரோப்பிய நாடு கள், ஒன்றாக இணைந்து “அய்ரோப்பிய ஒன்றியம்” (European Union) என்ற பெயரில் ஒரு கூட்டாட்சியை அமைத்துக் கொண்டன. அய்ரோப்பிய ஒன்றியம் முழு வதிலும் செல்லுபடியாகக் கூடிய “யூரோ” என்கிற பொது நாணயத்தை (பணம்)யும் உருவாக்கிக் கொண்டன.

இந்தியாவில் உண்மையான கூட்டாட்சி

V. இனவியல் ஆய்வுப்படி இன்றைய இந்தியாவில் உள்ள 127 கோடி மக்கள் ஒரே இனத்தவராக இல்லை. அதற்கு மாறாக ஆறு இனங்களாக - 1) நீக்ராய்டு, 2) மங்கோலாய்டு, 3) ஆஸ்ட்ரிக்ஸ், 4) மேற்கு பிராச்சி செப் பல்ஸ், 5) திராவிடர்கள், 6) நார்டிக் ஆரியர்கள் என ஆறு இனத்தினர் உள்ளனர்.

VI. இந்தியாவிலுள்ள 127 கோடி மக்களும் ஒரே மொழியைத் அதற்கு மாறாக - இந்திய அரசமைப்புச் சட்டத்தில், 2003 வரை, பட்டியலிடப்பட்டுள்ள பதினெட்டு (18) மொழிகளைத் தாய்மொழிகளாகக் கொண்டிருக்கிறார்கள்.

அரசமைப்பில் பட்டியலிடப்பட்டுள்ள 18 மொழி களை மட்டும் பட்டியலிட்டப்பட்டுள்ள மொழிகள்:

1. அசாமி, 2. பெங்காலி, 3. குசராத்தி, 4. இந்தி, 5. கன்னடம், 6. காஷ்மீரி, 7. கொங்கணி, 8. மலையாளம், 9. மணிபுரி, 10. மராத்தி, 11. நேபாளி, 12. ஒரியா, 13. பஞ்சாபி, 14. சமஸ்கிருதம், 15. சிந்தி, 16. தமிழ், 17. தெலுங்கு, 18. உருது முதலானவை.

மேலேகண்ட மொழிகளை அல்லாமல், குறைந்த எண்ணிகை கொண்ட மக்களால் பேசப்படும் மொழிகள் நூற்றுக்கணக்கில் உள்ளன.

இப்படியாக இன்றைய இந்தியா என்பது பல இனங் களை உள்ளடக்கிய - பல மொழிகளைப் பேசும் கோடிக் கணக்கான மக்களைக் கொண்ட ஒரு துணைக் கண்ட மாக விளங்குகிறது; இந்தியா ஒரு நாடாக இல்லை.

இந்தியாவில் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டிருக்காதவர்களே அதிக விழுக்காட்டில் இருக்கிறார்கள். இவர்களுக்கும் சேர்த்து ‘இந்தி’ என்கிற ஒரு மொழி மட்டுமே-இந்திய அரசின் ஆட்சி மொழி அல்லது அலுவல் மொழி (Official Language) என்று அரசமைப்புச் சட்டத்தில் இருப்பது அநீதியானது; இந்தி பேசாத மக் களின் பேரில் இந்தியைத் திணிப்பது; இந்திபேசாத - ஒவ்வொரு பிறமொழி பேசுகிற குடிமகனின் உரிமை யையும் தட்டிப்பறிப்பது. இது அடாதது.

இந்தி பேசாத மக்கள் விரும்புகிற வரையில் இந்தி யுடன் ஆங்கிலமும் இணை ஆட்சி மொழியாக நீடிக் கும் என்று, பிரதமர் நேரு 1959இல் தந்த உறுதி மொழியானது, இந்தி பேசாத மக்களின் பேரில் அந்நியரின் ஆங்கில மொழியைத் திணிக்கிறது; இந்தி பேசாதவரின் தாய்மொழியும் இந்திய ஆட்சிமொழி அல்லது அலுவல் மொழி ஆகிற அடிப்படை உரிமையைப் பறிக்கிறது.

ஏழு கோடித் தமிழரின் உரிமையைப் பறிக்கிறது. பல கோடி மக்கள் திரளால் பேசப்படும் கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடிசா, பங்களா, பஞ்சாபி என - அரசமைப்புச் சட்டத்தில் பட்டியலிடப்பட்ட மொழி களைப் பேசும் - அதிக விழுக்காட்டிலுள்ள மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கிறது; இந்தி பேசும் மக்களுக்கு முழுக் குடிஉரிமையையும், இந்தி பேசாத மக்களுக்கு இரண்டாந்தரக் குடியுரிமையையும் அளித்து, இந்தி பேசாத மக்களை அடிமையாக்குகிறது.

வெள்ளையன் நம்மை அடிமைகளாக வைத்திருக்க வேண்டி, அவனுடைய தாய்மொழியான ஆங்கிலத்தை ஆட்சிமொழியாக - அலுவல் மொழியாக - நீதிமன்ற மொழியாகத் திணித்தான்.

இன்று வெள்ளையனையும் மிஞ்சுகிற தன்மையில், இந்தி மொழியை இந்தி பேசாதோர் மீது இந்திய ஒற்றை ஆட்சி திணிக்கிறது; ஒற்றை ஆட்சிக்கான அரசமைப்புச் சட்டத்தில் அதற்கான அதிகாரத்தைக் கெட்டியாக வைத்துக் கொண்டு இந்தி பேசாத மக்களை அடிமைகளாக ஆக்குகிறது.

எனவே, இன்றைய ஒற்றை ஆட்சி அரசமைப்பை அடியோடு மாற்றுவோம்!

உண்மையான கூட்டாட்சிக்கான அரசமைப்பை உருவாக்குவோம்!

இந்தி பேசாத மக்களை ஒன்றுதிரட்டிப் போராடுவோம்; வாருங்கள்!

Pin It