இந்திய அரசமைப்புச் சட்டம் 1950 முதல் நடை முறைக்கு வந்த பின் உயர், உச்சநீதிமன்றங்களில் பல வழக்குகளில் பல்வேறுவிதமான தீர்ப்புகள் வெளி வந்துள்ளன. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவு ரையில் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு நோக்கங்களில், சமுதாய, பொருளாதார, அரசியல் நீதியைப் பெற்றுத் தருவது (Justice, Social, Economic and Political), சமநிலை, வாய்ப்பு (Equality of Status and of Opportunity)அனைவருக்கும் கிடைக்கச் செய்வது போன்றவை இரண்டு முதன்மையான கருத்துகளாகக் கூறப்பட்டுள்ளன.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 14 தொடங்கி 35 வரை 21 பிரிவுகள் மக்களுக்கு அடிப் படை உரிமைகளை (Fundamental Right) வழங்கு கின்றன. 14ஆம் பிரிவு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கருத்தை வலியுறுத்துகிறது. இன, மொழி, மத பாகுபாடுகளைக் கடந்து பேச்சுரிமை, எழுத்துரி மை, கூட்டம் நடத்தும் உரிமை, கல்வி, பண்பாட்டு உரிமைகள் என எல்லா மானுட உரிமைகளும் இந்தப் பிரிவுகளில் சுட்டப்பட்டுள்ளன. அரசுக்கு வழிகாட்டும் நெறிகளை (Directive Principles of State Policy) 36 முதல் 51 வரை உள்ள பிரிவுகள் விளக்குகின்றன. மேற்கூறிய சட்டவிதிகளின்படி அரசும், நீதிமன்றமும் நேர்மையாகச் செயல்பட்டிருக்குமானால் நாட்டில் பல கொலைக் குற்றங்கள் உட்பட பல வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைத்திருக்கும். மனித உரிமைகள் போற்றப் பட்டிருக்கும் என்று பல சட்ட வல்லுநர்கள் குறிப்பிட்டுள் ளார்கள்.

1976ஆம் ஆண்டு நெருக்கடி நிலையின் போது கொண்டு வரப்பட்ட 42ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் 51(ஏ) பிரிவு 10 அடிப்படைக் கடமைகளைச் (Fundamental Duties) சுட்டுகிறது. 8வது கடமையாக, ஆய்வு மனப்பான்மை, அறிவியல் உணர்வு, சீர்திருத் தம் (to develop the Scientific temper, humanism and the spirit of inquiry and reform) ஆகியன வலியுறுத் தப்படுகின்றன. இந்த எட்டாவது கடமையில் குறிப் பிட்டுள்ளபடி, நீதி வழுவாது, அரசமைப்புச் சட்ட நெறி களின்படி மக்களுக்குக் குறிப்பாக, ஏழை, பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட் டுள்ளதா? என்ற கேள்விகள் எழுகின்றன.

சில ஆய்வாளர்கள் மேற்குறிப்பிட்ட உயரிய நெறி களை அரசமைப்புச் சட்ட விதிகள் வழங்கினாலும், இன்றும் மனு நீதியைத்தான் பல காலக்கட்டங்களில் அரசும், நீதிமன்றங்களும் பல வழக்குகளில் மறைமுக மாகவோ அல்லது பட்டும் படாமலோ பின்பற்றி வரு கின்றன என்று எண்ணத் தோன்றுகிறது எனக் குறிப் பிட்டுள்ளனர். “நீதியின் தோற்றம்” (An Idea of Justice, P.20) என்ற நூலில், இந்தியாவின் சட்ட இயலில் காணப்படுகிற கருத்துகளும், நடைமுறையில் பின் பற்றப்படுகிற முறைகளைப் பற்றிய அறிஞர் அமர்தியா சென் அழகுற விளக்கியுள்ளார். மனுநீதியைத்தான் கடலில் சின்ன மீனை பெரிய மீன் விழுங்கும் நடை முறையை ‘மச்ச நியாயம்’ என்று குறிப்பிடுகிறார். இவ்வகையான நீதி முறை உலகில் மானுடத்தை அழிப்பதை அனுமதிக்கக் கூடாது என்றும் குறிப்பிடு கிறார். அமர்தியா சென் கூற்றுப்படி தமிழ்நாட்டில், மதத் தொடர்புடைய சில கொலைக் குற்றம் சாட்டப்பட்ட வழக்குகளிலும், மதத் தொடர்பில்லாத அரசியல் வழக்கு களிலும், நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்பினையும், அரசு நிர்வாகம் வெவ்வேறு ஆய்வு மேற்கோள்களைக் கடை பிடித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தயங்கு கிற போக்கினையும் காண முடிகிறது.

1991-1996 செயலலிதா முதல்வராக இருந்த காலத்தில், பிரேமானந்தா சாமியார் மீதும், சுப்பிர மணியன் என்ற சங்கராச்சாரியார் மீதும் தண்டனைச் சட்ட விதிகளின்படி கொலை உட்பட பல வழக்குகள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டன. பிரேமானந்தா சாமியார் மீது 1994ஆம் ஆண்டு ‘மடத்தில்’ பெண் களைக் கற்பழித்தார் என்று காவல் துறையால் வழக்கு முதன்முதலில் பதிவு செய்யப்பட்டது. மூன்று மாதங்கள் கழித்துத்தான் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தபோது சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி பிரேமானந்தாவைப் பிணையில் விடவேண்டும் என்று வாதிட்டார்.

செல்வாக்கு உள்ள இந்தச் சாமியார் சாட்சிகளைக் களைத்து விடுவார் என்ற காரணத்தைக் காட்டி, பிணையை உயர்நீதி மன்றம் மறுத்தது. தற்போது ஜார்கண்ட் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுள்ள பின்தங்கிய சமுதாயத்தைச் சார்ந்த நீதிபதி பானுமதி, இரட்டை ஆயுள் தண்டனையைப் பிரேமானந்தாவிற்கு வழங்கி னார். இத்தண்டனையை நீக்கக் கோரி 2005ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்து ராம் ஜெத்மலானி வாதிட்டார். கற்பழிப்பு வழக்குதான் முதன்முதலில் பதிவு செய்யப்பட்டது. எனவே, கொடுக்கப்பட்ட தண்டனையை ஆய்வு செய்து பிரேமானந்தாவை விடுதலை செய்ய வேண்டும் என்று இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு ஜெத்மலானி வாதிட்டார். 2005 ஏப்ரல் திங்களில் உச்ச நீதிமன்ற அமர்வு இரட்டை ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. இந்த நீதிபதிகள், பிரேமானந்தாவை தீயவர் (Evil), அரக்கன் (Monster) என்றும் குறிப்பிட்டார்கள்.

உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் நடராசர் கோவில் தொடர்பான வழக்கு விசாரணை முடிந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கின் போது கூறிய சில கருத்துகள் தீட்சி தர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு அளிக்கப்படலாம் என்று கல்கி முதலான இதழ்கள் மறைமுகமாகச் செய்திகளை வெளியிடுகின்றன. இவ்வழக்கில் தீட்சிதர்களுக்கு வாதாடிய சுபரமணியசாமி போன்றவர்கள் எடுத்து வைத்த வாதங்கள் மேலாதிக்க சாதியத்தின் செருக்கை எடுத்துக்காட்டின. தில்லைவாழ் நடராசருக்குத் தமிழில் அர்ச்சனை செய்வது, ஆகம விதிகளுக்குப் புறம்பான தாம். தீட்சிதர்கள் நடத்திய பணக்கொள்ளை, நகைக் கொள்ளைப் பற்றி, இந்தச் சாதியப் பார்ப்பனர்கள் கவலைப் படவில்லை.

2006ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி தலை மையில் அமைந்த தி.மு.க. அரசு, இக்கோவிலை இந்து அறநிலையத்துறையின் கீழ் - நிர்வாகத்தின் கீழ்க்கொண்டு வந்த பின் உண்டியல் வசூல் பல இலட்ச ரூபாய்களைத் தாண்டியது. நட்டத்தில் இயங்கி வந்த கோயில் நிர்வாகத்திற்கு இலாபம் பெருகத் தொடங்கி யுள்ளது. மேலும், 1888ஆம் ஆண்டிலேயே நீதிபதி பெபர்டு, நீதிபதி முத்துசாமி அய்யர் இந்தக் கோவில் பொதுக் கோவிலே தவிர, தனிப்பட்ட தீட்சிதர்களுக்குச் சொந்தமானது இல்லை என்று தெளிவான முறையில் தீர்ப்பில் சுட்டியுள்ளனர். 19ஆம் நூற்றாண்டிலிருந்து இந்தக் கோவிலைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கொள்ளை அடிக்க வேண்டும் என்ற தீட்சிதர் களின் முயற்சிக்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஆதரவான நிலை எடுக்குமா? தந்தை பெரியார் குறிப்பிட்டது போல உச்சிகுடுமி நீதிமன்றமாக மாறுமா? என்பதை நாடு ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

மற்றொரு வழக்கு காஞ்சி சங்கராச்சாரியாரின் மீதான கொலை வழக்காகும். 2004ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் நாள் வரதராஜ பெருமாள் கோவிலில் பட்டப் பகலில் சங்கரராமன் கழுத்து அறுக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். தற்போதுள்ள சங்கராச்சாரி யார் நிதி மோசடி உட்பட பல ஒழுங்கீனங்களைச் செய்து வருகிறார் என்று மாநில அரசிற்குப் பல புகார் மனுக்களைப் புனை பெயரில் சங்கரராமன் அனுப்பி னார். இதன் தொடர்பாக, நக்கீரன் இதழுக்கு, 2004 ஆம் ஆண்டு அளித்த பேட்டியில், சங்கரராமன் நடவடிக் கைகளின் மீது கோபம் கொண்டு இந்தச் செயலை சங்கர மடத்தின் மீது பற்று கொண்டவர்கள செய்திருக் கலாம் என்ற பொருள்பட சங்கராச்சாரியார் கூறியிருந் தார். காவல்துறையின் கண்காணிப்புத் தொடங்கவே, சங்கராச்சாரியார்கள் ஆந்திராவில் முகாமிட்டிருந்தனர். தீபாவளி கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த போது 2004ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் நாளில் ஆந்திரா வில் கைது செய்யப்பட்டு வானூர்தியில் கொண்டு வரப்பட்டார்.

ஆந்திரா-சென்னை எல்லையில் கொலைக் குற்றம் சாட்டப்பட்டவரை வரவேற்பதற்கு ‘இலங்கை ரத்னா’ இந்து ராம் உட்பட பலர் சென்றனர் என்பதை ஒளி ஊடகங்கள் வெளிப்படுத்தின. வாய்க்கிழிய மதச்சார் பின்மையை வலியுறுத்தும் இடதுசாரி இந்து ராம், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தோடு கைக்கோர்த்து சங்கராச் சாரியை வரவேற்ற நிகழ்ச்சி, இவர்களின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியது. சில நாள்களிலேயே சிறையிலிருந்து சங்கராச்சாரி பிணையில் விடுவிக்கப் பட்டார். தமிழ்நாட்டில் வழக்கு நடந்தால் தனக்கு நீதி கிடைக்காது என்று சங்கராச்சாரி உச்சநீதிமன்றக் கதவைத் தட்டினார். 2005ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் உச்சநீதிமன்றம் செங்கல்பட்டு நீதிமன்றத் திலிருந்து வழக்கை புதுச்சேரி நீதிமன்றத்திறகு சங்கராச் சாரியின் கோரிக்கையை ஏற்று மாற்றி ஆணை பிறப்பித்தது.

இந்த வழக்கு விசாரணை தொடங்கிய காலத்தி லிருந்து மூன்று நீதிபதிகள் மாற்றப்பட்டனர். சங்கராச் சாரி, இராமசாமி என்ற நீதிபதியிடம் தொலைபேசியில் பேசினார் என்ற ஆதாரம் சென்னை உயர்நீதிமன் றத்தில் ஒரு வழக்கில் கொடுக்கப்பட்டது. 187 சாட்சியங்கள் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டன. பிறகு சங்கரராமன் மனைவி, மகன் உட்பட சிலர் பிறழ் சாட்சியங்களாக மாறினர். நூற்றுக்கும் மேற்பட்ட சாட்சியங்கள் மாறவில்லை. இருப்பினும் 2013 திசம்பர் திங்களில் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட 22 பேர்களும் விடுவிக்கப்பட்டனர். தன்னையும் தன் மகனையும் அழித்துவிடுவதாக மிரட்டியதால் பிறழ் சாட்சியங்களாக மாறிவிட்டோம் என்று சங்கரராமனின் மனைவியும், மகனும் தீர்ப்பு வெளிவந்தவுடன் கூறியுள்ளனர். மேல்முறையீட்டிற்குத் தமிழக அரசு செல்லுமா? என்ற கேள்வி அனைவராலும் எழுப்பப்பட்டு வருகிறது.

இந்தச் சூழலில் இப்படிப் பல வழக்குகளின் தன்மைகள் அம்பலப்படுத்தப்பட்டு வரும் நிலையில், இராஜிவ் கொலை வழக்கினை விசாரித்த மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் தாங்கள் சட்டத்தின்படி விசாரணையை மேற்கொள்ளவில்லை என்றும் பேரறிவாளன் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலத்தை மாற்றிப் பதிவு செய்தவதாகவும் புலனாய்வு உயர் காவல் அலுவலர் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துள் ளார். நீதிநாயகம் சந்துரு, உச்சநீதிமன்றத் தீர்ப்பினைச் சுட்டிக்காட்டி, இவ்வழக்கினை தடா நீதிமன்றத்தில் விசாரணை செய்து தீர்ப்பு அளித்தது, நீதி நெறிகளின் படி அடிப்படையிலேயே தவறானதாகும் என்று இந்து தமிழ் ஏட்டில் கட்டுரை தீட்டியுள்ளார்.

இவ்விதக் கருத்துகளை எல்லாம் ஆய்வு செய்யும் போது, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்ட அடிப்படை உரிமைகள், அடிப்படை கடமைகள் எல்லாம் எல்லாருக்கும் பொருந்தக் கூடியதா? அல்லது சாதிக்கோர் நீதி என்ற மனுநீதி பின்பற்றப்படுகிறதா? 1920ஆம் ஆண்டிற்கு முன்பே “சூத்திரற்கோர் நீதி தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறோர் நீதி” என்று பாரதியார் பாடினார். இப்பாடலைப் பல முறை பாவேந்தரிடம் பாரதி சுட்டியுள்ளார் என்பதைப் ‘புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு’ (பக்.78) என்ற நூலில் நாவலர் நெடுஞ்செழியன் குறிப்பிட் டுள்ளார். மேலும் நாவலர் தனது திருக்குறள் உரை யில், முன்னுரை பகுதியில் மனுநீதிப் பற்றியும் குறள் வலியுறுத்தும் மானுட நீதியையும் ஒப்பீடு செய்துள்ளார் (பக்..x-th xxxii), “பிராமணன் எத்தகைய குற்றங்களைச் செய்தாலும் அவனைத் தூக்கில் போட வேண்டிய நிர் பந்தம் ஏற்பட்டாலும், அவனது தலையை மட்டும் மொட்டை அடித்துவிட்டால் போதுமானது. அதுவே அவனுக்குத் தூக்குத் தண்டனைக் கொடுப்பதற்கு ஒப் பாகும். மற்ற வருணத்தார்க்குக் கொலையே உரிய தண்டனையாகும்” (மனுதர்மம் சாத்திரம், அத்யாயம் 8, சுலோகம் 379). “பிராமணின் பொருளை அபகரிக் கும் சூத்திரனைச் சித்திரவதைச் செய்து கொல்லலாம். ஆனால், சூத்திரனுடைய பொருளை பிராமணன் தன் விருப்பப்படிக் கொள்ளை இடலாம்” (மனுதர்மம் சாத் திரம், அத்யாயம் 9, சுலோகம் 248). “பயிர்த்தொழில் நல்ல தொழில் என்று பலர் நினைக்கிறார்கள். அந்தத் தொழில் பெரியோர்களால் மிகவும் இகழப்பட்ட ஒன்றாகும்” (மனுதர்மம் சாத்திரம், அத்யாயம் 10, சுலோகம் 84).

“இந்து மதத்தின் பழையச் சட்டத்தில் பாப்பான் - மத குருமார் என்ற செல்வாக்கைப் பெற்றதால் கொலை போன்ற கொடியக் குற்றம் செய்தாலும் மரண தண் டனை கிடையாது என்ற நிலை இருந்தது. கிழக்கிந் தியக் குழுமம் கூட 1811 வரை இந்தச் சிறப்புரிமையை பிராமணர்களுக்கு வழங்கியது” (Under the old Hindu Law the Brahmin enjoyed the benefit of the clergy and not be hanged even if he was guilty of murder, and the East India Company allowed him the privilege till 1817, Dr. Bahasaheb Ambedkar Writings and Speeches, Vol.1, P.1979) என்று பேரறிஞர் அம்பேத்கர், நீதித்துறையில் 19ஆம் நூற்றாண்டு வரை மனுநீதிக் கோலோச்சியதைக் குறிப்பிட்டுள்ளார்.

எனவேதான் தந்தை பெரியார், இந்தியாவில் மனுநீதியின் ஆட்சியியைத் தெளிவாகச் சுட்டியுள்ளார்.

“எனவே தோழர்களே! நம்முடைய நிலைமை உலகத்திலே பெரிய மானக்கேடான நிலைமை. 2000 வருடமாக இருக்கிற முட்டாள்தனத்தைவிட இந்தச் சட்டத் திலே இருக்கிற, இந்து லாவிலேயும், அரசியல் சட்டத் திலும் அது பெரிய முட்டாள்தனம். முதலிலே இதை மாற்றச் சொல்லாமல், இந்த ஆட்சியிலே குடிமகனாக இருக்கிறோமே, அது மகாமகா முட்டாள்தனம். பொறுக்கித் தின்பவனுக்கு இந்த ஆட்சி வேண்டும். மானத்தோடு பொழைக்கிறவனுக்கு இந்த ஆட்சியை ஒழிக்கத்தானே ஆகணும்? உன்னைப் போல் நான், என்னைப் போல் நீ மாற்றுகிறாயா? இல்லை. மூட்டைக் கட்டுகிறாயா? என்று தானே கேட்க வேண்டும்? இல்லா விட்டால் வழி?

இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருப்போம் என்று என்ன நிச்சயம்? நான் இறந்தால் நாளைக்கே மாறிவிடுவான். நமது கலைஞர் கருணாநிதி அவர்கள், ‘கல்லுதான் - யார் வேண்டு மானாலும் பூஜை செய்யலாம். இப்படி இப்படிச் செய்ய வேண்டும்’ என்று எல்லாருக்கும் அனுமதி கொடுத்தார். பார்ப்பான் கோர்ட், சுப்ரீம் கோர்ட் என்றால் பார்ப்பான் கோர்ட் என்று பெயர் (சிரிப்பு) சிரிக்காதீர்கள். அதிலே தமிழனுக்கு இடமே இல்லை. போனாலும் அவனுடைய அடிமைதான் அங்கு போவான். அவன் சாஸ்திரத்தைப் பார்த்துதான் தீர்ப்புச் சொல்வான். இந்த ஜனம் கோவிலுக்குள் போவது தப்பு, அது சாஸ்திர விரோதம். அட, முட்டாள்களே! சாஸ்திரம் என்றால் எது? எப்ப எழுதியது? எவன் எழுதினான்? எவனையாவது சொல்லச் சொல்லு. ஆகமத்தின்படி எழுதினான் என்கிறான். அய் கோர்ட் ஜட்ஜ் பார்ப்பான் ஆதிக்கமுள்ளது. பாப்பாத்தி யால் நியமிக்கப்பட்டவர்கள் அவர்கள். அவர்கள் அப்படித்தானே எழுதுவார்கள்?

எனவே நமது இழிவு ஒழிந்தாக வேண்டும்; அதுதான் முக்கியம்.

எனவே இவ்வளவு நேரம் பொறுமையாக இருந்து கேட்ட உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்து, எனது உரையை முடித்துக் கொள்கிறேன்” (சென்னை தியாகராயர் நகரில் தந்தை பெரியார் தம் வாழ்வின் இறுதி உரையாக (19.12.1973) மரண சாசனமாக ஆற்றிய உரையின் முடிவுப்பகுதி).

இன்றைய நீதிமன்றத் தீர்ப்புகளும், நிகழ்வுகளும் 21ஆம் நூற்றாண்டிலும் நீதியின் பயணத்தில் சாதியம் மேலோங்கி நிற்பதை உணர முடிகிறதா? எப்போது இந்தச் சதியை உணர்வார்களோ தமிழர்கள்?

Pin It