எம்
அடிமை விலங்கினை
உடைத் தெறிந்த
சம்மட்டியே! எழுந்து வா!

மானமும் அறிவும்
மனிதர்க்கு அழகென
எடுத்துரைத்த
எந்தையே! எழுந்து வா!

எம் சிந்தையில்
மட்டுமா சீர்திருத்தம் செய்தாய்
எம் மொழியிலும் அல்லவா
சீர்திருத்தம் கண்டாய்!

இருந்தும் உன் நெஞ்சில்
ஒரு முள்.
அனைவரும் அர்ச்சகராணும்
அதுவே உன் கடைசி கனவும்!

உன் நெஞ்சிலோ ஒருமுள்
எம் நெஞ்சிலோ
கொத்துக் கொத்தாய் நெருஞ்சி முட்கள்
என் செய்வோம்! அய்யாவே!

புத்தம் பேசிடும்
புளுகன் முன்னே
புற நானூறு கண்டவன்
புழுவாகிப் போனான்! எதனாலே?

எமைக் காத்திடத்
தொன்னையுள்ளம் உள்ளவனெவனும்
“உமை”ப் போல் “பிரபா”வைப் போல்
எவனுமிங்கில்லையே! அதனாலே!

கொத்துக் குண்டுகளுக்கு
நேற்று ஈழம்
நாளை தமிழகம்
இன்னொரு நாள் என்தமிழும்!

அய்யகோ! என் செய்வேன்?
என் கதி இதுதானா - எந்தையே
எழுந்து வா! எம் நெஞ்சில் பகைவர்
எய்திட்ட நெருஞ்சிமுள் அகற்ற வா!

- ப.ம.மதியொளி, திட்டக்குடி

2012 - திசம்பர் 24 - பெரியார் நினைவு நாள் - தொடர்பான – கவிதை

Pin It