ஊடகவியலாளர் கௌரி இலங்கேசு துப்பாக்கிக் குண்டுக்குப் பலியாக்கப்பட்டது, தடையற்ற சிந்தனையாளர்களின் நெஞ்சில் பாய்ந்த மற்றுமொரு குண்டு போன்றது. கொலையாளிகள், நக்சல்பாரிகள் என்றும், கொலையுண்ட கௌரியின் வழக்குரைஞர் மற்றும் அவர் போன்றோர் இது இந்துமத வெறியர்களின் வன்முறை அமைப்பின் வெறிச்செயல் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. கொலையாளிகளைக் கண்டுபிடிக்க முடியாத நிலை தொடர்கிறது.

இந்துத்துவா ஈடுபாடுடைய நாதுராம் கோட்சேயால் காந்தி படுகொலை செய்யப்பட்டது தொட்டு, இக்கொலையும் அவர் போன்றோரால்தான் செய்யப்பட்டது என வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. இசுலாமிய, மாவோயிஸ வெறியர்கள் செய்யும் கொலைகளுக்குப் பொதுவாக அவர்கள் பெறுப்பேற்பர். அண்மையில் பகுத்தறிவாளர்களான தபோல்கர், கல்புர்கி. பன்சாரே ஆகியோரைக் கொலை செய்த கொலைக்காரர்களே கௌரி கொலையையும் செய்திருப்பர் என்ற அய்யம் நிலவும் நிலையில், சிலர் தளை செய்யப்பட்டிருக்கின்றனரேயன்றி குற்றவாளிகளென நிறுவப்பட வில்லை. கௌரியைக் கொலை செய்தோர் யாரெனத் தெரியவில்லை. எனினும் யார் கொலையைக் கொண்டாடி மகிழ்கின்றனர் என்பதை அறிகிறோம். கௌரியைக் கொலை செய்தோர் பெருமைக்குரிய இந்து தேசிய வாதிகள் என மகழ்ச்சியுடன் சமூக ஊடகங்களில் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். அவர்களைத்தான் கௌரி தன் கொடுமையான எதிரிகள் என்பார். இந்துத் தேசியம் நாளும் புதிய எதிரிகளைத் தேடியலைகிறது.

கௌரி உயிருடனிருந்து ஏதிலிகளான ரோகிங்கா இசுலாமியர்களை இந்தியா வெளியேற்றக் கூடாது எனத் தெரிவித்திருப்பாரெனில், அவரைத் தேசத்தைக் காட்டிக் கொடுத்தவர்; நாட்டுக்கெதிரான கொலையாளி; நக்சலைட் என முத்திரையிட்டு சினங்கொண்ட தேசியத் தொலைக்காட்சி ஊடகங்கள் அவரை நோக்கி அலறி யிருப்பார்கள்.

வன்முறை எண்ணம், வன்முறை மொழிநடை, வன்முறைப் பேச்சு ஆகியவை வன்முறைச் செயல் களுக்கு அடிகோலும். வன்முறை நியாயப்படுத்தப் படுவது, ஏற்கப்படுவது ஒரு தேர்தல் தொகுதியை உருவாக்குவதற்கான ஒரு வழி என்றும் கூடக் காணப் படும். அந்தச் சூழலில் தேசத்தைக் காட்டிக் கொடுப்ப வன் செயல் போரின் பகுதியாகவும் ஆகிவிடும். அதாவது இந்துத் தேசியவாதியாக இருக்கமாட்டேன் என வலியுறுத்தும் உரிமை, கடவுள் மறுப்பாளராக, பகுத்தறிவுவாதியாக அல்லது மூடப்பழக்கவழக்கங் களைக் கண்டனம் செய்வது அல்லது மாட்டுக்கறி உண்பது, அரைப்பாவாடை அணிவது. ஓரினச் சேர்க்கையாளராக இருப்பது, ஜம்மு-காஷ்மீர் குறித்த அரசின் கொள்கையைக் கண்டிப்பது, சவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாகப் பேசுவது ஆகியவற்றுக்கு எதிரான போர் எனக் கருதப்படும்.

தேசியவாதி, தேசத்தைக் காட்டிக் கொடுப்பவர் இடையேயான வேறுபாடு ஆழமான கவனத்திற்குரிய கவலையாகும். கௌரி வலிமையான கருத்துக்களைக் கொண்டிருந்தார். இந்துத்துவா அரசியலுக்கு எதிராகப் பேசினார். சாதி வேறுபாட்டைச் சாடினார். நக்சலைட்டுகள் துப்பாக்கிகளைக் கைவிட அழுத்தம் தந்தார். பெண்களின் பாலியல் விடுதலைக்காகப் பொறுமையுடன் விவாதித்தார். பழமை போற்றப்படும் ஒரு தீவிரவாதச் சூழலில் அவரின் குரல் சிலருக்குச் சினமூட்டுவதாக இருந்திருக் கலாம். அதற்கு அவருக்கு எதிர்க் கருத்துரைப்பதை விடுத்து அவரின் குரலை முற்றாக நிறுத்திவிடலாமென தீர்மானித்துவிட்டனர். இவரைக் கொலை செய்தோர் ஒரு துப்பாக்கியைப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் வெளிப்படையாகப் பழிசாட்டி மாணவர் போராளித் தலைவர்களான கன்னையகுமார் மற்றும் உமர்காலிட் (Symbolic) தலைகளுக்கு பெயரளவிலான துப்பாக்கிக் குறி வைத்தனர். பெண் ஊடகவியலாளர் கௌரிக்கு அடுத்துத் குறிவைத்துத் தாக்கப்படுவோர் பட்டியலை வெளியிடுவது அவர்கள் தலைக்குமேல் துப்பாக்கி தொடங்க விடுவது போலல்லவா? இது ஒருவகை கொசு, பெருகி பலரை இரத்தக் காய்ச்சல் பற்றிக் கொள்ளும் வேகத் தைக் காட்டிலும் மாற்றுக் கருத்துள்ளோருக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிடப்படுவது போலல்லவா உள்ளது.

குறிப்பாக ஊடகத்துக்கு எதிராக வன்முறைக் குரல் ஒலிக்கிறது. ஊடகத்தை ஊடக வேசி எனப் பழித்து ஒரு பா.ச.க. நாடாளுமன்ற உறுப்பினர் பெயர் பெற்ற ஒரு எழுத்தாளரை ஈப்பு உந்தில் கட்டி இழு எனக் குரல் கொடுப்பது இழிவாக வசைபாடும் முறைகேடா னவர் உரம் பெறுவதுடன், அரசியல் உயர் தலைமை யால் தாம் பின்பற்றப்படுவதாகச் சட்ட வலிமையும் கூடப் பெறுகின்றன.

குறிப்பாக உண்மையைக் கூறுவது தனக்கே உலைவைத்துக் கொள்வது போன்ற சூழல் உள்ள புறப்பகுதிகளில் இதழியலாளர்கள் அச்சுறுத்தப்படுவர்; மிரட்டப்படுவர்; கொலை செய்யப்படுகின்றனர். ஆனால் தற்போது ஊடகத்தினர் தாக்கப்படுவதைப் பொறுத்துக் கொள்ளமுடியாது என முழங்குவதை விடுத்து கௌரி கொலைக்கு மேம்போக்கான கண்டனங்களை வெளி யிடுவது ஊடகத்தினர் தாக்கப்படுவதை ஆளும்கட்சி ஏற்றுக்கொள்கிறது. அரசு ஊடகத்திற்கு எதிரான நிலை யெடுப்பதில் பெருமிதம் கொள்வதும், ஊடகவியலா ளர்களை ஆளும்கட்சி அமைச்சர்கள் புறக்கணிப்பதும், அவர்களில் துடிப்பானவர்களைப் புறம்தள்ளுவதும், அவர்களைச் ‘செய்தி வணிகர்கள்’ என அரசியல் தலைமையால் முத்திரை குத்தப்படுவதும், பெண் செய்தியாளர்கள், வழக்குரைஞர்கள் அடிக்கப்படுவதைக் கண்டனம் செய்யாமல் விடுவதும் இன்னும் ஊடகத்திற் கெதிரான வன்முறையை ஊக்குவிக்கும் சூழலை அரசே உருவாக்குகின்றதோ என எண்ணத் தோன்றுகிறது.

அரசியலில் அளவுக்கு மிஞ்சி மதக் கோட்பாடு களைத் திணிப்பது சமூகத்தில் வன்முறையைத் தூண்டும். மென்மையான இசுலாமியர் அல்லது மென்மையான இந்துத்துவாவை ஆட்சியாளர்கள் பின்பற்றுவதால் பிற்போக்குத் தீவிரவாதிகள் ஊடுருவி சட்டப்படியான உரிமைகளைப் பெற்றுவிடுகின்றனர். இப்போது இந்துக் களுக்கும் இசுலாமியர்களுக்கும் இடையே உள்ள பிளவு மிகவும் கேடாகக் கூர்சீவி விடப்படுவதால் அசான் அல்லது மாட்டுக்கறிக்குத் தடை அல்லது வந்தே மாதரம் போன்ற ஒவ்வொரு செய்தியிலும் வன்முறைக் கும்பல் ஈடுபடுவதும் அவர்களின் கோபத்திற்குரிய இலக்குகளை நேரடியாகத் தாக்கவும் செய்கின்றன.

குரல் கொடு! கொலை கூடாது என்பதுதான் சனநாயகப் பண்பாக இருக்க வேண்டும். ஆனால் அறிவுக்கொவ் வாத மதக்கோட்பாடுகளுடன் சனநாயகம் இணையும் போது குரல்கொடு என்பது சுடுவதற்கு வலுவான அனுமதி அளிப்பது போன்றாவதுடன் நாடாளுமன்றச் சனநாயக மரபுகளெல்லாம் குருட்டு நம்பிக்கை மேலோங்கியவர்களால் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன.

சேவைத் துறை சார்ந்த பொருளாதார வளர்ச்சி யடைவதற்கு வெளிப்படைத் தன்மை மிக முக்கிய மான தேவை என மத்திய ரிசர்வ் வங்கி மேனாள் ஆளுநர் இரகுராம் ராசன் ஒரு விவாதத்தில் சொன்னார்.

தேசத்தைக் காட்டிக் கொடுப்போருக்குச் சட்டப்படியான தண்டனை அளிப்பது போன்றது கௌரி கொலை என்று சொல்கின்ற அளவுக்கு சங் பரிவார் சென்று விட்டனர். வெளிப்படைத் தன்மைக்கும் மாறுதலாக எண்ணத் துணிவோருக்கு இயற்கையானது கொலை தான் என்கின்றனர்.

சமூகமாக நாம் இப்போது பேசாவிட்டால் பல கொலைகள் நடக்கும். ஒவ்வொரு ‘தேசிய எதிராளி’ கொலையும் எப்போதுமில்லாததாக பெரும் ஆரவார மாகக் கொண்டாடப்படும். இது எதிரிகளை முழுமை யாக அப்புறப்படுத்தும் கொலை பாதக அறைகூவல். வன்முறையைச் சட்டமுறைப்படுத்துவது விரிவடையும். எனவே கௌரியைக் கொலை செய்த குற்றவாளி களைப் போன்றோர் வன்முறையைக் கொண்டாடு பவர்கள் என்பதால் அவர்களுக்கெதிராகக் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

((Sagarika) சகரிகா, 13.9.17 நாளிட்ட டைம்சு ஆஃப் இந்தியா இதழுக்கு நன்றி)

தமிழாக்கம் : இரா.பச்சமலை

Pin It