உலகில் எல்லா உரிமைகளுக்கும் தாயாகக் கருதப்படுவது, கருத்துரிமையாகும். ஏனெனில், மற்ற உரிமைகளைக் கோரிப் பெறுவதற்குக் கருத் துரிமைதான் வழிவகுத்துத் தருகிறது.

கருத்துரிமை இல்லாவிட்டால், ஒருவர் தனக் கான அல்லது மக்களுக்கான உரிமையை வென் றெடுக்க முடியாது. அதற்கான நியாயத்தை முன் னிறுத்தி மக்களைத் திரட்டவும் முடியாது.

கருத்துரிமை என்பது சனநாயக விழுமியங் களின் சிறந்த வெளிப்பாடாகத் திகழ்வதால், கருத் துரிமையை உயர்த்திப் பிடிக்காத அறிஞர்களை வரலாற்றில் நாம் காணமுடியாது.

“ஒரே ஒரு மனிதரைத் தவிர, உலகம் முழுவதும் ஒரே கருத்தினைக் கொண்டதாகவும், அந்த ஒரு மனிதர் மட்டும் மாற்றுக் கருத்துக் கொண்டவ ராகவும் இருந்தால்கூட, மனிதகுலம் அந்த ஒருவரை வாயடைக்கச் செய்வது ஒரு சிறிதும் நியாயம் இல்லை. மாறாக, அந்த ஒரு மனிதரின் கருத்து, உலகம் முழுவதையும் வாயடைக்கச் செய்யும் வலுவுள்ளதாக இருந்தால், அந்தக் கருத்தை வெளிப் படுத்துவதற்கு நியாயம் இருக்கவே செய்கிறது” என்றார் ஜே.எஸ்.மில் எனும் அறிஞர்.

“நீ சொல்வதை ஒரு சிறிதும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால், எனக்குப் பிடிக்காத அந்தக் கருத்தைச் சொல்வதற்கான உரிமையை உனக்குப் பெற்றுத் தருவதற்காக நான் உயிரையும் கொடுப்பேன்” என்றார் புரட்சி எழுத்தாளர் வால்டேர் .

எவ்வளவு பெரிய சனநாயகப் பண்பு இது! ஒரு சீரிய சமுதாயத்தின் அடையாளம் இப்படித்தான் இருக்க முடியும்.

அதனால்தான் 1948-ஆம் ஆண்டில் வெளி யிடப் பட்ட பன்னாட்டு மனித உரிமைப் பிரகட னத்தின் பிரிவு-18 “ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்துக்களைப் பேச்சு மூலமோ, எழுத்து மூலமோ வெளிப்படுத்த உரிமை உண்டு” எனப் பறை சாற்றுகிறது.

அதேபோல், இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 19(அ) “சுதந்திரமாகச் சிந்திப்பதற்கும், எடுத்துச் சொல்வதற்கும் இந்தியாவில் யாவர்க் கும் உரிமை உண்டு” என வலியுறுத்துகிறது.

ஆனால் இத்தகைய கருத்துரிமை, அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எப்பொழுதுமே எரிச்சலை உண்டாக்குவதாகவே இருக்கிறது.

தொண்டையில் சிக்கிய முள்ளாகத்தான் இந்த உரிமையை அவர்கள் கருதுகின்றனர். அதனால் அந்தக் கருத்துரிமையை முற்றாக அழிக்க எண்ணு கின்றனர்.

தங்களது மேலாதிக்கத்திற்கு ஆபத்து விளை விக்கக் கூடிய கருத்துக்களை அழிப்பதில், கருத் தாளர்களை அழிப்பதில் மதத்திற்கு மிகப்பெரும் பங்குண்டு என்பதை வரலாறு நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.

தான் உண்மையெனக் கருதிய கருத்துக்களை எடுத்து உரைத்ததற்காகப் பிரான்சு நாட்டின் ஜோன் ஆப் ஆர்க்;

பூமி, சூரியனைச் சுற்றுகிறது என்று வலியுறுத்தி யதற்காக இத்தாலியைச் சார்ந்த புரூனோ;

கத்தோலிக்கக் கிருத்துவ மதத்திற்கு எதிராக (பிராட்டஸ்டன்டு) மத நம்பிக்கையைப் பின்பற்றி யதற்காக இராபர்ட் டிரேக் - ஆகியோர் எரித்தே கொல்லப்பட்டதை வரலாறு குறிப்பிடுகிறது. அதேபோல் நவீன இயற்பியலின் தந்தை என அழைக்கப்படும் கலீலியோ, மத நம்பிக்கைக்கு எதிரான கருத்தை வெளிப்படுத்தினார் என்பதற் காக இத்தாலியில் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டார்.

வன்முறையை ஏவுவதில் மதங்களுக்கு இடையே வேறுபாடு கிடையாது என்பதை வரலாறு நமக் குத் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது.

இசுலாமிய மதத்தைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் தாலிபன்கள் நடத்தும் படுகொலைகளை இன்றைய காலக்கட்டத்தில் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.

ஐ.எஸ் அமைப்பு, வன்முறையையே தன் வழி முறையாகக் கொண்டு இயங்கி வருவது கண்கூடு.

அதேபோல், தமிழகத்திலும் எண்ணற்ற சமணர் கள், சைவ சமயத்தினரால் கழுவேற்றப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர் என்பதை அனை வரும் அறிவர்.

இத்தகைய கொடிய அதிகாரத்தின் உச்சமாக, கருத்துரிமையை மறுக்கும் ஆதிக்கச் சக்தியாக இன்றைய இந்துத்துவம் விளங்குகிறது. தேசிய இனங்களின் தனித்தன்மை, மாற்றுக் கருத்தை அங்கீகரிக்கும் சனநாயகம் போன்றவற்றை ஒரு சிறிதும் ஏற்காத, பொறுத்துக் கொள்ளாத பாசிசக் கொடியவர்களாகத்தான் உள்ளனர், சங்பரிவாரைச் சார்ந்தவர்கள். கருத்துரிமை என்ற சொல்லைக் கெட்ட வார்த்தையாகக் கருதுபவர்கள் இவர்கள். தமது மத மேலாதிக்தத்தை நிலைநிறுத்துவதற்காக, வன்முறையின் எந்த எல்லைக்கும் செல்லக் கூடி யவர்கள். இவர்களின் வன்முறைப் பட்டியல் மிக நீண்டது. இருப்பினும், ஒரு சிலவற்றையேனும் ஆதாரமாகப் பதிவு செய்யவேண்டியது சனநாயகக் கடமையாகும்.

1992 திசம்பர் 6 அன்று உத்தரபிரதேசம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதியை இந்துத் துவக் குண்டர்கள் தகர்த்தெறிந்தனர். இதை யொட்டி நடைபெற்ற கலவரங்களில் பல்லாயிரக் கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர்.

கிரகாம் ஸ்டூவர்ட் ஸ்டெய்ன்ஸ், ஆஸ்திரேலி யாவைச் சார்ந்த கிருத்துவப் பாதிரியார். அவர் ஒடிசாவிலுள்ள பழங்குடி மக்களிடையே மருத் துவப் பணி ஆற்றி வந்தார். 1999-ஆம் ஆண்டு. சனவரி 23-ஆம் நாள் நள்ளிரவில் அவரும், 10 மற்றும் 6 வயதான அவரது இரண்டு மகன்களும் வாகனத்தில் உறங்கிக் கொண்டிருந்த பொழுது, இந்துத்துவ அமைப்பான “பஜ்ரங்தள்”ளைச் சார்ந்த சுமார் 50 காடையர்கள் அவர்கள் மூவரையும் உயிரோடு தீ வைத்து எரித்துச் சாம்பலாக்கினர். தீயிலிருந்து தப்ப முயன்ற சிறுவர்களைக் கொடூர மாகத் தாக்கி எரிந்து கொண்டிருந்த தீயில் தூக்கி எறிந்தனர். ஸ்டெயின்ஸ் மதமாற்றம் செய்ய முயன்ற தால் கொன்றோம் என இந்தப் படுகொலையை நியாயப் படுத்தினர், இந்துத்துவவாதிகள்.

அதேபோல், 2002-ஆம் ஆண்டில் கோத்ரா தொடர்வண்டி எரிப்பைத் தொடர்ந்து நடை பெற்ற கலவரத்தில், பல்லாயிரக் கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். குறிப்பாக முசுலீம்கள் குறிவைத்துக் கொல்லப்பட்டனர். அப்பொழுது குஜராத்தில் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி, இத்தகைய படுகொலைகளுக்கு ஆதர வாகச் செயல்பட்டார் என அவருக்குக் கீழ் பணி புரிந்த அதிகாரிகளே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத் தனர். அசீமானந்தா என்பவன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் முக்கியத் தலைவனாக இருந்தவன். பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய இவன், எப்படி வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுகிறோம் என்பதை வழக்கு மன்றத்தில் ஒப்புதல் வாக்கு மூலமாகவே தந்திருக்கிறான். தவிரவும், முசுலீம்களின்மீது தாக்குதல் தொடுக்க ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலுள்ளவர்களை ஆயத்தப்படுத்தியதையும் ஒப்புக் கொண்டு உள்ளான்.

தனது சனாதனக் கோட்பாட்டை விமர்சிப்பவர் களை இந்துத்துவவாதிகள் மன்னிப்பதே இல்லை. அகிம்சை - சமாதானம் எனக் கூறிக்கொண்டே, கமுக்கமாகச் சனநாயகச் செயல்பாட்டாளர்களைத் தீர்த்துக்கட்டுவதில் வல்லவர்கள். தங்களது கருத் துக்கு மாற்றுக் கருத்தைக் கூறினர் என்பதற்காகவே நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம். கல்புர்கி, கௌரி லங்கேஷ் ஆகியோரைக் குரூர மாகக் கொன்று வஞ்சம் தீர்த்துக் கொண்டனர்.

நரேந்திர தபோல்கர், மராட்டியத்தில் மருத்துவ ராகப் பணியாற்றிக் கொண்டே, மக்கள் பணி ஆற்றி வந்தவர். மந்திரம், சித்து வேலை, பேய் ஓட்டுதல், மூடநம்பிக்கை, சாமியார்களின் ஏமாற்று வேலை ஆகியவற்றைத் தொடர்ந்து அம்பலப் படுத்தி வந்தார். மராட்டியச் சட்டமன்றத்தில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப் பெரிதும் பாடுபட்டார். சுமார் 3,000 பொதுக் கூட்டங்களில் கலந்துகொண்டு பகுத்தறிவுக் கருத்து களைப் பரப்புரை செய்தார்.

இந்நிலையில் 2013 ஆகத்து திங்களில் துப்பாக்கி யால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தோழர் கோவிந் பன்சாரே, ஒரு வழக்குரைஞர். இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மராட்டிய மாநிலப் பொதுச்செயலாளராகப் பணியாற்றியவர். “சாதி மறுப்பு, மதமறுப்புத் திருமண ஆதரவு மையம்” எனும் அமைப்பை உருவாக்கி, எண்ணற்ற சாதி மறுப்புத் திருமணங்களை நடத்தி வைத்தவர். முற்போக்குக் கருத்துக்களைப் பரப்பிட 21 நூல் களை எழுதி வெளியிட்டார். சோதிராவ் பூலே, சாகு அரசர், அம்பேத்கர் ஆகியோரின் கருத்துக் களை மராட்டியம் முழுவதும் எடுத்துச்சென்றார். சிவாஜியை முசுலீம்களின் பகைவனாகவும், பசு - பார்ப்பனக் காவலனாகவும் இந்துத்துவவாதிகள் பொய்ப் பிரச்சாரம் செய்து வருவதை அம்பலப் படுத்த, “சிவாஜி யார்?” எனும் நூலை எழுதி வெளி யிட்டார். அந்நூல் 2,00,000 படிகள் விற்பனை யாகி மிகப்பெரும் சாதனை படைத்தது. அந் நூலில் சிவாஜி, முசுலீம்களை எந்த அளவு ஆதரித்து வந்தார் என்பதை எண்ணற்ற சான்றுகள் மூலம் மெய்ப்பித்தார். இந்துத்துவத்திற்கு எதிரான கருத் துக் கொண்டவராக இருந்ததால், தோழர் கோவிந் பன்சாரே 2015 பிப்ரவரி 20-ஆம் நாள் துப்பாக்கி யால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பேராசிரியர் கல்புர்கி, கன்னடப் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராகப் பணி ஆற்றியவர். 103 நூல்களும், 400 கட்டுரைகளும் படைத்த இவர், சாகித்திய அகாதமி விருதுபெற்ற சிறந்த படைப் பாளியாவார். சிறந்த பகுத்தறிவாளராகவும், நாத்திக ராகவும் விளங்கிய கல்புர்கி, உருவ வழிபாடு, பொருளற்ற சடங்குகள், சாதிப் பாகுபாடு ஆகிய வற்றை எதிர்த்துத் தீவிரமாகப் போராடி வந்தார்.

அதனால், 2015 ஆகத்து 30-ஆம் நாள் துப்பாக்கி யால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

கௌரி லங்கேஷ், மிகச்சிறந்த பத்திரிகையாளர். பெண் உரிமைப் போராளி. சாதிகளை எதிர்த்துப் போராடி வந்தார். கர்நாடகத்தில் இந்துத்துவ வாதிகள் செய்யும் அட்டூழியங்களைத் தொடர்ந்து ஊடகத்தில் வெளிப்படுத்தி வந்தார்.

அதனால், 2017 செப்டம்பர் 5-ஆம் நாள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். கருத்துரிமை காப் பதற்காகப் போராடிய தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கௌரி லங்கேஷ் ஆகியோரைப் படு கொலை செய்ததற்காக, “சனாதன் சன்சதா” எனும் கொடிய இந்துவ அமைப்பைச் சார்ந்தவர்கள் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளனர். சனாதன் சன் சதா எனும் இந்துத்துவ அமைப்பு, 1990-ஆம் ஆண்டு ஜெயந்த் அதாவேல் என்பவரால் மராட் டிய மாநிலத்தில் உருவாக்கப்பட்டது. கோவாவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் இந்த அமைப்பு தனது அணிகளுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து வந்தது. அமோனியம் நைட்ரேட்டு போன்ற வெடிமருந்துகளைப் பெருமளவு அந்த அமைப்பினரிடமிருந்து காவல்துறை கைப்பற்றியது குறிப்பிடத் தக்கது. இருப்பினும், தனது சதித் திட்டத்தையும், கொலைப் பயணத்தையும் அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

2015 செப்டம்பர் 28 இரவு உத்தரப் பிரதேச தாத்ரி கிராமத்தில் முகமது அக்லக், பசு இறைச்சி -யை அவரது வீட்டில் வைத்திருந்ததாகக் கூறி, இந்துத்துவக் காடையர்கள் அவரை அடித்தே கொன்றனர். ஆனால், அவர் வைத்திருந்தது ஆட்டு இறைச்சிதான் எனப் பிறகு சோதனையில் தெரிய வந்தது. அக்லக்கைக் கொன்ற கொலையாளி சிறையில் அடைக்கப்பட்டு இயல்பாக இறந்த பொழுது, அவனை ஒரு தியாகிபோலக் கொண் டாடினர். அது மட்டுமல்லாமல், அரசிடமிருந்து பல இலட்சக்கணக்கான ரூபாய்களை அவனது குடும்பத்தினருக்கு இழப்பீடாகப் பெற்றுத் தந் தனர், இந்துத்துவ ஆதரவாளர்கள்.

ஆனால், அக்லக் படுகொலையை நேர்மையாக விசாரணை செய்து குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கித் தந்த காவல்துறை அதிகாரி சுபோத் குமார், அண்மையில் இந்துத்துவவாதிகளால் குறி வைத்துப் படுகொலை செய்யப்பட்டார் .

“தயவுசெய்து மத வேற்றுமைகளை ஊக்குவிக் காதீர்கள்” எனத் தனது தந்தையைக் கொன்ற மத வெறியர்களை சுபோத்குமாரின் மகன் உருக்கமாக வேண்டிக்கொண்டார் என்பது கருதத்தக்கது.

இந்தியத் துணைக்கண்டத்தின் பல்வேறு பகுதி களில் செயல்பட்டுக்கொண்டிருந்த சமூகச் செயல் பாட்டாளர்களான சுதா பரத்வாஜ், வரவர ராவ், கௌதம் நவ்லாகா, அருண் பெரைரா மற்றும் வெர்னான் கொன்சால்வஸ் ஆகியோர் திடுமென 2018 ஆகத்து 28-ஆம் நாளன்று ஒரே சமயத்தில் கைது செய்யப்பட்டனர். பிரதமர் மோடியைப் படுகொலை செய்யச் சதித்திட்டம் தீட்டினர் எனும் பொய்யான காரணத்தைச் சுமத்தி, அறிவுத் தளத் தில் செயல்படும் இவர்கள் மீது பொய் வழக்குகள் புனையப்பட்டன. கருத்துரிமை காக்கும் போராளி களாக இன்று இவர்கள் சிறையில் வாடுகின்றனர்.

டி.எம்.கிருஷ்ணா, சிறந்த கர்நாடக இசைப் பாடகர், எழுத்தாளர், சமூகச் செயல்பாட்டாளர். சுற்றுச்சூழல், சாதியக் கட்டமைப்பு, மதவாதம் போன்ற பல்வேறு சிக்கல்களில் ஆக்க வழியிலான குறுக்கீடுகளைச் செய்துவருபவர். சிறந்த கர்நாடக இசைக்கலைஞராகக் கொண்டாடப்படும் எம்.எஸ். சுப்புலட்சுமி, மிகப் பரவலான செல்வாக்கைப்பெற ஒரு எடுத்துக்காட்டான பார்ப்பனப் பெண்ணைப் போல நடை, உடை, பாவனைகளை மாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது எனவும், பார்ப்பன ரல்லாத அவர், இதற்காகத் தனது குடும்பத்தின ரிடமிருந்து கூடச் சற்றே விலகியிருக்க நேர்ந்தது எனவும், அவர் கறுப்பு நிறத்தில் இருந்திருந்தால், இவ்வளவு புகழ் கிடைத்திருக்குமா எனவும் ஐதரா பாத்தில் 2017 நவம்பர் 24 அன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் டி.எம்.கிருஷ்ணா கேட்டதால், மிகக் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார்.

தவிரவும், அவர் கிருத்துவ மற்றும் இசுலாமியப் பாடல்களை மேடையில் பாடக்கூடாது எனவும் இந்துத்துவவாதிகள் எச்சரித்தனர். ஆனால் அவர் களின் மிரட்டலைப் பொருட்படுத்தாமல், அவர் அனைத்து மதப் பாடல்களையும் மேடையில் தொடர்ந்து பாடிவந்தார். இதனால் எரிச்சலடைந்த இந்துத்துவ வாதிகள், இவரது இசைக் கச்சேரி அமெரிக்காவில் நடைபெற்றாலும், அங்கும் இவ ருக்கு எதிராகக் கலகங்களைக் கட்டவிழ்த்து விடு கின்றனர்.

இசை என்பது சாதி, மதம் கடந்தது என்பதை இந்துத்துவ சக்திகள் ஏற்பதற்கு அணியமாக இல்லை என்பதைத்தான் இத்தகைய எதிர்ப்புகள் நமக்கு உணர்த்துகின்றன.

இராமச்சந்திர குகா, புகழ் பெற்ற வரலாற்றுப் பேராசிரியர் ஆவார். முற்போக்குச் சிந்தனையாளரான இவர், மாட்டிறைச்சி உணவைச் சாப்பிட்ட தாக அண்மையில் முகநூலில் பதிவு செய்திருந்தார்.

அதற்கு ஆர்.கே.யாதவ் எனும் இந்துத்துவ ஆதரவாளன் ஒருவன், “இந்துவாக உள்ள ஒருவர் மாட்டிறைச்சியைச் சாப்பிடுவதும், அதை வெளிப் படையாகக் கூறுவதும் மதத்தைக் களங்கப்படுத்து வதாகும். இராமச்சந்திர குகா இதன்மூலம், ஒட்டு மொத்த இந்துக்கள் அனைவரையும் கேலி செய்வ தாகத்தான் கருதுகிறேன். இவருக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும்” என முகநூல் மூலம் பொங்கி யுள்ளான்.

அதன் பிறகு, அவருக்கும், அவரது துணைவி யாருக்கும் தொலைபேசி மூலம் தொடர்ந்து அச் சுறுத்தல் வந்துகொண்டிருக்கிறது என்று இராமச் சந்திர குகாவே தெரிவிக்கிறார்.

இப்படி எங்கும் இந்துத்துவம், எதிலும் இந்துத் துவம் என்ற வெறிக்கூச்சல் நம் காலத்தில் அதிக மாகிக் கொண்டிருக்கிறது.

கருத்துரிமை பறிப்பு - வெறுப்பு அரசியல், அதன் விளைவாக வன்முறை எனும் நச்சு வலை நாடெங்கும் இன்று விரிக்கப்பட்டு வருகிறது. இதை அனுமதித்தால் எதிர்காலம் முற்றிலும் இருண்டுவிடும்.

“சிறிய பாம்பாயினும், பெரிய தடி கொண்டு அடி” என்பது பழமொழி. எனவே, இந்துத்துவச் சனாதனக் கோட்பாட்டை வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழித்தாலன்றி, தமிழகம் தன் விழுமியங்களைப் பாதுகாக்க முடியாது.

இந்துத்துவத்தை ஒழிப்பதுதான் இன்று முதல் வேலை.

வேறெந்த வேலையும் செய்யலாம் நாளை.

Pin It