தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் பல அறிக்கைகளை வெளியிடுகின்றனர். காலில் விழுந்தும் வாக்குகள் கேட்கின்றனர். தேர்தலுக்குப்பின் வெற்றி பெற்றாலும், வெற்றி பெறவில்லை என்றாலும் ஒருவரும் தான் கொடுத்த வாக்குறுதிகளைக் கண்டுகொள்வதில்லை. அவரவர்களின் கட்சித் தலைமைக்கு அடிமைகளாகிப் பதவிக்காகத் தன் மானம் இழக்கின்றனர்.

மக்களின் பிரதிநிதிகளாகச் செயல்படுவது இல்லை. கையூட்டை ஒழிப்போம் என்று கூறிவிட்டு, “வாக்கு வாங்கக் கையூட்டு கொடுத்தோம். அதனால் செலவு செய்ததைச் சம்பாதிக்க இப்பொழுது நாங்கள் கையூட்டை வெளிப்படையாக நடைமுறை செய்கின்றோம். வாக்குக் கொடுத்த அனைத்தையும் நிறைவேற்ற முடியாது” என்கின்றனர். கொள்ளையடிக்கும் திட்டத்தைத் திறம்படச் செய்து கொள்ளையடிக்கின்றனர்.

இனாம் கொடுத்து அரசியல்வாதிகள் கொள்ளையடிக்கும் திட்டங்கள் அதிகம். இனாமாகக் கொடுக் கும் கல்வி, மருத்துவம், குடிநீர் அனைத்தும் தரம் கவனிக்கப் படுவதில்லை, இதுபோன்ற துறைகளில் பணிபுரியும் அனை வருக்கும் அரசியல்வாதிகள் இடமாறுதல் மூலம் அளவில்லாத் தொல்லைகள் தருகின்றனர்.

அதனால் பணியாளர்கள் தங்களின் பணிகளை ஈடுபாட்டுடன் செய்யாமல் ஏனோதானோ வென்றும் எப்படியும் ஊதியம் வந்துவிடும் என்றும் எண்ணி மக்களைப் பற்றி அக்கறை இன்றிச் செயல்படுகின்றனர்.

நீதித்துறை, காவல்துறை போன்ற துறைகளில் பணியாளர்களைக் கால வரையறையின்றிப் பணிசெய்யச் சொல்லுகின்றனர்.

ஆனால் தனியார் துறையினரை “உங்கள் பணியாளர்களுக்கு எட்டுமணி நேரம் மட்டும் பணிசெய்ய வேண்டும்; அதிக நேரம் பணிசெய்தால் கூடுதலாக இரு மடங்கு ஊதியம் கொடுக்க வேண்டும்; இல்லையென்றால் சட்டம் தங்கள் மீது பாயும்” என்று கூறுகின்றனர்.

இப்படி நடைமுறைப்படுத்தும் இந்தத் துறையினர் தங்களின் பணியாளர்களைக் காலவரையறைக்கு உட்படுத்தி வேலை செய்ய சொல்வதில்லை. இதுபோன்ற செயல்தான் ஊருக்கு உபதேசம் எங்களுக்கு இல்லை என்றாகின்றது.

ஒரு அரசியல்வாதி கூறுகின்றார் : “இனிமேல் பொறுக்கித் தனம் இல்லாமல், பணம் கொடுக்காமல் வாக்கு வாங்க முடியாது.”

தேர்தல் ஆணையம் இதற்கு அளவீடு செய்யத் தவறியுள்ளது. கல்வி கற்பவன் குறிப்பிட்ட சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும் என்பதைப் போல் அரசியல்வாதிகளும் பதிவான வாக்குகளில் இவ்வளவு வாக்குகள் கட்டாயம் பெறவேண்டும் என்று தேர்தல் ஆணையம் என்று செயல் முறைப்படுத்துமோ அப்பொழுது ஓரளவுக்கு சூழல் உருவாகும்.

இதைக்கண்டுகொள்ளாததேர்தல்ஆணையமும்ஊருக்குத்தான்உபதேசம்செல்வதாகும்.

Pin It