பப்பாளிப்பழம், உண்பதால் இதயம் முதல் பெருங்குடல் வரை உள்ள அனைத்து உடல் உறுப்புகளுக்குப் பல நன் மைகள் கிடைக்கின்றன. பப்பாளிப் பழம் அனைத்துக் காலங்களிலும் எளிதில் கிடைக்கின்றது. இப்பழத்தின பயன்கள் சளி, இருமல், சிறுநீரகக் கோளாறு நீக்குதல், ஈரல் சுத்தமடைதல், நச்சு நீக்குதல், நோய் எதிர்ப்பு சக்தி, வைட்டமின் சி, வாதம் நீக்குதல், செரிமானம் செய்தல், பருமனான உடல் எடை குறைத்தல், மலச்சிக்கல் நீக்குதல், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துதல் என்பனவாகும். மேலும் கால்சியம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ள இந்தப் பழத்தை உண்டு பல நன்மைகள் பெறலாம். இது போன்று கீழ்க்கண்ட பழங்கள் காய்களின் பயன்களைக் காண்பீர்.

தூதுவளை சளி-இருமலை போக்கும். அன்னாசிப் பழம், புதினா செரிமான கோளாற்றை நீக்கும். சிறுகுறிஞ்சான் சர்க்கரை நோயை நீக்கும். வாழைத்தண்டு, கீழாநெல்லி சிறுநீரகக் கற்களை நீக்கும். வல்லாரைக் கீரை ஞாபகசக்தி யைப் பெருக்கும். சுண்டைக்காய், ஆடாதொடை, கற்பூர வல்லி ஆகியவை சளித் தொல்லையை நீக்கும். செம் பருத்திப்பூ, தாரைப்பூ இதயத்தை வலுப்படுத்தும். முடக்கத் தான் கீரை மூட்டுவலியை நீக்கும். தும்பை, கருங் கொன்னை, கோரை சரும நோய்களை நீக்கும். மணத் தக்காளிக் கீரை, கோலைக் கீரை, முருங்கைக் கீரை குடல் புண்களை ஆற்றும். வெந்தையக் கீரை, புதினா, பூண்டு வாயு தொல்லையை நீக்கும். முள்ளங்கி, வில்வம், அரைக் கீரை, நீரிழிவு நோயைக் குணமாக்கும். மலைவாழை, சப்போட்டா பழம் மூல நோயைக் குணமாக்கும். மாதுளை, செம்பருத்தி, அருகம்புல், பீட்ரூட் இரத்தத்தைச் சுத்தம் செய்யும். இதுபோன்று இயற்கையாகக் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள் பல உள்ளன. இவற்றை முறையறிந்து உண்டு பயன்பல பெறுங்கள். செயற்கையான இரசாயன முறையிலான உணவுகளைக் கைவிடுங்கள்.

- விவசாயி மகன் ப.வ.

Pin It