திராவிடர் கழகம் ஓர் எதிர்ப்பு உணர்ச்சி ஸ்தாபனம் அதன் வேலைகள் பின்வருமாறு;

1 இந்து சமுதாயத் துறையில்:

பார்ப்பன எதிர்ப்பு,வைதீக எதிர்ப்பு, மூடநம் பிக்கை எதிர்ப்பு,சாஸ்திர புராண,இதிகாச எதிர்ப்பு, ஜோசியம், சகுனம், சடங்கு,யாகம் எதிர்ப்பு.

2 மதத் துறையில்:

கடவுள்கள் எதிர்ப்பு, கோவில், பூசை, உற்சவங்கள் எதிர்ப்பு, ஆன்மா மேல் உலகம் எதிர்ப்பு, மோட்சம்-நரகம் எதிர்ப்பு.

3 அரசியல் துறையில் :

காங்கிரஸ் எதிர்ப்பு, பார்ப்பன ஆதிக்கம் எதிர்ப்பு, மத்திய அரசாங்க எதிர்ப்பு, ஹிந்தி எதிர்ப்பு.

4 கல்வி-கலை-இலக்கியத் துறையில்: ஆரிய கலாச்சார, அனுஷ்டான, வர்ணஸ்ரம, மத கருத்துக்களை புகுத்தும் கல்வி கலை இலக்கியம் எதிர்ப்பு.

5 பொருளாதாரத் துறையில்: சுரண்டப்படுதல், குவிக்கப்படுதல் எதிர்ப்பு.

இந்த தன்மைகள் கொண்டதுதான் திராவிடர் கழகம். இந்த உணர்ச்சி கொண்ட வேறு எந்த ஸ்தாபனங்களுடனும் கழகம் ஒத்துழைக்கும். மேலும் கழகம் எதிர்ப்பில்தான் உற்சாகமுள்ளதாக இருக்குமே தவிர ஆதரிப்பை அவ்வளவாக விரும்பாது.

- விடுதலை (7.4.1952)

Pin It