இந்தியாவில் முதன்முதலாக 1871இல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பதை வெள்ளையர் அரசு செய்தது.

1901இல் பிராமணர், சூத்திரர் என்றே பதிவு செய்யப்பட் டிருக்கிறது. 1906இல் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்குப்படி சென்னை மாகாணத்தில் பிராமணர் 3.4 விழுக்காடும் சூத்திரர் 94.3 விழுக்காடும் இருந்தனர் (பக்.37,215 ஒடுக்கப்பட்டோர் விடுதலை, வே. அனைமுத்து).

1911-இல் முதல் முறையாக இந்துக்களுக்குள் இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் தொகையைத் தனியே கணக்கெடுப்புச் செய்து 4.19 கோடி இருக்கிறார்கள் என வெள்ளை ஆட்சி யாளர்கள் அறிவித்தனர்.

இதே முறையில் சாதிவாரியாக 1931 வரை நடைபெற்றது. 1941இல் உலகப் போரின் காரணமாகக் கணக்கெடுப்புச் சரிவர எடுக்கப்படவில்லை. 1951க்குப் பின் நடந்த கணக்கெடுப்பில் சாதிவாரிக் கணக்கெடுப்புக் கைவிடப்பட்டது.

1929, 1930 ஆண்டுகளில் தாழ்த்தப்பட்ட மக்களின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பெரியார், “1931இல் மக்கள் தொகைக் கணக்கெடுக்க வரும்போது இந்தியன் என்றும் பகுத்தறிவுக்காரன் என்றும் மாத்திரம் தான் சொல்ல வேண்டுமே ஒழிய மதத்தின் பேராவது சாதியின் பேராவது சொல்லக்கூடாது” என்று, குடிஅரசு இதழ்களின் உரைகளை எடுத்துக்காட்டி, அவர் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு எதிராக இருந்தார் என்று எண்பித்து, அப்படி அவர் பேசியதுங்கூட இந்தியச் சமூகத்தில் சாதிப்பிரிவுகளும் வித்தியாசங்களும் இருக்கக் கூடாது என் பதற்காகத்தான் என்று முடிக்கின்றார், கட்டுரையாளர்.

சாதியற்ற சமுதாயம் காணவேண்டும் என்பது பெரி யாரின் குறிக்கோள். ஆனால் பிறவிக் கட்டமைப்போடு பல்வேறு கீழ், மேல், அதற்குமேல் என்ற, படிநிலைச் சாதிச் சமூக அமைப்பினைக் கொண்ட இந்துமதத்தில் சாதி அமைப் புப் பிரிவுகள் உள்ளவரை கல்வி, வேலையில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதுதான் அவருடைய கோட் பாடு. இந்தக் கோட்பாடு நிறைவடைந்தால் அவருடைய குறிக் கோளை எட்ட முடியும் என்பதில் அவர் மிகத் தெளிவாக இருந் தார். அவர் கூற்றைக் கொண்டே மேலும் தெளிவுபெறுவோம்.

“தன் பங்கைத் தனக்குக் கொடு என்று கேட்டவுடன் கொடுக்க மறுத்த குடும்பங்கள் எல்லாம் நாசமுற்றே இருக் கின்றன. ஆகவே எந்த மத, சாதி, வகுப்பாருடைய பங்கை யாராலும் மறுத்து ஏமாற்றப் பார்த்தால் கண்டிப்பாக அந்த நாடு கேடுறுவது திண்ணம்” (08.11.31 குடிஅரசு தலை யங்கத்தின் இறுதிப்பகுதி, பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் பக்கம் 1414).

பெரியார் அவர்கள் ‘குடும்பங்கள்’ என்று சொன்னதை ‘அரசுகள்’ என்று நாம் எண்ணினால் வரலாறு நமக்கு மேலும் தெளிவைக் கொடுக்கும்.

அவர் வகுப்புஉரிமை விகிதாச்சாரப்படி பங்கீடு செய்து அளிக்கப்பட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார் என்பதைக் கீழ்க்காணும் அவர் உரையின் மூலம் அறியலாம்.

“கடைசியாக நான் கூறுவது நமக்கு அழிவையும், கீழ்த்தன்மையையும், வசதியின்மையையும் கொடுக்கிற இந்தச்சாதிகள் ஒழிந்து மக்களுக்குச் சமமான தன்மைகள் வரும்வரை இப்போதைய பிற்பட்ட வகுப்பினருக்கு அறிவு வளர்ந்து, நாகரிகம் அடைந்து அரசியலில் கலந்து கொள்வ தற்காகக் கல்வி, அரசு வேலை முதலியவற்றில் அவரவர் களின் எண்ணிக் கைக்குத் தகுந்தபடி விகிதாச்சாரம் அளிக்கப் பட வேண்டும் என்பதுதான்....” நம்மவர்களுக்குள்ளேயும் சாதியின் படியே வேண்டுமென்றால் எடுத்துக் கொள்ளட்டும். ஏன் இதைக் கூறுகிறேன் என்றால் சாதிகளை ஒழிக்காமல் அவைகளை விட்டு வைத்துக் கொண்டு இதிலே மட்டும் சாதித்தன்மை கூடாது என்பதிலே ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? நமக்குரியதைக் கொடுக்க வேண்டும் என்பது வகுப்புவாதமா? சுயராஜ்யம் வந்துவிட்டது. உத்தரவு போடட்டுமே சாதி இல்லை யென்று. அதை விட்டுவிட்டு மதச்சார்பற்ற சர்க்கார் என்று விளம் பரப்படுத்திக் கொண்டு ஸ்டாம்பில் கோபுரத்தை, நடராசர் உரு வத்தை வைத்துக் கொண்டிருப்பது என்றால் என்ன நியாயம்? (குன்னத்தில் 02.04.1950இல் சொற்பொழிவு, விடுதலை 9.4.1950 பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் பக்.1416).

“இந்த நிலை இப்படியே இருக்குமானால் நமது எதிர் காலம் மிகமிக மோசமாய்ப் போய்விடும் ஆனதால், இப்போது உள்ள வசதியைக் கொண்டு நமது வகுப்பு விகிதாச்சார உரிமையை நாம் முதலில் பெற்று ஆகவேண்டும்?” (விடுதலை தலையங்கம் 18.3.1967; பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், பக்.1419).

1963ஆம் ஆண்டில், இடஒதுக்கீட்டின் மொத்த விழுக்காடு 50க்குள் தான் இருக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பின் எதிர்வினையாகப் பெரியார் அவர்களின் விகிதாச்சார வகுப்புரிமை பற்றிய பேச்சும் 18.3.1967இல் ‘விடுதலை’ தலையங்கமும் அமைந்தன.

‘இடஒதுக்கீட்டின் அளவை இனி ஒருபோதும் உயர்த்திட முடியாதபடி உச்சநீதிமன்றம் 50 விழுக்காடு என்று வரம்பு நிர்ணயித்துவிட்டது’ என்றும், ‘சாதிவாரிக் கணக்கெடுப்பு முறை கூடாது என்று உச்சநீதி மன்றம் தடைவித்துவிட்டது’ என்றும் கூச்சலிடுபவர்கள் கவனத்திற்குச் சில செய்திகள்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கல்வியில் ஒதுக்கீடு வாய்ப்பே இல்லை என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளித்த போது, தந்தை பெரியார் வெகுண்டெழுந்து 1950-இல் நடத்திய வகுப்புவாரிக் கிளர்ச்சியின் விளைவாகத்தான் சமுதாயத்தி லும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கும் பட்டியல் வகுப்பினருக்கும், பழங்குடியினருக்கும் கல்வி மேம்பாட்டில் எந்தவிதத் தனி ஏற்பாட்டையும் செய்து கொள்ளலாம் என்று, 1951இல் முதல் அரசமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலம், அவர் பெற்றுத்தந்த 15(4) விதியை நினைவில் கொள்ள வேண்டும்.

நீதிமன்றத்தைவிட மக்கள் மன்றம் வலிமை வாய்ந்தது என்பதை உணர வேண்டும். இதைத் தந்தை பெரியார் அவர்கள் எவ்வளவு வேதனையோடு விளக்குகிறார் என்று காண்போம்.

“வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் பார்ப்பானுக்கு விரோத மாகி விடுகிறது என்பதற்காக, சர்க்காரில் வகுப்புவாரிப் பிரநிதித்துவம் என்பதை 1950இல் எடுத்து விட்டார்கள். பிறகு நாங்கள் செய்த கிளர்ச்சியில் பயனாகச் சட்டத்தில் கொஞ்சம் திருத்தம் செய்திருக்கிறார்கள். படிப்பு, உத்தியோகம், சமுதாயம் ஆகியவற்றில் பின்தங்கியவர்களுக்குச் சலுகை காட்டத் திட்டம் செய்து கொள்ளலாம் என்று எழுதியிருக்கிறார்கள்.”

“அரசியல் சட்டத்தால் ஆதித்திராவிடர்களுக்கு மாத்திரம் அவர்களுக்குரிய விகிதாச்சாரம் கிடைத்திருக்கிறதே ஒழிய, மற்ற திராவிட மக்களுக்கு விகிதாச்சாரம் கிடைக்கவே இல்லை. இப்படி நாங்கள் கூறுவதை ஆதித்திராவிடர்கள் தங்களுக்கு விரோமானது என்று கூறிக்கொள்கிறார்கள். மற்ற திராவிட மக்களுக்கு அவர்களால் (ஆதித்திராவிடர்கள்) ஆகவேண்டியது ஒன்றும் இல்லை. ஆனாலும், நாம் எவ்வளவோ செய்தோம்; அப்படி இருந்தும் ‘பிராமணர்கள் தேவலை, சாதி இந்துக்களால் தான் எங்களுக்குத் தொல்லை’ என்று கூறுகிறார்கள். இது நன்றியற்ற பேச்சு. அவர்களை இந்நிலைக்குக் கொண்டு வந்தவர்கள் யார்? பார்ப்பனர்களா? நாங்கள் செய்த கிளர்ச்சி யாலும், முயற்சியாலும் தான் இன்று அவர்கள் சமுதாயத்தில் தலையெடுக்க முடிகிறது. அவர்கள் படிப்புத் துறையில் வழி காட்டியவர்கள் நாங்களே. ஆதித்திராவிடர்களின் கோவில், தெருநுழைவுக்கு முதல்முதல் போராடியவர்கள் நாங்கள் தாம். ஆதித்திராவிடர்கள் படித்தவர்களாகவும் உத்யோகத்தர் களாகவும், சட்டசபை உறுப்பினர்களாகவும், மந்திரிகளாகவும் ஆனார்கள் என்றால், பார்ப்பனர்களாலா? இதற்கெல்லாம் அவர்கள் நன்றி செலுத்தவில்லை என்றாலும், நமக்கு விரோதி களாவது ஆகாமல் இருக்கவேண்டாமா?” (சென்னை பெரியார் நகரில் 17.9.1956இல் சொற்பொழிவு, விடுதலை 21.9.1956 பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், பக்.1425).

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் விகிதாச்சாரப் பங்கீடு கிடைத்துவிட்டதா? உத்தியோக உயர்வில் நியாயம் கிடைத்து விட்டதா என்றால்-இல்லை. இன்னும் உள் ஒதுக்கீடு சிக்கல் அம் மக்களுக்கும் உள்ளது. சாதிவாரிக் கணக்கெடுப்பு மேற் கொள் ளாமல் எந்தப் பங்கீட்டையும் முறையாக மேற்கொள்ள இயலாது.

அரசமைப்புச் சட்டத்தில் 16(4) விதியின் கீழ் எந்தப் பிற் படுத்தப்பட்ட வகுப்புக் குடிமக்கள் வேலைகள், பதவிகளில் போதிய பிரதிநிதித்துவம் பெறவில்லையோ (Not adequately represented in the services under the state)) அவர்களுக்கு எந்தச் சிறப்பு ஏற்பாடும் செய்து அவற்றில் அவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்யலாம் என்று மூலச்சட்டத்தில் அம்பேத்கர் செய்திருந்த பாதுகாப்புத்தான் பிற்பட்டோருக்கு மண்டல் குழு மத்திய அரசு வேலையில் இடஒதுக்கீடு செய்ய வழிவகுத்தது.

இடஒதுக்கீடு 50 விழுக்காட்டுக்கு மேல் இருக்கக் கூடாது என்ற 1963இன் உச்சநீதிமன்றத் தடைதான் பிற்படுத்தப்பட் டோர் மட்டுமே 50 விழுக்காட்டுக்கு மேல் இருந்தும் 27 விழுக்காடு மட்டுமே பெறக் காரணமானது.

இதே கருத்தை வலியுறுத்துகிற ஒரு தீர்ப்பை 16.11.1992 இல் உச்சநீதிமன்றத்தின் அரசமைப்பு அமர்வு உறுதிப்படுத் தித் தந்த தீர்ப்பு, நீதிபதிகள் செய்த சட்டம் (Judge Made Law) என்ற உச்சக்கட்ட அதிகாரத்தைப் பெற்றுவிட்டது.

இந்த அநீதியைப் போக்க நாடாளுமன்றத்தில் உரிய சட்டத் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றினால் மட்டுமே இயலும்.

இம்முயற்சிக்கு அரசியல் கட்சிகளைக் கடந்த, பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ்மக்கள் மற்றும் மதச் சிறுபான் மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒற்றுமையே உதவும்.

இந்த ஒற்றுமை சாதி வெறியைக் குறைத்து இனி வருங் காலத்தில் இந்திய மண்ணில் சாதியொழிந்த சமுதாயத்தை அமைக்க உதவும்.

இவ்வொற்றுமை ஏற்படுவதற்கு மாறாக, சாதி வாரிக் கணக்கெடுப்பது பிற்பட்ட மக்களிடையே போட்டியையும் மோதலையும் பகையையும் ஏற்படுத்திக் கல்வி, வேலை வாய்ப்புகளில் உள் ஒதுக்கீடுகளுக்கான போட்டியாக உருவாகி எண்ணிக்கை பலம் கொண்ட சாதிகளின் சர்வாதிகாரம் தோன்ற வழிவகுக்குமா என்ற ஐயம் தாழ்த்தப்பட்ட சமூகத் தலைவர்களின் எண்ணத்தில், செயலில் காணப்படுவதே பிற்படுத்தப் பட்ட மக்கள் எண்ணத்தில் தந்தை பெரியாருக்கு 1956இல் ஏற்பட்ட ஐயத்தை உண்மையாக்கிவிடும்.

இந்தியச் சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் மட்டுமே பெரும்பான்மை மக்கள். இச்சமூகத்திற்குத் தந்தை பெரியார், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ஆகிய இருபெரும் இந்தியத் தலைவர்களின் உழைப்பும், பங்களிப்பும் இவ்விரு பெரும் பிரிவு மக்களுக்கும் அளப்பிற்கரியது.

இவ்விரு சமூகத்திலும் உள்ள படித்து, பட்டம் பெற்றுப் பொறுப்பில், பதவிகளில் உள்ள சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் ஆழ்ந்து சிந்தித்து, ஒற்றுமை உணர்ச்சியைப் பேணி எல்லோருக்கும் அனைத்துப் பிரிவினருக்குமான விகி தாச்சார வகுப்புவாரிப் பங்கீடு பெறும் வகையில் பொறுப்புணர்ச்சியுடன் முயற்சி மேற்கொள்வது இன்றியமையாததாகும்.

பிற்படுத்தப்பட்டோரையும், தாழ்த்தப்பட்டோரையும் பிரித்துவிட, பார்ப்பனரும், அனைத்து மேல்சாதியினரும் தொடர்ந்து முயலுகின்றனர்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒற்றுமை யோடு போராடத் தவறினால் அவ்விரு பெருந்தலை வர்களின் அளப்பரிய உழைப்பை மறந்து இனஞ் சேராமை என்ற பெரும் பழியை, இழிவை நம் இளந்தலைமுறையினருக்கு வழிகாட்டி யவர்கள் என்ற வரலாற்றுப் பெரும்பழிக்கு வழிகாட்டிச் சென்ற வர்களாகிவிடுவோம். பார்ப்பான், முற்பட்ட வகுப்பாரின் நயவஞ்சகச் செயல்களுக்கு ஆட்பட்டு, இவ்விரு சமூகங்களும் இதுவரை பெற்ற உரிமைகளையும் இழந்து நிற்கும் கையறு நிலைக்கு உள்ளாவோம். எச்சரிக்கையுடன், பொறுப்புடன் கடமை ஆற்றுவது இன்றியமையாததாகும்.

Pin It