மனிதனைத் தவிர அனைத்து உயிரினங்களும் இயற்கை உணவையே உண்டு வாழ்கின்றன. இயற்கை உணவை உண்பதால்தான் அவைகளின் எலும்பும் நரம்பும் நன்கு வளையும் தன்மை பெற்று எவ்வித பாதிப்பையும் தாங்கும் சக்திபெற்று வாழ்கின்றன. ஆனால் மனிதன் மட்டும்தான் சமைத்த உணவை உண்ணுகின்றான். அதனால் எலும்பும் நரம்பும் முறுக்கேறிச் சிறு பாதிப்பையும் தாங்கும் சக்தியை இழந்துவிடுகின்றன.

உடல் எடை குறையவும், சுறுசுறுப்புப் பெறவும், கொழுப்பைக் குறைத்து உடல் பருமனைக் குறைக்கவும், ஆற்றலுடன் விளங்கவும் எளிய ஒரே வழி இயற்கையாகக் கிடைக்கக் கூடிய உண்ணத்தகுந்த உணவுகளை உண்பதுதான். இயற்கை உணவால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். அதனால் குழந்தைகள் சீராக வளர்ச்சி பெற்று நன்கு வளரும். இயற்கையாகக் கிடைக்கும் மா, கொய்யா, பேரீச்சை, திராட்சை, ஆரஞ்சு, வேர்க்கடலை, சீத்தாப்பழம், வாழைப்பழம், தக்காளி, சப்போட்டா, பச்சை சோளம், கேழ்வரகு, பயிறு வகைகள், போன்றவற்றை அப்படியே உண்பதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி பெருகி நலமுடன் வாழலாம்.

இயற்கை உணவை உண்டு வாழும் உயிரினங்களுக்கு முடிகள் நரைப்பது இல்லை. பற்கள் விழுவதில்லை. கண் பார்வை குறைவதில்லை. கூன், வழுக்கை விழுவதில்லை. செயற்கை உணவு உண்டு வாழும் மனிதனுக்கு மட்டும் கூன், வழுக்கை, பல் சொத்தை, கண் பார்வைக் கோளாறு போன்றவை ஏற்படுகின்றன. இயற்கை உணவு உண்ண மனிதன் இனி முக்கிய கவனம் செலுத்த வேண்டும். இரசாயன உரங்கள் போட்டுக் கிடைக்கும் விளைபொருட்கள் அனைத்தும் செயற்கைப் பொருள்களே. பருவ காலத்திற்கு ஏற்ற உணவுகள் இயற்கையாக விளைந்தன; இப்பொழுது விளைவதில்லை. காரணம் பேராசை கொண்ட மனிதன் இயற்கையை அழித்துக் கொண்டே வருகின்றான். மேலும் மக்கள் தொகையும் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் ஏற்ப இயற்கையை அழித்துவிட்டனர்.

எவ்வளவு நாம் இயற்கையை அழிக்கின்றோமோ அந்த அளவுக்கும் மனித இனம் அழியும். தூய குடிநீர் கிடைத்த இந்த மண்ணில் செயற்கைக் குடிநீர் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். செயற்கைப் பொருள்களைப் பயன்படுத்துவதால் மனிதனுக்கு நோய்களும் புதிய வடிவில் உருவெடுத்து உயிரினங்களுக்கே பெரும் கேட்டை உண்டாக்கி வருகின்றன. மனித இனம் அழிவதைத் தடுக்க மனிதன் இயற்கையை அழிக்காமல் காப்பாற்றிட வேண்டும். நீண்ட காலம் நலமுடன் வாழலாம். காடுகளை காப்போம்; மரங்களை வளர்ப்போம்; நீர்நிலைகளை காப்பாற்றுவோம், நீர்நிலைகளைக் காப்பாற்ற மா.பெ.பொ.கட்சியின் துணை அமைப்பான வேளாண் அணியுடன் கைக்கோத்துச் செயல்படுவோம். (தொடர்புக்கு வேளாண் அணிச் செயலாளர் அரங்க சானகிராமன். கைப்பேசி : 9159710025)

Pin It