இந்தியாவில் தோன்றிய மதங்களுள் மூத்தது இந்து மதம் என்கிற சனாதன மதம். அது இந்து மனிதர்களை நான்கு வருணங்களாகவும், 6700 உள்சாதிகளாகவும் வேதம், உபநிடதம், புராணங்கள் வழியில் பிறவி அடிப்படையில் பிரித்து வைத்தது.

அதனால் தான் 126 கோடி மக்கள் உள்ள இந்தியாவில் 20 கோடிப் பேர் இசுலாமியர், கிறித்து வர், பௌத்தர், சமணர் என்று இருக்கிறார்கள். இந்துக் கள் வெறும் 106 கோடிப் பேர் இருக்கிறார்கள்.

இந்துக்கள் அயல்நாடுகளில் 3, 4 கோடிப் பேர் உள்ளனர்.

அதாவது 3000 ஆண்டுகளுக்கு முந்திய - மனிதத் தை மறுக்கும் இந்து மதத்தில் 110 கோடிப் பேரே உலகில் உள்ளனர்.

அடுத்துப் பழைய மதம் பௌத்தம் - 2650 ஆண்டுகள் பழமை உடையது. எங்குமே உண்மை யான புத்தர் கொள்கை இல்லாவிட்டாலும் - சீனா, சப்பான், தாய்லாந்து, மியான்மர், இலங்கை போன்ற பல நாடுகளில் பல கோடி பவுத்தர்கள் உள்ளனர்.

அடுத்த மூத்த மதம் கிறித்துவம். 2014 ஆண்டு கள் வயதுடையது. கத்தோலிக்கர், புரொடஸ்டண்டு என 200 கோடிக்கு மேல் பல மேலை நாடுகளிலும், வெள்ளையர் ஏகாதிபத்தியம் பரவியிருந்த இடங்களி லும் இவர்கள் உள்ளனர்.

மிகப் பிற்காலத்தில் 1550 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இசுலாமிய மதத்தில் அரபு நாடுகள், எகிப்து, இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான், பாக்கிஸ் தான், இந்தியா முதலான நாடுகளில் 150 கோடி இசுலாமியர் உள்ளனர்.

இன்றைய உலகில் உள்ள 720 கோடி மக்களில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் உள்ளவர்கள் இந்துக்களே. மனித உரிமை, மனிதரிடையே சமத்துவம் 3000 ஆண்டுகளாக இல்லாத மதம் என்பதால்தான் இந்த இழி நிலை.

தென்னிந்தியாவில் மகாராட்டிரத்தில் 1873இல் மகாத்மா புலே அவர்களால் தொடங்கப்பட்ட இயக்கம் சாதி வேறுபாடுகளைக் களைவதாக இருந்தது. 1920 வரையில் கோல்காப்பூர் சிற்றரசர் போன்றவர்களால் அது தூக்கிப் பிடிக்கப்பட்டது.

கேரளத்தில் ஸ்ரீநாராயண குரு, அய்யங்காளி ஆகியோர் தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்புக் கொள்கைகளுக்காக அரும்பாடுபட்டனர்.

1926இல் ஈ.வெ.இரா.வின் முயற்சியால் சுய மரியாதை இயக்கம் தொடங்கப்பட்டது.

இவை மானிட உரிமை, மானிட சமத்துவம் இவற்றுக்குப் பாடுபட்ட இயக்கங்கள்.

வெள்ளையன் ஆட்சி 1801இல் நிலைபெற்ற பிறகு, அன்று 1860க்குள் ஆங்கிலக் கல்வி பெற்ற பார்ப்ப னர்கள், சத்திரியர்கள், மேல்தட்டு இசுலாமியர்கள் இணைந்து 1885இல் இந்தியத் தேசியக் காங்கிரசை நிறுவினர். 1906இல் கல்வி பெற்ற இசுலாமியர் முசுலீம் லீக் என்ற அமைப்பை நிறுவினர்.

1916இல் தென்னாட்டுப் பார்ப்பனரல்லாத பணக் காரர்களும் மேல்சாதிக்காரர்களும் படித்தவர்களும் இணைந்து தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் என்ற நீதிக்கட்சியை நிறுவினர்.

இங்கிலாந்திலும் செர்மனியிலும் கல்வி கற்ற சிலர் 1925இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியை நிறுவினர்.

இந்நான்கு கட்சிகளும் வெவ்வேறு பெயர்களில் இன்றும் செயல்படுகின்றன.

வெள்ளையன் காலத்தில் 1909இல் தனித்தொகுதி கள் பெற்றுச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வர்கள் இசுலாமியர்.

1919இல் தனித்தொகுதிகள் பெற்ற “சென்னை மாகாணப் பார்ப்பனர் அல்லாதார்” 1920இல் சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிட்டனர்.

மற்றெல்லாக் கட்சிகளும் உள்ளாட்சிகள், மாநிலச் சட்டமன்றங்கள், இந்திய மக்களவைத் தேர்தல் இவற் றுக்குப் போட்டியிடுகின்றனர்.

பின்கண்ட இருப்பு நிலைகளை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

இந்தியாவில் 6 இலக்கம் சிற்றூர்கள் இருக்கின் றன. இவற்றில் எல்லாச் சிற்றூர்களிலும் சில வாக்கு களையாவது பெற்றிருக்கும் அனைத்திந்தியக் கட்சி காங்கிரசு மட்டுமே.

தமிழ்நாட்டில் 54,000 சிற்றூர்களிலும் சில வாக்கு களையாவது பெற்றிருக்கும் கட்சிகள் காங்கிரசு, தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. ஆகிய மூன்று கட்சிகளே.

இந்தியாவில் எல்லா மதங்களிலும், எல்லா உள் சாதிகளிலும் சில வாக்குகளைப் பெற்றிருப்பது காங்கிரசு மட்டுமே.

தமிழ்நாட்டில் எல்லா மதங்களிலும் எல்லா உள்சாதிகளிலும் சில வாக்குகளைப் பெற்றிருப்பது காங்கிரசு, தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. மூன்றுமே.

இருப்பினும் இந்திய அளவிலும் தமிழகத்திலும் காங்கிரசு இன்று படுவீழ்ச்சி அடைந்து கிடக்கிறது. இதற்கு 1975இல் அடிப்படை போட்டவர் இந்திரா காந்தி. அவர் சர்வாதிகாரியாக மாறி ஆடாத ஆட்டமெல் லாம் ஆடி - மேல் மட்டம் முதல் கீழ்மட்டம் வரை காங்கிரசில் மக்கள் நாயக முறையைக் கொன்றார்.

அவரை அடுத்து வந்த இராசீவ் காந்தியும், அவருக் குப் பின்னர் கட்சியின் தலைமையை ஏற்ற சோனியா காந்தியும் இந்திரா காந்தியை விட ஒருபடி மேலே போய், காங்கிரசுக் கட்சி அடியற்று வீழச் செய்தார்கள்.

இந்த காங்கிரசுக்கு மாற்றாக உருவாகி இருக்க வேண்டிய இந்தியப் பொதுவுடைமைக் கட்சி தொடக்கம் முதலே சாதியொழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, வெகுமக்களுக்கு வகுப்புவாரி யாகக் கல்வி உரிமை, அரசு வேலை உரிமை இவற் றைப் பெறுதல் முதலான வேலைத் திட்டங்களாக வைத்து, 85 விழுக்காடு மக்களிடம் கால் கொண்டி ருக்க வேண்டியதற்கு மாறாக - முதலாளித்துவ எதிர்ப்பை மட்டுமே கொண்டனர். 1964 முதல் செஞ்சீனத்தை, இரசியாவைத் தத்தம் கட்சிகளுக்கு வழிகாட்டிகளாகக் கொண்டனர்.

திராவிடக் கட்சிகள் நாட்டுப் பிரிவினைக் கொள்கை யை வைத்திருந்த போதே, அதை 1963இல் கைவிட்ட போதே அனைத்திந்தியக் கட்சியாக உருவாகியிருக்க வேண்டும். இவை தமிழ்நாட்டோடு நின்றன.

இத்தனை இடைவெளிகள் ஏற்பட்டதால்தான், இன்று, 2003க்குப் பிறகு திட்டமிட்டு 2014இல் பாரதிய சனதாக் கட்சி மக்களவையில் போதிய பெரும்பான் மை இடங்களைப் பெற்று, இந்திய ஆட்சியைப் பிடித்தது.

அக்கட்சியினர் எப்படியெல்லாம் விளம்பரம் செய்தார்கள் - மோடியைப் பேருருவமாகக் காட்டினார் கள் என்பது வேறு. இதைச் செய்கிற வக்கு காங்கி ரசுக்கு இல்லை.

இதைப் பொதுவுடைமைக் கட்சிகள் செய்ய முடியாது; செய்ய வக்கில்லை; செய்யக்கூடாது.

ஆனால் திராவிடக் கட்சிகள் இரண்டும் - பாரதிய சனதாவையும் மிஞ்சி, 2014 நாடாளுமன்றத் தேர்த லில் எல்லா முனைகளிலும் செயல்பட்டன. அந்தச் செயல்பாட்டில் மிஞ்சிய அ.இ.அ.தி.மு.க. தமிழகத்தில் வென்றது.

தமிழகத்தில் பெரிய எண்ணிக்கையில் உள்ள உள்சாதியினர், இந்த இரண்டு திராவிடக் கட்சி களும், காங்கிரசும் ஒவ்வொரு உள்சாதியிலும் பங்குபோட்டுக் கொண்டது போக, மிச்சத்தையே பெறமுடியும் என்கிற எளிய புரிதல் அந்தந்த உள்சாதியினருக்கு இல்லை.

வேட்பாளர் தேர்வு செய்வதற்கு உள்சாதி அடிப் படை; முதலில் வாரிக் குவித்திட முயலுவது வேட்பா ளரின் சாதியினரின் வாக்குகள்.

இந்தியா முழுவதிலும் வாக்கு வாங்கும் கட்சி களின் சூதாட்டம் இப்படித்தான் நடக்கிறது.

காட்டாக, மிகப் பெரிய மாநிலமான உ.பி.யில் யாதவர்கள் மட்டும் 12 விழுக்காடு; ஜாடவ், சமார் என்று அழைக்கப்படும் சக்கிலியர் உள்சாதியினர் 12 விழுக்காடு.

தென்னாட்டுச் சக்கிலி வகுப்பினருக்கு இல்லாத பெரிய வாய்ப்பு உ.பி. சக்கிலியருக்கு 70 ஆண்டு களுக்கு முன்னரே கிடைத்தது. அதாவது கான்பூர், ஆக்ரா, இலக்னோ முதலான இடங்களில் பெரிய பெரிய தோல் தொழிற்சாலைகள் உள்ளன. அங்கு அவர்கள் மாத ஊதியம் பெறும் தோல் தொழிலாளர் களாக மாறினர். பெரிய படிப்பு, நல்ல வீடு, அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பதவிகளில் பங்கு எனப் பெற்றனர். பட்டியல் வகுப்பினரில் - உ.பி.யில் இவர் களே அதிகம் பேர். ஆனால் தமிழகம், இராசஸ்தான், அரியானா மாநிலங்களில் சக்கிலியரின் நிலை அப்படி இல்லை.

யாதவர் சாதிக் கொள்ளையர் முலாயம் சிங்; ஜாடவ் சாதிக் கொள்ளையர் மாயாவதி இவர்களுக்கு எப்போதெல்லாம் உ.பி. முசுலிம்கள் முட்டுக் கொடுக் கிறார்களோ, அப்போது, மாறி, மாறி இவ்விருவரும் பதவி ஏற்பவர்.

ஆனால் உ.பி.யிலும், பீகாரிலும் தான் இந்தியா வின் சராசரி படிப்பறிவை விடக் குறைந்தவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் பெரிதும் பட்டியல் வகுப்பி னரும், பழங்குடியினரும் பிற்படுத்தப்பட்டோருமே ஆவர்.

தில்லி மாநிலத்திலும் நிலைமை இதுதான்.

2013 தேர்தலில் அதிக இடங்களைப் பெற்ற பாரதிய சனதா, 2015 பிப்பிரவரி தேர்தலில் படுதோல்வி அடைந்தது.

அரவிந்த் கெஜ்ரிவால் 70க்கு 67 இடங்களைப் பெற்றார்.

இவருக்கு அன்னா ஹசாரேவின் உண்ணாநோன்பு தான்-ஊழல் ஒழிப்புக்கு எதிரான உண்ணாநோன்பு தான் பெரிய விளம்பரத்தைத் தந்தது. இவரை எதிர்த்து நின்றவர் கெடுபிடியான காவல் அதிகாரி - துணிச்சல்காரர் என்று பெயர் பெற்ற கிரன்பேடி என்பவரும் அன்னா ஹசாரே இயக்கத்தால் மக்களிடம் நன்கு விளம்பரம் ஆனவர். பதவிக்கு ஆசைப்பட்டு பாரதிய சனதா முதலமைச்சர் வேட்பாளர் ஆனார். இவருக்கு இல்லாத ஒரு கூடுதல் வலிமை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இருந்தது.

அவர் ஒரு பனியா; அவருடைய உள்சாதிக்காரர் தில்லி மாநிலத்தில் 14 விழுக்காடு உள்ளனர். இதை ஒரு பெருமையாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவரே கூறினார். இவர்கள் வணிகர்கள்; பணக்காரர் கள். கெஜ்ரிவால் தில்லி இசுலாமியரை அணுகவில்லை. அப்படியிருந்தாலும் எந்த ஒரு முசுலீமும் பாரதிய சனதாவுக்கு வாக்கு அளிக்கவில்லை. அதாவது கெஜ்ரிவாலுக்கே வாக்களிக்க நேர்ந்தது.

இவர் பதவியேற்றது தில்லி மாநில அரசு. பெயரளவுக்கு அது ஒரு மாநிலம். ஆனால் இந்தியா வில் “மாநில அரசு” என்று உள்ள 29 மாநிலங் களுக்கு உள்ள எந்த ஓர் அதிகாரமும் தில்லி மாநில அரசுக்கு இல்லை.

இந்திய அரசு முதலாளித்துவப் பாதுகாப்பு அரசு; இந்திய அரசமைப்பு முதலாளித்துவத்தையும் சனாதன வருணத்தையும் பழைய பழக்கங்களையும் பாது காப்பது.

இந்த அரசு அமைப்பு என்ற மரத்தில் தழைப் பது ஊழல் கிளை; பூப்பது ஊழல் பூ; காய்ப்பதும் பழுப்பதும் ஊழல் பழம். இவற்றைக் கெட்டி யாகப் பாதுகாப்பவை நிருவாக - நீதி - காவல் - நீதித் துறை, படைத்துறை மற்றும் மேல்சாதி ஆளும்வர்க்கத்தார். இதை ஒவ்வொரு குடி மகனும் உணர வேண்டும்.

பதவியைப் பிடிக்க ஆசைப்படுகிறவர்கள், ஒரு மிகக் கவர்ச்சியான முகமூடியாக, “ஊழல் ஒழிப்பு” என்று பசப்புகிறார்கள்.

தமிழகத்தில் சீரங்கம் தொகுதி தேர்தல் தில்லு முல்லுகளை நானும் திருச்சி மா.பெ.பொ.க. தோழர் களும் 2015 பிப்பிரவரி 10, 11, 12, 13 நாள்களில் நேரில் பார்த்தோம்.

மதுரை திருமங்கலம் தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில், தி.மு.க.வுக்காக, “மு.க. அழகிரி செய்த தில்லுமுல்லுகளை” - “திருமங்கலம் வழி - திருமங் கலம் ஃபார்முலா” என்று கூறி, தி.மு.க.வினர் மார் தட்டிக் கொண்டார்கள்.

அதை முறியடிக்கிற பணியை ஏர்க்காடு தனித் தொகுதி இடைத்தேர்தலிலேயே அ.இ.அ.தி.மு.க. செய்து காட்டியது.

சீரங்கம் தொகுதியில் எல்லாவற்றையும் மிஞ்சி, ஆளுங்கட்சியினர் செயல்பட்டனர்.

உறையூருக்கு நேர் மேற்கே, சோமரசம் பேட் டைக்கு வடக்கே எண்ணற்ற தென்னந்தோப்புகள் உள்ளன. ஒவ்வொரு தோப்பிலும் அந்தந்த ஊர் மக்கள் 1000 பேருக்கும் மூன்று வேளை விருந்து - 1.2.2015 முதல், அளித்தார்கள்.

கட்சி உறுப்பினர்கள் என்று தெரிந்த வாக்காளர் களுக்குத் தலைக்கு ரூபா 1,000; மற்றவர்களுக்குத் தலைக்கு ரூபா 2,000; களப்பணியாளர்களுக்குத் ரூபா 3,000; ரூ.5,000.

இதுவும், போட்டியிட்ட வேட்பாளரின் உள் சாதி வாக்கும் சேர்ந்துதான் 1.51 இலக்கம் வாக்குகள்.

தமிழக மக்களில் பெரும்பாலோர் இலவச அரிசி, இலவச வேட்டி, இலவசச் சேலை - விசிறி - தொலைக் காட்சிப் பெட்டி என்று கூச்சநாச்சமின்றிப் பெற்று மானத்தை விற்று வருகிறவர்கள்.

படித்த இளந்தலைமுறையினர் - எங்கே ஓடியா வது கைநிறையப் பணம் தேட வேண்டும் என்று அலைகிறார்கள். அவர்களுக்குத் தரப்பட்ட கல்வியின் தன்மை அப்படிப்பட்டது.

“கடவுளை மற; மனிதனை நினை!” என்று கற் பிக்கும் பெரியார் தொண்டர்களும் - எந்தக் கல்வியால் - எந்தச் சட்டத்தின்படி - எந்த ஆட்சியின் கீழ் - மனித மாண்பைப் போற்றும் கொள்கையும், நெறியும் வளரவழி இருக்கின்றன என்று சிந்திக்காமலே, கிளிப் பிள்ளை போல் இதைப் பிதற்றுகிறார்கள்.

இது, தந்தை பெரியாரை எவரும் நன்கு புரிந்து கொள்ளாததால் நேர்ந்துவிட்ட அவலம்; பேரவலம்.

Pin It