பண்ருட்டியில் தேசியத் தலைவர் பண்ருட்டி பி.எஸ். ரங்கநாதன் தலைமையில், விஸ்வகர்ம சமூகத் திற்கு இடஒதுக்கீடு குறித்த விழிப்புணர்வு கல்விப் பயிலரங்கம், 19.2.2017 அன்று, பிற்படுத்தப்பட்டோர், பேரவைப் பொதுச் செயலாளர் கலச. ராமலிங்கம் அவர்களால் இடஒதுக்கீடு குறித்த வரலாற்று நிகழ்வுகளைப் பயிற்றுவிக்கப்பட்டது.
2016 நவம்பர் 16இல் சென்னையில் நடைபெற்ற இடஒதுக்கீடு பயிலரங்கத்தில் 20 இளைஞர்கள் பங்கேற்ற நிலையில், பண்ருட்டியில், 2017 பிப்ரவரி 19இல் 40 இளை ஞர்கள் பங்கேற்றது, இடஒதுக்கீடு குறித்த விழிப்புணர்வு விசுவகர்ம சமூக இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ளது என்பதற் கான அத்தாட்சியாக விளங்கியது.
பொதுச் செயலாளர் ஈ. மாணிக்கவேலு தனது துவக்க உரையில், 1992 மண்டல் கமிஷன் தீர்ப்புப்படி ஒவ்வொரு மாநிலமும் தத்தம் மக்களின் நன்மைக்காக பிற்படுத்தப் பட்டோர் ஆணையம் அமைத்துக் கொள்ள அனுமதித்தது.
அதன்படி 1993இல் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சென்னையில் துவங்கப்பட்டு, கல்வி, வேலை வாய்ப்பு, சமூக அந்தஸ்து, பொருளாதார நிலையில் பின் தங்கி உள்ள சமூகம் தங்களின் முன்னேற்றத்திற்காக ஆக்ஷஉ சேர்க்க விரும்பினால் அதற்காக விண்ணப்பிக்கலாம் என்கின்ற அறிவிப்பின்படி, 26.4.1995 அன்று விஸ்வகர்ம சமகத்தை MBC-யில் சேர்க்கக் கோரி, அகில இந்திய விசுவ கர்மப் பேரவை, தமிழ்நாடு நகைத் தொழிலாளர் முன்னேற்ற சங்கம், தி.நகர் பொன், வெள்ளி நகை தொழிலாளர் நல சங்கம் இணைந்து சமுதாயக் கூட்டமைப்பாக நேர்முக சாட்சியமும் கோரிக்கை மனுவும் சமர்ப்பித்தோம்.
22 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மேற்கொண்டுவரும் சூழ்நிலையில், இளைய தலைமுறையினர் மனதில் இடஒதுக்கீடு குறித்த விழிப்புணர்வை விதைத்திடத்தான் இத்தகைய வகுப்புவாரி இடஒதுக்கீடு பயிலரங்கம் தமிழகம் எங்கும் பேரவை சார்பாக நடத்தி வருகின்றோம்.
பயிலரங்கத் தொடக்கத்தில் மாநிலத் தலைவர் செஞ்சி ஏ. குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் எம்.கே. தியாகராய பாகவதர் விசுவகர்ம நற்பணி மன்றத் தலைவர் ஏ. ஆதவன் முத்து, கடலூர் மாவட்ட பண்ருட்டி நகர ஆபரணத் தொழிலாளர் சங்கச் செயலாளர் பி. பாண்டியன், தமிழ்நாடு அனைத்து நகை வியாபாரிகள் சங்க பண்ருட்டி கிளைத் தலைவர் சக்திவேல் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
செய்தி : ஈ.மாணிக்கவேலு, அரக்கோணம்