ppb chandra 3502014 ஆகஸ்ட் 30-இல் 86-வது வயதில் கால மானார் பேராசிரியர் பிபன் சந்திரா.  இந்திய தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றிலும், பொருளாதார தேசிய வரலாற்றிலும் ஆழங்கால் பட்டவர்.

விடுதலைப் போராட்ட வரலாற்றில் மத அடிப் படைவாதமான வகுப்புவாதத்தை வரலாற்று நிகழ்வுகளின் தொடர்ச்சியான ஆவணங்களைக் கொண்டு வேரும் வேர் அடி மண்ணும் இல்லாமல் வீழ்த்தப் போராடியவர்.  மதசார்பற்ற சக்தி களுக்கும் காவல் அரணாக விளங்கிய ஆய்வாளர்.

விடுதலை பெற்ற இந்தியாவில் கம்யூனிஸ்டுகளின் போராட்ட அணியில் நின்றவர்.  ஆர்.எஸ். சர்மா, ரொமீலா தாப்பர், இர்பான் ஹபீப், சத்தீஷ் சந்திரா பரூன் தேவ் முதலான மார்க்சிய வரலாற்றாய்வர்கள் வரிசையில் தம்மை நிலை நிறுத்திக் கொண்டவர் பதினைந்து வரலாற்று நூல்களுக்கு மேல் எழுதியவர்.

இவ்வளவு சிறப்புகளைப் பெற்ற வரலாற்றறிஞர் தமிழகத்தின் அரசியல் பொருளாதார, சமூக விடுதலைப் போராட்ட வீரரான ஜி. சுப்பிரமணிய ஐயரை தமது புகழ் பூத்த “இந்தியாவில் பொரு ளாதார தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்” எனும் நூலில் தக்க மேற்கோள்கள் சான்றுகள் மூலம் பாராட்டிப் பெருமைப்படுத்தியுள்ளார்.

பிபன் சந்திரா மறைவு குறித்து தமிழ்நாளேடு ஒன்றில் வெளிவந்த இரு சிறு கட்டுரைகளில் தமிழக தேசியத்தலைவர்களில் அரசியல், சமூக, பொருளாதார, தமிழ்ப்பற்று யாவும் ஏற்றத்தாழ் வில்லாமல் நிறைந்து முன்னோடியான முதல் தேசபக்தரான ஜி. சுப்பிரமணிய ஐயரை வரலாற்றுப் பேரறிஞர் பிபன் சந்திரா ஏற்றிப் போற்றியது பதிவாகவில்லை.

இந்த வரலாற்றுக் குறையைக் குறித்து நான் எனதருமை நண்பர் தோழர் ஸ்டாலின் குண சேகரனிடம் பேசியபொழுது அவர், இடதுசாரி இயக்கத்தின் போர் முரசாகத் திகழ்ந்துகொண் டிருக்கும் “உங்கள் நூலகம்” இதழில் பிபன் சந்திரா, ஜி. சுப்பிரமணிய ஐயரின் பொருளாதார தேசியச் சிந்தனைகளைப் பாராட்டியது வெளி வருவது மிகப் பொருத்தமாக அமையும் என்று கூறினார்.  இந்த உந்துதலே ஊக்கமே இக் கட்டுரையின் தோற்றத்திற்கு மூலகாரணமாகும்.

ஜி. சுப்பிரமணிய ஐயர் குறித்த பிபன் சந்திராவின் ஆய்வுரைகளை அறிவதற்கு முன்பு பாரதியார், வ.உ.சி., சிவா மற்றும் சிலருடைய புகழுரைகளைத் தேர்ந்து தெளிதல் வேண்டும்.

பாரதியார்:

“பாரத ஜனசபை வரலாறு” (1918) எனும் நூலில் 1885ல் காங்கிரசின் தோற்றத்தைப் பற்றி எழுதும் பொழுது, பாரதியார் ‘ஜி.சு.’விற்கு சூட்டிய புகழ்மாலை வருமாறு:

“தமிழ்நாடு தவமுடையது.  ஏனென்றால் காங்கிரஸ் மகாசபையின் முதற் கூட்டத்தில் முதல் தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றும் பாக்கியம் தமிழ்நாட்டு தலைவராகிய சுதேச மித்திரன் ஸ்ரீ. சுப்பிரமணிய ஐயருக்கே கிடைத்தது.”  (பாரத ஜனசபை வரலாறு - முதல் பாகம் - 1918- ப. 4.)

‘தமிழ்நாட்டின் விழிப்பு’ எனும் தலைப்பில் ‘சக்திதாஸன்’ எனும் புனைபெயரில்  பாரதியார் சுதேசமித்திரனில் எழுதியக் கட்டுரையில் ‘ஜி.சு.’வின் புகழார்ந்த வரலாற்றுப் பாத்திரத்தை பின் வருமாறு சாற்றியுள்ளார்.’

“இராமலிங்க சுவாமிகளும், சுதேசமித்திரன் சுப்பிரமணிய ஐயரும் இவர்களைப் போன்ற வேறு சில மகான்களும் தமிழ்நாட்டின் புதியவிழிப்பிற்கு ஆதி கர்த்தாக்களாக விளங்கினர்.” (சுதேசமித்திரன் 1918 மே- 31- ப. 3)

வ.உ.சி:

1916-இல் ஜி. சுப்பிரமணிய ஐயர் காலமான பொழுது, அவருடைய நெருங்கியத் தோழரான வ.உ.சி. அவர்கள் தமது இரங்கலை பத்து வெண் பாக்களில் வெளியிட்டார்.  இவற்றுள் மூன்றாம் வெண்பாவில், நீடுதுயிலில் ஆழ்ந்தத் தமிழரை விழித்தெழச் செய்தவர் ‘ஜி.சு.’ என்று புகழ் மாலைச் சூட்டி வ.உ.சி.  சுட்டிக்காட்டியதாவது.

“தமிழ் மைந்தர் தூக்கத்தால் தாழ்வுற்றுச் சாவுள்

அமிழ்கின்ற தன்மைகண் டன்னார்க் கமிழ்தென்னச்

செந்தமிழில் நம்முயர் சுதேசமித்திரன் தொடங்கி

நந்தமிழரை யெழுப்பி நன்கு.

சுப்பிரமணிய சிவா

தேசிய திரிசூலத்தின் மூன்றாவது கூர்முனை யான சுப்பிரமணிய சிவா (மற்ற இரு கூர்முனைகள்- பாரதி, வ.உ.சி.) அவருடைய ‘ஞானபாநு’ மாத இதழில் ஜி. சுப்பிரமணிய ஐயரைப் பாராட்டி எழுதியதாவது:

“சுதேசமித்திரன் பத்திரிகாசிரியராயிருந்த ப்ரஹ்ம ஸ்ரீ ஜி. சுப்பிரமணிய ஐயரவர்களிடத்தில் நமக்கு அளவற்ற மதிப்பு உண்டு.  இவர் நமது தமிழ் நாட்டிற்கு அளவற்ற நன்மைகள் செய்திருக் கின்றார் என்பது எவராலும் மறுக்கக் கூடாதொரு காரியம்.  தேசாபிமானமும்  பாஷாபிமானமும் இன்னவையென்று எவரும் உணராத அக்காலத்தில் அதாவது ‘சுதேசமித்திரன்’ ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் ப்ரஹ்மஸ்ரீ சுப்பிரமணிய ஐயரவர்கள் தாம் நடத்திக் கொண்டிருந்த ‘ஹிந்து’ என்ற ஆங்கில பத்திரிகையை விட்டுவிட்டுச் சாதாரண ஜனங்களுக்குள் அறிவைப் பரப்பும் பொருட்டுத் தமிழ்ப் பத்திரிகையை ஆரம்பித்தது மிகவும் வியக்கத்தக்கது.” (ஞானபாநு - 1916- ஆகஸ்ட் - ப. 199)

சுரேந்திரநாத் பானர்ஜி பாராட்டுரை

1914-ல் சென்னை மகாஜன சபையில் ஜி. சுப்பிரமணிய ஐயர் அவர்களின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவில் அவருடைய முழுவுருவப் படத்தைத் திறந்து, வங்கம் தந்த தேசியத் தலைவர் சுரேந்திரநாத் பானார்ஜி கூறிய பாராட்டுரையின் ஒரு பகுதி வருமாறு:

““Mr. Subramanya Iyar, let we say had been the instruement of populer political work in the widest sense of that word in south Indiaநியூஇந்தியா - நாளேடு- சென்னை - ஆசிரியர்- அன்னிபெசன்ட்.)

மேற்கூறியனஅல்லாமல்தமிழகஅரசியல்பிரசாரத்தில்பலதொடக்கங்களைஏற்படுத்தியவர்ஜி. சுப்பிரமணியஐயர்.  இவற்றுள்சிலபின்வருவன:

முதல் இலவச அரசியல் அரிச்சுவடி

1.  தமிழில் முதல் அரசியல் அரிச்சுவடி எனத் தக்க முதல் வெளியீட்டை எழுதி இலவசமாக வழங்கியவர் ஜி.சு. 1883-இல் வெளிவந்த இந்த இலவச வெளியீட்டின் பெயர், “சுய அரசாட்சி வினாவிடை” என்பதாகும்.  “சாதாரண ஜனங்கள் துரைத்தன விஷயமாயும் புரிந்து கொள்ள வேண்டி” எனும் குறிப்புரையுடன் வெளியிடப் பெற்று, அக்காலத்தில் இந்திய ராஜப் பிரதிநிதியாக இருந்த ரிப்பன் பிரபுவின் ‘ஸ்தல சுயாட்சி ஸ்தாபன திட்டம்” பற்றிய பிரசாரத்திற்காக வெளிவந்தது.  இதைத் தொடர்ந்து அவருடைய 12 அரசியல் நூல்கள் தமிழில் வெளிவந்தன.

 2. முதல் அரசியல் பிரச்சாரப் பயணம்

சென்னை மாநிலத்தின் முதல் அரசியல் அமைப்பாக சென்னை நகரத்தில் 1852-இல் தோன்றியது ‘மெட்ராஸ் நேடிவ் அசோசியேஷன்’ இந்த அமைப்பு ரிப்பன் பிரபுவின் ஸ்தல சுயாட்சி ஸ்தாபன திட்டம் பற்றிய பிரசாரத்தை 1882ல் மேற்கொண்டது.  முக்கிய  நகரங்களுக்குச் சென்று முற்கூறிய திட்டப் பிரசாரத்திற்காக ஜி. சுப்பிர மணிய ஐயர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இதற்காக மேற்கொள்ளப் பெற்றச் சுற்றுப்பயணம்தான் முதல் அரசியல் பிரச்சாரப் பயணம் என்று பெயர் பெற்றது.

ஜி. சுப்பிரமணிய ஐயர் எனும் வரலாற்று நூலில் (1907) எழுதிய ‘சுதேசமித்திரன்’ துணை யாசிரியர் தமிழறிஞர் குருமலை சுந்தரம்பிள்ளை கூறிய பின்வரும் கருத்து இங்கு குறிப்பிடத்தக்கது.

“மதாசாரியர்கள் தங்கள் மதங்கள் பரவு வதற்காக மதப்பிரசங்க யாத்திரை செய்வது போல ஜனத்தலைவர்கள் இராஜரீக சம்பந்தமான விஷயங்களுக்காக பிரச்சார யாத்திரை செய்யும் வழக்கத்தை இச்சென்னை மாகாணத்தில் முதலில் உண்டாக்கியவரும் நமது ஐயரே” முற்கூறிய நூல்: (ப. 263).

3. அரசியல் மேடைப் பேச்சில் தமிழை முதன்முதலில் அரங்கேற்றியவர்

4. துண்டுப் பிரசுரங்களைத் தமிழில் மேடைப் பேச்சுகளின் முடிவில் வழங்கும் நடைமுறையையும் முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்.

பிரிட்டிஷ் புலனாய்வுத்துறையின் அறிக் கையில் மேற்கூறியவாறு வழங்கப்பெற்ற பிரசுரங் களின் பெயர்கள் கூறப் பெற்றுள்ளன.  (அரசு ஆணை எண் 1542, தேதி 3. 10. 1911 ப. 85)

பிபன் சந்திராவுடன் என்னுடைய முதல் சந்திப்பு

சென்னை எழும்பூர் ஆவணக்காப்பகத்தில் வரலாற்றுப் பேராசிரியர் பிபன் சந்திராவுடன் என்னுடைய முதல் சந்திப்பு நிகழ்ந்தது.  1980-களில் நான் ஆவணக்காப்பகத்தில் தமிழ் இதழியல் வரலாற்றாய்வுத் தொடர்பாக ஆவணங்களைப் பார்த்து குறிப்பெடுத்து வந்தேன்.  ஒருநாள் ஆவணக் காப்பகத்திற்கு வந்த பிபன் சந்திராவைச் சந்தித்து உரையாடும் நல் வாய்ப்பினைப் பெற்றேன்.  அவர் தன் மாணவர்களுடன் தென்னகத்தில் விடுதலைப் போராட்ட வரலாறு தொடர்பான ஆவணங் களைக் கண்டறிய வந்திருந்தார்.

நான் அவரைச் சந்தித்து உரையாட வைத்தது பேராசிரியர்.  ஜி. சுப்பிரமணிய ஐயரைக் குறித்து அவருடைய நூல் பரவலாக மேற்கோள்கள் காட்டி புகழ்ந்து எழுதியதாகும்.

1966-ல் வெளிவந்த பேராசிரியரின் “The Rise and Growth of Economic Nationalism in India” எனும் நூலை நான் அவரைச் சந்திப்பதற்கு முன்பாக படித்துள்ளேன்.

தமிழ்நாட்டு தேசியத் தலைவரான ஜி. சுப்பிர மணிய ஐயரின் பொருளாதார தேசியம் குறித்த நூலை நீண்டகாலமாக அத்துறையைச் சார்ந்த ஆய்வாளர்கள் எவரும் கண்டுகொள்ளாமல் இருந்ததையும், பிபன் சந்திரா ஒருவர் மட்டும் ‘ஜி.சு.’வைப் பாராட்டியதற்கு என் நெஞ்சார்ந்த நன்றியை முதல் சந்திப்பில் விவரமாகக் கூறினேன்.  அவர் நெகிழ்வுற்றார்.  அந்தச் சந்திப்பில் அவர் கூறிய ஒரு செய்தியையும் இங்கு பகிர்ந்து கொள் கின்றேன்.  “விடுதலைப் பேராட்டத்தில் தென்ன கத்தின் பங்கு பற்றி விரிவாக அறியப்படாதச் சூழலில் நாங்கள் எங்கள் தேடல்களை இங்கு ஆவணக் காப்பகத்தில் மேற்கொண்டோம்.  வியக்கத் தக்க அளவிற்கு விடுதலைப் போராட்டத்தில் தென்னகத்தின் பங்களிப்பு உள்ளதை அறிந்தோம்.” என்று பேராசிரியர் குறிப்பிட்டார்.

இரண்டாவது சந்திப்பு

‘ஜி.சு.’ வை மையப்புள்ளியாகக் கொண்ட என்னுடைய இரண்டாவது சந்திப்பு புதுதில்லி நேரு நினைவு நூலகத்தில் நிகழ்ந்தது.  அங்கு ஆய்வுப் பணிக்காக நான் சென்ற காலத்தில் அங்கு பிபன் சந்திராவை மீண்டும் சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டது.  இந்தச் சந்திப்பிலும் ‘ஜி.சு.’ வைப் பற்றியப் பேச்சு தொடர்ந்தது.  ஜி. சுப்பிரமணிய ஐயரின் பொருளாதார தேசியச் சிந்தனைகளைத் தொடர்ந்து ஒட்டுமொத்தமான அவருடைய பல்வேறு சிந்தனைகள் குறித்த ஆய்வு மேற் கொள்ளப்பட வேண்டும்.  “இதற்கு நீங்கள் ஒரு திட்ட ஆய்வு (ஞசடிதநஉவ) குறித்த அறிக்கையைக் கொடுங்கள்; நான் பரிந்துரை செய்கின்றேன்” என்று பேருள்ளத்தோடு கூறினார்.  மேலும் தமது வருத்தம் ஒன்றையும் என்னிடம் பகிர்ந்து கொண் டார்.  அதாவது தமது சகோதர மார்க்சிய ஆய் வாளர்களில் சிலர் தம்மைக் குறை கூறுவதாகக் குறிப்பிட்டார்.

பேராசிரியர் எழுதிய “இந்தியா சுதந்திரத் திற்குப் பின்பு”, “விடுதலைக்கான இந்தியாவின் போராட்டம்” எனும் இரு நூல்கள் அவருடைய காங்கிரஸ் சார்புநிலையைக் கொண்டவை என்று கூறப்பெற்றது.  இதைத்தான் அவருக்கு வருத்த மளித்தாகக் கூறினார் பிபன் சந்திரா.

‘ஜி.சு.’வின் பொருளாதாரச் சிந்தனைகள் 

பிபன் சந்திரா பாராட்டுரைகள்

‘ஜி.சு.’வின் “பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தி யாவில் சில பொருளாதார அம்சங்கள்” எனும் நூலில் இருந்த மேற்கோள்கள் பலவற்றை எடுத் தாண்டு பாராட்டுரைகள் வழங்கியுள்ளார், பேராசிரியர் பிபன் சந்திரா.

இந்திய தேசியத் தலைமையின் பொருளா தாரக் கொள்கைகளைத் தமது நூலில் ஆய்வு செய்துள்ளார் பேராசிரியர்.  1880- 1915 வரை யிலான காலகட்டத்தை ஆய்விற்குத் தேர்ந்தெடுத் துள்ளார்.  பதினைந்து அத்தியாயங்களைக் கொண்டது இந்நூல்.

‘இந்தியப் பொருளாதாரம்’ எனும் தலைப்பில் எழுதப் பெற்ற அத்தியாயத்தில், “பொருளாதார நிலைமையில் உண்மையான நெருக்கடிகளை இனங்கண்டு வெளிப்படையாக ஏற்கவேண்டும்” எனும் ‘ஜி.சு.’வின் கருத்தை மேற்கோளாகக் காட்டி யுள்ளார்.  பிபன் சந்திரா குறிப்பிடத்தக்க ஓர் அம்சம் என்னவென்றால் பேராசிரியர் ‘ஜி.சு.’வின் ‘சுதேசமித்திரன்’ இதழில் 1901 மார்ச் 2ந்தேதியில் வெளிவந்த கருத்தையும் மேற்கோளாகக் காட்டி யுள்ளார்.  (சுதேசமித்திரன் செய்திகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பெற்றவை.)

இதே அத்தியாத்தில் ‘அந்நியமூலதனத்தைப் பற்றி எழுதியவிடத்திலும் ‘ஜி.எஸ். அய்யர் (பிபன் சந்திரா மொழியில்) கருத்தை மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார்.  இதன் விவரம் வருமாறு:

“ஆள்வோர் இனத்தைச் சார்ந்த அந்நிய முதலாளிகள் அரசியல், சமூக சலுகைகளைப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.  இவர்கள் ஆளப் படும் மக்களின் தொழில்துறை வளர்ச்சிக்கு உதவி செய்வார்களா? பண்டைய அல்லது தற்காலத்தில் எந்த நாட்டிலாவது இது நிகழுமா என்பதை நான் அறியவில்லை.  நம் மக்களுக்கு கல்வியும் பயிற்சியும் அளித்து அவர்கள் தாங்களாகவே உற்பத்தி செய்ய உதவவேண்டும்.  வேளாண்மை சார்ந்த செல்வம் தழைக்கச் செய்வதற்கு இது ஒன்றே வழி என் பதைத் தயக்கமின்றி கூறுவேன்.  அந்நிய மூலதனம் அடிப்படையிலேயே தேச விரோத மாயை.  

ஏன் என்றால் இந்த அந்நிய மூலதனம், இந்திய மூலதனத்தை அழித்தொழிக்கும்” என்று ஜி.எஸ். ஐயர் கூறுகின்றார்.”  (மேற்கோள் - ப. 97- The Rise and Growth of Economic Nationalism in Indian 1977 - Bipan chandra)

பேராசிரியர் பிபன் சந்திரா “Nationalism and colonialism in modern India- 1981 எனும் நூலில், ஜி.எஸ். ஐயரின் பின்வரும் கருத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

“அந்நிய மூலதனம் இந்தியாவில் பெருகப் பெருக அந்திய முதலாளித்துவத்தின் செல்வாக்கு ஓங்கி இந்திய தேசிய காங்கிரசின் வளர்ச்சிக்கு எதிராக ‘பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு ஆபத்து’ எனும் பெருங்குரலை நிச்சயமாக எழுப்பும்.”

1889 டிசம்பர் 23-இல் மேற்கண்டவாறு எழுதியதை பிபன் சந்திரா தமது நூலில் மேற் கோளாகக் காட்டியுள்ளார்.  ஜி.சு. வின் இந்தக் கருத்தை பிபன் சந்திரா  “Rare Political in light” அரிய அரசியல் மதிநுட்பமானது - என்று பாராட்டி யுள்ளார்.

ஜி. சுப்பிரமணிய ஐயர் தமது ஆங்கில நூலில் அந்நிய முதலாளித்துவத்திற்கு உதவும் பிரிட்டிஷ் ஆட்சியின் கொள்கையைப் பற்றி கூறியதாவது.

“கடந்த ஒன்றரை நூற்றாண்டு காலமாக இந்தியாவின் செல்வம் பிரிட்டிஷ் ஆட்சியில் உறிஞ்சப்பட்டுள்ளது.  மூலதனம் இங்கு வளர்வது மிகவும் அரிதாகவும், மெதுவாகவும் இருந்தது.  இந்திய உற்பத்தியாளர்களை ஒழித்துக்கட்டி அவர்கள் அழிவின் மேல் தங்களுடைய சொந்தத் தொழிலை வளர்த்துக் கொள்வதுதான் இந்தி யாவில் இங்கிலாந்தின் திட்டமிடப்பட்ட கொள் கையாக இருக்கிறது” (ப. 126).

அந்நிய வர்த்தகம் எனும் நான்காவது அத்தி யாயத்தின் தொடக்கத்தில் மகுட வரிகளாக ஜி.சு.வின் பின்வரும் வரிகளை அமைத்து, பிபன் சந்திரா ‘ஜி.சு.’ வைப் பெருமைப்படுத்தியுள்ளார்.

“To place India’s role on a National basis, the basis handling, that the large and unlimited Market supply of her teeming population should be mainly recieved for the products to indigenous Industries and that what may remain as surplus should be exported to foreign countries in exchange for what cannot Produced or manufactured here, to do this is the only means to everthing the dissastor that threatons to work India’s complete economic ruin with that feature”

தொழிலாளர் நலன்

விவசாயத் துறையின் தொழிலாளரைப் பற்றிய ஆதரவுக் கண்ணோட்டத்துடன் ஆராய்ந்த முதல் தேசியத்தலைவர் ஜி. சுப்பிரமணிய ஐயர்தான் என்று பிபன் சந்திரா தமது நூலில் குறிப்பிட்டு உள்ளார்.  (ப. 383)

“தொழிலாளர்களின் அறியாமையைப் பயன் படுத்தும் முதலாளிகளின் போக்கு நீடிக்காது.  தொழிலாளர்கள் எழுச்சியுற்று தங்கள் அரசியல் உரிமைகள், ஊதிய உயர்வுகள், கோரிக்கைகளுக் காக சங்கம் வைக்கப் போகும் நாள் தொலைவில் இல்லை” என்று ஜி. சுப்பிரமணியர் கூறியதை எடுத்துக்காட்டியுள்ளார் பிபன் சந்திரா.  தமது நூலில் ஜி.சு. “நமது தொழிலாளர் வருக்கங்கள் ((Our Labouring Classes) என்று தனி அத்தியாயத்தை

(10-ஆம் அத்தியாயம்) எழுதியுள்ளார் ‘ஜி.சு.’ இதைத் தவிர “விவசாயத் தொழிலாளர்” எனும் அத்தியாயத்தையும் (11-ஆம் அத்தியாயம்) எழுதியுள்ளார்.

இந்தியா விவசாய நாடாக மட்டும் விளங் கினால் போதாது, தொழில் மயமாக்கப்பட வேண்டும் என்று ஜி.சு. 1901-ல் கூறியதை பிபன் சந்திரா தமது நூலில் எடுத்துக்காட்டியுள்ளார்.

பிபன் சந்திரா, ‘‘RAILWAYS’’ எனும் நான் காவது அத்தியாயத்தில் ‘ஜி.சு.’ வின் கருத்துகளை விரிவாக எடுத்தாண்டுள்ளார்.  ‘ஜி.சு’ தமது நூலில் RAILWAYS’ எனும் தனி அத்தியாயத்தை (14) எழுதியுள்ளார்.

பொருளாதார விஷயங்களில் அரசாங்கத்தின் தலையீடு

ஜி. சுப்பிரமணிய ஐயர் இந்திய பொருளா தார விஷயங்களில் பிரிட்டிஷ் அரசு தலையிட வேண்டும், அவ்வாறு தலையிடுவது முற்றிலும் நியாயமே எனக் கூறியுள்ளார்.  தனிநபர் சமு தாயத்தைவிட உயர்ந்தவர் அல்ல என்றும் சாற்றி யுள்ளார், ‘ஜி.சு.’

மேலை நாட்டு பொருளாதார நூலாசிரி யரான ஆடம் ஸ்மித்தின் பொருளாதார தனி மனிதன் சொந்த லாபத்திற்காகப் பாடுபடும் பெருமையுள்ளவன்.  தனி மனிதன் தன்னைச் சுற்றியுள்ளோரிடம், தன்னுடைய தேசத்தினிடம் அதற்கும் மேலான மானுட சமுதாயத்துடன் பரிவை வளர்த்துக் கொள்பவனாக இருக்க வேண்டும் என்று ஜி.சு.  கூறியுள்ளார்.

“முதலாளி தொழிலாளி போராட்டம் சம பலம் வாய்ந்ததன்று.  இந்தப் போராட்டத்தில் பலவீனமான பகுதியினரான தொழிலாளர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு.  ஆகவே தொழிலாளர் சார்பில் அரசாங்கம் தலையிட வேண்டும்” என்று ஜி. சுப்பிரமணிய ஐயர் வலியுறுத்தினார் என்பதை பிபன் சந்திரா தமது நூலில் குறிப்பிட்டுள்ளார் (ப. 719).

மேற்கண்டவாறு பிபன் சந்திரா ‘ஜி.சு.’வின் பொருளாதாரச் சிந்தனைகளைப் பாராட்டி யுள்ளது மேலும் விரிவான ஆய்விற்குரியது.

Pin It