கிழித்தெறிய மாட்டாய் என
அனுப்பிய கவிதையொன்றின்
துண்டு
காற்றில் மிதந்து கொண்டிருக்கிறது

மறுதலிக்கப் போவதில்லை எனச்
சொன்ன வார்த்தைகளை
குப்பைத்தொட்டியில்
காணச் சகியவில்லை

புத்தாடை நாளொன்றில் உனை
சந்திக்க வேண்டியிருக்கும்
சேதி கேட்டதிலிருந்து
நிகழ்வுகள் கவிதையாவதற்க்குள்
தப்பி ஓடுகின்றன
இப்பொழுதெல்லாம்

மீண்டும் சில கவிதைகளை கிழித்தெறியுமுன்
மீண்டும் சில வார்த்தைகளை குப்பையிலிடுமுன்
மீண்டும் சில நிமிடங்களை நினைவூட்டுமுன்

மீண்டும் ஒரு முறை செத்துப் போகிறேன் நான்
மீண்டும் ஒரு முறை என் முகம் மறந்துவிடு நீ

- லதாமகன்

Pin It